(Reading time: 29 - 58 minutes)

 

" ல்லா இருக்கு பாட்டி .. இன்னும் அலங்காரமே பண்ணலை .. அதுக்குள்ள அவங்க உங்க கண்ணுக்கு தங்க சிலை மாதிரி இருக்காங்களா ? " என்று போலியாய் சலித்து கொண்டாள்  சங்கமித்ரா ..

" ஏன் ? என் மீராவுக்கு என்ன குறைச்சல் .. மேக் அப்பே போடலைன்னாலும் அவ அழகுதான் " என்று மீராவை கட்டி உச்சியில் முத்தமிட்டாள்  நித்யா.... மீராவுக்குமே அவளின் அணைப்பு மிக ஆறுதலாய் இருந்தது .. என்னதான் தனக்கு கல்யாணம் என்றாலும், அதை நடத்தி வைக்க தன்னை பெற்றவர்கள் இல்லையே என்று அவள் மனம் கொஞ்சம் வாடத்தான் செய்தது .. தன் தோழி வந்து தன்னை அணைத்துக்  கொள்ளவும், அவளின் தோல் வளைவில் சாய்ந்து நின்றாள் மீரா .. சுபத்ராவும் உடனே

" அட, மீரா அண்ணி மட்டுமா ?? என் ஜானு செல்லமும்தான் அழகு தேவதை மாதிரி இருக்கா " என்று அவளை கட்டிக் கொண்டு அவளை முத்தமிட்டாள் ...

" இப்போவே நல்லா கொஞ்சிகாங்க ரெண்டு பேரும் .. கல்யாணம் ஆயிடுச்சுனா நம்ம கிருஷ்ணாவும், ரகுவும் இந்த வாய்ப்பை உங்களுக்கு தர மாட்டங்க " என்று சொல்லி கண்ணடித்தாள் சுப்ரியா ..... ( சுப்ரியா .. யு டூ ?? ம் எல்லாம் உங்க ஆகாஷ் கொடுக்குற தைரியம் .. )

" அடடே என் அண்ணிக்கு  அனுபவம் பேசுது போல இருக்கு " என்றாள்  நித்யா ...

" ஆமா எங்க மத்த எல்லாரும் ? " என்று கேட்ட சங்கமித்ராவை பார்த்து சிரித்தாள் புவனா ..

" ஹா ஹா .. உங்க தேடல் எனக்கு புரியுது மித்ரா .. பட் என்ன பண்ணுறது .. இது லேடிஸ் ரூம் .. சோ உங்க ஷக்தி மாமா இங்க இருக்க மாட்டாரு .." என்றாள் ....

" அப்படி போடு அருவாளை " என்று சொல்லி புவனாவிற்கு ஹாய் 5 கொடுத்தனர் சுபத்ராவும், நித்யாவும் ... இடுப்பில் கை வைத்து அவர்களை முறைத்தவள்,

" நான் ஒன்னும் சக்தியும் சஞ்சயும் எங்கன்னு தேடல " என்று சொல்லி புவனாவின் முகபாவத்தை ரசித்து விட்டு " நம்ம மது, கீர்த்தனா, மீனா, மலர், ப்ரியா  எங்கன்னு கேட்டேன் " என்றாள் ...

" சுஜா வந்துருக்காங்க ..அவங்க கூட இருப்பாங்க " என்றாள்  ஜானகி ..

" சுஜான்னா  சுஜாதாவா ஜானு ? ரகுவோட எக்ஸ் பி ஏ  "

" ம்ம்ம்ம் ஆமா சுபி .. ..."

" அவங்க வந்தது எங்களுக்கே தெரியாது .. கல்யாண பொண்ணு உனக்கு எப்படி தெரியும் ? " என்று கேட்டாள்  நித்யா ..

" அது ... அது .... " என்று இழுத்தவளுக்கு நேற்று நடந்தது ஞாபகம் வந்தது ..

" ஆஹா பொண்ணு ரொம்ப வெட்கபடுதெ .. அப்போ ஏதோ நடந்துருக்கு .. மீரா நீ சொல்லு ... நீங்க ரெண்டு பேரும்  ஒரே ரூமில் தானே இருந்திங்க நேத்து ? " - சுப்ரியா

நேற்றைய நினைவில் மீராவும் தடுமாறினாள் ... பாட்டிதான் " சரி மா .. அதை எல்லாம் அப்பறம் பொறுமையா பேசுங்க ,... நேரம் கடந்துகிட்டே இருக்கு .. இவங்களை  தயார் படுத்துங்க ... நான் முகுர்த்த புடவைய லக்ஷ்மி, பானுகிட்ட கொடுத்து அனுப்பி விடுறேன் .. பொண்ணுங்களா, நீங்களும் கிளம்புங்க " என்றார் ....பெண்கள் இருவரும் ஒரு ரகசிய பார்வையை பரிமாறிக் கொண்டனர் .. அதன் பிறகு பேச்சு திசைமாற, திருமண நாளுக்காக காத்திருந்த கன்னிகைகள், தேவதைகளாக உருமாறிக் கொண்டு இருந்தனர் .. ( அந்த கேப்ல நேத்து என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன் வாங்க )

நேற்றிரவு, ( இரவுன்னதும் ஒரு 10 மணின்னு நினைக்க கூடாது .. நம்ம அகராதியில் இரவுன்னா  அது 3 மணி .. )

திருமண ஏற்பாடுகள் முடித்து விட்டு அப்போத்தான் நன்கு கண் அயர்ந்தனர் அனைவரும் .. உறக்கம் வராமல் தவித்தது நம்ம மணமக்கள் தான் .. கிருஷ்ணா, ரகுராம் ஒரு அறையிலும் , மீரா ஜானு இருவரும் ஒரு அறையிலும் இருந்தனர் .. மணமகன்கள் இருவரும் மறுநாளின் நிகழ்விற்காக வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருந்தனர் .. ஏனோ அவர்களுக்கு அப்போதே தத்தம் இணையுடம் பேசவேண்டுமென்ற ஆவல் தோன்றியது .. ஆனால் முடியாதே !!! பெருமூச்சு விட்டனர் இருவரும் .. அதே நேரம், உறக்கம் வராமல் தவித்தாள் ஜானகி... மனதில் தன் தந்தையின் நினைவு, ஸ்ரீராமின் நினைவு .... அதே நிலையில்தான் மீராவும் இருந்தாள் ... தன் தந்தை கொடுத்து வைத்திருந்த நகைகளை தொட்டு பார்த்து கண்ணீர் விட்டாள் ...

திருமணம், ஒரு ஆணுக்கு  அவன் வாழ்வில் அது மகிழ்வின் உச்சம் ; வாழ்வின் அடுத்த கட்டம் .. ஒரு பெண்ணுக்கோ அது வாழ்வின் திருப்புமுனை .. இனி அவள் வாழ்வில் ஆயிரமாயிர மாற்றங்கள் ..அனைத்தும் அவளின் கணவனையும் அவனின் குடும்பத்தை சார்ந்தே இருக்கும் .. ஓர் திருமணத்திற்கு முன்பும் பிறகும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையில் வாழலாம் . ஆனால் பெண் ??? அவளின் ஒவ்வொரு அசைவும் அவனின் குடும்பத்தை பொறுத்தே நகரும் .. அதனாலோ என்னவோ, திருமணத்தில் மணமகளாய்  இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் குடும்பத்தின் நினைவுகள் மனதில் அலையாய் மோதும் .. பெற்றோர் உள்ளவர்களுக்கு தாயோ தந்தையோ அருகில் வந்து ஆறுதல் சொல்லலாம் .... இல்லாதவருக்கு ???? மனம் பாரமாய் இருந்தது பெண்கள் இருவருக்கும் .. ஜானகியின் முகத்தை பார்த்தாள்  மீரா .. அவளுக்கும் தனிமை தேவைபடுகிறதோ ???

" ஜானகி "

" சொல்லுங்க அக்கா "

" அக்காலாம் எதுக்கு மீரான்னே கூப்பிடு "

" இல்ல ... எனக்கு உங்களை அக்கான்னு கூப்பிடனும்னு ஆசையா இருக்கு ..ஏதோ சொல்ல வந்திங்களே ?? "

" ம்ம்ம் .. அது வந்து ... தூக்கம் வரல .. நான் கொஞ்ச நேரம் மாடிக்கு போயிட்டு வரவா ? "

" ஐயோ இதுக்கு ஏன் அக்கா என்கிட்ட சொல்லிகிட்டு .. தராளமா போயிட்டு வாங்க .... " என்று புன்னகைத்தாள்  ஜானகி ..

" ம்ம்ம்ம் " என்ற மீராவும்  ஜானகியின் கையை மிருதுவாய் அழுத்தி புன்னகைத்துவிட்டு சென்றாள்  .. அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ஜானகியின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் " இப்போதாவது எங்களை விடுவித்து விடு " என்று மன்றாடின .. அவளுக்கும் அந்த அறையிலேயே அமர்ந்து இருக்க பிடிக்கவில்லை, கீழிறங்கி சென்றாள் .... பெண்கள் அனைவரும் அங்கு உறங்கி கொண்டு இருந்தனர் .. அவளின் கேவல் சத்தம் கேட்டு யாரும் எழுந்துவிட கூடாதே என்று அஞ்சியவள் வாசற்கதவு திறந்திருப்பதை பார்த்தாள் ... அவள் இங்கு வந்த இத்தனை நாட்களில் அந்த வீட்டின் கதவு மூடி அவள் பார்த்ததில்லை .. ஊரில் பெரியவர் வேலு ஐயா அல்லவா ?  அவரை மீறி என்ன ஆபத்து வந்துவிடும் என்ற எண்ணமா  ? அல்லது ஊரார் மீது அவர்கள் கொண்டிருக்கும்  நம்பிக்கையின்  பிரதிபலிப்பா அது ? அது அவளுக்குமே தெரியாது .. பூனை போல சத்தம் வராமல் மெல்ல நடந்து சென்றாள்  ஜானகி .. அங்கு திண்ணையில் அமர்ந்தவளின் கைகளில் தன் தந்தை மற்றும் ஸ்ரீராம் ஒன்றாய் எடுத்த புகைப்படம் , கண்களில் கண்ணீர் ..மொட்டை மாடிக்கு வந்த மீரா அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தாள் ... கைகளில் அவளது தாயின் சேலையும், ஒரு புத்தகமும் .. அவளும் தன் தனிமையை கண்ணீர் துளிகளில் கரைத்தாள் ... வேலைகள் அனைத்தும் சரியாய் நடந்ததா  என்று பார்த்து விட்டு அப்போதுதான் உறங்க வந்தார் தாத்தா. ஜானகி அங்கு அமர்ந்திருப்பதை பார்த்தவர் அவளிடம் பேச எத்தனித்தார் .. அதற்குள் , கிருஷ்ணா, ரகுராம் அறையில் விளக்கேரிவதை பார்த்தவர் யோசனையுடன் அவள் கானில் படாமல் உள்ளே சென்றார் .. அதே நேரம் சோகமாய் அங்கு வந்த பாட்டி தாத்தாவை மோதி நின்றார் .. அந்த நேரத்தில் தன்னை மோதி நின்ற மனைவி மீது காதல் பார்வை வீச தவறவில்லை தாத்தா .. ஆனால் பாட்டி அதை ரசிக்கும் எண்ணத்தில் இருந்தால் தானே ??

" அது என்னடி முகத்தை திருப்பிக்கிறவ ??"

" ஆமா இப்போ இந்த பார்வை தான் குறைச்சல் "

" அட என் வள்ளி புள்ள சலிச்சுக்குற அளவுக்கு என்ன நடந்துருச்சு ? "

" மனசு சரி இல்லை மாமா" என்றார் பாட்டி .. அவரின் பதிலில் கண்கள் பளிச்சிட நிமிர்ந்தார் தாத்தா ..

" என்ன இப்பிடி  பார்க்குறிங்க ? "

" இல்ல வள்ளி .. நீ என்னை மாமா நு கூப்பிட்டு யுகம் ஆன மாதிரி இருக்கு "

" அடடே .. இங்க சின்னஞ்சிறுசுங்க மனசு நொந்து நிக்குதுன்னு உங்ககிட்ட சொல்ல வந்தா, நீங்க இப்போதான் என்னை கொஞ்சிகிட்டு இருக்கீங்க ??? "

" ஹா ஹா .. சரி சரி .. சொல்லு என்னாச்சு இப்போ "

" நான் மாடியில் இருந்து கீழ வர பார்த்தேன்னா "

" சரி .... "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.