(Reading time: 14 - 27 minutes)

04. என்னைத் தந்தேன் வேரோடு - Anna Sweety

ருகில் வந்து அமர்ந்த வியனை  கேள்வியாய் பார்த்தாள் மிர்னா.

“சின்ன ஆக்சிடெண்ட் இப்போ ஸேஃபா இருக்கோம்னு சொல்லிட்டேன்...போதுமா?”

“உண்மையை உண்மையான்னு உண்மைக்கே சந்தேகம் வர்ற மாதிரி பேசுகின்ற உம்மை உண்மையாய் பாராட்டுகிறேன்...இப்படிக்கு உண்மையுடன் உண்மைப் ப்ரியை, உண்மை போதினி, உண்மையின் உண்மை உங்கள் மிர்னா...”

Ennai thanthen verodu

மேடைப் பேச்சாளர் தொனியில் அவள் பேசிக் கொண்டுபோக....

“எப்படிங்க இப்படி ஒரு குழந்தைக்கு உங்கவீட்ல கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணாங்க...?”

எம் எம்மின்  சிக்செர் ஷாட்டை காட்ச் பிடித்தான் வியன்.

இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி முறைத்தாள்.

கிரேட் இன்ஸல்ட் கெக்கேபிக்கே...இதுக்கு உனக்கு பனிஷ்மென்ட் நிச்சயம் உண்டு....

“என்ன பனிஷ்மென்ட் கொடுக்கிறதுன்னு மேடம் முடிவு செய்தாச்சா...?”

இரு புருவங்களையும் உயர்த்தி அவன் கேட்டவிதத்தில் மைன்ட் வாய்ஸ்தான கொடுத்தோம்...மாத்தி மௌத் வாய்ஸ் கொட்டுத்துட்டமோ......ஏன் இவன்ட்ட இப்படி அடிக்கடி பல்ப் வாங்குறோம்னு மிர்னா மெரிஸ்லாயிட்டா.

இருந்தாலும் மீசை இல்லாதவ நீ மிர்னு ...நீ எல்லாம்  மண்ணை பத்தி எதுக்கு கவலைப்படனும்...? ன்னு தன்னை தானே தேத்திக்கிட்டா.

“அதை எல்லாம் அவை கூடி முடிவு செய்றதுதான் எங்க பக்க வழக்கம்...உரிய நேரத்தில் பனிஷ்மென்ட் நிறைவேற்ற படும்....”

வலக்கை கட்டைவிரலை உயர்த்திக் காட்டி அதை வரவேற்றான் வியன்.

 “மிர்னாவுக்கே வயசு 21தான்னா   எங்க அண்ணிக்கு என்ன வயசு?” அவனது எங்க அண்ணியில் ஒரு உரிமை பிடிப்பு அதிகமாக தெரிந்தது மிர்னாவுக்கு. மனம் முனுக்கென்றது.

அவதான் சொந்தமா, நான் அந்நியமா? போடா கெக்கே பிகே!

“அவ என் ட்வின் சிஸ்டர்...என்னை விட 27 நிமிஷம் பின்னால பிறந்தவ....”

“தென் ஓகே..மேரேஜ் ஏஜ் தான்.”

“என்ன ஓகே?....21 வயசு ஒரு கல்யாண வயசா...? இப்படி...”

“அவள் கோபமாக ஆரம்பிக்க  “அவங்களுக்கு தான சொன்னேன்  உங்களை சொல்லலையே...?”

கையால் தன் மூக்கை பிடித்தேவிட்டாள் எம் எம்.

இது பௌலிங்க் எரரா? இல்லனா ஃபீல்டிங் ப்ராப்ளமா?

“என்ன பார்க்க லூசு மாதிரி...ஐ மீன் கொஞ்சம் மென்டலி இம்பலன்ஸ்ங்கிற மாதிரி தெரியுதோ...?”

அவள் சீரியஸாக கேட்க...

“ஹேய்...என்ன...நீ...?

நீங்க செம போல்ட் அன்ட் ஜாலி டைப்னு நினச்சேன்..இவ்ளவு சென்சிடிவா....”

அவன் வாக்கியத்தை முடிக்க விடவில்லை அவள்.

“நீங்க என்ன சொன்னாலும் தாறுமாறா டிஸ்டர்ப் ஆகுது....ஐ வாஸ் நெவர் திஸ் வே”

அவள் புரியாது பார்க்க..

அவன் கண்களில் கனிவு?

ஆனால் அடுத்த நொடி பேச்சை மாற்றினான்.

“கவின் அண்ணி கூட ஹப்பியா ஹனிமூன் கிளம்பிடுவான்......”

அவளுக்கு எதோ மறைமுக செய்தி சொன்னது அவன் குரலும் அதன் தொனியும்.

 “அப்ப இது அம்மா கம்பல்ஷனுக்காக நடக்கலையா....?” ஆச்சரியமாகிப் போனாள் அவள்.

இல்லை எனும் விதமாக தலை அசைத்தான் வியன் மனோவசீகர புன்னகையுடன்.

“அப்போ??!!” நம்பவே முடியவில்லை மிர்னாவால்.

“அதான் தீர்கதரிசினி மிர்னா அம்மையார் அப்பவே சொன்னீங்களே....கண்டோம் காதல் கொண்டோம்...கைதலம் ...”

அவனை முடிக்கவிடவில்லை அவள். “வாவ்....சூப்பர்...அவ்ளவு ஷார்ட் பீரியடில் லவ் பண்ண முடியுமா?....” ஆரவாரமாய் ஆரம்பித்தவள் மனதில் எதோ நறுக் என்றது. அது வலி என்பதை விட பய உணர்வோ இல்லை எதுவோ அதைப் போல்.

இமைகள் உயர்த்தி எதிரில் இருந்தவனைப் பார்த்தாள்.

மலர்ந்த முகத்தோடு ஆராய்தலாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அவன்

இவள் கேள்விக்கு பதில் சொன்னான் “கல்யாணமே பண்ணிட்டானே...நம்பித்தான் ஆக வேண்டி இருக்குது...”

புன்னகைத்துக் கொண்டாள் மிர்னா.

ரி வாங்க கிளம்புவோம்....”

“இல்ல.. வியன் இங்கயே இருக்கலாம்னு தோணுது.”

“என்னாச்சு மிர்னா...கால் வலிக்குதா ....ரொம்ப டயர்டா இருக்குதா....?”

“இல்ல....ஆனா தோணுது....”

அவளை ஒரு பார்வை பார்த்தவன் சம்மதமாய் தலை அசைத்தான்.

கால் முட்டி கட்டி அதில் நாடி பதித்து அமர்ந்தவள் சுய ஆராய்ச்சியில் இறங்கினாள்.

கவின் விரும்பி வேறு மணம் செய்த தகவல் கிடைத்தவுடன் நியாயபடி இவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.

இவள் விருப்பம் அறியாமல் இந்த திருமண ஏற்பாடுகளை கவின் செய்ய, இவளது அஸ்திவாரம் வரை ஆடிப் போனது அல்லவா? இப்படி தனியாளாக வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு இவளைக் கொண்டு வந்தது இந்த திருமண ஏற்பாடு தானே.!!

இப்படி இவள் வாழ்வை தாறுமாறாக்கிவிட்டு இப்பொழுது இவள் தங்கையைத்தான் எனினும் சில மணிகளில் மனம் மாறி விருப்ப மணம் புரிந்து கொண்டானென்றால் இவளை  என்னவாக நினைக்கிறான் அவன்??

ஆனால் வரவேண்டிய கோபம் வரவே இல்லை. அதற்கு பதிலாக வேகமாக வந்த காதலை கண்டு ஆச்சர்ய படுகிறது பக்கத்தின் இருப்பவனின் பார்வை கண்டு.

இத்தனைக்கும் இதுவரை காதலை பத்தி எதையும் நினைக்கவோ பேசவோ கூட இவளுக்கு பிடிக்காது. வீட்டில் அம்மா அப்பாவின் திருமண வாழ்க்கை போதாதா காதலையும் திருமணத்தையும் வெறுக்க?

ஆனால் இன்று...?

மிர்னாவிற்கு எதையும் இழுத்தடித்து பழக்கம் கிடையாது. பொய்க்குப் பின் ஒழியும் கோழைத்தனமும் கிடையாது. அதனால் சட்டென அவள் மனம் தன் காதலை அவளிடம் ஒத்துக் கொண்டது.

மிர்னாவின் மனம் வியன் பின்பாக.

முதல் பார்வையிலேயே அவனை வில்லனாக ஒத்துக்கொள்ள மறுத்த மனம்.

 அத்தனை ஆண்களிடமும் அடுக்கடுக்காய் குறைகாணும் இவள் சிந்தை இவனிடம் இன்னும் ஒன்றையும் குறையாக சுட்டவில்லை...ஏன்?

அவன் அருகாமையில் அவள் கருவாய் சுமக்கும் ஒலிம்பிக் கனவு மறந்து போக வேண்டுமென்றால்...?

அன்னை தந்தை முன் இயல்பாக இருக்க தயங்குபவள், இவன் முன் தன் தோழிகளின் அருகாமையில் ஆடுவது போல் படு இயல்பாய் இருந்தாளே...?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.