(Reading time: 29 - 57 minutes)

 

" சொல்லுங்க பார்ப்போம் "

" ஐ லவ் யூன்னு  சொல்ல வந்திருப்ப "

" ஹீ ஹீ ..... "

" அதை சொல்ல ஏன் தயக்கம் ?"

" பச்ச் நாம என்ன சின்ன பசங்களா ? "

" ஏன் இந்த வயசுல காதலை பரிமாறிக்க கூடாதுன்னு சட்டம் இருக்காடீ  என் நீலாம்பரி "

" போதும் போதும் நீங்க உடனே ஆரம்பிக்காதிங்க .. இன்னைக்கு கோவில் போகணும்ல .. நம்ம அபிக்கும் அபிக்குட்டிக்கும் பிறந்தநாளாச்சே "

" ம்ம்ம்ம் ஆமாடா.. நான் ப்ரேக்பாஸ்ட் செஞ்சு வெச்சிட்டேன் .. நீ போயி குளிச்சிட்டு வா "

" அச்சோ சாரிங்க .. ரொம்ப நேரம் தூங்கிட்டேன் .. "

" அய்யே .. அதுனால என்னடா .. நேத்து நீ லேட்டாதானே தூங்கின ? என்னாச்சு கண்ணம்மா ? ஏன் சோகமா இருக்க ?"

" சோகம்னு இல்லை .. அத்தை மாமாவை எல்லாம் பார்க்கணும் போல இருக்கு "

" இவ்வளோ தானே .. அடுத்த வாரம் பசங்களை லீவ் போட சொல்லிட்டு எல்லாரையும் கூட்டிட்டு கிராமத்துக்கு போயிட்டு வருவோம் .. "

" ஆமா யது கண்ணா எழுந்துட்டானா ? " என்று அவள் கேட்கும்போதே " வந்துட்டேன் மம்மி " என்று சொல்லிக்கொண்டே ஜன்னல் ஏறி குதிச்சு வந்தான் யதுநந்தன் ..

" டேய் பார்த்துடா " என்று பதிறினான் கிருஷ்ணன் .. மீராவிற்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை ..

" உனக்கு என்னடி சிரிப்பு ?"

" ஒரு காலத்தில் நீங்கள் எகிறி குதிக்காததா ? இன்னைக்கு என்னமோ பச்சைபுள்ள மாதிரி பதறுறிங்க  ? "

" ஹா ஹா என்ன மம்மி சொல்றிங்க அப்பாகிட்ட " என்று கேட்டுக் கொண்டே அவர்கள் முன் மண்டியிட்டு அமர்ந்தான் யதுநந்தன் . கடவுளின் செயலோ அல்லது அவர்களின் அன்போ,, பார்பதற்கு மீராவை போலவும், குணத்தில் கிருஷ்ணன் ஆகவுமே இருந்தான் யதுநந்தன் ..

" அப்பா மாதிரி பிள்ளைன்னு சொன்னேன் யதுகண்ணா  " என்று மகனை கொஞ்சி கிருஷ்ணனை ஓரப் பார்வை பார்த்து வைத்தாள்  மீரா .. யதுவும் அவளது மடியில் படுத்து செல்லம் கொஞ்ச புயலென அங்கு நுழைந்தான் ஆகாஷின் மகன் மாதவ்.

" டேய் ப்ராடு  "

" ஐயோ மாது "

" என்னடா மாது சேதுன்னு... உன்னை ஜாகிங் வர சொன்னா, இங்க எங்கத்தை மடியில செல்லம் கொஞ்சிகிட்டு இருக்கியா ? "

" நல்ல கேளுங்க அண்ணா.. எப்போ பார்த்தாலும் சாப்டுறது இல்லைன்னா செல்லம் கொஞ்சறது .. இதுவே இவனுக்கு வேலையை போச்சு " என்று சொல்லிக் கொண்டு அவன் பின்னே வந்து நின்றாள்  அனுபல்லவி..

ரகுராம்- ஜானகியின் மகள் .. அச்சு அசல் ரகுராம் போலவே இருந்தாள் .. ஆனால் குணத்தில் மட்டும் மொத்தமும் சுபத்ராவை போலவே இருப்பாள் .. அவள் , யதுவிடம் சண்டை பிடிக்கும் காட்சிகளை பெற்றவர்கள் ரசிக்காத  நாள் இல்லை ..

அப்போது போல இப்போதும் ஜானுவின் மகளுக்கு மீராவின் சப்போர்ட், மீராவின் மகனுக்கு ஜானுவின் சப்போர்ட் மாறாமல் கிடைத்து வந்தது . தந்தையர் இருவரும் தங்களது பிள்ளைகளின் வடிவில், தத்தம் இளமைகால நினைவுகளை அசைப்போட்டு கொள்வார்கள் ..

" ஹே என்னடி அண்ணனை அவன் இவன்னு பேசுற ?  பாவம் பிள்ளை " என்றபடி அங்கு வந்தாள்  ஜானகி .. அவளை கண்டதுமே ஓடி சென்று " ஜானும்மா " என்று கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான் யதுநந்தன் ..

" பார்த்தியா அனு ? ஜானும்மா எப்பவும் எனக்குதான் சப்போர்ட் " தமையனின் பேச்சை கேட்டு அவள் முகம் வாடும்முன்னே

" அனுக்குட்டி நான் சப்போர்ட் " என்று அவளை அணைத்துக்  கொண்டாள்  மீரா ..

" ஆஹா அண்ணா இவங்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க .. இனி நம்ம பாடு அவ்ளோதான் .. " - ரகுராம்

" ஆமா மாமா .. வாங்க நாம ஜாகிங்க்னு சொல்லி அப்படியே ஓடிறலாம் " என்று ஆண்கள் அனைவரையும் இழுத்துக் கொண்டு சென்றான் மாதவ்.

" என்ன அனு  சீக்கிரமாவே எழுதுட்ட  ?" என்று தெரியாததை போல கேட்டாள்  மீரா..

" இன்னைக்கு அவளின் மாமாவுக்கு பிறந்தநாள் ஆச்சே அக்கா .. எப்படி மேடம்கு தூக்கம் வரும் ? " என்று கேட்டு வைத்தாள்  ஜானகி .. அனுபல்லவியின் முகம் செவ்வானமாய் சிவந்தது .. மனதிற்குள் அபிமன்யு மந்தகாச புன்னகையுடன் கை கட்டி நின்றான் .. எனினும் அதை சமாளித்து

" அதெல்லாம் ஒண்ணுமில்லை .. இன்னைக்கு நம்ம அபிநயாவுக்கும்  தானே பிறந்தநாள் .. அவளை பார்க்குற சந்தோஷத்தில் எழுந்துட்டேன்  " என்று சொல்லிவிட்டு ஓடினாள்  இளையவள் ..

" ஹா ஹா ... இவ எது பண்ணாலும் எனக்கு சுபீ ஞாபகம்தான் வருது அக்கா .. "

" உனக்கு சுபி மேல அவ்ளோ அன்பு ஜானும்மா .. "

" ம்ம்ம்ம் .. இப்போ கூட பாருங்களேன், அவ வெட்கப்படும்போது, நான் மாமாவை பத்தி பேசும்போது சுபீ வெட்கப்படுவாளே அதுதான் ஞாபகம் வந்தது " என்றாள் ...

" ஹ்ம்ம் எல்லாம் நல்லபடியா நடந்தா சரிதான் .. "

" அப்பா .... உங்க காலத்து பாட்டு தான்பா சூப்பர் .. கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு . அதுவும் ஏ  ஆர் ரஹ்மான் சார் பாட்டு சொல்லவே வேணாம் ..அதுவும் அதை நீங்க பாடும்போது சான்ஸ் ஏ  இல்லை  " என்று சிவகார்த்திகேயனுக்கு ஐஸ் வைத்தாள்  மிருதுளா ( கார்த்திக் நித்யாவின் முதல் மகள்  )

" அக்கா .. நம்ம ரஹ்மான் சார் ஓட பையன் மட்டும் சும்மாவா ? நேத்து ஒரு ஷோவ்  ல பாடினார்  பார் " என்று சிலாகித்து கொண்டாள்  இளையவள் ராதிகா ..

" அப்பா அப்பா ப்ளீஸ் பாடுங்க " என்று இருவரும் கேட்க தங்களது மகளுக்காக கையில் கிட்டாருடன் பாட ஆரம்பித்தான் கார்த்திக் ..

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே!

விடியும் பூமி அமைதிக்காக விடிகவே!

மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே!

மலரே சோம்பல் முறித்து எழுகவே!

குழந்தை விழிக்கட்டுமே! தாயின் கத கதப்பில்,

உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுகச் சிரிப்பில்.....

அவனின் குரலில் லயித்து நின்றாள்  நித்யா .. அவன் பாடுவதை நிறுத்தி அவளையே பார்க்க, கண்களை திறந்தவள்  அவனினது பார்வையை கண்டுக் கொண்டு மனதிற்குள் செல்லமாய் திட்டினாள் ..

" இவன் ஒருத்தன் காலம் நேரம் இல்லாமல் லுக்கு விடுவான் .. "

" மிரூ, ராது  சீக்கிரமா கெளம்புங்க..கோவிலுக்கு போகணும்ல என்றாள்  நித்யா .. பெண்கள் இருவரும் அவளிடம் வாஇபெசிவிட்டு வாசலுக்கு ஓடி சென்றனர் ..

" சரியான வாயாடிங்க  கார்த்தி "

" ஆமா நித்தி அப்படியே அவங்க அம்மாவை போல "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.