(Reading time: 19 - 37 minutes)

03. என்னைத் தந்தேன் வேரோடு - Anna Sweety

மெல்ல உறைக்க வியனை திரும்பிப் பார்த்தாள் மிர்னா. அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு மென்மை.  குழந்தையின் குறும்பை ரசிக்கும் ஒரு பார்வை.

அப்பார்வையின் முன் தன்னை குழந்தையாகவே உணர்ந்தாள் அவள் ஒருகணம். மறுகணம் இடித்தது ஈகோ. ஏய் எம் எம் உனக்கு ஏழுகழுத வயசாச்சிடி....அவந்தான் அத மதிக்கலானா...நீயும் சேந்தா சீன் போடுற...

“என்ன பார்க்கீங்க?” விறைப்பாக கேட்டாள்.

Ennai thanthen verodu

“இந்த எக்கோ எஃபெக்ட்ட அப்பவே செய்ய சொல்லி இருக்கலாம் போலிருக்கே...இவ்ளவு எனர்ஜெடிக்கா ஆகிட்டீங்க....” இவள் விறைப்பு அவனை பாதித்ததாகவே தெரியவில்லை. கண்களில் இன்னும் மென்மையும் ரசனையும் அப்படியே இருந்தன. இதழில் இன்னுமாய் ஒரு புன்னகை.

ஆனால் இம்முறை அவளது ஈகோ எழும்பவில்லை. மாறாக மனதிற்குள் சந்தோஷ சாரல்.

“ம்...நிஜமாவே செய்திருக்கலாம்....பக்கத்தில நீங்க இல்லனா செய்திருக்கவும் செய்வேனா இருக்கும்...சின்ன வயசில இருந்து கடவுளுக்கு அடுத்தபடியா என் துணை இந்த கனவுதான்...கோல்ட் மெடல் ஃபார் இண்டியா...” கனவுகளில் கரைந்தன அவள் கண்கள்.

ஆனால் பின் மனதில் ஒரு கேள்வி. இவன் அருகில் இவள் தன் கனவை மறந்திருந்தாளா என்ன?

ஒரு இனம் புரியா  புரியாமை.

அவன் முகத்தில் ஆச்சர்யம் உதித்தாலும்  அது அளவு கடந்து இல்லாமல் அதே நேரம் ஒரு பாராட்டும் பாவமும் பார்வையில் பதிந்து வர,  அவளை மேலே பேச சொல்லும் விதமாக பார்த்திருந்தான் வியன்.

உனக்கே இது ஓவராத் தெரியலங்கிற மாதிரி அவன் இளக்காரமாகவோ,

இவல்லாம் தான் மெடல வாங்கி கிழிக்க போறா ங்கிற மாதிரி நம்பிக்கையின்றியோ..

.பொம்பிள பிள்ளயா லட்சணமா கல்யாணம் செய்தமா குடும்பத்த பார்த்தமான்னு இல்லாம இதென்ன வேலை  ன்னு அலட்சியமாகவோ பார்க்காது, மிக இயல்பாக அவளது கனவை வியன் ஏற்றுக் கொண்ட விதம் மிர்னாவுக்கு மிகவும் புது அனுபவம்.

மிகவும் பிடித்த அனுபவமுமாயும் அது இருந்தது.

அது அவள் உணர்வில் ஒரு மின்னலை பிறப்பித்தது.

னம் புரியாத, உணர்ந்தறியாத ஒரு இறுகிய கடினம் இவள் இதயத்திற்குள் இத்தனைகாலமாய் இருந்திருப்பதை எனோ இன்னேரம் புதிதாய் உணர்ந்தாள். அம்

 மனப்பாறையில் இம் மின்னல் சிலீரென கால் பதிக்க , பாறையில் ஒரு நெகிழ்வு.

“இதெல்லாம் தேவையான்னு ...நீங்க அட்வைஸ் செய்யலியா? “

“நல்ல விஷயத்த ஏங்க குறை சொல்லனும்....? இதை சொல்லும் போது அவன் கண்களில் இருந்த உண்மை அவள் மனதில் மின்னல் கோடிட்டது. பெண்களை, அவளை அவன் மதிப்பவன்.

இயல்பாய் இவளை இவளாய் ஏற்க்கும் முதல் உயிர்.

எதோ ஒலியற்று வழுகியது உள்ளே.

நெகிழ்ந்த மனப்பாறையில் இப்போது ஒரு விதை விழுந்த சலனம்.

 “ஸோ இதுதான் கல்யாணம் பிடிக்காம போக காரணமா?”

குறை சொல்லா தொனியில் இயல்பாய் சக மனிதனாய்  அவள் முடிவை அங்கிகரிக்கும் விதமாக அவன் கேட்டான்.

அவள் திருமண தவிர்ப்பை குறை சொல்லும் ஒரு ஒலிகுறியும் அதில் மறைவாக கூட இல்லை.

 இவள் நிராகரித்தது அவன் அண்ணனை, அதுவும் திருமண நாளில். அதை குறித்து ஒரு குறையும் சொல்லாமல் இவள் புறத்தை நடுநிலமையாக பார்க்கும் இவன் எப்படிபட்டவன்?

விழுந்த விதை வேர்விடும் சுகவலி பொறுத்தாள்.

அவனைப் பார்த்து ஆமோதிப்பாக புன்னகை பூத்தாள். “இதுவும் ஒரு காரணம்.” இனி அவனிடம் எதையும் மறைக்கும் எண்ணம் வருமா என அவளுக்கு தெரியவில்லை.

என் நிலைக்கு இது ரொம்ப பெரிய கனவுதான் பட் இன்னும் நம்பிக்கை இருக்குது... ஐ’ல் வின் ஒலிம்பிக்ஸ்... கோல்ட் மெடல்... ஃபார் இண்டியா...”

 “அப்புறம் வேற என்ன காரணம்?” புன்னகையுடன் அவன் கேட்ட விதத்தில் வெளிப்பட்டது நட்பு.

மிர்னா வளர்ந்த சூழலில் காண கிடைக்காதவைகளில் ஒன்று உறவுக்குள் நட்பு.

இதயத்தில் முளைவிட்டு முகம் காட்டியது ஒரு சிறு தளிர் .

சிறு புன்னகையுடன் இருகைகளால் தன் முட்டுகளை வளைத்து கட்டிக் கொண்டு “எனக்கு அப்போ மேரேஜ் மேல நல்ல ஒப்பினியன் கிடையாது. ஐ டிண்ட் வான்ட் டு கெட் மேரிட். ஒலிம்பிக்ஃஸ், தென் கரியர்...என்னால முடிஞ்ச வரைக்கும் அடுத்தவங்களுக்கும் கடவுளுக்கும் பிரயோஜனமான ஒரு சர்விஸ்னு லைஃபை அழகா ..மீனிங்க் ஃபுல்லா வாழ்ந்து முடிக்கனும்னு ஒரு ப்ளான்.”  தூரத்தில் தெரிந்த நட்சத்திரத்தைப் பார்த்தபடி இவள் பேச

ப்டின்னா இப்போ...?” அவன் கேள்வியில் அவன் முகம் நோக்கி திரும்பினாள்.

அவன் புருவம் சுருக்கி ஆச்சர்யமும் அதோடு ஆவலும் கலந்த புன்னகையுமாய் கேட்க

“அது உங்கள பார்த்ததும் மாறிட்டு... “

தன் வார்த்தைகளை தன் காதால் கேட்டபின்புதான் அதன் அபத்தம் புரிய அவசரமாக அதை சரி செய்ய நினைத்தவளின் வார்த்தை வாயைத் தொடும் முன் அவன்

“தேங்க்ஸ்...மேரஜ் ஸ் னாட் அ பேஅட் அரேஞ்ச்மென்ட்  ஆல்வேஸ்னு உங்களுக்கு தோண நான் காரணமா இருந்திருக்கேனே.... “ அவள் எதை சொல்ல வந்தாளோ அதை அவன் சரியாக உணர்ந்து சொல்ல

இவளைப் புரிந்தவன் இவன் என்ற உணர்வு மேலோங்கியது.

முளைவிட்டிறுந்த சிறு செடியின் வேர் தொடங்கி அலை அலையாய் அவளாகிய பாறையில் சுக அக்னி பரவி பாறை முழுவதுமே மெழுகாய், பனி காற்றாய், பாவை அலையாய்.....

இவள் மீதிருந்த பார்வையை அகற்றி தன் கோட் பாக்கெட்டுகளை எதையோ தேடுவது போல் தடவிவிட்டு

 “ஓ..மொபைல் உங்கட்ட தான இருக்குது....வீட்டுக்கு பேசுங்க..”  என்று பேச்சை மாற்றினான் வியன். நறுக்கென்றது இவள் மனதிற்கு அவன் இவளை தவிர்க்கிறானா?

அவனது ஒவ்வொரு செயலும் இவளை பாதிக்கும் அளவென்ன?

இவள் கையிலிருந்த ஃபோனை கை நீட்டி எடுத்துக் கொண்டவன் ஃபோன் புக்கில் தேடி அவள் தந்தை எண்ணை டயல் செய்து அவளிடமாக நீட்டினான்.

“பேசுங்க...உங்க அப்பா....”

டுத்தார் அவளது தந்தை சுகுமார். பேசுவது மிர்னா என உணர்ந்த நொடி அவரது மொபைலை பிடுங்கி இவளுடன் பேச தொடங்கியது மாலினி.

குசு குசு என்ற ரகசிய குரல்   “ ஏய்...நீ இது வரைக்கும் செய்ததிலேயே உருப்படியான விஷயம் இப்படி காணாம போனதுதான்.......மிரட்டி உருட்டி அந்த  கவின் கிறுக்கன் தலையில இந்த சின்ன லூசு வேரிய கட்டி இருக்கேன்..இப்பதான் கல்யாணம் முடிஞ்சிது...நீ புத்திசாலி....சொன்னா புரிஞ்சிப்ப.... அதை இதை சொல்லி அந்த சின்னவன் வியனை  கல்யாணம் செய்ய வழியப்பாரு.....உடனே கிளம்பி நேர அவன் அம்மா அப்பாட்டயே போ....நாங்களும் வாறோம்......பயப்படாம பேசு...அம்மா போடுற போடுல உடனே தாலி கட்டிறுவான்......”

மாலினி பேசிக்கொண்டிருக்கும் போதே இணைப்பை துண்டித்தாள் மிர்னா. அடுத்து என்ன செய்ய வேண்டும் என அவளுக்கு தெளிவாக புரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.