(Reading time: 29 - 57 minutes)

 

" டேய் .. ஏதோ பொண்ணுங்க முன்னாடி பாவம்னு உனக்கு மரியாதை தந்தா, நீ வர வர ரொம்ப ஓவராத்தான் வாய் பேசுற" என்றாள்  கண்களில் சிரிப்புடன் .. தங்கையை துரத்திக் கொண்டே வாசலுக்கு ஓடி வந்த மிருதளாவை  இழுத்து தன்னருகில் நிறுத்தினான் மாதவ் ..

" ம ... மா ...... மாமா "

" என்ன காலையிலேயே செம்ம ஓட்டம் போல " அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தாள்  மிருதுளா... ஓடிய வேகத்தில் மூச்சு வாங்க, வியர்வைதுளிகள் வழிய அப்போதும் கூட ஸ்டைலாய் அழகாய் தான் இருந்தான் அவன் ..

" நீங்க மட்டும் ஓடுறிங்க ? நான் ஓட கூடாதா ?? "

" ஹா ஹா .. பேபி மனசு வெச்சா சேர்ந்தே ஓடி போகலாம் .. ரெடியா ? " என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றான் மாதவ் ..

" திருடன் " என்று மனதிற்குள்  திட்டி ரசித்தாள்  மிருதுளா ..

மிருதுளா பின்னே வருகிறாள் என்று ஓடிய ராதிகா, யதுனந்தனின் மீது மோதினாள் ..

" ஹே பார்த்து டா "

" அதை நீங்க சொல்றிங்களா ? இப்படித்தான் சின்ன பொண்ணு மேல மோதி வைக்கிறதா ? "

" யாரு நீ சின்ன பெண்ணா ? " என்று அவளை ஏற இறங்க பார்த்தான் .. அசரவைக்கும் அழகுதான் .. கொஞ்சமாச்சும் நல்ல புள்ளயா இருடா யது .. இந்த வயசுல காதல் கீதல்னு விழுந்திடாதே  என்று உள்மனம் எச்சரித்தது ..

" ஹெலோ .. இங்கென்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கலமா ? என் மூஞ்சில என்ன டிவியா ஓடுது ? இப்படி பார்க்கறிங்க ?"

" என்ன நீ இப்படி மிரட்டுற ராது ? "

" அதெல்லாம் அப்படிதான் நந்து "

" என்னது நந்துவா ? "

" ஆமா உங்க பேரு யதுநந்தன் தானே? நந்தனை சுருக்கி நந்துன்னு கூப்பிட்டேன் ..அதுக்கு என்ன இப்போ ? நீங்க என்னை வேணும்னே மோதினதை எல்லாருகிட்டயும் சொல்லவா ?" என்று மிரட்டினாள்  அவள் ..

" அம்மா தாயே ஆளை விடுமா "

" அது .... சரி சரி .. நான் உங்களை மாதிரி வெட்டி இல்லை .. கோவில்லுக்கு போகணும் " என்று திரும்பி நடந்தாள்  ராதிகா .. இருவரின் முகத்திலுமே புன்னகை அரும்பாய் மலர்ந்தது .. " இன்னும் நீ மாறவே இல்லை " என்று  ஒருவரை ஒருவர் மனதிற்குள் கொஞ்சினர் ..

" அபி .... அபி கண்ணா எழுந்திருடா "

" வாட் மம்மி ?? "

" கோவிலுக்கு போகணும் டா .. வா " சோம்பலை முறித்து கண்விழித்தான் அபிமன்யு ..

" குட் மோர்னிங் மம்மி " என்றவனுக்கு வாழ்த்து சொல்லுமுன்னே ரூமில் இருந்த  அந்த பலூனை வெடித்தான் அர்ஜுனன். சரியாய் அதே நேரம் கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியில் வந்தாள்  அபிநயா.

" ஹாப்பி பேர்த்டே  அண்ணா " என்று அவன் கழுத்தை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சினாள்  அபிநயா ..

" ஹாப்பி பேர்த்டே  டா அபி குட்டி .. "

" ஹாப்பி பேர்த்டே  செல்லம்ஸ்ஸ்  " என்று கோரசாய் சொல்லினர் அர்ஜுனனும் சுபத்ராவும் ..

" அண்ணா சீக்கிரம் கெளம்புங்க .... கோவில் போகணும் .. அனு  வேற வர்றா " என்று உலரிகொட்டிய தங்கையை பாவமாய் பார்த்தான் அபிமன்யு .. அர்ஜுனன்னோ அதை கவனிக்காதது போல

" சுபீ வா .. நான் உனக்கு புடவை சூஸ் பண்றேன் " என்று அவளை அழைத்து சென்றான் ..

" அஜ்ஜு  .. "

" சொல்லுடா ... "

" நம்ம அபிக்கு "

" அனுவை  பிடிக்கும் ,... அனுவுக்கும்தான் .. "

" உங்களுக்கு எப்படி ........ சரிதான் .. உங்க கிட்ட கேட்டேன் பாருங்க .. கழுகு கண்ணு .. " என்றாள் ..

" ம்ம்ம்கும்ம்ம் முன்னலாம் காந்த கண்ணுன்னு சொல்லுவா இளவரசி இப்போ கழுகு கண்ணா ? எல்லாம் என் நேரம் "

" உங்க நேரத்துக்கு என்ன குறை ? "

" அதெப்படி குறை வரும் ..அதான் நீ என்கூடவே இருக்கியே ... "

" சரி சரி பசங்க விஷயத்தில் என்ன பண்ணலாம் ? "

" கோவிலுக்கு போறோம்ல, அங்க போயி கடவுள் கிட்டையே கேட்டுக்கலாம் .. " என்றான் இயல்பாய் ..

கோவிலில், இறைவனின் பாதத்தில் தத்தம் கோரிக்கையை வைத்தனர் அனைவரும் ..

" வாங்க அப்படி மண்டபத்தில் உட்காரலாம் " - கிருஷ்ணன் ..

" அப்பா நாங்க கோவிலை சுத்தி வரோம் " என்று சொல்லிக் கொண்டு அபிநயாவின் கைபிடித்து எழுந்தாள்  அனுபல்லவி.. அவளை தொடர்ந்து மிருதுளா, ராதிகாவும் இணைய, " நாங்க இவங்களுக்கு துணையாக போயிட்டு வரோம் " என்று எழுந்தான் அபிமன்யு ..ஒரு நமட்டு சிரிப்புடன் அனைவரையும் அனுப்பி வைத்த அர்ஜுனன், அபிமன்யுவின் மனதில் இருப்பதை கூறினான் .. அதுவே ஆரம்பபுள்ளியாய் மாறிவிட, பெற்றோர்கள் அனைவரும் தத்தம் பிள்ளைகளுடன் ஆடிவரும் கண்ணாமூச்சி ஆடத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர் .. இறுதியாய் அர்ஜுனனே

" என்னதான் அவங்க ஆசைப்படி எல்லாம் நடக்கும் என்றாலும் இது அவங்க சாதிக்க வேண்டிய வயசு .. நாம சப்பரத் பண்றோம்னு தெரிஞ்சா அது அவங்களுக்கு அலட்ச்சியத்தை தந்திட கூடாது ..அதனால் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆ இருப்போம் " என்றான் .. அவனது பேச்சை கேட்டு சிரித்தான் ரகுராம் .. ஜானகியை பார்த்து

" உன் மாமா ஸ்ட்ரிக்ட் ஆம் " என்றான்

" பின்ன எல்லாரும் உங்களை மாதிரி காமிடி பீசா இருப்பாங்களா ? "

சரியாய் அந்த நேரத்தில் கிருஷ்ணனின் செல்போன் சிணுங்கியது. " தாத்தா  டா " என்றான் உற்சாகமாய் ..

" இங்க போன் பேச கூடாது "

" சரி வாங்க அந்த பக்கம் போவோம் "

போனை ஸ்பீகரில் போட்டான் கிருஷ்ணன் ..

" தாத்தா "

" நல்ல இருக்கியாப்பா ? " என்று கேட்டவரின் குரல் முதுமையின் காரணத்தினால் லேசாய் நடுங்கியது ..

" நல்ல இருக்கோம் தாத்தா .. "

" பேரன் பேத்தி எங்கப்பா ? "

" கோவில் உள்ள இருக்காங்க தாத்தா... அப்பா அம்மா எல்லாரும் எப்படி இருக்காங்க "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.