(Reading time: 29 - 58 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 26 - புவனேஸ்வரி கலைச்செல்வி

க் டக் டக்

கதவு தட்டும் சத்தம் கேட்டது . முகம் எல்லாம் வெளுத்து கொஞ்சம் பயந்து தான் விட்டாள்  சுபத்ரா.. ஒரு புறம், ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள கூடாது என்று பெரியவர்கள் சொன்னதை மீறி விட்டோமே என்று பயம், இன்னொரு பக்கம்  நம்ம இளமை பட்டாளத்தில் இருக்குற யாரும் பார்த்துவிட்டாள்  கேலி செய்வார்களே என்ற பதற்றம் .. என்ன செய்வது ? என்று புரியாமல் அர்ஜுனனின் முகத்தை பார்த்தாள்  .. அவனோ அதி முக்கியமான வேலையாய்  அவளின் கைவளைகளோடு  விளையாடி கொண்டு இருந்தான் .. நிமிர்ந்து பார்க்காமலே அவள் தன்னைத்தான் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள் என்பதை உணர்ந்தான் .. உடனே சன்ன குரலில்

" என்ன இளவரசி ??? என்னை இப்படி பார்த்து வைக்கிற ? அவ்ளோ அழகாவா இருக்கேன் ? " என்று  கண்சிமிட்டினான் .. எவ்வளவு மறைந்தாலும் அவள் முகம் சிவப்பதை தடுக்க முடியவே இல்லை .. இருப்பினும் தொடர்ந்து கதவு தட்டும் சத்தம் கேட்கவும், அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அவனை முறைத்தாள்  சுபத்ரா ... ( முறைத்தளா ???? சொன்ன நம்ப மாட்டிங்களே .. சரி முறைக்க முயற்ச்சித்தாள்  .. போதுமா? ஹாஹா )

VEVNP

" என்னடா ??"

" அஜ்ஜு ....."

" சொல்லு"

"  யாரோ கதவு தட்டுறாங்க "

" அது எனக்கும்  தெரியுது இளவரசி  " 

" விளையாடாதிங்க .. இப்போ என்ன பண்ணுறது ??"

" ஹ்ம்ம் .. என்ன பண்ண முடியும் ?? ஒன்னும் பண்ண முடியாது .. வாசல் ல நிற்குறவங்க  காலிலே விழுந்திட வேண்டியதுதான் .. "

" அஜ்ஜு "

" ஹா ஹா மக்கு இளவரசி .. இன்னும்  ரெண்டு நாளில் நமக்கு கல்யாணம் .. என்னம்மோ இன்னமும் ரகசிய காதலர்கள் மாதிரி பயந்துகிட்டு இருக்க நீ ??  பயப்படுற ஆளா நீ ?? அப்பறம் யெண்டீ  இங்க வந்த .. ? " என்றான் குறும்புடன் ..

" அச்சோ ஏதோ தைரியத்தில் வந்துட்டேன் பா " என்று சுபி சொல்லும்போதே வெளியில் இருந்து குரல் கொடுத்தான்  வருண் ..

" அர்ஜுன் அண்ணா ... "

" வருண் .. என்னடா ??"

" கதவை திறங்க .. உள்ள இருந்து தேங்காய் எடுத்துகிட்டு வர சொன்னாங்க .... "

" தேங்காய் தானே .... நான் கொண்டு வரேன் .. நீ போ "

" இல்லைண்ணா  நானே .. "

" தம்பி .. அண்ணா சொன்னா சமத்தா கேட்டுக்கணும் " என்று குரல் கொடுத்தவனின் பேச்சிற்கு இணங்கி திரும்பி சென்றான் வருண் ..

" ஹப்பாடா .... " என்று பெருமூச்சு விட்டாள்  சுபத்ரா .. அவளையே வைத்த கண் வாங்காமல்  பார்த்தான் அர்ஜுன் ..

" என்ன பார்வை வேண்டியதுகிடக்கு ?"

" ஹ்ம்ம் வேறே என்னென்னமோ  தான் வேண்டியது கிடக்கு ... கேட்டால் கிடைக்குமா ? "

" ம்ம்ம்ம் ரெண்டு உதை  வேணும்னா கிடைக்கும் " என்றவள் அவனை தள்ளி விட்டுவிட்டு ஓடினாள் ... சிரித்துக்  கொண்டே ஓடியவள் நித்யாவை மோதி நின்றாள் ...

" ம்ம்ம்ம்கும்ம்ம்ம்ம் "

" என்ன ? " - சுபி

" என்ன என்ன ??"

" ஒன்னுமில்லையே .... "

" ஆமாவா ?? "

" ப்ச்ச்ச் நித்து ... "

" பாருடா .. இளவரசிக்கு இப்படி கொஞ்ச கூட தெரியுமா ? "

" ச்சி  போடி ... " என்று கூறிவிட்டு நாணத்தோடு ஓடினாள்  காதலில் கரைந்த கன்னியவள் .. ( வாங்க நாம நம்ம மாப்பிளைகளைப்  பார்ப்போம் )

காதலில் விழுந்த பிறகு தோன்றும் ஒவ்வொரு பகலும் காதலர்க்கு பல்லாயிரம் கதைகளை சொல்லும் .. எதிர்பார்ப்புகள், கனவுகள், சந்திப்புகள்,பார்வை பரிமாற்றங்கள் , பாடல்கள் ( பூவி  கதைகளில் பாடலும் முக்கியம் ஆச்சே .. ஹாஹா ) ,  ஸ்பரிசங்கள், இன்ப அதிர்ச்சிகள்..... இப்படி காதலில் கரைந்தப்பின் ஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு அத்தியாத்திற்கு  வழிவகுக்கும் ... அவர்களுக்கும் அப்படித்தான் .. கண்டதும் காதலை கவ்வி, நத்தை போல் நகர்ந்த நாட்களின் மீது காதல் வித்தையை  நிகழ்த்தி நெஞ்சத்தில் நிறைந்தவளை ஊரறிய தன்னில் சரிபாதி ஆக்கி கொள்ள வேண்டிய அந்த தினம்,  ஆயிரம்  கோடி ஆதவன்கள் கைகோர்த்து விடியலை தந்தது போலவே பிரகாசமாய் விடிந்தது நம் கிருஷ்ணன் மற்றும் ரகுராமிற்கு ... அண்ணன் தம்பி இருவருமே ஒரு ரகசிய புன்னகையை பரிமாறிக் கொண்டனர் .. முகம் முழுக்க காதலின் ஜ்வாலை.. கண்களில் அளவில்லா உவகையின் பிரதிபலிப்பு ...

" அண்ணா, நேத்து தாத்தா உங்களை மொட்டை மாடி கதவு பூட்டியிருக்கானு பார்த்துட்டு வர சொன்னாரே , அதுக்கு பிறகு உங்களை ஆளே காணோமே ..  ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப  பிசியா ? " என்று கண் சிமிட்டினான் ரகுராம் .. தம்பியின் குறும்பை  ரசித்த கிருஷ்ணன், அவனுக்கு தான் சளைத்தவன் அல்ல என்று நிரூபித்தான் ..

" ஆமா ஆமா .. அதான்  இந்த அண்ணனை தேடி தேடி தம்பி நீயும் சரியா தூங்கல போல .. கண்ணெல்லாம் சிவந்து இருக்கே " என்று கண் சிமிட்டினான் கிருஷ்ணன் ...

" அய்யோ அண்ணாச்சி உங்க ரேஞ்சு தெரியாமல் கலாய்ச்சிட்டேன் .. அடியேனை மன்னிச்சிடுங்க " என்று பெரிய கும்பிடு போட்டான் ரகுராம் ..

" ஹா ஹா .. எப்படியும் இன்னைக்கு நம்மளை ஓட்டி  தள்ளிடுவாங்க .. அதனால் நான் உன்னை விட்டு வைக்கிறேன் .. அதுவும் இந்த ஆகாஷ் இருக்கானே, ' மச்சான் நீ ரெடியா இருடா என் கல்யாணத்துக்கு நீ கொடுத்ததை எல்லாம் நான் திருப்பி கொடுக்கணும்' நு நோட்டிஸ் எல்லாம் விடுறான் டா " என்று சிலாகித்து கொண்டான் கிருஷ்ணன் ..

" யாரு நோட்டிஸ் எல்லாம் விடுறது ? " என்று கேட்டு கொண்டே அங்கு வந்தார் தாத்தா ..

" தாத்தா ", " சூப்பர் தாத்தா " , " கலக்கிட்டுங்க தாத்தா ? " ," எப்படி தாத்தா ?? தேங்க்ஸ் தாத்தா " என்று ஐவரும் அவரை கட்டிக்கொண்டு முத்தமழை பொழிந்தனர் ..

" டேய் டேய் போதும்டா விடுங்கடா .. உங்க பாட்டிக்கே  பொறாமை வர வச்சிடுவிங்க போல .. இன்னும் 2 மணிநேரத்துல கல்யாணம் .. தெரியுமா ?? போங்கடா .. போயி குளிச்சிட்டு வாங்க " என்று பேரன்களை  அனுப்பி வைத்தார் தாத்தா .. அவர் பேச்சுக்கு சரியென தலையாட்டி சென்ற இருவரும் ஒரே நேரத்தில் ஓடி வந்து அவருக்கு முத்தம் தந்து விட்டு சென்றனர் ...

னிதர்களாகிய நமக்கு தாய் தந்தை, உடன் பிறப்பு, சுற்றத்தாரை  தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் கிடையாது ... நாம் விரும்பி தேர்ந்தெடுப்பதும், சேர்ந்து மகிழ்வதும் இரு உறவுகளில்தான் .. அதுதான் நட்பும் காதலும் .. இந்த இரண்டு உறவுகளுமே இனிதாய் அமைந்துவிட்டால் அதைவிட பெரும் வரம் வேண்டுமா என்ன ? தன் வாரிசுகளுக்கும் ஓர் இனிய வாழ்வு அமைந்ததில் பூரித்து போனார் வேலு தாத்தா .. ( நம்ம ரெண்டு ஹீரோவும் தாத்தாவை அப்படி கொஞ்சற அளவுக்கு அவர் என்னதான் பண்ணாரு ?? அதை சொல்லுறேன் .. பட் அதுக்கு முன்னாடி வாங்க நாம நம்ம மீரா ஜானு ரெண்டு பேரையும்  பார்த்துட்டு வருவோம் .. )

" தங்க சிலை மாதிரி இருக்கீங்க மா ரெண்டு பேரும்  " என்று சொல்லி இருவரின் கன்னத்தையும் தொட்டு திருஷ்ட்டி சுத்தினார்  வள்ளி பாட்டி ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.