(Reading time: 23 - 45 minutes)

02. என் உயிர்சக்தி! - நீலா

ம்மை சுற்றி சிக்கலான முடிச்சுகள் இட்டு சோதிக்கும் இறைவன் அவற்றின் வழியே நமக்கு செய்தி சொல்கிறான், பாடம் கற்பிக்கிறான், தண்டனை விதிக்கிறான், துணை நிற்கிறான், இறைமையை உணர்த்துகிறான்!

அந்த சோதனை முடிவில் வேகு சிலர் அவற்றை லாவகமாய் அவிழ்த்து அந்த முடிச்சுகளின் சுதந்திர முணைகளை கண்டறிந்து அவற்றை விலக்கி சீரமைத்து தானும் வெளி வருகிறார்கள். பலர் அதில் சிக்கி தானும் ஒரு சிக்கலாகி காணமல் போய்விடுவார்கள்! இந்த இரு வகையினரை தாண்டி அவன் தானே இட்டவன் அவனே வந்து இதை அவிழ்க்கட்டும் என்று சிலரும் உண்டு! எப்படி சிலரால் முடிகிறது!  பலரால் முடியவில்லை?? இன்னும் சிலர் முயற்சி கூட செய்யவில்லை?? எப்படி இவர்கள் வேறுபடுகிறார்கள்?? எது இவர்களை தனித்து கட்டுகிறது?? நம்பிக்கை தான் காரணமோ!!’

'நானும் இப்போது சிக்கலில் இருக்கிறேன். எப்படி இதை அவிழ்க்கப்போகிறேன்?? தெரியவில்லையே?? என்ன செய்வது?? இறைவா எனக்கு வழிகாட்டு!' - மனதில் கேள்வி எழுப்பி தவத்துக்கொண்டிருந்தாள் பூங்குழலீ!

En Uyirsakthi

'நடக்கும் சம்பவங்கள் எல்லாம் எதிர்மறையாவே இருக்கிறது. எங்கே இருந்து தொடங்குவது..?' சிந்தனைகளில் இருந்த குழலீயை நடப்புக்கு கொண்டுவர மதி, கவி என அனைவரின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. வெற்றி காரை ஓட்ட அவனருகில் அமர்ந்திருந்தாள் குழலீ. பின்னே மதி, கவி, யாழினி அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் அனைவரும் டேவிடின் காரில் வந்துக்கொண்டிருந்தனர். என்ன செய்வது என்று யோசித்த யாழ் எதோ நினைவு வர சட்டென்று குழலீயின் கைப்பையை தேடி எடுத்து அவளது ஐபாட்டை காரில் இணைத்து தேடி எடுத்து ஒரு பாட்டை ஒலிக்கச்செய்தாள்.

'ஒர் நதி...ஒர் பௌர்னமிஒர் ஓடம் என்னிடம் உண்டு...' என்று பாடல் ஒலிக்கத் துவங்கியது. சற்று உரக்க வைத்தாள்

எதிலிருந்தோ மீண்டு வருவது போல சட்டென்று இவ்வுலகிற்கு வந்தாள் குழலீ!

ஆங்ங்ங்... திரு திரு என விழித்துக்கொண்டிருந்தாள் குழலீ. வெற்றி வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு திரும்பி குழலீயை பார்த்தான். பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது. மற்ற மூவரின் பார்வையும் இவள் மீது தான் இருந்தது.

'என்ன???' - குழலீ சிரித்தவாறு.

'ஒன்னுமில்லையே!!!' என்று எல்லோரும் சிரித்தனர்

'இந்த பாட்டு உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா ??' என்று சிரித்தபடியே கேட்டாள் கவி.

ஏன் கேட்கற கவி??

இல்ல இந்த பாட்டை போட்ட உடனே நினைவு திரும்புதே அதனால...- கவி

‘ஆமாம் பிடிக்கும்! அதனால என்ன இப்போ? நித்தியஶ்ரீயோட மாடியுளேசன் எவ்வளவு சூப்பரா இருக்கும் கேட்டு பாரு...இதுக்கு கொஞ்சமா இசை ஞானம் வேண்டும்....

நம்பிட்டோம்!!! என்றனர் மூவரும்.

சிரித்துக்கொண்டே...'வெற்றி காரை எடுக்கறியா இல்லையா??' என்றாள்.

'இப்படி சிரிச்சுக்குடே இரு குழலீ... இதுதான் உனக்கு அழகா இருக்கு' என்றனர் யாழினியும் வெற்றியும் ஒருசேர அவர்களை பார்த்து சிரித்தாள் குழலீ!

தற்குள் குழலீயின் கைபேசி ஒலித்தது. டிஸ்ப்ளேயரை பார்த்த குழலீக்கோ என்னடா இது என்று முகத்தை சுழித்தாள்.

நான்கு ரிங்க் போனவுடன் கைபேசியை எடுத்தாள். வண்டியை எடு என்ற செய்கையுடன் 'ஆங்... சொல்லுங்க...'

யார் அந்த பக்கம்.. என்ன பேசறாங்க கேட்கலாம் வாங்க.

'ஆங்... சொல்லுங்க'

குழலி நான் தான் மா ரெண்டாவது பெரியப்பா வேலன் பேசறேன்...

ஆங் சொல்லுங்க...

என்ன எல்லாம் எப்படி போய்டுறுக்கு...

ஆங்ங் போகுது!

சென்னைக்கு எப்போ போற??

நாளைக்கு கிளம்பறேன்!

சரி.. அப்ப ரெண்டு நாள் கஷிச்சு அந்த ஈரோட்டுகாரங்கல அதான் என் பால்ய நண்பன் சேகரன் குடும்பத்தை வீட்டுக்கு வர சொல்லறன்...

எதுக்கு???

பொன்னு பாக்க...

யாரை??

என்ன கேள்வி இது பூங்குழலீ?? உன்னதான்..

நான் இன்னும் ஓகே சொல்லலியே.. எனக்கு யோசிக்க டைம் வேனும்.

இன்னும் என்ன யோசிக்கனும்?? பையன் இங்க யுஸ ல தான் இருக்கார். உங்க அண்ணன் நல்லா விசாரிச்சிட்டான். நல்ல குடும்பம் மா அவனது. சேகரன் எனக்கு சின்ன வயசு ப்ரண்டு...

அம்மா இன்னும் விசாரிக்கல..

உங்க அம்மா என்னத்த விசாரிச்சா?? பையன் வீட்டல எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. அப்புறம் என்ன உனக்கு?? கழுத்த நீட்ட சொன்னா செய்யனும்! உன் விருப்பம் எல்லாம் பார்க்க முடியாது! இன்னும் என்ன வேணுமா உனக்கு. வயசு என்ன ஆச்சு. இதுக்கு மேல கல்யாணம் பண்ணா குழந்தை பொறக்கறது கஷ்டம்னு தெரியாதா… எங்களுக்கும் வயசாகுதுல. கல்யாணம் பண்ணா எங்களுக்கும் ஒரு கடமை முடியும்ல. உங்க மாமி ராஜீவனுக்கும் பொன்னு பாக்க ஆரம்பிச்சிட்டா... உன்னை விட கிட்டத்தட்ட இரண்டு வயசு சின்னவன் ... என்ன?

அதற்குள் வண்டி ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு பாட்டின் ஒலியும் குறைக்கப்பட்டது. குழலீ திரும்பி வெற்றியை முறைத்தாள்.

இப்ப என்ன பண்ணணும் நான்?? என்றாள் சற்று எரிச்சலுடன்.

அந்த பையனை கல்யாணம் பண்ணிக்கோ...எங்களுக்கும் ஒரு கடமை முடியும்ல. உன் அப்பனுக்குதான் ஒரு பொறுப்பும் இல்லாம போய் சேர்ந்துட்டான். எங்களுக்கு பொறுப்பு இருக்குல...

கோபம் தலை உச்சிக்கு எறியது குழலீக்கு. அதை கட்டுப்படுத்தி 'நான் அந்த பையன்கிட்ட ...' என்று தொடங்கினாள்.

அதற்குள் 'அதேல்லாம் அப்புறமா பாக்கலாம். இங்க உன் அண்ணன் நல்லா விசாரிச்சிட்டான்...பையன் வீட்டல இருந்து வருவாங்க. எல்லாத்தையும் பேசி முடிவு பண்ண சொல்லு உன் அம்மாவ. நாள் குறிச்சிட்டு சொல்லு நாங்க உடனே கிளம்பி வரோம். ஏனா கல்யாணம் உங்க அம்மாவல முன்ன நின்னு நடத்த முடியாது பாரு. புருசன் பொஞ்சாதியா செய்ய வேண்டியது. நாங்க தானே செய்யனும். இப்ப போய் படிக்கிறேனு சொல்லாத. நீ படிச்சதெல்லாம் போதும். உன் தம்பி எக்ஸாம் முடியட்டும்னு சொல்லறான்...'

இன்னும் எதோ பேசிக்கொண்டிருந்தார்! குறைத்திருந்த பாட்டின் ஒலியை முழுவதுமாக கூட்டினாள். போனை அந்த ஸ்பீகர் அருகில் இரண்டு நொடி வைத்து எடுத்து 'நான் கொஞ்சம் வெளியில இருக்கேன். வீட்டுக்கு போயிட்டு கூப்பிடறேன்' பதிலுக்கு காத்திருக்காமல் இணைப்பை துண்டித்து விட்டாள்.

'அத கால் வந்த உடனே செய்திருக்கனும்' என்ற யாழினியை திரும்பி முறைத்தாள்.  அதே பாடலை மறுபடியும் ஒலிக்க செய்து கூடவே பாடிக்கொண்டு வந்தாள்.

இசை தான் அருமருந்து. எல்லா துன்பத்திலிருந்து மீட்டெடுக்கக்கூடியது. பாடலுடன் ஐக்கியமானாள். கற்றுக்கொண்ட கலை காப்பாற்றியது!

'நான் தேடும் ஷ்ரிங்காரன் அவன் ஏனோ இங்கில்லை... ‘என்று நிறுத்தி கண்களை இருக்க மூடினாள். வண்டியின் வேகம் கூடியது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.