(Reading time: 29 - 57 minutes)

 

" ல்ல இருக்கோம்யா ..உங்களைதான் நெனச்சுகிட்டு இருக்கோம் .."

" அடுத்த வாரம் அங்க வரோம் தாத்தா .. "

" சரி அய்யா .. என்னால ரொம்ப பேச முடில .. நேருல வாங்க சரியா "

" தாத்தா ஒரு நிமிஷம் " என்று போனை வாங்கிய அர்ஜுனன், சற்றுமுன்பு  அவர்களது பிள்ளைகளை பற்றி பேசியதை பகிர்ந்து கொண்டான் ..

" ரொம்ப சந்தோசம் அர்ஜுன் ..அடுத்தவங்களோட நியாயமான ஆசைகள் நிறைவேறிட்டா வாழ்க்கையில் அதைவிட பெருசா என்ன சந்தோசம் இருக்கு ?  எல்லாரையும் அழைச்சிட்டு வாங்க ... உங்க பாட்டியும் உங்களை எல்லாம் தேடுறா ...."

" கண்டிப்பா வரோம் தாத்தா ....நீங்க உடம்பை பார்த்துகோங்க "

கொஞ்சம் கனத்த அமைதி நிலவியது அங்கு .. லேசாய் கண் கலங்கினாள்  மீரா ..

" முதுமை நிச்சயம் வரும் மீரா .. ஆனா அது மனசுக்கு இல்ல .. நாம அங்க போனாலே அவங்க சரி ஆகிடுவாங்க ...கவலை படதே " என்று தேற்றினான் கிருஷ்ணன் ..

அர்ஜுனன் மட்டும் தாத்தா சொன்னதையே யோசித்து கொண்டு இருந்தான் ..

உண்மைதான் .. ஒரு மனிதனின் நியாயமான ஆசைகள்  நிறைவேற்ற படும்போது அவனுக்கு நிம்மதி பிறக்கிறது .. அந்த நிம்மதியே அவனை நல்வழி படுத்தும் .. கோபம் , பழி உணர்ச்சி இது போன்ற உணர்வுகளுக்கு பின்னாடி எத்தனை கசப்பான சம்பவங்கள் ?? எவன் ஒருவனுக்கு சுதந்திரமும் அன்பும் சரிசமமாய் கொடுக்கபடுகிறதோ அவன் தவறான வழியில் செல்வது அரிது ..

சட்டென அவனின் பார்வைகள் தூரத்தில் இருந்த பிள்ளைகள்  மீது பதிந்தது .. " இவர்கள் என் வாரிசு .. என் வம்சம் .. அதைவிட என் சந்ததியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்பவர்கள். என்னால் சமுதாயத்தை மாற்றிவிட முடியாதுதான் .. ஆனால் பல  குடும்பங்கள் இணைவது தானே சமுதாயம் ? அப்படி என்றால் என் சமுதாயத்திற்கு நான் செய்யும் சேவையை நான் என் குடும்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் . இவர்கள் நெறி மாறாமல் வாழ்வதற்கு நானே பொறுப்பு " என்று எண்ணிக் கொண்டான் ..

அதற்குள் அனைவரும் அங்கு வந்தனர் ..

" போலாமா அப்பா ? " - என்றாள் அபிநயா ... அனைவரும் முன்னே நடக்க, சுபத்ரா, அபிநாயா , அர்ஜுனன் மட்டும் கடைசியாய் பின்னே நடந்து வந்தனர் ..

" உனக்கு என்ன மாதிரி மாப்பிளை நான் பார்க்குறது ? " என்றான் அர்ஜுனன் விளையாட்டாய் ..

" இவளுக்காக தேவலோகத்தில் தான் மாப்பிளை பார்க்கணும் " என்றாள்  சுபத்ரா...

" ம்ம்ஹ்ம்ம்ம் இல்லை .. எனக்கு எங்க அப்பா மாதிரியே மாப்பிள்ளை வேணும் " என்றாள்  அபிநயா ..

" அப்போ நிஜம்மா வானத்தில் இருந்துதான் வரணும் " என்று காதலுடன் சொல்லிய மனைவியை பார்த்து புன்னகைத்தான் அர்ஜுனன் .. அதற்குள் தூரத்தில் இருந்து ஒரு குரல்

" ஐயோ அம்மா , மல்லிகை பூ , முல்லை பூ ரெண்டுமே ஒரே மாதிரி தானே இருக்கு .. ஏதாச்சும் ஒன்னு வாங்கினா ஆகாதா ? " என்று ஏகவசனத்தில் போனில் பேசினான் அந்த புதியவன் .. அவன் திக்கி திக்கி தமிழ் பேசும் அழகே சொல்லியது அவன் வெளிநாட்டில் இருந்து வந்த   கதாநாயகன் என்று. 

அவனது பேச்சை கேட்டு சிரிப்புடன் நின்று விட்டாள்  சுபத்ரா.. அர்ஜுனனும்  அவளையே தான் பார்த்து நின்றான். அன்று அர்ஜுனன் சீரகம் சோம்பு என்று குழம்பி நின்ற காட்சி கண்முன்னே வந்தது ..

அபிநயாமட்டும் முன்னே நடக்க அந்த புதியவன்

" ஹே பாப்பா இதுல எது மல்லிகை பூ சொல்லேன் " என்றான் .

" நான் உனக்கு பாப்பாவா ? என் பேரு அபிநயா "

" ஹாய் ஐ எம் தீரஜ் பிரசாத் .."  என்றான் .. அவன் பேரை கேட்டு  அங்கு வந்த அபிமன்யு

" டேய் நண்பா " என்று தீரஜை கட்டிக் கொண்டான் ..

" நீ நீ ..... "

" டேய் அபிமன்யு டா "

" யாரன்னா  ? "

" உனக்கும் ஞாபகம் இல்லையா அபி ? சின்ன வயசுல நம்மகூடதான் இவனும் ரெண்டு வருஷம் படிச்சான் .. அதுக்கு பிறகு சார் வெளிநாட்டுக்கு பறந்துட்டார் "

" டேய் மன்யு .. மை டியர் மண்டு " என்று கண்களை விரித்தான் தீரஜ் ..

" ஹப்பாடா ஞாபகம் வந்துருச்சா .. "

"அப்போ இது அபி?? உன் தங்கச்சி .. .சின்ன பொண்ணு வளர்ந்து போச்சே " என்றான் .. அவனின் தமிழில் அபிமன்யு சிரிக்க, அவன் சொல்லிய விதத்தில் அபிநயா வெட்கமடைந்தாள் .. நண்பனை  பெற்றோருக்கு அறிமுகப்படுத்தினான் அபிமன்யு .. அதன்பின் அனைவரும் காரில் ஏறிவிட, தீரஜும்  அவர்களுடன் வந்தான் ..

காரில்,

" அப்பா இன்னை எங்களுக்கு மட்டும் பிறந்த நாள் இல்லை .. உங்களுக்கு பிடிச்ச ரஹ்மான் சார் கும் பிறந்த நாள் " என்றாள்  அபிநயா ..

" அப்போ ரேடியோ ஆன் பண்ணு " என்று சுபி சொல்ல, மற்ற மூன்று காரிலும் ஏற்கனவே  அதே அலைவரிசை திறந்திருக்க அனைவருக்காகவும்  ஒலித்தது அந்த பாடல் ...கிருஷ்ணனின் தோளில்  மீராவும், ரகுராமின் தோளில்  ஜானகியும், அர்ஜுனனின் தோளில்  சுபியும் சாய்ந்து கொண்டு பாடலில் லயித்தனர் .. அந்த அழகான நிமிடங்கள் அவர்கள் வாழ்வில் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டி நாமும் பாடலுடன் விடைபெறுவோம் ..

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்

நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்

பௌர்ணமி இரவு பனிவிழும் காடு

ஒத்தையடி பாதை உன்கூட பொடி நட

இது போதும் எனக்கு இது போதுமே

வேறென்ன வேணும் நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே

வேறென்ன வேணும் நீ போதுமே

" வேறென்ன வேணும் நீ போதுமே " என்னுடைய முதல் முயற்சிஅதனாலேயே சிலருக்கு நன்றி சொல்ல விருப்ப படுறேன் .. கொஞ்சம் லாங் லிஸ்ட். எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க .. முதலில் எனக்கு சில்சீயை அறிமுகப்படுத்தி தந்த தோழி மீரா ராமுக்கு நன்றி .. அவங்களுடைய சிறுகதையை படிக்க வந்துதான் நான்என் சிறுகதையை பதிவு செய்ய தொடங்கினேன் .. அன்றைய ஆரம்ப புள்ளிக்கு முதல் காரணமாய் இருந்த மீராவுக்கு நன்றி.

அடுத்தது பாலா மேடம் . அவங்க சீக்கிரம் சில்சீக்கு வரணும்னு நான் வேண்டிக்கிறேன் . ரொம்ப மிஸ் பண்ணுறேன் அவங்களை ..ஏன்னா " ஏன் நீங்க லாங் சீரிஸ் எழுத கூடாதுன்னு " கேட்டதே அவங்கதான் . அவங்க கேட்கலைன்னா  நான் எழுதிருப்பேனா தெரியலை ... அப்படி எழுதினாலும் எப்போது எழுதி இருப்பேன்னும் தெரியலை .. இதை ஆரம்பிச்சப்போ இருந்த சந்தோசம் முடிக்கும்போதும் இருக்கு .. சோ " ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன் மாதிரி .." " பாலா நானும் ஒரு கதை எழுதி இருக்கேன் " அப்படின்னு மானசீகமா அவங்க கிட்ட சொல்லிகிறேன் ..

அதற்கு பிறகு, அடுத்த நன்றி சில்சீ  அட்மின்ஸ்கு சொல்லிக்கிறேன்  .. ஷாலு மேம், சாந்தி மேம், தேன்ஸ் , வத்சு டீச்சர் மற்றும் நான் யாரையாவது மிஸ் பண்ணிருந்தா உங்களுக்கும்  (ஹா ஹா ) நன்றி .. சில நேரம் லேட்டாக எபிசொட் தந்திருக்கேன், உடல் நிலை காரணமாக எபிசொட் தராமலும் இருந்திருக்கேன், அதை புரிஞ்சுகிட்டு சான்ஸ் கொடுத்ததுக்கு நன்றி . முதலில் என்னையும் நம்பி கதை எழுத விட்டதுக்கு நன்றி ஹா ஹா ..

" வேறென்ன வேணும் நீ போதுமே " ஆரம்பிக்கும்போது, என் மைண்ட் இருந்தது அர்ஜுன் - சுபத்ரா மட்டும்தான் .. அடுத்து யாரை சேர்க்கணும், கதையை எங்கு கொண்டு போகணும் இதை எல்லாம் தீர்மானிக்க வெச்சது படிக்கிற வாசகர்களின் கமெண்ட்ஸ் தான் .. அதுவும் முதல் எபிசொட் கு வரவேற்பு தந்தவங்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் ( Bala, Vathsu Mam, Suji, Nivitha, Aayu, Gayathri, Jaz, Shajitha, Shaha, Afroz, Chitra, Parimala , Nithu Akka, Meens, Shanthi Mam, Malare , Madhu (KK), Shakthi, Keerths, Thens, Prii, Femina, Alamelu, Masha, Mages Sithirai,Saranya, Mano Ramesh ) .. நீங்க கொடுத்த ஊக்கம் தான் என்னை இந்த கதையை வலுவாக்க வைத்தது ..

அதன்பிறகு இந்த கடைசி எபிசொட் வரை கூட இருந்து ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்குமே நன்றி .. உங்கள் பெயரை சொல்லாமல் விட்டிருந்தா லைட்டா என்னை திட்டிட்டு மன்னிச்சு மறந்திடுங்க :)

" வேறென்ன வேணும் நீ போதுமே "  முழுக்க முழுக்க எல்லாருக்கும் சந்தோஷத்தை மட்டுமே தரணும்னு எழுதியது . அதனால் ஆர்வகோளாரில் ஏதும் பிழைகள் இருந்தா மன்னிச்சிருங்க . நான் முன்னாடியே சொல்லி இருந்த மாதிரி, இந்த கதையில் வர்ற மாதிரி குடும்பம் கிடைக்குமா ? ஹீரோ கிடைப்பாரா ? அதெல்லாம் பெரிய கேள்விக்குறிதான் .. ஆனா நாம நினைச்சா, மத்தவங்க வாழ்கையில் நாம இப்படி பட்ட கதாபாத்திரமாய் வாழலாம் . மற்றவங்களை மாற்றுவதுதான்  கஷ்டம் .. நமக்கு நாமதானே டைரக்டர் ? அதனால் கதையில் வர்ற மாதிரி எல்லாரும் கலகலப்பா சந்தோஷமா இருப்போம் :) இப்போ மொத்த கதையும் உங்க பார்வைக்கு வந்துடுச்சு .. உங்க கருத்துகளை ( குறை - நிறை ​ ) தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கேன் .

இவ்ளோ பெரிய ஸ்பீச் கொடுத்ததுக்கு மன்னிச்சிருங்க .. முதல் முயற்சி என்பதால் ரொம்ப உணர்ச்சிவசபட்டுடேன் .. மீண்டும் நன்றி ..  ​ _/\_ 

முற்றும்

Episode # 28

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.