(Reading time: 14 - 28 minutes)

 

னக்கு இப்போ வரைக்கும் கல்யாணம் பத்தி ஒரு நினைப்பும் இல்லை கௌஷிக்.  அப்படி எல்லாம் எனக்கு பல்பு இப்போ வரைக்கும் எரியலை.  சரி அதை விடுங்கோ, அவ ஏன் கல்யாணம் வேண்டாங்கறா?”

“தெரியலை ஹரி.  நான் கேட்டாலும் அம்மாக்கிட்ட சொன்ன அதே ஆன்சர்தான்.  நான் ஹரியை  நினைச்சுண்டுதான் வேண்டாங்கறயான்னு வேற கேட்டாச்சு.  அதுக்கு அந்த சாமியாரைப் பத்தி பேசவே பேசாதேன்னு சொல்லிட்டா”

“ஹ்ம்ம் சாமியார்.  கௌரி ட்ரைனிங் போல இருக்கு.  கௌஷிக் இப்போ வரைக்கும்தான் பல்பு எரியலை சொன்னேன்.  ஸ்வேதாவைப் பார்த்து எரிய வச்சுடலாம்.   ஆனால் நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கறதுல உங்க ஆத்துல யாருக்கும் அப்ஜெக்ஷன் இருக்காது இல்லை?”

“ஹேய் நான் கேட்டேன் அப்படிங்கறதுக்காக நீ அவளை லவ் பண்ணப் போறியா.  பைத்தியகாரத்தனம் ஹரி”

“கண்டிப்பா இல்லை கௌஷிக்.  அந்த மாதிரி முட்டாள்தனம் எல்லாம் பண்ண மாட்டேன்.  எனக்குமே அவளை பிடிக்கும்.  உங்க தங்கையா பிடிக்கறதை, என்னோட பொண்டாட்டியா பிடிக்கறதா மாத்தப் போறேன் அவ்வளவுதான்.  ஆனால் உடனே முடியாது.  என் சாமியார் இமேஜை அவ மனசுல இருந்து மாத்த கொஞ்சம் டைம் எடுக்கும்.  அதே மாதிரி நாங்க கொஞ்ச நாள் அவ ஆசைப்பட்டா மாதிரியே லவ் பண்றோமே.  நீங்க உங்க அம்மா, அப்பாகிட்ட மட்டும் விஷயத்தை சொல்லி,  அவளுக்கு வேற எங்கயும் அலையன்ஸ் பார்க்க வேண்டாம்ன்னு சொல்லுங்கோ.  ஆனால் நான்  உங்ககிட்ட பேசினதை அவக்கிட்ட சொல்ல வேண்டாம்.  நீங்க சொல்லித்தான் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு தப்பா நினைக்கப் போறா”

“கவலையேப் படாதே.  அம்மா, அப்பாவை ஈஸியா கன்வின்ஸ் பண்ணிடலாம்.  உனக்குத்தான் கஷ்டமான வேலை.  ஸ்வேதாவை கரைக்கறது”

“ஹா காதல் அப்படிங்கற மேட்டர்ல படு தத்தியான எங்க அக்காவையே நீங்க மாத்தலையா,  அதைவிடவா ஸ்வேதாவை மாத்தறது கஷ்டம்”

“அது என்னவோ சரிதான் ஹரி.  சரி வா கீழ போலாம்.  சாதாரணமாவே உங்க அக்கா என்னை எரிக்கறா மாதிரிதான் பார்ப்பா.  இப்போ உன்னை வேற அவக்கிட்ட பேச விடாம மாடிக்கு கூட்டிண்டு வந்துட்டேன்.  கண்டிப்பா நெற்றிக்கண்ணோடதான் வெயிட் பண்ணிண்டு இருப்பா.  போய் வேப்பிலை அடிச்சு சமாதானப்படுத்தலாம் வா”

கௌரியை சமாதானப் படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் கௌஷிக்கும், ஸ்வேதாவை எப்படி கவுப்பது என்ற யோசனையுடன் ஹரியும் கீழே சென்றார்கள்.  ஹரி ஸ்வேதாவை கவிழ்த்து, காதலித்து ஸ்வேதா கல்யாண வைபோகத்தில் முடிய நாமும் வாழ்த்துவோம். 

முற்றும்

ஒரு ஒரு அத்தியாயத்திற்கும் கமெண்ட்ஸ் கொடுத்து என்னை ஊக்கப் படுத்திய உங்க அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  இந்தக் கதையில் ஹீரோ, ஹீரோயின் அப்படின்னு தனியா யாரும் இல்லை.  கதை மட்டுமே மெயின்.  அதனால்தான் வெளிநாட்டில் இருக்கும் பையனாக கௌரிக்கு தேர்ந்தெடுத்தேன்.  கௌரி, கௌஷிக்கோ, இல்லை ஸ்வேதா, ஹரியோ நிறைய வரவில்லை.  முடிந்த வரை எல்லாக் கதாபாத்திரங்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்தே எழுதினேன்.  உங்கள் அனைவரையும் கௌரியின் குடும்பத்தவர்களும், கௌஷிக்கின் குடும்பத்தவர்களும் கவர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.  மற்றுமொருமுறை கமெண்ட் கொடுத்து என்னை உற்சாகப் படுத்திய தோழிகள் அனைவருக்கும் கோடி கோடி நன்றிகள்.  மிக விரைவில் மற்றும் ஒரு கதையுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.  நன்றி.

Episode # 22

{kunena_discuss:780} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.