(Reading time: 7 - 14 minutes)

04. காற்றே என் வாசல் வந்தாய்!!! - கீர்த்தனா.ஆர்

காலையில் தன் முகத்தின் மேல் விழுந்த வெளிச்சத்தில் மெதுவாக கண்களை திறந்த ஆதி திரும்பி மணியை பார்த்தான்.

"ஹையோ மணி எட்டு ஆச்சே. இன்னிக்குன்னு பார்த்து இவ்ளோ நேரம் தூங்கிடனே!!" என்று தன்னை தானே நொந்து கொண்டவன் வேகமாக குளியல் அறைக்குள் புகுந்தான்.இரவு வெகு நேரம் துக்கம் வராமல் புரண்டவன் அதிகாலையில் தான் கண் அசந்தான்.

"இன்னிக்கு என்ன ஆனாலும் சரி கண்டிப்பா நான் நினைச்சது தான் நடக்கணும்"  தன் மனதில் நினைத்தவாறே தயாராகி தன் அறையில் இருந்து கீழிறங்கி வந்தான்.

Katre en vasal vanthai

ஏற்கனவே சொக்கநாதணும் மீனஷியும் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். இவனை பார்த்ததும்

"வா ஆதி!! குட் மார்னிங் இன்னிக்கு ரொம்ப நேரம் தூங்கிட்டயா!! காலைல ஜாகிங் கூட போகல"- சொக்கநாதன்.

"குட் மார்னிங் அப்பா!! மாம்ஸ் குட் மார்னிங்!!. நைட் ரொம்ப நேரம் தூக்கமே வரல. அது தான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் போல" புன்னகையுடன் இருவரையும் ஆராய்ந்த படியே கூறினான்.

"சரி வாடா வந்து முதல்ல சாப்பிடு. மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்."

"ஓகே மாம்ஸ் !! ஆமா மது எங்க இன்னும் வரலையா. நேத்து நைட் வேற தலை வலின்னு சொல்லிட்டு சீக்கரமே துங்க போய்டா.ரொம்ப முடியலையா"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆதி இப்போ வந்துடுவா.நீ முதல்ல ஒழுங்கா தட்டை பார்த்து சாப்பிடு"

"குட் மார்னிங்டா அதியமான்!! என்ன காலைலயே நல்லா கொட்டிக்க வந்துட்ட போல. எனக்கு எதாவது மிச்சம் மீதி வெச்சிருக்கியா இல்ல நீயே எல்லாத்தையும் ஸ்வாகா பண்ணிட்டியா!!"

"ஹா ஹா!! மது தினமும் நீ பண்றது எல்லாம் சொல்ற!! குட் குட் .நான் ஒன்னும் உன்னை மாதிரி எல்லாம் கிடையாது. நீ தான்  பாரபட்சமே இல்லாம பத்து பூரி உள்ள தள்ளுவ!!" 

"போடா அதியமான் !! நான் ஒன்னும் அவ்ளோ சாப்பட மாட்டேன். நீ தான் நல்லா கொட்டிகுவ"

"ஏய் இப்போ ரெண்டு பேரும் ஒழுங்கா சாப்புடுங்க. அது என்ன கொட்டிக்கோ,குட்டிகோன்னு பேச்சு. யார் யார்க்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ சாப்புடுங்க" மீனாஷி அதட்டவும்

"அதை உங்க அருமை பையன் கிட்ட சொல்லுங்க. அவன் தான் என்னை ரொம்ப கிண்டல் பண்ணிட்டு இருக்கான் "

"டேய் மது நீ தான்டா முதல்ல ஆரம்பிச்ச இன்னைக்கு. அவன் உன்னை பத்தி கவலை பட்டுட்டு இருந்தான் இவ்ளோ நேரமா." சொக்கநாதன்

கூறவும், "ஓகே ஓகே ஒத்துகறேன் உங்க பையன் கொஞ்சமே கொஞ்சம் நல்லா பையன் தான்னு" என்று கூறி சமாளித்தாள். 

அதன் பின் உணவை முடித்த மது "ஹே அதியமான் சீக்கரமா வாடா!! இன்னிக்கு மோர்னிங் எனக்கு ரிவ்யூ இருக்கு."

ஆதியோ அதனை காதில் வாங்காமல் தன் பெற்றோரை ஆராயும் பார்வை பார்த்தான். அவனை கவனித்த மீனாஷி "ஆதி கொஞ்சம் வெயிட் பண்ணு. உன்கிட்ட பேசணும்"

"ஹ்ம்ம் சரி மாம்ஸ். வாங்க" என்று யோசனையோடு சோபாவில் அமர்ந்தான்.

"ஹே என்ன ஆதி இங்க உக்காந்துட்ட !! லேட் ஆய்டுச்சுடா!!" மது கூறவும்

"டேய் மது !! ஒரு அஞ்சு நிமிஷம் இருடா. நானே உன்னை கொண்டு போய் சீக்கரமா காலேஜ்ல விடறேன்.வா நீயும் வந்து பக்கத்துல உட்காரு"  

அதற்குள் மீனாஷியும் சொக்க நாதானும் வந்து எதிர் சோபாவில் அமர்ந்தனர். அவர்களின் முகத்தை பார்த்த மது  சூழ்நிலையை  புரிந்து கொண்டு அமைதியாக ஆதியின் அருகில் அமர்ந்தாள்.

மீனாஷி தான் முதலில் பேச ஆரம்பித்தார், "டேய் ஆதி உனக்கே நல்ல தெரியும். நாங்க இவ்ளோ நாளா உன்னை கல்யாணம் பண்ண சொல்லி கம்பெல் பண்ணோமா?? நீ ஒரு பொண்ணை லவ் பண்றது எங்களுக்கு முன்னாடியே தெரியும் .ஆனா நீயா வந்து எங்க கிட்ட சொல்லணும் தான் நாங்க அமைதியா இருந்தோம். இன்னும் ஒரு வாரம் உனக்கு டைம் தரோம். அதுக்குள்ள நம்ம ரிது வீட்ல போய் கையோட நிச்சயம் பண்ணனும். நீ பேசறயா. இல்லேன்னா நாங்களே அவங்க வீட்ல நேரா போய் பேசட்டுமா. யோசிச்சு சொல்லுடா. ரிது தராளமா கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டும். ஆனா சீக்கரமே உங்க கல்யாணம் நடக்கணும்."

அவர்கள் சொன்னதை கேட்ட மதுவோ தன் அதிர்ச்சியை வெளிபடுத்தாமல் "என்னடா நடக்குது இங்க" என்று அவனின் கத்தில் முனுமுனுத்தாள்.

"சும்மா இரு மது . உனக்கு கார்ல போகும் போது விவரமா சொல்றேன்"

சிறிது நேரம் அமைதியாக இருந்த ஆதி "சரி மா!! உங்க செல்ல மருமகளை சீக்கரமே இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம். இப்போ எனக்கு நேரம் ஆச்சு. நைட் பேசிக்கலாம். பாய் மாம்ஸ். அப்பா நான் கெளம்பறேன்."

"மது வாடா !! லேட் ஆச்சுன்னு சொன்னல."

"ஹ்ம்ம் அம்மா நானும் கிளம்பறேன். பாய் அப்பா"

காரில் அமர்ந்த மது தன் கேள்விகளால் ஆதியை துளைத்து எடுத்தாள்.

"டேய் அதியமான் என்னடா நடக்குது இங்க. நேத்து நைட் தலை வலின்னு சொல்லிட்டு போய் படுத்தா, காலைல அதுக்குள்ள வீட்ல ரகசிய ஆலோசனை. அதுவும் இந்த மது இல்லாம. ச்சே டூ பேட்"

"ஆமா அம்மாக்கு எப்படி நீ ரிதுவ லவ் பண்றது தெரியும்??. அதுவும் அடுத்த வாரம் நிச்சயம் பண்ற அளவுக்கு. அப்போ அம்மா,அப்பாக்கு ரிதுவ பிடிச்சிருக்கா." 

"ஹே மது கொஞ்சம் மூச்சு விட்டு கேள்வி கேளு . உன்னோட எல்லா கேள்விக்கும் நான் கண்டிப்பா பதில் சொல்றேன்" என்றவன் நேற்று இரவு நடந்ததை கூறினான்.

"அடப்பாவி அதுக்குள்ள இவ்ளோ விஷயம் நடந்துச்சா?? இப்போ நீ என்ன பண்ண போற? ரிது வீட்ல பேச போறயா??" 

"ஹ்ம்ம்!! இன்னிக்கு எனக்கு முக்கியமான வேலை இருக்கு,, சோ எல்லாத்தையும் முடிச்சுட்டு உன்கிட்ட வந்து சொல்றேன்!! கவலைபடாதே!! எல்லாம் நல்லபடியா  நடக்கும்"

 "ஹ்ம்ம் சரி!! என்று தலையை ஆட்டினாள். அவளை காலேஜில் இறக்கி விட்டவன், ஈவ்னிங்   பாக்கலாம் மது!! இதை பத்தி யோசிக்காம ஒழுங்கா கிளாஸ்ஹ  கவனி!!"

 அதன் பின் அலுவலகத்துக்கு விரைந்தவன், ரமேஷை  அழைத்தான்.

 "ரமேஷ்!! இன்னிக்கு மார்னிங் இருக்கற மீட்டிங்கை மதியத்துக்கு மாத்திடு.!! எனக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு.. ஆபீஸ்ஹ பாத்துக்கோ!! மதியம் வரேன்!! 

 தன் கைபேசியை எடுத்தவன் அந்த நபரின் எண்களை அழுத்தினான்  "ஹலோ!! நான் ஆதி பேசறேன்!! என்னை ஞாபகம் இருக்குங்களா!! மறுமுனையில் பேசிய விதத்தை கேட்டவன் இதழ்களில் ரகசிய முறுவல் தோன்ற "நீங்க எப்போ ப்ரீயா   இருப்பிங்க!! உங்க கிட்ட நான் முக்கியமான விஷயம் பேசணும்"

 "ஓ!! சரிங்க அப்போ நான் இன்னும் அரைமணி நேரத்துல வரேன்" என்று இணைப்பை துண்டித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.