(Reading time: 13 - 26 minutes)

காதல் நதியில் – 25 - மீரா ராம்

சீதை…. என்னை மன்னிச்சிடுடா… ப்ளீஸ்…. மன்னிச்சிடு…. தெரிந்தே நான் இப்போ இந்த தவறை செய்யப்போறேன்… ஆனாலும், எனக்கு வேற வழி தெரியலைடா… என்றவன் கண் மூடி தன் இருக்கையில் சாய்ந்து கொண்டு மனதிற்குள் மானசீகமாய் மன்னிப்புக்கேட்டுக்கொண்ட பொழுது, இங்கே அவள் மனதினுள் இனம் புரியா பயம் ஆட்கொண்டது… எதுவோ சரியில்லை என்று அவள் எண்ணினாள்…

அவர், அவர்… அவர் நலம் பற்றி நான் தெரிந்தே ஆக வேண்டும்…. இப்போதே…. இல்லையென்றால் என்னால், நிம்மதியாக இருக்க முடியாது போலிருக்கிறதே என்றெண்ணியவள், சற்றும் தாமதிக்காமல், ஹரிக்கு போன் செய்தாள்… அது அணைத்துவைக்கப்பட்டிருந்தது…

அவளுக்கு பயம் தொற்றிக்கொள்ள, செய்வதறியாது ஆதர்ஷின் எண்ணையேப் பார்த்திருந்தாள்…

kathal nathiyil

அவளால் அவனின் எண்ணிற்கு அழைக்க முடியாதே…. ஆனாலும், அவனிடம் பேச மனம் விழைந்ததை அவளே உணர்ந்தாள்…

இல்லை… நான் பேசக்கூடாது அவரிடம்…. அவர் வாழ வேண்டும்… நான் அவரை நினைக்கக்கூடாது… எனக்கு அந்த தகுதி இல்லை…. கொஞ்சமும் இல்லை… என்றவள் அவள் வணங்கும் ஸ்ரீராமனைத் தேடிச்சென்றாள் தோட்டத்தின் பின்புறமாக….

அவருடன் இரு…. துணையாய்…. என் மனதிற்குள் கவலை உண்டாகிறது… ஏனென்று தெரியவில்லை… பயமாக இருக்கிறது… அவருக்கு ஆபத்து என்பது போல் எனக்குள் எண்ணங்கள் தோன்றுகிறது… அவருடன் இரு ஸ்ரீராமா….. என்று வேண்டிக்கொண்டவள் வெளியே தன் கவலையை அதிகமாக காட்டிக்கொள்ளவில்லையே தவிர, ஒரு வித சோர்வுடனே காணப்பட்டாள் அன்று முழுவதும்….

ன்னடா மச்சான், என்ன யோசனை???... ஏன் ஒரு மாதிரி சோர்வாக இருக்கிறாய்?....

ஒன்றுமில்லைடா ஹரி…. என்றான் ஆதி…

பொய் சொல்லாதேடா…. ஒன்றும் இல்லாததற்கா, உன் முகம் இப்படி வாடிப் போய் கிடக்கிறது?...

இல்லடா… வந்து…. அவகிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே நான்… அதுதான், கஷ்டமாயிருக்குடா…

அட லூசு…. இதுக்காடா… இப்படி உம்முன்னு இருந்த… நானும் என்னமோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன்… விடுடா… அவகிட்ட சொல்லாததும் நல்லதுக்குத்தான்… நீ பேசாம தூங்குடா…. மீதியை வீட்டுக்கு போயி பேசிக்கலாம்…. என்ற ஹரியின் வார்த்தைகளுக்கு ஒரு சிறு தலை அசைப்பை மட்டும் பதிலாக தந்தவன், இல்லடா… அவ எனக்காக தவிச்சிட்டிருப்பாடா இப்போ…. எங்கிட்ட பேச துடிப்பாடா… அது எனக்குத் தெரியும்…. என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன், பயப்படுற அளவுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு தாண்டா என் எண்ணமும்…. ஆகாதுடா… நிச்சயம்… நான் உயிரோட இருக்குறவரைக்கும் எதுவும் ஆகாதுடா… ஆனாலும், ஆபத்து வளைவிற்குள்…. ஸ்ரீராமா…. என்றவன், அதற்கும் மேல் யோசிக்காமல் இறுக கண்மூடிக்கொண்டான்….

ரவு பதினொரு மணி அளவில் ஹரி தனது கைபேசியை உயிர்ப்பிக்க, ரிகா அழைக்கிறாள் என்று திரையில் மின்னியது….

ரிகா… சொல்லும்மா… என்று இவன் சொல்வதற்குள், அங்கே அவள் குரல் படபடப்பாக ஒலித்தது…

அண்ணா, எங்கே இருக்கிறீர்கள்?... ஏன் போனை அணைத்து வைத்திருந்தீர்கள்?...

விமானத்தில் அணைத்து வைக்க சொல்லிவிட்டார்கள் ரிகா…. அதுதான்….

விமானமா?.... என்ன சொல்கிறீர்கள்?...

சாரிடா… உன்னிடம் சொல்லாமலே கிளம்பி வந்துவிட்டேன்…. நேரமில்லை… அதுதான்…

சரிண்ணா…. பரவாயில்லை…. எந்த ஊர் அண்ணா?

லண்டன்…..

லண்டனா?............

ஆமாடா….

அண்ணா… அப்போ அவர்?.............

யாரைடா கேட்குற?

ப்ளீஸ் அண்ணா…. என்னை கேள்வி கேட்டு கொல்லாதீங்க… அவர் எப்படி இருக்கிறார் அண்ணா?... எங்கே இருக்கிறார்?... ப்ளீஸ் சொல்லுங்கண்ணா… என்று அவள் கெஞ்சி கேட்க ஹரிக்கோ உள்ளம் வலித்தது…

இப்படி ஒருத்தர் மேல் ஒருத்தர் மேல் உயிராய் இருந்தும் இவர்களைப் பிரித்துப் பார்த்து வேடிக்கைப் பார்க்கிறாயே கடவுளே…. ஏன்?... பாவம் அவர்கள்… இதுவரை அனுபவித்த துன்பங்கள் அனைத்தையும் போக்கி என் தங்கையையும் நண்பனையும் இணைத்து வை… என்று வேண்டியவனின் கவனத்தை ரிகாவின் குரல் கலைத்தது…

அண்ணா…. அவருக்கென்ன ஆச்சு?... ஏன் எதுவும் பேச மாட்டிக்கிறீங்க… அவருக்கு என்ன ஆச்சு?... நல்லாயிருக்காருல்ல அவர்?... சொல்லுங்கண்ணா… ப்ளீஸ்… சொல்லுங்க… என்று அவள் உடைந்த குரலில் பதறியபடி கேட்க,

நல்லாயிருக்கான்மா…. என் பக்கத்தில் தான் இருக்கிறான்… பேசுறியா?...

நல்லாயிருக்கிறான்… என்ற ஒரு வார்த்தை அவளுக்கு போதுமானதாக இருக்க…. மனதில் லேசாக தென்றல் காற்று வருடியது… உற்சாகம் மனதில் துளிர்விட,

நிஜமாவாண்ணா… சந்தோஷம் அண்ணா…. இது போதும் அண்ணா… எனக்கு… இது போதும்…. அண்ணா நீங்க இரண்டு பேரும் சாப்பிட்டீங்களா?...

அவளின் சந்தோஷம் அவனிடத்திலும் புன்னகையை வரவைத்தது… சாப்பிட்டோம்டா… நீ சாப்பிட்டியா?... என்ற கேள்விக்கு இப்போ சாப்பிட்டிடுவேண்ணா…. நீங்க எப்போ இங்க வருவீங்க என்று பதில் கேள்வி கேட்டாள் அவள்…

வந்த வேலை முடிந்ததும் உடனே வந்திடுவோம்டா… நீ நேரத்துக்கு சாப்பிடு… இப்படி லேட்டா எல்லாம் சாப்பிடக்கூடாது… சரியா?...

சரிண்ணா…. அவரிடம் நான் கேட்டேன்னு எதுவும் சொல்லிடாதீங்க… என்றவள், சற்றே தயங்க….

ரிகா… எதும் சொல்லணுமா?... சொல்லுடா… என்று அவன் எடுத்துக்கொடுக்க…

அண்ணா… அவரைக்கொஞ்சம்…. பத்திரமா இருக்க சொல்லுங்க…. கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கோங்கண்ணா…. சரியா…. எனக்கு மனசுக்கு என்னமோ போல இருக்கு… சீக்கிரம் வந்துடுங்க இங்க… இரண்டு பேரும் உடம்பை பார்த்துக்கோங்க… என்றாள் மெதுவாக….

அவளின் அக்கறை, அவனுக்கு தன் மீதான பாசத்தையும், தன் நண்பணின் மீதான காதலையும் தெரிவித்தது…

சரிடா… நேரமாச்சு… நீ தூங்கும்மா… சரியா என்றவன் அவள் சரி என்றதும் ஸ்பீக்கரிலிருந்த தன் போனை அணைத்துவிட்டு, தன் பக்கத்தில் இருந்த ஆதியைப் பார்த்தான்…

அவன் கண்கள் லேசாக கலங்க நின்றிருந்தான்…

மச்சான்…. என்னாச்சுடா?... என்றபடி ஆதியின் தோளில் கை வைத்தான் ஹரீஷ்….

காலம் முழுவதும் உன் தங்கையின் அருகில் இருந்து அவளை சந்தோஷமா பார்த்துக்கணும்னு ஆசையா இருக்குடா…. என்றவன் குரல் சற்றே தடுமாற….

நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்வீங்கடா… நிச்ச்யமா…. நடக்கும்டா… உன்னை இந்த அளவு விரும்புறவள், உன்னைக்காணோம்னு தவிக்கிறவள், உன்னோட நலனுக்காக ஒவ்வொரு நொடியும் வேண்டுகிறவள், உன்னை விட்டுப் பிரிந்து, உன்னையும் விலக சொல்லி, எப்படிடா உயிர் வாழுகிறாள்??... உன்னை விலகவும் சொல்லுறா… ஆனா, நீ விலகினா தாங்கவும் மாட்டிக்கிறா…. இதற்குப் பெயர் என்னடா ஆதி?

காதல்…. ஹரி… என் மேல் அவள் வைத்திருக்கும் அளவு கடந்த காதல்… அவள் சுழலில் சிக்கியிருந்தாலும், என்னை எப்படியாவது காப்பாற்றி கரையேற்றத்துடிக்கும் என் காதல் நதிடா உன் தங்கை… ஆனால், என்னவளை அதில் இருந்து விடுவித்து, அவளோடு சேர்ந்து என் மீதி வாழ்க்கையைப் பிரிவின்றி தொடருவேன்டா…. இது சத்தியம்… என்று ஹரி கையில் தன் கையை வைத்து அழுத்திய ஆதியை இறுக அணைத்துக்கொண்டான் ஹரி…. பெருமையுடன்….

அண்ணா… போகலாமா… நேரமாச்சு…. என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பினர்…

போகலாம் அவ்னீஷ்… இதோ வந்துவிட்டோம் என்றான் ஹரி….

டிரைவர் யாரும் வேண்டாம் அவ்னீஷ்…. நானே டிரைவ் பண்ணுறேன்…. சாவியைக்கொடு என்று அதை வாங்கிக்கொண்டு சென்றவனின் திசையையேப் பார்த்துக்கொண்டிருந்தனர் ஹரியும், அவ்னீஷும்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.