(Reading time: 19 - 37 minutes)

 

ங்கே ரெஸ்ட் ரூம் நீட்டா இருக்கும்.”

அவளுக்கு காரின் கதவை திறந்துவிட்டு சொன்னான்.

அவள் முன் செல்ல அவள் பின் தொடர்ந்தவன், வரவேற்பறை வளாகத்தில் நுழைந்ததும் இடபுற கதவை கை காண்பித்தான்.

 “அங்கே போகனும்....”   என்ற இரட்டை வார்த்தைகளுடன் நிறுத்திக் கொண்டான், ஆனால் அவள் பின் தொடர்ந்தான்.

சற்று தொலைவில் லேடிஸ் என்ற தங்க நிற அடையாள பலகை கண்ணில் பட அந்த கிரானைட் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் வேரி.

இவள் வெளி வரும் போது கதவுக்கு எதிராக நின்றிருந்தான் அவன். அவன் முகத்தை நேராக பார்க்க பயம் தவிர வேறு ஒரு உணர்வும் தடுத்தது அவளை.

“உனக்கு சம்மதம்னா...இங்கயே சாப்பிட்டு போயிரலாம்னு நினைக்கேன்...இல்லை வேற இடம் போகனும்னா சொல்லு...சாப்பிடுறதுக்கு....”

வேற எதுக்காகவும் எங்கேயும் அனுப்பமாட்டானாம்.

இவள் முகம் அவன் பார்க்கிறான் என அவளால் உணர முடிந்தது.  அவன் பார்வையை தவிர்த்து சுற்று முற்றும் பார்த்தாள்.

“டைனிங் ஹால் அந்த பக்கம்...” என்று திசை காண்பித்தான் இவள் பார்வையை உணர்ந்தவன்.

அவன் சுட்டிய திசையில் சிறுது தொலைவில் இருந்த அந்த கதவை திறந்து உள்ளே சென்றவள் ஒரு இருக்கையில் அமர இவளுக்கு அருகில் வந்து அமர்ந்தான் கவின்.

திர்ல இருந்தா என் முகத்தை நீ அடிக்கடி பார்க்க வேண்டி இருக்கும்...அதான் “ என்ற விளக்கத்தோடு.

ஆமாம் ரொம்பவும் அக்கறை மாதிரி...ஆடு நனயுதேன்னு ஓநாய் அழுததாம்..மெனு கார்டை வைத்து கொண்டு இப்படித்தான் வேரி நினைத்துக்கொண்டிருந்தாள்.

“உன் அக்கா ஸேபா இருக்கிறா...எதையும் போட்டு குழப்பிக்காம சாப்பிடு....” தன் கையிலிருந்த மொபைலை பார்த்தபடி சொன்னான்.

இவளுக்கு இவள் ஆர்டர் செய்ய, அவன் தனக்கு வெறும் பாலோடு நிறுத்திக் கொண்டான்.

அதையும் அருந்தாமல் தன் மொபைலை இவள் சாப்பிட்டு முடிக்கும் வரை குடைந்தவன் இவள் சாப்பிட்டு முடிக்கவும் தன் பாலை ஒரே வாயில் குடித்தான். பின் பில் தொகையை செலுத்திவிட்டு இவளைப் பார்த்தான்.

“எதாவது....எந்த வகை உதவினாலும்  தேவைனா கேளு...தேவை இல்லாம உன்னை கஷ்டபடுத்திகிடாத..”என்றான் கேள்வி போல்.

எழுந்து காரை நோக்கி நடக்க தொடங்கினாள் வேரி. இவள் பின் சீட்டில் அமர, அவன் மௌனமாக காரை செலுத்தினான்.

திருநெல்வேலி என்று சொன்னானே தவிர அதையும் தாண்டி சில கிலோ மீட்டர் பயணம் செய்த பின்பே அவன் வீடு காணக் கிடைத்தது.

இரவு மணி பண்னிரெண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

“அத்தனை மணிக்கும் வரவேற்க காத்திருந்தனர் சில வேலையாட்கள். “நீங்க போய் படுங்க நாளைக்கு பார்த்துகிடலாம்...” அவர்களிடம் சொல்லியபடியே ‘வா’ என இவளுக்கு தலையால்  சைகை மட்டும் காண்பித்து முன் சென்றான்.

அவனைத் தொடர்ந்து, அவன் பின் சென்றவள், அவன் தன் அறைக்கதவை திறக்கவும், சுற்று முற்றும் பார்த்துவிட்டு வேலைக்காரர்கள் இல்லை என உறுதி ஆனதும் “எனக்கு வேற ரூம் வேணும்” என்றாள் சிறு குரலில்..

“காலையில எல்லாரும் இதே வீட்டில தான் இருப்பாங்க..”என்ற அவன் குரலில் கேலி இருந்ததோ?

“பிரவாயில்ல..எனக்கு தனி ரூம் வேணும்...”

“குல்ஸ் நீ பயபட ஒன்னும் இல்ல....தூங்கதாண்டா போறோம்...தேவையில்லாம சீன் கிரியேட் செய்யாத...”அடக்கிய குறும்புடன் அவன் சொல்லிவிட்டு உள் செல்ல வேறு வழி இன்றி அவனை பின் தொடர்ந்தவள் அறையிலிருந்த சிறு ஸோஃபாவில் சென்று அமர்ந்தாள்.

அவன் குளித்து உடை மாற்றி வரும் வரையுமே அவள் அசையவில்லை.

ரவு நேர உடையில் தலையை துவட்டிய படி அவன் வருவதை பார்க்கவும் பக்கென்றது பெண் மனது.

அடி வயிற்றில் தொடங்கிய கிலேசம்  இவள் கண்களில் பாய பார்வையை அவனை விட்டு திருப்பிக் கொண்டாள்.

ஒரு ராட்சசனுடன் நான். அறிவு அலற, அதரங்கள் காய, இதய துடிப்பு தாறுமாறாய் எகிறியது. 

கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். இவள் முகத்துக்கு வெகு அருகில் அவன் முகம் உணர்ந்தாள். காரில் இவளை நோக்கி குனிந்தானே அது போல். இவள் மூச்சு நின்றது. அவன் மூச்சு காற்று இவள் இதழ் வருடுவதை உணர முடிந்தது.

அடுத்து...? தன்னிலை மறந்து துள்ளி எழுந்தவள், எழுந்த வேகத்தில் தடுமாறி கால் சரிய தரையில் விழுந்தாள்.

 “ஹேய்...என்னாச்சு...குல்ஸ்?” சற்று தொலைவில் படுக்கையில் அமர்ந்திருந்தவன் வேகமாக எழுந்து ஓடிவந்தான்.

சே! வெறும் ப்ரம்மை.

இதற்குள் இவளருகில் வந்திருந்தவன் குனிந்து அவள் எழும்ப உதவி செய்தான் என சொல்வதைவிட அள்ளி எடுத்தான் என்ற விதமாக தூக்கி நிறுத்தினான்.

உண்மையில் இப்பொழுது இவள் அருகில் அவன் முகம் மட்டுமல்ல மொத்த கவினுமே தான்.

ஆனால் இவள் கற்பனையில் பயந்தது போல் அங்கு காமமோ தாபமோ துளியும் இல்லை. பார்க்கும் இடத்தில் எல்லாம் அவன் முகம் முழுவதிலும் அத்தனை அணுவிலும் பரவி இருந்தது பாசம். அவள் தன் பாட்டியிடம் இதை உணர்ந்ததுண்டு.

பாசம் அதோடு சேர்ந்த ஒருவித இயலாமை கலந்த தவிப்பு. அவன் கண்களில் கரைந்தாள். இவனின் இந்த நேசம் நிஜமா?

இவன் உண்மையில் எதற்காக இவளை திருமணம் செய்தான்? அதுவும் இவள் சகோதரியை மணக்க இருந்தவன்?

அம்மா சொன்னது ஞாபகம் வர,  சட்டென உண்மை உறைக்க அவனை தள்ளிவிட்டு விலகிப்போனாள்.

 குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

முகம் கழுவி மீண்டும் சோஃபாவில் வந்து சாய்ந்தாள் வேரி.

கால், நீட்டி படுத்து தூங்கவென கெஞ்சியது. ஆனாலும் அரண்டு போய் அமர்ந்திருந்தாள்.

இவள் முகம் பார்த்தவன், இன்டர்காமில் அவளுக்கு பால் கொண்டு வர செய்தான்.

வேலைக்கார பெண் கதவை தட்ட குவளை உள் வருமளவு கதவை திறந்தவன் பால் குவளையை பெற்றுக் கொண்டு கதவை மூடினான்.

“வெறும் வயிற்றோட படுக்காத....குடிச்சிட்டு தூங்கு.” அவள் முன் பாலை வைத்துவிட்டு மற்ற விளக்குகளை அணைத்தான்.

“கட்டில் ரொம்பவும் பெரிசு....தயவு செய்து படு..” இரவு விளக்கை மட்டும் எரியவிட்டு அவன் படுக்க அசையாமல் அமர்ந்திருந்தாள் அவள். விடியும் வரையும் அவள் விழி மூடவும் இல்லை...உடல் சாய்க்கவும் இல்லை.

காலை கோபமும், சோர்வுமாக அவள் விழித்து அமர்ந்திருக்க  கண்ட கவின், தான் நினைத்த அளவிற்கு விஷயம் இல்லை என புரிந்துகொண்டான்.

தொடரும்

Ennai thanthen verodu - 02

Ennai thanthen verodu - 04

{kunena_discuss:831}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.