(Reading time: 8 - 16 minutes)

05. நறுமீன் காதல் - அனு.ஆர்

Narumeen

பழகுதமிழில் புழங்காத சில வார்த்தைகளுக்கு tool tip (கோடிட்ட வார்த்தைகள்) ஆக அருஞ்சொற்பொருள் கொடுத்துள்ளேன். நன்றி 

மண நாள்

லி உடை வண்டின் மகிழ் ஒலி

சிறகு உடை புள்ளின் {tooltip}ஆசுகவி, {end-link}உடனுக்குடன் கவிபுனைபவர்{end-tooltip} 

ஒளி உடை விண்மீன் மௌன மொழி

கறை உடை மதியின் காதல் துதி

காதல் உடை நெஞ்சகத்தே  செய்வித்த {tooltip}தேமாநதி{end-link}இனியபெரிய{end-tooltip} 

அலை உடை {tooltip}மீ{end-link} மேன்மை{end-tooltip}கடல்  நிகர் மா இன்பம் தருவி

{tooltip}ஆம்பல்{end-link}அல்லி / இங்கு கண்கள்{end-tooltip}  உடை ஆதவன், கறை இல் திங்கள் நறுமீன் வதனத்தில் {tooltip}இணைஇ{end-link}இணைத்து{end-tooltip} 

துயில் இல் துயில் இல் என்றாங்கு செங்கண் உற்றவன் செவியில்

விடியல் விடியல் என்று செப்பிற்றே!

மையல் மையல் என்றவன் மனம் மண நாள் களிப்பில் துள்ளிற்றே! (1)

 

ஷெஷாங்கன் திருமண உடை

வெண்பஞ்சு நூலெடுத்து விந்தையாய்

சிந்து நதி தீர பண்குடி சிந்தையால்

செய்வித்த பால்வண்ண கலிங்கம்

வாள் பதறோம் வேல் பதறோம் என்றலையும் {tooltip}மடங்கல்{end-link}சிங்கம்{end-tooltip}  மந்தை

சிந்தையில் அச்சம் சிந்தி சிதறச்செய்யும் இவன் தோள் தொடங்கி

இட்டபணி புரிய ஈண்டுங்கு கோடி மாந்தர் என்றிடினும்

இங்கொரு தீங்கு இவன்குடிக்கு என்றிட்டால் குதித்தோடி குறைதீர்க்க

முப்பொழுதும் துடித்திருக்கும் இவன் பாதம் வரை படர்ந்திலங்க அதன்புறத்தே

{tooltip}வெய்யோன்{end-link}சூரியன்{end-tooltip}  சூழும் நீல வானம் என்றொப்ப

செய்யோள் கூட்டம் சீருடன் இயற்றிய {tooltip}விசும்பு{end-link}வானம்{end-tooltip}  வண்ண பட்டு

ஷெஷாங்கன் சிற்ப சீருடல் சூழ்ந்ததுவே! (2)

 

ஷெஷாங்கன் ஆயத்தம்

மா உரு நகை வேண்டா மெல்லியளால் கண் உறுத்தும்

மணி ஒளிர் மகுடம் தான் வேண்டும் மன்னன் மனைவி என்றுணர்த்த

ஓர் பூ தார் ஒன்று போதும் பெண் சிரம் வருத்தும் பல் மணம்

ஒரு புற உடைவாள் அதுபோதும் மறுபுறம் மங்கை புறம்

சிறு இறகு தீண்டலில் சிவந்துவரும் மலரவள் மென்மேனி வாள் தீண்ட தாங்கேன் நான்.

சிறு நோவும் தந்திடாத மழுங்குமுனை கணையாழி தான் வேண்டும்

சிறியவள் கைதலம் பற்ற வேண்டும் சிலபொழுது மண முறையில்

இடைக்கச்சை இளஞ்சிவப்பில் பூண்; நறுமீன் உடைவண்ணம் ஒத்தோதும்

இளந்தோல் காலணி எனக்கணி, பொற்பாதணி வேண்ட வேண்டா

இங்கிவன் இரும்பிதயம் ஓய்வின்றி துடித்திருக்கும் உயிர்ஒலி  மிகை அதில்

{tooltip}இடம்{end-link}இடபுறம்{end-tooltip}  நிற்க, இளையவள் செஞ்செவி சிறிதாகினும் துன்புறும் இதில்

பொற்பாதணி புனைந்தேனாகில் தரையொலியால் மிகுமே அவள் செவி இன்னா (3)

 

பெண் அழைக்க செலல்

{tooltip}தரங்கம்{end-link}அலை{end-tooltip}  தழுவும் கரை மணல் எண் {tooltip}குறையுற{end-link}குறைவாய் தோன்றும்படி{end-tooltip} 

தாள் பணிய, சொல் செயல்விக்க மீ ஏவலர் நிறையுற்ற

{tooltip}அருக்கான்{end-link}சூரியன்{end-tooltip} அவன் வேவு தூது தாதி {tooltip}மதி{end-link} நிலா{end-tooltip}  மங்கை

மழையன் முகிலன் மங்கையன்ன தென்றலன் மா புயலன்

நடை பயில நாள்கூறு என்றபடி நடையில் தாள் பார்த்து தாழ்ந்திருக்க

அடைமழைக்கும் அத்தனைக்கும் வேந்தனவன் ஷெஷாங்கன்

போற்றுதும் போற்றுதும் செங்கோவை போற்றுதும்

சாற்றுதும் சாற்றுதும் எம் மணிமுடி அவன் தாள் என்பதாய்

அங்கொன்றும் இங்கொன்றும் என்றின்றி அவனியில்

அத்தனை அரசுரிமை பெற்றிற்ற கொற்றவனும் அடிபணிய

சென்றிற்றான் நறுமீன் நாடி (4)

 

ஷெஷாங்கன் எண்ணம்

சிந்தை சொல் சுவாசம்

சர்வம் அவள் தங்கும் {tooltip}சுரம்{end-link}நிலம்{end-tooltip} 

ஊணுடல் உள் திசு அணு

உள்ளுறை உயிர் எல்லாம் மனு

அவளுக்காய் அழியும் செலவழியும்

இனி நிதம் நிதம்

உடல் திரை கிழித்து உயிர் குருதி கழித்து

உள்ளுள், என்னுள் புதைப்பேன் அவளை களித்து

{tooltip}கோமகன்தான்{end-link}அரசர் மகன்{end-tooltip}   {tooltip}கோவின்கோ{end-link}அரசர்களுக்கு அரசன்{end-tooltip} அதுவும் தான்

கோதைமகள் குறைவு நீக்க அடிமையாக சம்மதம்தான். (5)

நானென்றும் நீயென்றும் பிரிவென்றும்

இனி இல்லை

பிறந்து வந்தேன் அத்துயரை பிய்த்தெறிய

{tooltip}களி{end-link}இன்பம்{end-tooltip} கொள்ளை

அன்னை தந்தை அற்றவள் நீ அனைத்துறவும்

எனில் கொள்வாய்

மாற்றம் இதில் இல்லையடி {tooltip}மதிப்பெண்ணே{end-link}நிலா/அறிவுப்பெண்ணே{end-tooltip} 

மணம் கொள்வாய்

அன்பு செய்ய வருகின்றேன்; அன்பு செய்ய வருகின்றேன்

{tooltip}என்புதனையும்{end-link}எலும்பு தனையும்{end-tooltip}  சுட்டெரிக்கும் உயிர் காதல் கொள்கின்றேன். (6)

அன்பென்பது உணர்வென்றால்

அது சிற்றின்பம்

செத்தொழியும் சிறுபொழுதில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.