(Reading time: 25 - 49 minutes)

 

" குட் ஐடியா தான் பட் எல்லாருக்கும் நீ கட்டிவிட லேட்டாகும் புவனா " என்ற மது நெற்றி பொட்டில் ஆள் காட்டி விரலால் ஐந்து முறை அடித்து கொண்டாள் ... ( அப்படின்னா யோசிக்கிறான்னு அர்த்தம் )

" ஹேய் ஐடியா.. எல்லாரு போன் ளையும் நெட் இருக்குதானே .. மிஸ்டர் கூகள் கிட்டா ஹொவ் டூ டை கண்டாங்கி சாரின்னு  சேர்ச் பண்ணி கட்ட ஆரம்பிங்க .. புவனா ரெடி ஆகிட்டு  கொஞ்சம் டச் ஆப் பண்ணி விட்டாலே போதும் .. "

" வாவ் எப்படி மது இப்படி யோசிக்கிற ? " - ஜானகி

" அதுகெல்லம் கிட்னி வேணும் கல்யாண பொண்ணே  " என்றவள் தலையில் கைவைத்து காட்டினாள் ..

" ஓகே ஓகே .. சீக்கிரம்  ரெடி ஆகுங்க .. "

 டக் டக் டக்

" ஹே கீர்த்ஸ் கதவு தட்டுற சத்தம் கேட்குது யாருன்னு பாரு "

" நான் மாட்டேன் நீ போ ப்ரியா "

" ஹே ஏண்டி நீ போக மாட்டுற  ? "

" ஆமா வீட்டுல ஆயிரம் காதல் மன்னன்கள் .. அவங்கவங்க ஆளை பார்க்கனும்னு கற்பனை பண்ணிட்டு இருக்கும்போது நாம நின்னு எக்கு தப்பா ஏதும் ஆகிட போகுது "

" உன்னை அதிகம் படம் பார்க்க விட்டது தப்பா போச்சு " என்றாள்  மலர் ..

" ஆமா இவதான் எனக்கு தினம் ஒரு படம் போட்டு காட்டுறா .. போடி "

" அக்கா கை வலிக்கிறது சீக்கிரம் கதவை திறங்க " என்று குரல் கொடுத்தான் வருன்..

" இதோ வந்துட்டேன் வருண் " என்றபடி ஓடி வந்தாள்  மீரா ..

" வாவ் அக்கா அழகா இருக்கீங்க " எனவும் தூரத்தில் இருந்து கிருஷ்ணனின் குரலில் கேட்டது

" எவண்டா அது எனக்கு முன்னாடி என் செல்லத்தை பார்த்தது .. பிச்சுபுடுவேன் பிச்சு "

" ஹா ஹா .. உன் மாமாவுக்கு இதே வேலை ..சரி கைல என்ன ? மல்லிகை, முல்லை கனகாம்பரம்னு ஒரு பூக்கடையே இருக்கு "

" மாமாதான் எல்லாரையும்  வெச்சுக்க சொல்லி கொடுத்து அனுப்பினாங்க "

" ஹா ஹா சரிதான் .. இங்க கொடு ..தேங்க்ஸ் கண்ணா " என்றவள் அறைக்குள் பூச்சரத்துடன்  பிரவேசித்தாள் .

" ப்பா ..ஏற்பாடு எல்லாம் பாலம்மா இருக்கே "

" ஆமா புவனா " - மீரா

" அப்போ எல்லாரும் கேமரா ரெடி பண்ணுங்க "  என்றால் சுபத்ரா ..

" ஏன் சுப்பு .. நீ உன் ஆளுகூட டூயட் பாடுறதை போட்டோ எடுக்கணுமா ? "

" இல்லை குரங்கே .. நீ கார்த்திக்கை  பார்த்து வழியுரத்தை ஷூட் பண்ணி யு டியுப் ல போடா போறேன் "

சுப்ரியாவோ " அப்போ நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் " என்றாள் ...

" அண்ணி நானும் பார்க்குறேன் .. இங்க வந்ததுல இருந்து நீங்க ரொம்ப வாலா  மாறிக்கிட்டு இருக்கீங்க .. "

" விடு நித்து ..பூவுடன் சேர்ந்த நாறும் மணக்குது "

" ஹே மித்ரா நீயுமா ? இருடி உன்னை உன் ஷக்தி மாமாவோடு எப்படி கோர்த்து விடுறேன் பாரு "

ஜானிகியோ " அட போம்மா ..என்னம்மோ இதுக்கெலாம் அவ பீல் பண்ற மாதிரி பேசுற ? அவளே எப்போடா நாம அவளை ஷக்தியோடு  ஓட்டுவோம்னு பார்க்குறா "

" ரைட்டு  ஜானு .. மொத எப்படி ஓடி போயி ஷக்தி கையில் இருந்த திங்க்ஸ் எல்லாம் வாங்கிகிட்டா கவனிச்சியா ? " - சுபி ..

" அடடே .. என்னங்கடி .. இங்க நீங்க மூணு பெரும் கல்யாண பொண்ணா ? இல்ல நான் கல்யாண பொண்ணா  ? "

என்று மித்ரா சொல்லும்போதே ஷக்தியின்  குரல் கேட்டது ..

" அம்மு ரெடியாடீ ??? "

" வரேன் டா மாமா .. வெயிட் "

" ஹா ஹா ஹா ஹா "

" என்னங்கடி சிரிப்பு ? "

" இல்ல நீ ஷக்திக்கு  கொடுக்குற மரியாதையில மெய் மறந்துட்டோம் .. "

கரும்பச்சை நிற ஷர்ட்டும் , வேஷ்ட்டியும் அணிந்திருந்தான் அர்ஜுனன் .. ஏற்கனவே கம்பீர தோற்றத்தில் அசத்துபவனின் முகத்தில் இப்போது கல்யாண களையும் கூடியது ..

" தாத்தா "

" அர்ஜுன் "

" வெளில வாங்க தாத்தா ... "

" போப்பா நான் மாட்டேன் ... "

"அடடே நீங்களே இவ்வளவு வெட்கப்பட்டா நான் மத்த டிக்கெட் எல்லாரையும் எப்படி சமாளிக்கிறது .. நான் ஏற்கனவே சொன்ன அந்த பாட்டு வேற கிருஷ்ணா ரெடி பண்ணி வெச்சிட்டான் .. நீங்க இப்படி லாஸ்ட் மினிட் ல கலட்டி விடலாமா ? "

" ஹா ஹா .. வந்தேன் பேரனே வந்தேன் " என்று மீசையை முறுக்கி கொண்டு வந்தார் தாத்தா ..

" வாவ் .. தாத்தா ஜீன்ஸ் டி ஷர்ட் ல கலக்குறிங்க போங்க .. " அதற்குள் பாட்டியும்  அங்கு வந்து நின்றார் .. அர்ஜுனன் அவரை பாராட்டும் முன்னமே

" பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ?

இது பூவாடை வீசி வர பூத்த பருவமா ? " என்று பாடினார்  தாத்தா ..

" அடடே மாமா, அத்தை , அம்மா .... வாங்க வாங்க " என்று வரவேற்றான் அர்ஜுனன் ..

ஆண்கள் அனைவரும், பெரியோரும் வந்தும் பெண்கள் இன்னும் வரல .."எங்க நம்ம அஞ்சல்ஸ் "  என்று கார்த்தி, ஆகாஷ் கோரசா கேட்கும்போதே வரிசையாய் வந்தனர் பெண்கள் அனைவரும் ..

சில நிமிடங்கள் யாரும் பேசவே இல்லை .. அதுவும் நம்ம மாப்பிளைகள் அர்ஜுன், ரகு, கிருஷ்ணன் மூவரும் சொல்லவே வேண்டாமே ... பார்வையாலேயே காதல் கதை பேச தொடங்க , நம்ம பஞ்ச பாண்டவிஸ் தான் நான்காவது முறையாக

" அஹெம் அஹெம் அஹெம் " என்று தொண்டையை செருமினர் ...

" அடடே என் பேத்திங்க எல்லாரும் எவ்ளோ அழகா இருக்காங்க உடனே திருஷ்டி சுத்தி போடணும்" என்றார் பாட்டி .. அப்போதுதான் அவர்களும் சுடிதாரில் இருந்த பாட்டியை கண்டனர் ..

" அடடே ,.... பாட்டி கலக்குறிங்க போங்க " என்று அனைவரும் ஆர்பாட்டம் செய்ய அங்கு பேச்சுக்கு தடையில்லாமல் போனது .. சிறிது நேரத்தில் ரகுராம்தான்

" ஹேய்  அர்ஜுனும் தாத்தாவும் எங்க ?? " என்றான் .. அனைவரும் ஆமாலே எங்க ?? என்று தேடும்போதே கிருஷ்ணனின் தலைமையில் அந்த பாடல் ஒளிபரப்பானது .. அந்த பாடலை பாடிக்கொண்டே தாத்தாவுடன் வந்தான் அர்ஜுனன்

இந்த பூந்தென்றல் காற்று

இனி வீசும் என்னை பார்த்து

நான் ராஜாதி ராஜனம்மா ஓஹோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.