(Reading time: 12 - 23 minutes)

03. காற்றே என் வாசல் வந்தாய்!!! - கீர்த்தனா.ஆர்

நிலவு தூங்கும் நேரம்

நினைவு தூங்கிடாது

இரவு தூங்கினாலும்

Katre en vasal vanthai

உறவு தூங்கிடாது

இது ஒரு தொடர் கதை

தினம் தினம் வளர் பிறை

அடுத்த நாள் காலை கல்லூரியில் கவியும், ரிதுவும் பேசி கொண்டு இருந்தனர்.

"ஹே சூப்பர்டி!!கலக்கிட போ ரிது.எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா. இன்னிக்கு ஈவ்னிங்  எனக்கு ட்ரீட் தர. ஓகே. சரி இதை  பத்தி உங்க வீட்ல பேசினியா. என்ன சொன்னாங்கடா"

"இல்லை கவி.வீட்ல இதை பத்தி இன்னிக்கு ஈவ்னிங் தான் பேசணும்.அத பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன்.தனியா வீட்ல சொல்ல முடியாது.இந்த மதன் அண்ணாக்கு கால் பண்ணா அவன் வேற கால் அட்டெண்ட் பண்ணலை.லஞ்ச் டைம்ல மறுபடியும் ட்ரை பண்ணி பாக்கணும். முதல்ல அவங்ககிட்ட சொல்லிட்டு தான் வீட்ல பேச சொல்லணும்"

"சரிடா நீ பேசிட்டு சொல்லு.இப்போ வா போகலாம்.கிளாஸ்கு டைம் ஆய்டுச்சு."

ரிதுவிற்கு எப்போதடா மதியம் வரும் தன் அண்ணனை மீண்டும் தொடர்பு கொள்ளலாம் என்று  காத்து கொண்டு இருந்தாள். கவியும் அவளிடம் இரண்டு முறை சொல்லி  விட்டுவிட்டாள். மதிய இடைவேளை விட்டதும் உடனே மதனை அழைத்தாள்.

"ஹே சொல்லு கத்தரிக்கா!! என்ன இந்த டைம்ல கால் பண்ணிருக்க. காலைல வேற ரெண்டு டைம் கால் பண்ணிருக்க. என்ன முக்கியமான விஷயம் "

"டேய்!! உன்கிட்ட எவ்ளோ  தடவ  சொல்லிருக்கேன். என்னோட நேம் அப்படி கொலை பண்ணாதன்னு.

"ஹே இப்போ இதை சொல்லதான் எனக்கு கால் பண்ணியா. அப்போ நான் கட் பண்றேன் "

"ஹையோ இல்ல இல்ல!! உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.இன்னிக்கு ஈவ்நிங் எங்க காலேஜ் பக்கத்துல இருக்கற காபி ஷாப்க்கு 5 மணிக்கு வர முடியுமா"

" என்ன கத்திரிக்கா!! யாரையாவது லவ் பண்றயா. அதுக்கு சிபாரிசு பண்ண தான் எனக்கு கால் பண்ணியா"

"சே!!உனக்கு நல்லதாவே யோசிக்க தோணாதா.அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. உன்னால வர முடியுமா முடியாதா" என்று பல்லை 

கடித்த படி கேட்டாள்.

" ஹேய் ஹோல்டான்!! இப்போ என்ன. ஈவ்நிங் 5 மணிக்கு அங்க வரணும்.அவ்ளோதானா அதுக்கு எதுக்கு இப்படி டென்ஷன் ஆகற.நான் கரெக்டா வந்தறேன்.நீ பாத்து வா.ஹப்பா எவ்ளோ கோவம் வருது உனக்கு. இதுக்கு என்னோட பொண்டாட்டியே பரவால "

" ஒஹ் அப்படியா!! இரு இப்போவே நீ இன்னொரு பொண்ணு கூட வெளிய லஞ்ச்க்கு போனன்னு அண்ணி கிட்ட போட்டு தரேன்"

"அம்மா தாயே!!நீ செஞ்சாலும் செய்வ. இப்போ போன் வெச்சிட்டு போய் படிக்கற வேலையை பாரு.ஈவ்நிங் பார்க்கலாம். பாய்"

அதன் பின்பு  மாலை கல்லூரி முடிந்ததும் ரிது மதனுக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

அவன் வந்ததும் " எப்படி இருக்கற ரிது. பார்த்தே ஒரு வாரம் ஆச்சு.சொல்லு என்ன சாப்டற".

"காபி போதும்டா.வேற எதுவும் எனக்கு வேண்டாம்."

"சொல்லு ரிதுமா. அப்படி என்ன விஷயம் இந்த சின்ன மண்டைக்குள்ள"

"அது வந்து நான் மேல எம்.பி.ஏ படிக்கலாம்ன்னு இருக்கேன்"

"சரி படி.அதுல என்ன பண்றதுன்னு தெரியலையா."

"ஹையோ அண்ணா. நான் சொல்லி முடிக்கற வரைக்கும் எதுவும் குறுக்க பேசாம அமைதியா கேளு" 

" ஓகேடா!! ஜோக்ஸ் அபார்ட். சொல்லு "

"ஹ்ம்ம். நான் எம்.பி.ஏ கனடா யூனிவெர்சிட்டில படிக்கணும் ஆசை படறேன் அண்ணா. என்னோட கோர்ஸ் அங்க படிச்சா நல்ல கத்துக்கலாம்.

அதுக்கு நான் ஏற்கனவே அப்ளை பண்ணிட்டேன்.நேத்து நைட் தான் மெயில் வந்துச்சு.எனக்கு அங்க இடம் கிடைச்சிருக்குடா.இத பத்தி இன்னும் வீட்ல சொல்லலை.எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். ப்ளீஸ் எதாவது பண்ணேன்  " 

" ஹேய் ரிது சூப்பர்டா. ரொம்ப சந்தோசமா இருக்கு" என்று தன் மகிழ்ச்சியை தெரிவித்தான்.

இதனை பின்னால் நின்று கேட்டு கொண்டு இருந்த உருவம் அதிர்ச்சியில் சிலையாகி போனது. 

அதற்குள் காபி வந்து விடவே இருவரும் அமைதியாக பருகினர். 

"ரிது ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனா சித்தி கண்டிப்பா இதுக்கு சரின்னு சொல்லுவாங்கலான்னு  தெரியலடா. அதுவும் ரெண்டு வருஷம் தனியா உன்னை அவ்ளோ தூரம் அனுப்ப மாட்டாங்கடா"

"அண்ணா ப்ளீஸ் .அது தான் இப்போ பிரச்சனையே.ரெண்டே வருஷம்.படிப்பு முடிஞ்சதும் இங்க வந்து நான் அப்பாவோட கடைல நிறைய மாற்றம் பண்ணனும். இந்த மாதிரி நிறைய ஆசை இருக்கு"

"ஹ்ம்ம்.சரி நான் இத பத்தி அவங்க கிட்ட பேசிட்டு உனக்கு சொல்றேன்.எனக்கு கொஞ்சம் டைம் கொடு."

"சரி ஆனா சீக்கரமா பேசிட்டு சொல்லு" என்று அரை மனதாக ஒத்து கொண்டாள்.

 "சரிடா பாத்து போ.எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு.நீ வீட்டுக்கு போய்ட்டு எனக்கு மெசேஜ் பண்ணு".அதன் பின் பணத்தை கொடுத்து விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

அவர்கள் சென்றதும் தான் அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்தான் ஆதி. அவள் கூறிய விதத்தை வைத்தே அவளது ஆசையை புரிந்து கொண்டான்.ஆனாலும் மேலும் இரண்டு வருடம் அதிகமாக தோன்றவே

அடுத்து தான் செய்ய வேண்டிய வேலையை மனதினுள் குறித்து கொண்டான்.

அங்கிருந்து தன் வீட்டிற்கு சென்றவன் அதை பற்றியே யோசித்து கொண்டு இருந்தான் தன் பெற்றோரிடம் எப்படி ஆரம்பிப்பது என்று.

"என்னடா இன்னிக்கு சீக்கரமாவே வந்துட்ட. அதிசயமா இருக்கு. உடம்பு எதாவது சரி இல்லையா"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல மாம்ஸ்.வெளிய கொஞ்சம் வேலை இருந்துச்சு.அது தான் சீக்கரமாவே வந்துட்டேன். மது வந்துட்டாள. இன்னிக்கு அவள பிக்கப் பண்ண முடில. அப்பா வந்துட்டாரா"

"ஹ்ம்ம் அவ அப்போவே வந்துட்டா .தல வலிக்குதுன்னு அவ ரூம்ல ரெஸ்ட் எடுக்கறா. "

"ஓகே மாம்ஸ் நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரேன்" 

அதன் பின் சொக்கநாதன் வந்ததும் இரவு உணவை முடித்து கொண்டு ஆதி தான் தந்தையிடம் "அப்பா நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”.

அனைவரும் அமர்ந்ததும் ஆதி சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறினான்.

"என்ன ஆதி எதுவா இருந்தாலும் சொல்லு .

அவரின் வார்த்தையில் நிதானத்திற்கு  வந்தவன் " நான் ஒரு பொண்ணை ரொம்ப ரொம்ப  லவ்  பண்றேன். எனக்காக நீங்க ரெண்டு பேரும்தான் அவங்க  வீட்ல போய் பொண்ணு கேட்கணும். ப்ளீஸ் எனக்காக. எனக்கு அவளை ரொம்ப புடிச்சிருக்குபா"    என்று கூறியதும் சொக்கநாதனும், மீனஷியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

" உன்னோட கல்யாண விஷயம் பத்தி பேச தான் நானும் உங்க அம்மாவும் நெனச்சோம். கரெக்ட்டா நீயே வந்து பேசிட்ட. இப்போ  சொன்னதுலாம் எங்கனால ஒதுக்க முடியாது. இன்னிக்கு காலைல தான் உங்க அம்மா ஒரு பொண்ணோட போட்டோ கொண்டு வந்து கொடுத்தா. எனக்கும் அவளுக்கும் அந்த பொண்ணை  ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால இந்த மாதிரி எதாவது ஒளராம இந்த போட்டோவ பார்த்துட்டு உனக்கு பொண்ண

பிடிச்சிருக்கான்னு சொல்லு.நாங்க மேற்கொண்டு ஆக வேண்டியது பார்க்கறோம். இத பத்தி இனிமேல் எதுவும்  பேசாத ஆதி. நாளைக்கு காலைல உன்னோட முடிவ சொல்லு. மறக்காம போட்டோவ  பாரு ஆதி" என்று கூறி அங்கிருந்து சென்றனர்.    

அவர்கள் பேசியதும் தான் காதில் விழுந்த வார்த்தைகள் சரிதானா என்று குழம்பி போனான்.தான் இந்த விஷயத்தை கூறியதும் உடனடியாக ஏற்று கொள்ளா விட்டாலும் மறுப்பு எதுவும் சொல்ல மாட்டார்கள் என்றே நினைத்தான்.

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அந்த போட்டோவையே சிறிது நேரம் வெறித்து பார்த்து கொண்டு இருந்தான்.

சிறிது நேரம் யோசித்த ஆதி அந்த போட்டோவை எடுத்து பார்த்தான்.பார்த்தவனின் விழிகள் ஆச்சிரியத்தில் விரிந்தன.அதில் மது அழகாக சிரித்து கொண்டு இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.