(Reading time: 23 - 45 minutes)

 

ரண்டுமே தான். மனசுல இன்னோருத்திய வைத்து எப்படி என்கூட வாழ முடியும் அவனாலே.. என்னால் முடியாது அண்ணா.. என்கிட்ட உதவினு கேட்டுட்டு அவங்க வீட்டுல இருக்கவங்க கிட்ட கல்யாணத்திற்கு சம்மதம்னு சொல்லிருக்கார் அண்ணா என்ன செய்யலாம் இந்த ஆனந்தனை??

யாரை மா?? ஆனந்தனையா?? எந்த ஆனந்தன்??

குழலீ நிமிர்ந்து டேவிடை நேராக பார்த்தாள். இவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது...என்ன இப்படி கேட்கிறார்!! பின்பு சுற்றி இருந்த மற்றவர்களையும் பார்த்தாள்.

சொல்லுமா...

வேண்டாமனா விடுங்க...

கனத்த மௌனம் நிலவியது... அதை உடைக்குமாறு...

'நான் சரினு சொல்லலை குழலீ.. எங்க வீட்டுல ஏதோ செய்திரிக்காங்க... ஐ ம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி குழலீ'

குரல் வந்த திசையை எல்லோரும் பார்த்து திகைத்தனர்.

பேசியது வேற யாருமில்லை நம்ம வெற்றிதான். வெற்றி என்னும் வெற்றி ஆனந்தன்!

தயவுசெய்து பேசாதே வெற்றி நான் வேற எதாவது சொல்ல போறேன்.. யாழ் என்னை மன்னிச்சிடு.. இதுக்கும் மேல நான் பேசலைனா தப்பாகிடும்..

ஒரு விதமான ஏளனத்துடன் 'ம்ம்ம்...நீ எதுவும் சொல்லாம தான் உங்க வீட்டுல இருந்து இன்னும் இரண்டு நாளில் நிச்சயம் பண்ண வராங்களா வெற்றி?'

'என்னது..?'- டீனா

'கல்யாணத்தை இன்னும் இருபது நாளில் வைத்துக்களாம் னு சொல்லிட்டாங்கலாம். நீ எதும் சொல்லாம தான் இந்த அளவுக்கு முடிவு பண்ணுவாங்களா? ஏன் இவ்வளவு அவசரம்னு கேட்டதுக்கு பையன் தான் இந்த லீவ்லியே முடிச்சிடலாமனுடான்... நீ எதுவுமே பண்ணவில்ல ம்ம்..???'

'சரி...தாலியாவது நீ வந்து கட்டுவியா இல்லை அதுக்கும் ஆள் செட் செய்தாச்சா?? இதுக்கு எதுக்கு ஊருக்கு போகனும்.. நாளைக்கே கோவிலில் முடிச்சிடலாம்.. என்ன சரியா?  அநாவசியமா காசு செலவு!'

சட்டேன அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்தாள் யாழினி!

இவ்வளவு நேரம் இருந்த ஏளனம், நக்கல் எல்லாம் வடிந்து சீரியசாக பேச தொடங்கினாள் குழலீ.. மைன்ட் வாய்சில் 'என்டீ இவ்வளவு காதல் இருந்தும் அது இல்லாது போல் உன்னை நீயே ஏமாத்தற!! வெற்றியை போல் ஒருத்தனை விட்டுடு அந்த திமிரு பிடித்தவன் கிட்ட.. ச்ச்.. ஆனா மகளே சிக்கனடீ! உன்னைய சிக்கன்குனியா வந்தவளை போல வெற்றிகுனியா வரவழைத்து காட்றேன்...பார்!'

'படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டியா வெற்றி..நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுங்க என்ன வேணாலும் பண்ணுங்க.. இதில என்னைய வேற இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கற.. இப்படி இவளை உசுப்பிவிடுறதரதுக்கு பதிலா இவகிட்ட நேரா போய் பேசிடுனு சொன்னேன். உன்னவளுடைய கவனம் உன் மேலிருந்து வேற ஆண்மகன் பக்கம் திரும்பதுனா தவறு அந்த பெண் மீதிருக்கோ இல்லையோ நிச்சியமாய் உன் மீதிருக்கு! உன் அன்பால் நீ கட்டி வெச்சிருக்கனும்.. செய்தியா?? அதைவிட்டுட்டு... என் கண்ணம்மாவுக்கு என்னை பிடிக்கறதில்லை என் நண்பனை தான் பிடிச்சிருக்கு னு புலம்ப வேண்டியது. உதவி செய்னு கெஞ்ச வேண்டியது! இதில கவிதை வேற... உனக்கு உதவி செய்ய போய் எனக்கு தலைவலி தான் மிச்சம்!

குழலீமா...

இருங்கனா... நான் பேசிடறேன்.

எங்க வீட்டுல வரன் தேடல்ல அப்பப்ப ஒரு போட்டோவை காட்டி பிடிச்சிருக்கானு கேட்பாங்க. ஒரு போட்டோவுக்கும் நான் விருப்பம் தெரிவிக்கலை.. இதுக்காக சண்டைக்கூட போட்டிருக்கேன் அண்ணா. ஒவ்வொரு போட்டோவும் பிடிச்சிருக்குனு சொல்லறதுக்கு பெண் மனசு என்ன மலர்விட்டு மலர்தாவும் வண்டா.. அவளுக்குனு மனசே இல்லையா.. எல்லாரையும் பிடிச்சிருக்குனு சொல்லவே அசிங்கமா இல்ல.. 'உங்களுக்கு பிடித்தா சரி' இதுதான் என்னுடைய பதிலா இருந்தது.. கல்யாணத்திற்காக ஒரு பையனை பிடிச்சிருக்குனு சொல்றதும் மத்தபடி சைட் அடிக்கும் போது சொல்றதும் வித்யாசம் இருக்கு..னா...'

இவ்வளவு களேபரத்திலியும் கடைசியா ஒரு வரன் எல்லாம் செட்டாகி வந்து... பொன்னு அழகாயில்லைனு சொல்லி.. ச்சச...

'இவ்வளவு வலியிலும் இங்க வந்த கொஞ்ச நாளில் மறுபடியும் ஆரம்பிச்சாங்க.. எனக்கும் மனசு இருக்குனு யாரும் புரிஞ்சிக்க மாட்டாறாங்க அண்ணா...

சரி இந்த பையனை பத்தி விசாரிச்சிட்டு பதில் சொல்லாம்னு பார்த்தேன். ஏனா இன்னும் ஒரு ரிஜகஷனை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.. கடைசியில் அந்த ஆனந்தன் வெற்றிதானு தெரிந்தது. அதற்குள் நாங்க நல்ல பிரண்ட்ஸ் ஆயிட்டோம். வெற்றியும் யாழினியும் லவ் பண்றது, அவங்க ரிங்க் மாத்திகிட்டது... எல்லாம் தெரியும்! ஆனால் எனக்கு தெரியும் என்பது யாழினிக்கு தெரியாது... சரி என்று லவ்ர்ஸ் கு சப்போர்டா நின்னேன்.

அதற்குள்... வெற்றியோட பிரண்ட் வந்து எல்லாத்தையும் குழப்பிட்டார். வரிசையாக நடந்த சம்பவங்களால் யாழினி சற்று தடுமாறிவிட்டாள். வெற்றியை விட அந்த பிரண்ட் தான் தனக்கு ஏற்ற இணை என்று நினைத்து அதை வெற்றியிடமும் சொல்லிட்டா. அதற்குள் வெற்றிகாக என்னை பார்த்திருக்காங்கனு யாழினிக்கு தெரிந்சிடுச்சி.. எல்லாம் சேர்த்து சூழ்நிலையை சொதப்ப இவனும் இவளை உசுப்பிவிடுறதரதுக்காக என்கிட்ட உதவி கேட்டான். நான் முடியாதுனு சொன்னாலும் பிரண்டுகாகனு அக்சப்ட் பண்ணேன். அதுதான் என் தவறு! இன்னைக்கு இவ லவரை இன்ட்றோ பண்ணறேனு பிரபுவை இன்ட்றோ பண்ணரா... வெற்றியோ காதல் வலினு நிக்கறான்.. எனக்கு வீட்டுல இருந்து இவனை கல்யாணம் செய்ய சொல்லி ப்ரஷர்.. '

என்னை என்ன பண்ண சொல்லற வெற்றி??? உன்னை கல்யாணம் பண்றதுல எனக்கு துளிகூட விருப்பம் கிடையாது. நீங்க இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பு இன்னும் ஒரு இமி அளவுகூட குறையல... திருமணத்திற்கு முன் எத்தனை காதல், வாழ்க்கைனு இருந்தாலும் பரவாயில்லை ஆனால் மணத்திற்கு பின் மனைவியிடம் காதல் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் வாழ்க்கை நரகமாகிடும். நான் காதல்னு சொல்றது காமம் மட்டும் இல்லாது நேசம், அன்பு, புரிதல், அக்ஸப்டன்ஸ். இது எல்லாம் கலந்த காதல்... இது நம் இருவருக்குமிடையில் சாத்தியமில்லை. என் வீட்டுல நான் சமாளிச்சுக்கிறேன். உன் வீட்டை சமாளித்து சரி செய்ய வேண்டியது உன் பொறுப்பு வெற்றி. யாழ் அவ மனசுல இருக்கிறது பத்தி பிரபு கிட்ட பேசினாலானு தெரியல. அவ மனசு தெளிவா இல்லை. தடுமாற்றத்தில்ல இருக்கு.. அதை சீர் செய்ய வேண்டியது நீயும் பிரபுவும் தான். ஒரு பிரண்டா நான் முழு சப்போர்ட் தரறேன். மற்றபடி இது நீ, யாழினி, பிரபு முவரும் பேசி முடிவு எடுக்கனும்... '

'நான் என்ன பேசனும்' என்றவாறு குழலீயின் அருகே வந்தமர்ந்தான் பிரபு. யாழினி என் பிரண்டோட லவர்.. அதனால் அவளும் எனக்கு நல்ல தோழி தான்.. வேறும் தோழி மட்டும் தான்... என்றைக்குமே!

'தலையெழுத்து... இந்த 'பிகே' எப்ப இங்க வந்தான். அப்ப நாம் பேசியதேல்லாம் கேட்டானா??? அச்சோ!' பதற்றத்தைடன் 'நீங்க எப்போ வந்தீங்க மிஸ்டர் பிரபு??'- குழலீ

பிரபு உனக்கு இவமேல் இன்ட்ரஸ்ட் இல்லையென பொய் மட்டும் சொல்லாதே.. – வெற்றி

யாழினி வாயை திறந்து பேசு ப்ளீஸ் – டேவிட்

யாழினி பிரபுவின் நேர்கண் பார்வை பார்த்து அமர்ந்திருந்தாள். யாழினி உன்னோட மனசுல என்ன இருந்தாலும் அதை வெளிப்படையா பேசு.. – டேவிட்

மிஸ்டர் பிரபு அப்ப உங்ககிட்ட யாழினி இதுக்கு முன்னமே அவ மனசை சொல்லிட்டாளா??? - குழலீ மற்றும் டேவிட்.

இன்னைக்கு தான் சொன்னேன். அவர் பதில் ஏதும் சொல்லலை. அதுக்குள்ள சாப்பிட வந்துட்டோம். - யாழினி.

டேவிட் 'சரி அப்ப பிரபு, யாழினி, வெற்றி மூன்று பேரும் பேசுங்க... ஆனா ஒன்னு மட்டும் தெளிவா நியாபகத்தில வெச்சி பேசுங்க.. என்ன பேசினாலும் என் இரண்டு தங்கைங்க மனசும் வாழ்க்கையும் பாதிக்கக்கூடாது.. வெற்றி முதல்ல உங்க வீட்டுல பேசி இத நிறுத்த சொல்லு...அப்புறம்...'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.