(Reading time: 14 - 28 minutes)

23. கௌரி கல்யாண வைபோகமே - ஜெய்

ICUவில் கௌரியும், கௌஷிக்கும் அனுமதிக்கப்பட்டிருக்க உள்ளிருந்த  டாக்டரின் வருகைக்காக பதைபதைக்கும் மனதுடன் அனைவரும் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது அங்கு கௌஷிக்கின் குடும்பமும் வந்து சேர ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் அளித்துக்  கொள்ள ஆரம்பித்தார்கள். 

கிட்டத்தட்ட அரைமணி கழிந்து ICU  வின் கதவு திறந்து வெளியில் வந்த டாக்டர் அங்கு சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்து, "எதுக்கு இத்தனை பேர் இங்க வந்து நிக்கறீங்க, ப்ளீஸ்   ICU முன்னாடி கூட்டம் போடாதீங்க", என்று கூற, "டாக்டர் நாங்க கௌஷிக், கௌரியோட அப்பா, அம்மா. அவங்க ரெண்டு பேரும்  எப்படி இருக்காங்க.  பெரிய அடி எதுவும் இல்லையே", ராமன் தவிப்புடன் கேட்டார்.

Gowri kalyana vaibogame

"ஓ ஓகே, நீங்க அந்த அடிப்பட்டவங்களோட அப்பா, அம்மாவா.  நீங்க  என்னோட ரூம்க்கு வாங்க அங்க பேசிக்கலாம்.  இங்க கூட்டம் போட வேண்டாமே", என்று சொல்ல அனைவரும் டாக்டரின் அரை நோக்கி சென்றார்கள். 

"வாங்க ப்ளீஸ் சிட் டௌன்"

"டாக்டர் நான் ACP  பாலு,  இப்போ அவங்க எப்படி இருக்காங்க"

"Nice meeting ACP  sir,  அவங்களுக்கு பயப்படறா  மாதிரி பெரிய அடி எல்லாம் இல்லை.  நிறைய வெளிக் காயம்தான்.  மணல்ல விழுந்ததால  பெரிசா அடி எதுவும் படலை.  அதுல இருந்த கல்லுங்கல்லாம் நிறைய இடத்துல   குத்தி  இருக்கு.  வெளிக்காயம் அப்படிங்கறதால ரத்த சேதம்தான் நிறைய ஆகி இருக்கு.  வலி தெரியாம இருக்க செடேஷன் போட்டு இருக்கறதால ரெண்டு பேரும் இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சுதான் முழிப்பாங்க"

"நாங்க அவங்களை இப்போ பார்க்கலாமா டாக்டர்?"

"இல்லம்மா, இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு அவங்களை வார்டுக்கு மாத்திடுவோம்,  அப்பறம் போய் பாருங்க.  இன்னைக்கு ஒரு நாள் மாட்டும் இங்க இருக்கட்டும், நாளைக்கு மதியத்துக்கு மேல நீங்க வீட்டுக்கு கூட்டி போய்டலாம்.  அப்பறம் ACP சார். எனக்கு இன்னைக்கு நைட் ஷிப்ட்தான்.   உங்களுக்கு ஏதானும் formalities முடிக்கணும்ன்னா எப்போ வேணும்ன்னாலும் சொல்லுங்க"

"ஒண்ணும் அர்ஜெண்ட் இல்லை டாக்டர்.  முதல்ல ரெண்டு பேரும் கண்ணு  முழிக்கட்டும்.  மத்தது எல்லாம் அப்பறம் பார்க்கலாம்.  சரி நாங்க போய் வெளில வெயிட் பண்றோம் டாக்டர்"

பின் அனைவரும் வெளியில் வந்து  காத்திருக்க அந்த நேரத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவர் பாலுவைத் தனியே அழைத்து சென்று பேச ஆரம்பித்தார்,   பின்னர் அவர் ஒரு CD Player  கொடுத்து கேட்க சொல்ல அதைக் கேட்ட பின் பாலுவின் முகம் சிறிது சிறிதாக மாற ஆரம்பித்தது. 

"பத்து எனக்கு அவசரமா ஒரு வேலை வந்துடுச்சு,  நான் போய் அதை முடிச்சுட்டு இன்னும் ஒரு, ஒரு மணி நேரத்துல வந்துடறேன்.  அதுக்குள்ளே அவங்க ரெண்டு பேரும் முழிச்சுட்டாங்கன்னா எனக்கு போன் பண்ணு, நான் உடனே வரேன்.  அப்பறம் ராமன் சார், உங்க பையன் friend போன் நம்பர் கொடுங்க.  எனக்கு கொஞ்சம் அவர்கிட்ட பேச வேண்டி இருக்கு", என்று கூறி ராமனிடம் நம்பரை வாங்கி விடை பெற்றார் பாலு.

பாலு  சென்று ஒரு மணி நேரத்தில் கௌரி, கௌஷிக்கிற்கு நினைவு திரும்ப அவர்களை  ரூமிற்கு மாற்றியவுடன் பாலுவிற்கு தெரியப்படுத்திவிட்டு அனைவரும் சென்று பார்த்தார்கள்.  

உள்ளே நுழைந்து தவிப்புடன் ராமன் குடும்பம் கௌரியின் அருகில் செல்ல கௌஷிக்கின் அருகில் அவன் குடும்பம் சென்றது. 

“என்னடா கௌஷிக் மெதுவா ஓட்ட கூடாதா?  பாரு எப்படி அடி பட்டுடுத்து”

“இல்லம்மா, வேகமாலாம் ஓட்டலை.  மெதுவாதான் ஓட்டினேன். இது யாரோ வேணும்ன்னே வந்து மோதினா மாதிரி இருந்தது”

“என்னடா சொல்ற?”, லக்ஷ்மி அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே ராமு மற்றும் ஆனந்தனுடன் பாலு உள்ளே நுழைந்தார்.

“என்னடா கௌஷிக், சாதாரணமா நீ கட்ட வண்டி கூட போட்டி போட்டுட்டுதானே ஓட்டுவ.  இப்போ வருங்கால பொண்டாட்டி பின்னாடி உக்கார்ந்த உடனே கட்ட வண்டி, ரேஸ் கார் மாதிரி பறந்துடுச்சு போல இருக்கு”

“ஹையோ பாலு அங்கிள், கிண்டல் பண்ணாதீங்க”

“இப்போதாண்டா கிண்டல் பண்ண முடியும்.   இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு உன்னை கிண்டறது, கிளறறது, எல்லா உரிமையும் கௌரிக்கு போய்டும்.  ஜோக்ஸ் அபார்ட்.  டாக்டர் பெருசா பயப்பட ஒன்னும் இல்லைன்னு சொன்ன உடனதான் எனக்கு நிம்மதி ஆச்சு.  அது சரி உன்னை இடிச்சது யாருன்னு பார்த்தியா. நீ ஸ்பீடா ஓட்டலைனா அப்போ அவன் மேல தப்பா?”

“ நான் எப்பவும் ஓட்டற ஸ்பீட்லதான் போனேன்.  மீனம்பாக்கம்  தாண்டினதுலேர்ந்தே பின்னாடியே ஒரு சுமோ கார் follow பண்ணிண்டே வந்துது.  கௌரி வேற அப்போதான் கோவில்ல வச்சு இதுவரை நடந்தது எல்லாம் சொன்னா.  எனக்கு லேசா சந்தேகம் வந்ததால ஸ்பீடை குறைச்சு, கூட்டின்னு ஓட்டி பார்த்தேன்.  அவங்களும் அதே பண்ணவும்  என் சந்தேகம் ஊர்ஜிதம் ஆச்சு.  சரி வண்டியை  நிறுத்திடலாம் அப்படின்னு நினைச்சுதான் லெப்ட்ல ஸ்லோ பண்ணி வந்தேன்.  சரியா அந்த நேரத்துல வந்து இடிச்சுட்டான்.  வெள்ளை கலர் சுமோ வண்டி.  வண்டி நம்பர் சரியாய் பாக்க முடியலை அங்கிள்.  உள்ள ஒரே ஒரு ஆள் மட்டும்தான் இருந்தான்”

“வண்டி டீடைல்ஸ் எல்லாம் ஏற்கனவே கிடைச்சுடுச்சு கௌஷிக்.  உன் பின்னாடியே வந்த ஒருத்தர் அதை நோட் பண்ணி ஹாஸ்பிடல்ல கொடுத்து வச்சிருந்தார்.  அங்க இருந்து வாங்கிட்டேன்.  ஆனா எப்படியும் அது போலி நம்பர் பிளேட்டாதான் இருக்கும்.  இதுக்குள்ள அவன் அதை மாத்தி இருப்பான்.  அதே மாதிரி வண்டியையும் ஏதானும் ஷெட்ல விட்டுட்டு கலர் மாத்த சொல்லி இருப்பான்”

  “ஓ இப்போ என்ன பண்றது அங்கிள்.  யார் பண்ணினா அப்படிங்கறது எப்படி கண்டு பிடிக்கறது”

“யாரு  பண்ணினது அப்படின்னு பண்ண சொன்னவனே  போன் பண்ணி சொல்லிட்டான். மேல கை வைக்க முடியாதுன்னு திமிர்.    கவலைபடாதே கௌஷிக்.  அந்த ரவியோட போன் கால்ஸ் எல்லாம் ரெகார்ட் பண்ணி ஆச்சு.  இப்போ கொஞ்சம் முன்னாடிதான் இன்ஸ்பெக்டர் அதை கொண்டு வந்து காமிச்சார்.  அதை வச்சு உன்னை இடிச்சது யாருன்னு ஆளை கண்டு பிடிச்சுட்டோம்.  அவன் எந்த ஊருக்கு போகப் போறாங்கறதும் தெரிஞ்சுடுச்சு.  அவனைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் போய் இருக்கார்”

“ஏண்டா பாலு, நீ போய் பிடிக்கற வரைக்கும் அவன் என்ன அங்கேயே உக்கார்ந்து இருக்கப் போறானா.  அவன் பாட்டுக்கு வெளி ஊருக்கு கம்பி நீட்டி இருக்கப் போறான் பாரு”

“இதுக்குள்ள அவன் சென்னையை விட்டு கிளம்பி இருக்க மாட்டான்னு நினைக்கறேன் பத்து.  அப்படியே இல்லாட்டாலும் பஸ் ஸ்டாப், ரயில்வே ஸ்டேஷன் எல்லா இடத்திலும் போலீஸ் நிக்கறாங்க.  அவன் எந்த ஊருக்கும் போக முடியாது”

“அது சரி, அந்த டிரைவர் மாட்டினது தெரிஞ்சா இன்னும் அந்த ரவி என்ன அட்டகாசம் பண்ணப் போறானோ.  வெறும்ன்னு நாடகம் போடலாம் அப்படின்னு பேசினதுக்கே படுக்கைல படுக்க வச்சுட்டான்”

“கவலைப்படாதே பத்து.   அந்த ரவியை இன்னைக்கு நைட் அரெஸ்ட் பண்ணிடுவோம்.  அதுக்கு முன்னாடி நான் மீடியா ஆளுங்களை வர சொல்லி இருக்கேன்.  அவன் போன்ல பேசி ஆளை செட் பண்ணினது.  என்னை போன் பண்ணி மிரட்டினது இப்படி அவனுக்கு எதிரா பல சாட்சிகள் இருக்கு.  எலெக்ஷன் வேற வர்றதால மினிஸ்டர் சப்போர்ட் அவனுக்கு அத்தனை தூரம் கிடைக்காது.  சரி எனக்கு இந்த விபத்தை பத்தி கொஞ்சம் போர்மலிட்டீஸ் முடிக்க வேண்டி இருக்கு. டாக்டர் கிட்ட பேசிட்டு நான் கிளம்பறேன்.  இன்னும் கொஞ்ச நேரத்துல மீடியா ஆளுங்க வந்துடுவாங்க.  இங்க எங்க இன்ஸ்பெக்டர்ஸ் ரெண்டு பேரை விட்டுட்டுப் போறேன்.  அவங்க நீங்க எப்படி நடந்துக்கணும்ன்னு சொல்வாங்க”

“சரி அங்கிள்.  நாங்க பார்த்துக்கறோம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.