(Reading time: 25 - 49 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 25 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ரெடியா  தாத்தா ? " என்று அர்ஜுனன் ஆர்வமாய் கேட்டதில் அனைவருக்குமே சொல்ல முடியாத உற்சாகம் தொற்றிக் கொண்டது ..

" ஏன் அர்ஜுன் , நீ தையுமே சொல்லிட்டு செய்ய மாட்டியா பா ? " என்று வழக்கம் போல அதே கேள்வியை கேட்டார்  பானு ..

" ஹா ஹா .. அப்படி சொல்லிட்டு செஞ்சா அது அர்ஜுன் இல்லையே அத்தை .. அவன் துணிக்கடையில் என்கிட்ட இந்த சர்ப்ரைஸ் சொன்னதே பெரிய விஷயம் தான் .. நிச்சயமா அதுக்கும் கூட ஏதும் காரணம் இருக்கும் " என்றான் கிருஷ்ணன் கண்களில் மின்னலுடன் ..

VEVNP

" சரியா சொன்ன மச்சான் .. சர்ப்ரைஸ் நானே ரெடி பண்ணி இருப்பேன் .. ஆனா வாங்கினதை எல்லாம் யாரு தூக்கிட்டு வர்றது .. ? எனக்கு கேரியர் வேணும்ல ..அதான் போனா போகுதுன்னு நம்ம பசங்க எல்லாரையும் என் ப்ளான்  ல சேர்த்துகிட்டேன் "

" எல்லாருமா ?? ஆகாஷ் அப்போ உங்களுக்கும் தெரியுமா ? " என்று கேட்டு செல்லமாய் முறைத்தாள்  சுப்ரியா ..

" அடப்பாவி அர்ஜுன் , இப்போதாண்டா  கல்யாணம் பண்ணினோம் நீ அதுக்குள்ளே வம்பு வளர்த்து விட்டுடுவ போல " என்றான் பாவமாய் .. அவனது பாவனையில் அனைவருமே சிரித்தனர் .. தாத்தாவோ

" அட என்னப்பா நீ இப்படி பயபடுற .. பொண்டாட்டி கோவத்துக்கு எல்லாம் பயந்தா குடும்பம் நடத்த முடியுமா ? உன் பாட்டிக்கு வராத கோவமா ? " என்றார் வேண்டுமென்றே....

" ம்ம்ம்கும்ம் .. ஆமா நான் அப்படியே கோபப்பட்டு  உங்க தாத்தா பயந்துட்டாலும் " என்று சலித்து கொண்டார் பாட்டி ..

" சரி பிரின்ஸ் ... சட்டு புட்டுன்னு சர்ப்ரைஸ் ஐ சொல்லுங்க .. எனக்கு சர்ப்ரைஸ் எல்லாம் தாங்காது " என்றாள்  நித்யா கண்ணில் மின்னலுடன் ..

" இதுக்கே இப்படியா ? கார்த்தி நீ வருங்காலத்துல என்னதான் பண்ண போறியோ ?? எனக்கு தெரிலப்பா " என்றான் போலியான வருத்தத்துடன் .. அதற்குள் ஷக்தி, கார்த்தி, சஞ்சய்,  வருண், ரகுராம் ஐவரும்  அந்த பைகளை தூக்கி கொண்டு வந்தனர் ..

" ஹே மாமா .. இரு நான் ஹெல்ப் பண்றேன் " என்றபடி ஷக்தி பக்க ஓடி வந்த மித்ராவை பார்த்து பெண்கள் அனைவரும் " ஓஹோ " என்று ஓ  போட்டனர் ..

" போச்சுடா .... இன்னைக்கு இந்த லூசுங்க என்னை கலாய்ச்சே  கொன்னுடுங்களே " என்று முணுமுணுத்தவள்  பிடிவாதமாய் ஷக்தியின்  கைகளிலிருந்து இரண்டு பைகளை வாங்கி கொண்டாள் ...

" என்ன மாப்பிளை இதெல்லாம் " - சந்துரு

" மாமா , இது மணமக்கள் நாங்க ஆசையாய் எல்லாருக்கும் எடுத்த டிரஸ் ... ஏற்கனவே நாங்க ஒன்னா  பேசிட்டு இருந்தப்போ முடிவெடுத்தது தான் .. அதான் அன்னைக்கு நானும் கிருஷ்ணாவும் நீங்க எல்லாரும் பிசியா இருந்த கேப் ல ஷாப்பிங்க முடிச்சுட்டோம் " என்று சிரித்தான் ..

" ஆனா ஒரு முக்கியாமான ரூல் இருக்கு .. அதை சொல்லலியே மச்சான் நீ " - கிருஷ்ணா

" அதுகென்ன மச்சான் .. எனக்காக நீ சொல்லேன் .. நம்ம ரெண்டு பெரும் இப்போ ஒன்னு இல்லையா ? " என்றபடி கிருஷ்ணனின் தோளில்  கை போட்டான் அர்ஜுனன் .. ரகுராமும் கார்த்தியும் ஒரே நேரத்தில்

  காட்டுக்குயிலு மனசுக்குள்ளே

பாட்டுகேதும் பஞ்சம் இல்லை பாடத்தான்

என்று பாடினர் .. ஏனோ அவர்களை அப்படி பார்த்த சுபத்ராவின் மனதில் இன்பம் அணைதிறந்த  வெள்ளமாய் பொங்கியது ..

" சரி என்ன ரூல் மாமா ? " - ஜானகி

" அதுவா ஜானு .. புது டிரஸ் கிடைச்சதும் .. எல்லாரும் போயி இப்போவே மாத்திட்டு வரணும் .. .ஆனால் ஒருத்தர் டிரெஸ்ஸை இன்னொருத்தர் கிட்ட இப்போவே காட்ட கூடாது .. டிரஸ் மாத்திட்டு மறுபடி நேரா இங்க வந்திடனும் .. " - அர்ஜுனன்

" இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கே ? " - மது

" நோ சிஸ்டர் ... போக போக நீங்களே புரிஞ்சுப்பிங்க " என்று விளழ்த்தனமாய் சிரித்தனர் அர்ஜுனன்னும் கிருஷ்ணனும் .. வருணை பார்த்த மீரா

" நீயும் இவங்க கூட சேர்ந்துகிட்டியா டா ? இனி உன்னையும் கையில பிடிக்க முடியாது " என்றாள் ... உடனே கிருஷ்ணனோ

" வேற யாரை உன்னால் கையாள பிடிக்க முடில மீரூ ?? நான்தான் உன் கண் அசைவிற்கே அடிமையாகிவிட்டேனே " என்று சொல்லி அவளது வாயை மூடினான்..

" சரியான திருடன் " என்று பார்வையாலேயே அவனை சாடினாள்  மீரா..

" சரி பா .. வாங்க ஒவ்வொருத்தராய் அம்மா அப்பா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கலாம் " என்ற சூர்யா , அபிராமியுடன்  அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றார்....

" நல்லா இருயா ... ரொம்ப நல்ல இரு " என்ற பெற்றோரின் மனமோ மகிழ்வில் திளைத்தது .. அவர்களை தொடர்ந்து சந்துரு- சிவகாமி, லக்ஷ்மி, பானு, ஆகாஷ்- சுப்ரியா, நித்யா- கார்த்தி, மீரா- கிருஷ்ணா, ரகுராம்- ஜனனி, மித்ரா - ஷக்தி,புவனா- சஞ்சய் , வருண் , அர்ஜுனன்- சுபத்ரா என அனைவரும் ஆசிபெற்றனர் ..

" ஹே ஏஞ்சல்ஸ் , என்ன கண்ணாலேயே படமெடுத்தால் போதுமா ? உங்களுக்கும்தான் புது டிரஸ் எடுத்தோம் .. வாங்க வாங்க... " என்றான் கிருஷ்ணன் ...

" அட.. எங்களுக்கு எதுக்கு பாஸ் ?? " -மீனா

" உங்களுக்கு மட்டும் இல்ல மை டியர் பஞ்ச பாண்டவிஸ் .. நம்ம சுஜா- ரவிக்கு கூட டிரஸ் எடுத்தாச்சு .. எங்களை பொருத்தவரை நீங்களும் நம்ம பேமிலிதான் ... " என்றான் ரகுராம் .. பெண்கள் அனைவரும் புது டிரெஸ்ஸை எடுத்து கொண்டு பாட்டி தாத்தாவின் ஆசிர்வாதத்தை பெற்றனர் ..

மது மட்டும் " தாத்தா, டிரஸ் கொடுத்த போதுமா .. உங்க ஸ்டைல்ல அட்லீஸ்ட் ஒரு ப்லாயிங் கிஸ்  ஆவது தரலாமே " என்றாள் ...

" அதுகென்ன தந்துட்டா  போச்சு என்று அவளை பார்த்து கன்னடித்தவர், இமைக்கும் நேரத்தில் பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டார் .. "யேய்  " என்று அனைவரும் ஆர்பரிக்க இப்பொது முகம் சிவப்பது பாட்டியின் முறையானது ..

" ஓகே ஓகே வாங்க .. எல்லாரும் சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு வாங்க " என்ற அர்ஜுனன் கார்த்தியின் பக்கம் திரும்பி " நண்பா ... அன்னைக்கு உனக்கு சர்ப்ரைஸ் தர்றேன் நு சொன்னேன் ல.. போயி டிரஸ் மாத்திட்டு வா " என்றான் ..

அப்படி என்னத்தான் டிரஸ் எடுத்து கொடுத்திருகாங்கனு  பார்த்த நம்ம சீனியர்ஸ் எல்லாருக்கும் அதிர்ச்சி .. அம்மாக்கள் மற்றும் அத்தைகளுக்கு  சுடிதாரும் , அப்பாக்கள் மட்டும் தாத்தாவுக்கு ஜீன்ஸ் ஷர்ட் எடுத்திருந்தனர் .. அதுவும் அவரவர் ஜோடிக்கு ஏற்ற அதே நிறத்தில் .. " இதை எப்படி போடுறது " என்று அவர்கள் சிந்திக்க முடியாதவண்ணம் அந்த பெட்டியில் ஒரு துண்டு சீட்டும் இணைத்து இருந்தனர் ..

" டியர் டாடி/ மம்மி/தாத்தா. பாட்டி

என்னைக்காவது தானே இப்படி எல்லாம் கலாட்டா பண்ண முடியும் .. ப்ளீஸ் நம்மளில் மத்தவங்க கொடுத்த டிரஸ் போட்டிருக்கும்போது நீங்க மட்டும் போடாமல் இருந்தா நல்லாவா இருக்கும் ? கூட்டு குடும்பத்துக்கு அழகே விட்டு கொடுத்து சந்தோசமா இருக்குறதுதானே .. அந்த சந்தோஷமான தருணத்தை நாம இப்போது உருவாக்கலாமே, இப்படிக்கு உங்கள் செல்ல மணமக்கள் "

இப்படி ஒரு வாசகம் படிச்ச பிறகும்  நம்ம பெரியவர்கள்  முடியாதுன்னு சொல்லுவாங்களா என்ன ? சரி அவங்க டிரஸ்  மாத்தட்டும் .. இப்போ நாம ஜூனியர்ஸ் ரூமிற்கு போவோம் ..

நம்ம ஜுனியர்சில்  ஆணைகளுக்கு வேஷ்டி சட்டைதான் .. ஆனால் சட்டை அவரவரின் ஜோடிகளின் புடவை எந்த நிறமோ அதே நிறத்தில்... அண்ட் நம்ம பெண்களுக்கு என்ன டிரஸ் தெரியுமா ?? " கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு " அதே அதே ! கண்டாங்கி புடவையேதான் ...

" அச்சச்சோ இதை எப்படி கட்டுறது ?? " என்று அலறிய பெண்களுக்கு சமாதனம் சொன்னாள்  புவனா .. " எனக்கு தெரியும் நான் கட்டி விடுறேன் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.