(Reading time: 25 - 49 minutes)

 

" ஹே சொல்லுங்கடி "

 என்று மூவரும் சொல்ல மூவரின் கண் கட்டுமே ஒரே நேரத்தில் அவிழ்க்க, கண்களைத் திறந்ததும் முதலில் பார்த்தது அவரவின் ஜோடியைத்தான் .. மீண்டும் அங்கு பார்வைகள் இணைத்து பேச்சு மறந்து போக மித்ரா

" பார்த்தியா இவ்வளவு நேரம் ஆச்சு பூச்சுன்னு  கத்திட்டு  இப்போ சைலண்டா லுக் விடுறதை " என்று  வாரினாள் ...

ஆகஷோ " கார்த்தி .. லெட்ஸ் ஸ்டார்ட் மியுசிக் " என்றான் .. அப்போதுதான் அந்த இடத்தை பார்த்தனர்  அனைவரும் .. அவர்கள் வீட்டு பக்கம் உள்ள தோட்டத்தின் நடுவே பாய்கள்  விரித்து அங்கங்கு மெழுகுவர்த்தி ஏற்றி , அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, அழாகை இருந்தது அந்த இடம் .. அனைவரும் வட்டமாக அமர்வதற்கு இடம் ஒதுக்கிவிட்டு இன்னொரு பக்கம் லேப்டாப், ஸ்பீக்கர்  எல்லாம் தயார்படுத்தி வைத்திருந்தனர்...

" டேய் கார்த்தி .. இந்த சவுண்ட் சிஸ்டம் உன் வேலையா ? "

" கிருஷ்ணா அண்ணா, ஏற்பாடு அவன்தான் பட் ஐடியா என்னது" என்றாள் ..

" கலக்குறே செல்லம்"  என்று பாராட்டினான் கிருஷ்ணன் ..

" சரி என்ன இதெல்லாம் ? " -சுபி

" இது உங்கள் திருமணத்திற்கு எங்கள்  சங்கீத் இளவரசி " - மீனு

" இளவரசியா ? இந்த நேம் எப்படி வெளியானது அஜ்ஜு  ? "

" ஹா ஹா உங்க ஆளு தான் சொன்னாரு சுபி " என்றாள்  மீனு ..

" ஓகே இப்போ நாங்க உங்களுக்காக ஸ்பெஷல் டான்ஸ்  பெர்பார்மன்ஸ் கொடுப்போம்..அதுக்கு பிறகு கார்த்தி பாட்டு போட போட நாங்க எந்த ஜோடி பெயரை சொல்றோமோ அவங்க சென்டர்ல வந்து ஆடனும் .. " என்று நிகழ்ச்சியை துவக்கி வைக்க முன்வந்தாள்  மது ..

" ஹான் முக்கியாமான விஷயம் .. அந்த ஜோடி நம்ம மணமக்களாகத்தான் இருக்கணும்னு இல்லை " என்று சொல்லி கண்ணடித்தாள் கீர்த்தனா .. ஓகே யா ?  1 2...3...... என்று அனைவரும் சொல்ல, நம்ம பஞ்ச பாண்டவிகள் ஆட ஆரம்பித்தனர் ..

யாரோ யாரோடி ஒன்னோட புருசன்

யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க

அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு

சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை

வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு

அந்த பாடலை முடிந்ததும்  அடுத்த பாடலுக்கு ஆட்டம் தொடர்ந்தது

அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக

என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக (அத்தான் வருவாக)

கதவ சாத்தினால் ஜன்னல் தெறப்பாக

ஜன்னல சாத்தத் தான் மனசில்லையே

உன்ன காணத்தான் ரெண்டு கண்களா

பிரம்மன் செஞ்சது சரியில்லையே

ஒருவழியாய் பெண்கள் ஆடி முடிக்க அனைவரும் கை தட்டி பாராட்டினர் ..

" ஓகே இப்போ டான்ஸ் ஸ்டார்ட் போட்டி ஸ்டார்ட் " - மது

" மது ஒரு நிமிஷம் .. "

" என்னாச்சு கார்த்தி .."

"பாட்டு ரெடியாகுது .. அது வரை யாரும் பாடுங்க "

"ஆமா சஞ்சய் எங்க ?" என்று கண்களாலே தேடினாள்  புவனா .. மற்றவர்கள் அனைவரும் யாராச்சும் பாடுங்களேன் என்று சொல்ல, புவனாவை பார்த்து பாடிக் கொண்டே அங்கு வந்து அமர்ந்தான் சஞ்சய் ..

கூட்டத்திலே கோவில் புறா

யாரை இங்கு தேடுதம்மா

கொலுசு சத்தம் கேட்கையில்

 என் மனம் தந்தி அடிக்குது தந்தி அடிக்குது

குமரி பெண்ணை பார்க்கையில்

 என்னிலே மின்னல் அடிக்கிது மின்னல் அடிக்கிது .......

" ஓகே ஓகே பாட்டு ரெடி ... நம்ம முதல் ஜோடி .. எஸ் யூசுவல், அர்ஜுன்- சுபத்ரா " என்று சொல்லி பாடலை ஒளிபரப்பினான் கார்த்தி ...

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன் டீ

உன் எலுமிச்சைபழ நிற இடுப்புல கிறங்கி போனேன்டி

அடியே சூடான மழையே கொடிபோல் நனைஞ்சுக்கலாமா ?

கொடியே  வெத்தலை கொடியே  சுண்ணாம்பு நான் தரலாமா ?

அடியே தாவணி பூவே தேனை எடுத்துக்கலாமா

கொலுசு போட்ட காலிலே  தாளம் போட்டுகலாமா ..

" ஓகே இப்போ ரகு ஜானு அப்படியே ஜாய்ன்  பண்ணுங்க "

நீ வெட்டி வெட்டி போகும் நகத்தில் எல்லாம்

அடி குட்டி குட்டி நில்கவு தெரியுதடி

உன் இடுப்பளவு உரசும் கூந்தலிலே

அடி பத்திகிட்டு மனசு எரியுதடி

 சிக்கிமுக்கி கல்லை போலே

என்னை சிக்கலிலே மாட்டாதே

தாலி ஒன்னை போடும் வரை என்னை வேறொன்னும் கேக்காதே

அந்த வானம் பூமி எல்லாம் இங்கே ரொம்ப ரொம்ப பழசு

ஆடை நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல் தாண்டி புதுசு

" நெக்ஸ்ட், கிருஷ்ணா- மீரா "

மாமா நீங்க தூங்கும் மெத்தையில என்னோட போர்வை சேர்வதெப்போ

மாமா நீங்க  வாங்கும் மூச்சினிலே என்னோடு மூச்சும் சேர்வதெப்போ

என் ஆயுள் ரேகை எல்லாம் உன் உள்ளங்கையில் ஓடுதடி

உன் உள்ளங்கை அழகினிலே ஆசை உச்சிவரை கூடுதடி ..

நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது

என் கழுத்துகிட்ட முத்த தழும்பு மயில் இறகா கூசுது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.