(Reading time: 8 - 16 minutes)

 னந்தமாய் பறந்திடுவேன்!

இதோ இப்பொழுது இப்பொழுதே!

அரியணை அண்டை சென்றான் அவன்

ஓ! அரசாணை அவன் அமர்ந்தல்லவா தரவேண்டும்?

அமுதிற்காய் {tooltip}ஆ{end-link}பசு{end-tooltip}  மடி தேடும் அதன் சேய் நிலை கொண்டாள்

எங்கே என் விடுதலை ஆணை? (14)

 

திருமணம்

அறியணை படிகள் இதமாய் கடந்தவன்

அணங்கிவள் கரம் பற்றினன்; விழியால் அழைத்தனன்

அறியா பொழுதில் அவன் விழி வழி உயிர் கண்டவள் கலைந்தனள்.

கணபொழுது கடந்த காலம் கனவாய் கானலாய்

எதிர் நிற்கும் இவன் தவிர அனைத்தும் அவையும் கற்பனையாய்

அவன் ஆதம் வழி வந்தவன்; ஆதி உறவினன்; அநாதி சிநேகிதன் என்றதொரு நினைவாய்

படி கடந்தனள்.

பாச நேசம் எதுவுமில்லை; 

பாவைக்கு காதலொன்றும் தோன்றவில்லை

அன்பு முன் கோபம் காயம்  மண்டியிட்ட ஒரு மன நிலை என்பேன் நான்.

{tooltip}நிகழ்மணிகாலம்{end-link}நிகழ்கின்ற மணிபோன்றகாலம்{end-tooltip} சிந்தையில் தப்பிற்று இரு நொடி நேரம்

மணிமுடி கொண்டது அவன் கரம்

சூட்டினான் அதை அவள் சிரம்

அதுவே திருமணம். (15)

வாழ்க தலைவன்! வாழ்க தலைவி!

வாழ்க மன்னன்! வாழ்க அவன் மனைவி!

வாழ்த்தொலி நாராசம்

செப்பிற்று நடந்த கோரம்

காலடி நிலம் நழுவிற்று

கை ஆதாரம் பற்றிற்று

கிடைத்தது அவன் கரம்

நாம் இனி பதி தாரம்

என்றது அவன் அதரம்

மாளிகைச் சிறைச்சாலை நிரந்தரம்

புரிந்தது அவளுக்கு அந்நேரம். (16)

திரு.ஹெரடோடஸ் 484BC – 425BC  அவர்கள் இயற்றிய ஹிஸ்டரி எனும் நூலில் செர்ஸெக்ஸ் தன்னுடன் ஒரு சிந்து நாட்டு (இந்தியா) படையொன்றை எப்பொழுதும் வைத்திருந்ததாக குறிக்கபட்டுள்ளது. எக் கடும் போர்சூழலிலும் அரசனை ஆபத்தில் விட்டு தங்களை தற்காத்துக்கொள்ளவோ, எதிரி படையில் சேரவோ அவர்கள் ஒருபோதும் முற்படமாட்டார்கள் என செர்ஸெக்ஸ் நம்பியதே காரணமாக குறிக்கப்பட்டுள்ளது. அந்த இந்தியர்கள் எத்தியோப்பியர் போன்ற சரீர நிறத்தில் இருந்ததாகவும் ஆனால் அவர்கள் கூந்தல் எத்தியோப்பியர்களது போன்று சுருண்டு இல்லாமல் நேராக நீண்டு இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் திரு.ஹெரடொடஸ். மேலும் சிந்து நாகரீகத்தை திராவிட நாகரீகம் என பல ஆதாரங்கள் உறுதிப்படுத்துவதால் திராவிடர்களாகிய சிந்து மக்கள் செர்ஸெக்ஸ் அரண்மணையில் இருந்ததாக காட்டியுள்ளேன்.

சிந்து நாட்டினர் ஆற்று மணலை நீரில் கழுவி தங்கம் பிரித்தனர். அங்கு மண்ணில் தங்கம் அதிகம் என்றும் அந்நூலில் சுட்டப்பட்டுள்ளது. சிந்து தேசத்தில் செடியிலிருந்து பஞ்செடுத்து நூலாடை செய்தார்கள் என்பதை பேரதிசயமாக குறிக்கின்றார் திரு.ஹெரடோடஸ். ஏனைய நாட்டில் அக்காலம் ஆட்டு ரோமத்திலிருந்து மாத்திரமே உடை செய்தார்கள் என குறிப்பிட்டுள்ளார் அவர்.

தொடரும்

நறுமீன் காதல் - 04

நறுமீன் காதல் - 06

{kunena_discuss:789}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.