(Reading time: 13 - 25 minutes)

 

" ன்ன பார்க்குற  கவிதா ?? வாழ்க்கை ஒரு பயணம் .. நாம நகராமல் நின்னுட்டோம்னா, அது  நாம செத்ததுக்கு சமம் .. இப்படி ஒட்டுண்ணியா இருப்பது எனக்கு புடிக்காது . அவங்க என் அம்மா அப்பாதான் ..ஏதோ என்னை பெத்தாங்க  வளர்த்தாங்க அவங்க கடமை முடிஞ்சது ..இதுக்கு மேலயும் அவங்க நிழலில் நான் இருக்க மாட்டேன் .. அங்க போனதும் நீயும் என் நிழலில் இருக்க மாட்ட... அதற்கு நான் ஏற்பாடு பண்ணிடுவேன் " என்றவள் மறந்தும் கூட மீண்டும கவிமதுராவின் புறம் திரும்பவே இல்லை ..

" அடுத்தது  என்ன ?"  விடை அறியா இந்த கேள்வியில் சுழழும்   பூமிபோல  கவிமதுராவின் உள்ளமும் நிலைகொள்ளாது சுழன்றது ..

தே ரயிலில் எந்தவொரு கவலையும் இன்றி தன்னை ஈன்றவளிடம் போனில் உல்லாசமாய் பேசிக் கொண்டு வந்தான் கிரிதரன்.

" சான்ஸ் ஏ  இல்ல மீரு  ... ட்ரைன்  ல ஜன்னல் கம்பிலே தலை சாய்ச்சு ட்ரேவல் பண்ற பீல் இருக்கே .. என்னமோ அஞ்சு ஆறு தேவதைகள் ஒரே நேரம் காதலை சொல்லுற மாதிரி இருக்கு " என்று சிலாகித்து ரசித்து சொன்னான் தன் தாய் மீராவதியிடம்..  அவனது தாயாரின் போன் ஸ்பிகரில்  இருந்தது என்பதற்கு சாட்சியை உடனே அங்கிருந்து குரல் கொடுத்தார் அவனது தந்தை கண்ணபிரான் ..

" டேய் என் பொண்டாட்டியை நான் மட்டும்தான் மீருன்னு கூப்பிடுவேன் ...படவா " செல்லமாய் மிரட்டினார் அவர் .. தந்தைக்கும் மகனுக்கு இது அடிக்கடி நடக்கும் வழக்கு தானே ? அதனால் சற்றும் அசராமல் பதில் தந்தான் கிரி ..

" ஹெலோ மிஸ்டர் கண்ணன் .. உங்களுக்கு வைப் ஆகுறதுக்கு முன்னாடியே என் அம்மா என்னை மனசுல சுமந்து இருக்காங்க "

" டேய் டேய் ... மனசுலயும் சரி நிஜத்துலயும் சரி என் மீருவுக்கு நான்தான் முதல் " என்று சொல்லி பெருமிதத்தோடு சிரித்தார்  கண்ணபிரான் .. கிரிதரன் அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராக, மீராவதிதான்

" சரி சரி போதும் ரெண்டு பேரும்  என்னை ஏலம் போட்டது .. மிச்சத்தை நேருல வெச்சுகோங்க " என்று சொல்லி கொஞ்சம் இடைவெளி விட்டு  " டேய் கிரி, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு பா  இல்லன்னா  களைப்பா இருக்கும்டா " என்றார் கரிசனமாய் ..

" டோன்ட் வர்ரி  ஸ்வீட்  மாம் ... நான் எவ்ளோ களைப்பா இருந்தாலும் உங்க வருங்கால மருமகள் என்னை பார்த்தான்னா அப்படியே மயங்கி தொபக்கடீர்னு விழுற அளவுக்கு நம்மகிட்ட பெர்சனாலிட்டி இருக்கு " என்றான் இருக்கும் காலரை தூக்கி விட்டு கொண்டே   ( நானும் எவ்ளோ நாள்தான் " இல்லதா காலரை தூக்கி விட்டான் " ன்னு அரைச்ச மாவையே அரைக்கிறது  )  .. மகனின் குறும்பு பேச்சுக்கு ஈடு  கொடுத்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு  போனை வைத்த மீராவதியின் முகத்தில் சோகமே குடிகொண்டு இருந்தது ..

" என்னாச்சு மீரு  "

" எல்லாம் உங்க புள்ளைய பத்திதான் "

" இப்போ அவன் என்ன தப்பு பண்ணிட்டான் "

" அவன் தப்பு பண்ணான்னு நான் சொன்னேனா ?"

" சரி ..ஆனா பொதுவா அவன் ஏதாச்சும் தப்பு  பண்ணாதானே நீ அவனை என் பிள்ளைன்னு சொல்லுவே ....அதான் .... சரி சரி இதுக்கு ஏன் இப்போ உன் முட்டை கண்ணை உருட்டுரே செல்லம் ?" கணவனின் அசால்டான பேச்சில் என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் பெருமூச்சு  விட்டார் மீரா ..

" உங்க கிட்ட சொன்னேன் பாருங்க .. அவன் பண்ணுற விஷயம் எல்லாம் உங்களை மாதிரி இருக்கு அதான் உங்க பிள்ளைன்னு சொல்றேங்க "

" சரி இப்போ என் புள்ள என்ன பண்ணிட்டான் "

" நான் சந்தோசமா  இருக்கணும்னு எப்படி நீங்க உங்க சோகத்தை மறைச்சுகிட்டு சிரிப்பிங்களோ  அதே மாதிரிதான் அவனும் பண்ணுறான் ..அவன் மனசார சிரிச்சு ரொம்ப நாள் ஆகுதுன்னு எனக்கு தெரியாதா ? "

மனைவியின் பேச்சில் உள்ள உண்மை கண்ணனையும் மௌனமாக்கியது ..

" சரி விடு கண்ணம்மா எல்லாம் சரி ஆகிடும் .. நீ ஏன் இதையே நினைச்சிட்டு இருக்க ?"

" ஆமா நான் பத்து புள்ளைய பெத்து வெச்சுருக்கேன் பாருங்க .. ஒன்னு போனா இன்னொன்னு இருக்குன்னு சொல்றதுக்கு " என்று நொடித்துக் கொண்டார் மீரா .. இதற்கு மேலும் இந்த பேச்சை தொடர்ந்தாள் மீரா அழுதுவிடுவார் என்று நன்கு அறிந்த கண்ணன், வேண்டுமென்றே

" இப்போ உனக்கு கிரி கல்யாணம்  பண்ணிக்காம இருக்குறது குறையா ? இல்லை பத்து பிள்ளை இல்லன்னு குறையா ? நான் வேணும்னா மிச்சம் ஒன்பது பிள்ளைக்கு ஏதும் ஹெல்ப் பண்ணவா ?" என்று மந்தகாசப் புன்னகையுடன் மனைவி தோளில்  கைப் போட்டார் ..

" கல்யாண வயசுல பையனை வெச்சுகிட்டு இந்த மனுஷம் பண்ணுற அலும்பலை பாரு " என்று மீண்டும் கணவனை எரிக்கும் பார்வை பார்த்து வைத்தார் மீராவதி ..

" அம்மா தாயே அமராவதி ..ச்ச்ச்சு மீராவதி .. நோ கோவம் ப்ளீஸ் " என்று பயந்ததை போல கண்ணன் சொல்ல ஒரு புன்னகையுடன் ஆள் காட்டி விரல் நீட்டி அவரை ஸ்டைலாய் பார்வையாலே மிரட்டிவிட்டு சென்றார் மீரா ..

ங்கு ஜன்னல் வழியாக வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் கிரிதரன்... பிரம்மனிடம் என்ன லஞ்சம் தந்தானோ, ஆண்களுக்கே உரிய அத்தனை லட்சணங்களையும் தோற்றத்திலும் குணத்திலும் பொருந்தியவனாக திகழ்ந்தான் அவன் ..அதுவும் புன்னகைக்கும்போது அவன் கன்னத்தில் விழும் குழி அழகில் விழாத நெஞ்சங்களே இல்லை எனலாம் .. எத்தனை இடர்கள் வந்தாலும் சிரிக்க மறக்காதவன், எதையும் இயல்பாக எடுத்து கொள்பவன் .. கண்ணபிரான் - மீராவதி தம்பதியின் அன்பு புதல்வன். 

" ஹே குட்டிமா .. ரொம்ப நாளைக்கு பிறகு இன்னைக்கு என்னம்மோ நீ என் பக்கத்துலையே இருக்குற  மாதிரி இருக்கு டீ ...நான் எப்பவும் உன்னைத்தான் நினைச்சுகிட்டு இருக்கேன் ..  ஹ்ம்ம்ம்ம் நான் எல்லாம் உன் மைண்ட் ல இருக்கேனா இல்லையா பேபி ?" என்று முணுமுணுத்துக் கொண்டே தன் சீட்டில் இருந்து எழுந்தான் .. இதழோரம் புன்னகையை தவழ விட்டு  கண்ணில் பட்டவர்களிடம் தலையசுத்துவிட்டு சென்றவனின் புன்னகை அவர்களை  இருவரை பார்த்ததும் அப்படியே உறைந்து  நின்றது .  வானதி-கவிமதுரா இருவரையும் ஒரு கணம் வெறித்து பார்த்தவன் ஏதும் பேசாமல் நகர்ந்து விட்டான் .. அவனது பார்வையை எதிர்கொண்ட அவள் மனதிலும் ஏதேதோ  எண்ணங்கள் விழித்தெழ, கவிமடுராவை எழுப்பினாள்  வானதி ..

" கவி.. கவிதா "

" ம்ம்ம்ம் ???"

" ஜீவாவை பிடியேன் "

" ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ? ஏதும் பிரச்சனையா ??"

" இல்ல நான் முகம் கழுவிட்டு வரணும் அதான் " என்று சமாளித்தவள், கிரிதரன் சென்ற திசை பக்கம் எழுந்து போனாள் ..... ( அடுத்து என்ன நடந்தது ?? அதை அடுத்த எபிசொட் ல சொல்றேன்  )

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.