(Reading time: 13 - 26 minutes)

வ்னீஷிற்கும், இந்த நிகழ்ச்சிக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்றும், அவனை தங்கள் காரியத்திற்காக தான் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றும் புரிந்து கொண்டு தான் அவன் அவ்னீஷைத் தேடிச் சென்றான்…

இப்போது ஆதி நினைத்தது போல் அவ்னீஷ் ஒரு கருவியாக பயன்பட்டிருக்கிறான் அவனுக்கே தெரியாமல் என்பது புரிந்து தம்பியை அணைத்துக்கொண்டான்…

ஹரியும் தன் தவறை உணர்ந்து அவனிடம் மன்னிப்பு கேட்க, அவ்னீஷிற்கோ என்ன நடக்கிறது என்பது சரிவர புரியாவிட்டாலும், தான் இருவரையும் கஷ்டப்படுத்தியிருக்கிறோம் என்பது புரிய சற்று தன்னை எண்ணியே நொந்து கொண்டான்…

பின் அவ்னீஷின் உதவியுடன் அவள் பெயரைக்கேட்டுக்கொண்ட ஆதி, அவளைப் பற்றி விசாரிக்க அவனுக்கு வேண்டிய தகவல்கள் கிடைத்தது…

அவள் மூலம், அந்த ராட்சஷனை கண்டுபிடித்துவிடலாம் என்று அறிந்திருந்த ஆதிக்கு அவள் பற்றிய தகவல்கள் அதிர்ச்சியை தான் கொடுத்தது…

சரி நம்பிக்கையுடன் அவனை சந்திப்போம் என்றெண்ணியவனுக்கு, அவன் இவ்வாறு நிபந்தனை விதிக்கக்கூடாது என்று பல முறை வேண்டிக்கொண்டே சென்றவனுக்கு அவன் நிபந்தனை பேரிடியாக இருந்தது…

இப்போதோ ஹரி, என்னவென்று சொல் என்று கேட்க, அவன் அசைவற்று அமர்ந்திருந்தான்…

அண்ணா, என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க… ப்ளீஸ்… என்று அவ்னீஷ் கேட்க,

இனி என்னடா நடக்கணும்… என்றான் விரக்தியாக….

சொல்லிதான் தொலையேடா அதை… நடக்குமா இல்லையான்னு நாங்களும் தெரிஞ்சிக்கிறோம் என்றான் ஹரியும் சற்றே கோபமாக…

நான் திருமணம் செய்ய வேண்டுமாம்… அதுதான் அவனின் நிபந்தனை… என்றான் வேதனை மிக ஆதி…

நல்ல விஷயம் தானே அண்ணா… இப்போவே அண்ணியை கல்யாணம் செய்துக்கோங்க… என்றான் அவ்னீஷ் அவசரமாக…

அவன் சொல்வதும் சரிதானே ஆதி… ரிகாவை திருமணம் செய்து கொள்… அவன் இதை தான் அப்படி புரியாமல் சொன்னானா?... நானும் என்னமோ ஏதோ என்று பயந்து போனேன்… என்ன ஒன்று ரிகாவை தான் நாம் சம்மதிக்க வைக்க வேண்டும்… அது பெரிய பிரச்சினை தான்… இருந்தாலும் முயற்சிப்போம் என்றவன், ஆமாம் ஆதி, அவளை திருமணம் செய்து கொள் என்று சொல்வதற்கா அவனைத் தேடி சென்றோம் நாம்?... மேலும், திருமணத்திற்கா நீ சம்மதிக்க மாட்டாய் என்றாய்?... எனக்கு குழப்பமாக இருக்கிறதுடா… என்று ஹரி சொல்ல,

அவன் நிபந்தனை விதித்தது உன் தங்கையை திருமணம் செய்ய சொல்லி அல்ல, அவன் தங்கையை திருமணம் செய்ய சொல்லிடா ஹரி…

என்னது!!!!!!!!!!!!... என்ற அதிர்ச்சியுடன் ஹரியும் அவ்னீஷும் ஒரு சேர வினவினர்…

தொடரும்

Go to episode # 24

Go to episode # 26

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.