(Reading time: 25 - 49 minutes)

 

" வைட்  வைட் எனக்கு இப்படி கூப்பிட்ட பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும் ??"

" ஹே மக்கு பொண்டாட்டி அன்னைக்கு நீதானே உங்க சில்சீ ல கதை படிச்சுட்டு சொன்ன ? "

" என்ன சொன்னேன் ??"

" என் மறதி  மகாராணியே நீங்கதான் சில்சீல  வத்சலானு  ஒருத்தவங்க சூப்பரா 'உள்ளம் வருடும் தென்றல்னு ' கதை எழுதுறாங்க..அதை மிஸ் பண்ண கூடாதுன்னு என் மொபைல் வாங்கி படிச்சுட்டு ...பரத் முதன்முதலில் அபர்ணாவை கண்ணம்மான்னு கூப்பிட்டான்  அத்தான் .. சோ ஸ்வீட்  தெரியுமா ? எனக்கு கண்ணம்மா என்ற வோர்ட் ரொம்ப பிடிக்கும் .. என்னதான் இங்க்ளிஷ்ல  கொஞ்சிக்க ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும் அது தமிழுக்கு ஈடாகாதுன்னு சொன்ன .. ? "

" அட ... ஆமா.. ஆனா நீங்க அதை இன்னும் ஞாபகம் வச்சிருப்பிங்கன்னு நெனைச்சே பார்க்கல பேபி .."

" ஹா ஹா ஹா .. அதிகம் கோபப்படுற பொண்டாட்டியை கட்டிகிட்டா  அவளை தாஜா பண்ணுற வழியை எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கனும்னு  என்  அப்பா குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொன்னாரு .. "

" வெவ்வெவ்வெவ்வெவ்வெ  உங்க வாலுத்தனத்துக்கு  என் மாமாதான் கிடைச்சாரா ராஜ் ??"

" ஹா ஹா ஹா .. உனக்காகா நான் ஒரு பாட்டு கூட வெச்சிருக்கேனே .. "

" பாருடா .. இது வேறயா ? எங்க பாட்டு .. "

" அது காரில் போடுறேன் .. "

" காரா ?? ஹேய் .. அப்போ நாம வெளிய போறோமா ? "

" ஹா ஹா .. உளறிட்டேனே.. ம்ம்ம் ஆமா பேபி .. நாம ரகு ஜானு கல்யாணத்துக்கு போறோமே .. உன்கிட்ட சண்டை போடுற மாதிரிஏக்டிங் பண்ணிகிட்டெ  ரூம்ல திங்க்ஸ் பேக் பண்ணிட்டு இருந்தேன் .. என் டார்லிங் பால் குடிச்சிட்டா, நாம இப்போவே கெளம்பலாம் " என்றான் ரவிராஜ் .. கணவனின் அன்பில் மனம் நிறைந்தவள்  அவன் மார்பில் சாய்ந்து கொண்டு கொஞ்ச நேரம் செல்லம் கொஞ்சினாள் ...

காரில் ,

" அஹெம் அஹெம் "

" என்ன சுஜி  குட்டி??"

" யாரோ எனக்காக பாட்டு டெடிகேட் பண்ணுறேன்னு சொன்னாங்களே யாருப்பா அது  ???"

" ஹா ஹா .. நானேதான் .. இதோ போடுறேன் இரு "

(பின்குறிப்பு :  இந்த பாட்டு அண்மையில் கேட்டபோது எனக்கு உண்மையிலேயே நம்ம சுஜிக்கு டெடிகேட் பண்ணனும்னு தோணிச்சு .. அதனால் இந்த பாட்டை நான் அவங்களுக்கு டெடிகேட் பன்னுறேனுங்க :) )

சிந்திய  வெண்மணி  சிப்பியில்  முத்தாச்சு   என் கண்ணம்மா

செந்நிற  மேனியில்  என்  மனம் பித்தாச்சு   என்  பொன்னம்மா  

சேலாடும்   கண்ணில்  பாலூறும்  நேரம்  

செவ்வானம்  எங்கும்  பொன்  தூவும்  கோலம்  

" இந்த பாட்டு கேட்டதில்லை பேபி .. "

" 80ஸ்ட்  பாட்டு  டா.. உனக்கு பிடிக்கும் ..கேளேன் "

பெண்ணென்னும்  வீட்டில்  நீ  செய்த  யாகம் 

கண்  மூடி  பார்த்தேன்  எங்கும்  இன்பம் 

அன்பென்னும்  ஆற்றில்  நீராடும்  நேரம் 

அங்கங்கள்  யாவும்  இன்னும்  என்னும் 

இன்றைக்கும்  என்றைக்கும்  நீ  எந்தன்  பக்கத்தில் 

இன்பத்தை  வர்ணிக்கும்  என்னுள்ளம்  சொர்க்கத்தில் 

மெல்லிய  நூலிடை  வாடியதே 

மன்மத  காவியம்  ஓடியதே 

அள்ளியும்   கிள்ளியும்   ஆயிரம் ஆசைகள் 

அன்பென்னும் கீர்த்தனை  பாடியதே  

" எப்போ இந்த பாட்டுலாம் கேட்டிங்க ? "

" யு டியுப்ல  நத்திங் பட் இளையராஜான்னு ஒரு கலக்ஷேன் இருக்கு .. அதுலதான் .. ..அடுத்து வர்ற லைன்ஸ்  எல்லாமே நமக்குதான் டா "

தாய்  தந்த   பாசம்  தந்தை  உன்  வீரம்

சேய்  கொள்ள வேண்டும் அன்பே அன்பே

காலங்கள்  போற்றும்  கைதந்து  காக்கும் 

என்  பிள்ளை  தன்னை  இங்கே  இங்கே 

வீட்டுக்கும்  நாட்டுக்கும்  நான்  பாடும்  பாட்டுக்கும் 

எத்திக்கும்  தித்திக்கும்  என்  இன்ப  கூட்டுக்கும் 

என்  மகன்  காவிய  நாயகனே 

என்  உயிர்  தேசத்து  காவலனே 

வாடிய  பூமியில்  கார்முகிலாய்  மழை  தூவிடும் 

மானுடன்  என்  மகனே  

" ஐ லவ் யு ராஜ் "

" நானும்தான் கண்ணம்மா "

சூப்பர் ..விடிஞ்சா கல்யாணம் நம்ம ரவி- சுஜா சூப்பர் ஸ்டார் என்ட்ரி  மாதிரி, வரவேண்டிய நேரம் கரெக்ட்டா வராங்க ..

ஆதவன் கண் திறக்க

தாமரையும் முக சிவக்க

குயில்களும் இசையமைக்க

மயில்களும் நர்த்தனமாட

சோலை எங்கும் மணமணக்க

இரு கன்னியர் உள்ளம் படபடக்க

அழகாய் புலர்ந்தது திருமண காலை பொழுது ... பெண்கள் அனைவரின் கேலி பேச்சில் மூச்சுவிடவும் மறந்தனர் மீராவும்  ஜானகியும் ...

" என்னம்மா எழுந்தாச்சா ?? " - லக்ஷ்மி

" அதெல்லாம் தூங்கினாத்தானே  " -நித்யா ..

" சும்மா இருடி வாயாடி .. "

" புவனா இங்க வா "  - பானு

" என்னம்மா ? "

" ரெண்டு பொண்ணுங்களையும் பின்பக்கமா  கேணி பக்கம் கூட்டிடு வா "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.