(Reading time: 23 - 45 minutes)

 

வர்கள் வருவதற்குள் வீடு வந்து சேர்ந்தனர் மற்றவர்கள். டீனா பேசிக்கொண்டே ஜுஸ் கலந்து கொடுத்தாள். டேவிட் அதை வாங்கியவாறு 'எனக்கு ஆரஞ்சு சாறு வேண்டாம் ஆரஞ்சு பழம் தான் வேண்டும்' என்று கூறினார் அவளை பார்த்தவாறு.

டேவிட் கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா??? – டீனா

'பச்ச் பின்னே.. ஊருல இருக்கவன் எல்லாரையும் இங்க உக்கார வெச்சிருக்க என்ன பண்றது.. சும்மா தானே இருக்கனும் ம்ம்ம்...'

சரி சரி... டேவிட் அண்ணா ரொம்ப வழியாதிங்க போதும்!!

அசடு வழிந்தவாறே டீனா செல்ல வழிவிட்டான் டேவிட்!

அப்போது வந்து நின்ற காரிலிருந்து அனைவரையும் தாண்டி வேகமாக உள்ளே நுழைந்தாள் குழலீ! தன் கைப்பையை வேகமாக சோப்பாவின் மீது வீசியபடி டீனாவிடம் 'உன் போன் எங்கே' என்றாள்.

டீனா விழித்துக்கொண்டிருந்தாள். குழலீயின் மனநிலையை புரிந்தவனாக டேவிட் சென்று டீனாவின் போனை கொடுத்தான்.

அதற்குள் சுதாரித்த டீனா 'யாருக்கு??' என்றாள்.

கட்டுப்பாட்டில் இல்லை குழலீயின் கோபம் என்பதை அவள் குரலே காட்டியது. 'அருள்மொழிக்கு' என்றாள்.

'ஜிசஸ்... இந்த நேரத்திலேயா?? மணி ஈவ்னிங் நாலு டீ. அங்க இன்னும் விடிஞ்சிருக்காது. ரொம்ப அவசரம்னா இன்னும் கொஞ்ச நேரம் கஷிச்சு பேசலாம்.

இல்ல இப்போவே பேசனும்..

அவ பேசட்டும் விடு என்று கண்ணசைத்தான் டேவிட். 'எது பேசறதுனாலும் இங்கியே நின்னு பேசு குழலீமா' என்றான்.

கண் கரித்தது.. பெரிய மூச்சுகளை எடுத்து தன்னை சமனப்படுத்த முயன்றவாறு மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட கைபேசியை எடுத்து காதில் வைத்தாள். அவள் டேவிடின் பார்வையை விட்டு விலகவில்லை. அவள் கண்ணிலிருந்து எவ்வளவு அடக்க முயன்றும் நிற்காமல் ஒரு துளி சிதறியது.. கோபத்தை எல்லாம் இழுத்துபிடித்து பேச தொடங்கினாள்.

ஹலோ.. டீனாகா.. என்ன இந்த நேரத்தில போன்...

நான் குழலீ பேசறேன்!

என்ன கா ஆச்சு.. திடிர்னு கால் பண்ண...

நான் இந்தியா வரல டா... நாளைக்குனு இல்ல என்னைக்குமே வரல...

ஆங்ங் லுசாகா நீ.. இந்த நேரத்துல இப்படி உளர்ர...

நான் நிஜமா தான் சொல்லறேன் ...

அக்கா???

ஆமாம்..

பெரியப்பா போன் பண்ணாறா???

என்னால கோபத்தை கட்டுபடுத்த முடியல்ல அருள்.. இந்த அம்மாவுக்காக தான் இவ்வளோ கண்ட்ரொல் பண்ணறேன் டா..

அக்கா...

இல்ல இதுக்கு மேல என்னால முடியாது அருள்... நானும் ஒரு உயிருள்ள ஒரு மனுஷிதான்... திரும்பவும் கால் பண்ணுவார். எதாவது பேசினா நான் சும்மா இருக்க மாட்டேன். சொல்லிட்டேன். நான் வரல...

விட்டுடு கா. நீ தானே சொல்லுவ இப்படிபட்டவங்களுக்கு தண்டனை அவங்கள இக்னோர் பண்றது தானு...

இல்ல அருள் நான் இந்த முறை நிச்சயமா கேட்கதான் போறேன்... அப்பாவ பத்தி தப்பா பேசறார் டா..

என்ன பேசினார் கா??

பேசியவற்றை ஒன்று விடாமல் கூறினாள்.

அந்த ஈரோட்டு மாப்பிள்ளையிடம் என்ன குறை இருக்கு உனக்கு?

எனக்கு அவனை பிடிக்கல அவ்வளவு தான்... நான் அவர் பேசினது பத்தி சொல்லறேன் நீ நேத்து பேசினதையே திருப்பி சொல்லற. அவர்கிட்ட நீ பேசினியா??

அக்கா.. அந்த பையன் வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சிருக்கு எங்களுக்கும் பிடிச்சிருக்கு இப்போ நீ தான் பதில் சொல்லனும்.

ஏன் டா நான் சொல்றத புரிஞ்சிக்க மாட்றே.. நான் சொன்னா தப்பாகாதுனு தெரியும்ல... ப்ளீஸ்.. இத்தோட இத விட்டுறு. நான் வரலை.

அப்போ எக்ஸாம்???

....

'கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுகா' என்று இணைப்பை துண்டித்தான்.

குழலீக்கு ஏதேதோ சிந்தனைகள். ஒரு பெண் அவள் விருப்பத்திற்கு வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாதா? என்ன வாழ்க்கை இது.. சுய விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாதா...

'பூங்குழலீ... குழலீ... குழலீமா...'- டேவிட்

நிமிர்ந்து பார்த்தாள்.

'ஷ்ஷ்.... முதல்ல இப்படி உட்கார்.' என்றவாறு மனைவியிடம் தண்ணீர் கொண்டுவர சொன்னான். டீனாவை அருகே அமர்த்திவிட்டு கைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.

ஐந்து நிமிடம் கழித்து திரும்பியவன் ஷ்ஷ் அழக்கூடாது... குழலீமா.. என் பாரதி அழலாமா... எவ்வளவு தைரியசாலி நீ! இவ்வளவு நாள் எல்லாத்தையும் நல்லா கையாண்டு இந்த சின்ன விசயத்துக்கு போய்... சீசீ..' இப்போ என்ன பிரச்சனை னு சொல்லு... அவர் பேசியதா.... இல்லை அந்த பையனா...

'டேவிட்..' – டீனா

'என்ன எல்லாரும் இருக்காங்கனு பார்க்கறியா??? இருக்கட்டும். நம்ம பசங்க தானே. எங்க எழுந்து போறிங்க.. இப்படியே உட்காருங்க... நம்ம பிரண்டுக்கு ஒரு துன்பம்னா பார்த்துட்டு சும்மா இருப்பீங்களா? என்ன வெற்றி??? யாழினி?? சொல்லுங்க..'

அதற்குள் மற்றவர்கள் அனைவரும் ஒவ்வொரு வேலையாக நகர்ந்துவிட்டனர். அதனால் அங்கே டேவிட், டீனா, வெற்றி, யாழினி, குழலீ மட்டுமே இருந்தனர்.

'என்னை நிஜமாகவே உன் அண்ணனா பார்த்தினா சொல்லு குழலீமா' என்றவாறு அவள் தலையை வருடினான். இது வரை வெறும் ஒரு சோட்டு கண்ணீர்தான் வந்திருந்தது. ஆனால் இந்த அன்பு எல்லாவற்றையும் தகர்த்துவிடும் போல் இருந்தது. அதற்குள் மறுபடியும் குழலீயின் கைபேசி ஒலித்தது. அதை பார்த்தவள் அழைப்பை ஏற்காமல் அப்படியே வைத்துவிட்டாள். மேலும் இரண்டு முறை அழைப்பு வந்தது.

'அவர்தான்... என் அப்பாவோட அண்ணா... தான்'

ஐந்து நிமிடம் மௌனமாய் கடந்தது. மறுபடியும் கால்!

கால் அடன்ட் பண்ணு குழலீமா...

இல்ல அண்ணா.. வேண்டாம்!

எடுமா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.