(Reading time: 13 - 25 minutes)

( வைட் வைட் வைட் ... புவி உங்களுக்கு என்னாச்சு ? ஏற்கனவே ஒரு வாரமா எந்த எபிசொட் உம்  இல்லை .. இதுல போன எபிசொட் சில ட்விட்ஸ் வெச்சிட்டு இப்போ யாரையோ  பத்தி கதை சொல்றிங்க ?? அப்படின்னு நீங்க எல்லாரும் கேட்குறது புரியுது ..... ஹா ஹா ஹா .. சரி வாங்க இதற்கு மேலயும் உங்களை டென்ஷன் படுத்தாமல்  அடுத்த கட்டத்துக்கு உங்களை கூட்டிட்டு போறேன் வாங்க )

" ன்னை கூட்டிட்டு போக முடியுமா முடியாதா ? " என்று கோபமாய் பேசிக் கொண்டிருந்தவளை ரகசியமாய் ரசித்துக் கொண்டிருந்தான் சுபாஷ் .. அவளது கோபத்தை சீண்டி பார்க்க விரும்பி,

" கோவில் தானே டா ? சந்தோஷ் வீட்டுல சும்மாதானே இருக்கான் அவனை கூட்டிட்டு போ " என்றான் ..

" சந்தோஷ் நல்ல பிள்ளை .. கூப்பிட்டதுமே சரி அண்ணின்னு ஒத்துக்கிட்டான் .. ஆனா நீங்களும் வரணும்னு நான் ஆசை படுறது தப்பா ? ஏதோ காலையில் இருந்து மனசே சரி இல்ல சுபாஷ் .. நாம ரெண்டு பேரும்  ஒண்ணா ஒரு அர்ச்சனை பண்ணிட்டா எல்லாம் சரி ஆகிடும்னு மனசு சொல்லுது "

" அடடே செல்லம் ... எது நடக்கணுமோ அது கண்டிப்பா நடக்கும் .. ஒரு அர்ச்சனை இதை மாத்திட போகுதா சொல்லு ?" என்று வேண்டுமென்றே கேள்வியெழுப்ப'

" இப்போ என்ன நீங்க வர மாட்டிங்க அவ்ளோதானே ..சரி இருக்கட்டும் அதுக்காக என் நம்பிக்கையை பொய்யாக்க  முயற்சி பண்ணாதிங்க " என்று கோபமாய் மொழிந்துவிட்டு காரில் அமர்ந்து கொண்டாள்  சைந்தவி ..

" என்ன சந்தோஷ் நீங்க பின்னாடி உட்காருரிங்க? டிரைவர் அண்ணா இன்னைக்கு லீவ் ... காரை யாரு ஓட்டுவா  ?" என்று அவள் கேட்கும்போதே புன்னகையுடன் டிரைவர் சீட்டில் அமர்ந்த சுபாஷ்

" சந்து எனக்கும் டிரைவிங் தெரியும்னு உன் அண்ணிகிட்ட சொல்லுடா " என்றான் .. கணவன் மீது கொண்டிருந்த கோபம் மொத்தமும் பறக்க, ஒரு காதல் பார்வையை வீசினாள்  சைந்தவி .. சந்தோஷும் அதே நேரம் காரில் பாடலை உயிர்பிக்க, மூவருமே அமைதியாய் அந்த தருணத்தை ரசித்துக் கொண்டே கோவிலுக்கு சென்றனர் ..

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்

இசைந்து இசைத்தது புது சுரம்தான்

சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்

கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2)

மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

அதே துர்க்கை அம்மன் கோவில் வாசலில் நின்று போனில் அருளுக்கு வேப்பிலை அடித்து கொண்டு இருந்தாள்  சாஹித்யா

" எரும மாடு .. உருப்படியா ஒரு காரியம் பண்ணுறியா நீ ?"

" ஹே தூங்கிட்டேன் டீ "

" மன்னாங்கட்டி .. இன்னைக்கு கோவில் போகணும்னு சொன்னேன் தானே டா ?"

" ஆமா சொன்ன, ஆனா தூக்கம் வந்து எல்லாம்  கெடுத்துருச்சு  "

" ஆமா டா .. நீ அப்பாவி ... தூக்கம் தான் உன்னை கெடுத்தது .. "

" இப்போ என்ன ??? இன்னும் அஞ்சு நிமிஷத்தில் கெளம்பி வரேன் டீ "

" ஒன்னும் வேணாம் ... உன் அஞ்சு நிமிஷ கதை எல்லாம் என்கிட்ட சொல்லாதே " என்று நொடித்து கொண்டு போனை வைத்தவள், நிமிர்ந்து பார்த்தது சைந்தவியை தான் ..

" வாவ் .. எவ்ளோ அழகா இருக்காங்க இவங்க .. இயற்கை அழகுன்னா இதுதான் போல " என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் .. அதே நேரம் ஏதோ ஒரு மூலையில்

" டேய் பாஸ்கர் .. அந்த பச்சை கலர் புடவை கட்டி இருக்குற பொண்ணுதான் டா " என்று அவனுக்கு அடையாளம் காட்டினான்  இன்னொருவன் .. சைந்தவி தனது கை குட்டையை  கீழே போட்டுவிட, அதை எடுத்து கொடுத்துவிட்டு அவளிடம் சிநேகமான பேச்சை ஆரம்பித்தாள்  சத்யா .. சுபாஷும் , சந்தோஷும் காரை பார்க் செய்துவிட்டு இறங்கி நடந்துவர , மின்னல் வேகத்தில் கையில் கத்தியுடன் பெண்கள் இருவரையும் நோக்கி சென்றான் அந்த  பாஸ்கர் ..

" ஆஅ " என்ற அலறல் சத்தத்தில் பதறியடித்து ஓடிவந்தனர் ஆண்கள் இருவரும் .. அதற்குள் கூட்டம் அவர்களை சூழ்ந்து கொண்டது ..

( மிச்சத்தை அடுத்த எபிசொட் சொல்றேன்...தவம் தொடரட்டும் )

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.