(Reading time: 7 - 14 minutes)

ன்று  காலையில் எழுந்ததில் இருந்தே ரிதுவின் மனம் தவிக்க ஆரம்பித்தது. மதன் அண்ணா பேசி இருப்பாரா!! அப்பா நேத்து சீக்கிரமே வீட்டுல இருந்தாரே!! அப்போ இன்னும் பேசி இருக்க மாட்டாங்கன்னு தான் நினைக்கறேன்!!  

ஆனா காலைல இருந்தே ரெண்டு பேரும் இவ்ளோ அமைதியா என்னையே வாட்ச் பண்ற மாதிரி இருக்கே!!

"சே சே!! இல்லை ரிது அவங்க நார்மலா தான் இருக்காங்க!! நீ தான் தேவை இல்லாம குழப்பிக்கற!!".

 சிறிது நேரம் யோசித்தவள் அந்த முடிவை தைரியமாக எடுத்தாள். தன் தந்தையிடம் சென்று பேசுவது என்று!!!

 அதற்கு தயாராக மனதினுள் பேச வேண்டியதை குறித்து கொண்டு தயங்கியபடியே தந்தையிடம் சென்றாள்.

 மகளின் தயக்கத்தை பார்த்தவர்,"என்னடா ரிது, எதாவது சொல்லனுமா!! இல்லை கேக்கணுமா" என்று கேட்டார்.

 மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு, தந்தையின் அருகில் அமர்தவள் "அம்மா எங்கப்பா!! அவங்க கிட்டயும் சொல்லணும்" என்று கூறினாள்.. அதற்கு அவர் 'அவ உள்ள ஏதோ முக்கியமான வேலையா இருக்கடா!! நீ சொல்லுடா!!"

 தன் தாயை திரும்பி பார்த்தவள், சமையல் அறையில் முக்கியமான வேளையில் இருந்ததை கவனித்து விட்டு, "அப்பா நான் மாஸ்டர் டிகிரி MBA பண்ண போறது உங்களுக்கு தெரியும் தான. அதுக்கு தான் கனடால ஒரு யுனிவர்சிட்டிக்கு  அப்ளை பண்ணேன். எனக்கு அங்க சீட்    கிடைச்சிருக்கு.. உங்கள கேட்காம  அப்ளை பண்ணது என்னோட தப்பு தான். கிடைக்கும்ன்னு நினைக்கவே இல்லை அப்பா.. சாரி டாட்!! 2 years தான்பா.அப்புறம் நான் இங்கயே திரும்பி வந்துருவேன்.ப்ளீஸ் பா! அம்மா கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும் பா ப்ளீஸ்!!" என்று நேரடியாகவே கூறினாள்.

 அவள் கூறியதை கேட்ட படியே வந்த மரகதம் கணவரின் அருகில் அமர்ந்து கொண்டே "என்னது ரெண்டு வருஷமா? அதெல்லாம் முடியாது!! உனக்கு இந்த படிப்பு முடிந்ததும் கல்யாணம் தான்!!

 " அம்மா என்ன மா !! கல்யாணமா !! அதுக்கு இப்போ என்னமா அவசரம்." தான் அதிர்ச்சியை காட்டினாள்.

" ஆமா உனக்கு இப்போ பண்ணலைன்ன 26 வயசுல தான் திரும்ப குருபலன் கிடைக்கும்ன்னு சொன்னங்க "

"அம்மா இந்த காலத்துல போய் ஜோசியம் அது இதுன்னு சொல்றிங்க. நான் படிக்கணும் அம்மா . ப்ளீஸ். அப்பா நீங்களாவது அம்மா கிட்ட சொல்லுங்க அப்பா"

மரகதம் என்று ஆரம்பித்த கணவரை தான் கண்களால் அடக்கியவர்

"இங்க பாரு ரிது . நாங்க உனக்கு கண்டிப்பா நல்லது தான் நினைப்போம். எங்க மேல உனக்கு நம்பிக்கை இருக்க இல்லையா "

"அம்மா!! நா  நான் படிக்கணும் மா. என்னோட ரொம்ப நாள் ஆசை இது. அதுக்கு தான் நான் டெக்ஸ்டைல் எடுத்து படிச்சேன். இந்த கோர்ஸ் படிச்சா நான் நம்ம கடையை இன்னும் நல்ல நடத்துவேன்."

"ரிது !! நீ அம்மாவை உண்மையா மதிக்கறதா இருந்தா இந்த பேச்சை இதோட விடு . நான் சொன்னதை பத்தி யோசிச்சி பாரு" என்று அங்கிருந்து

நகர்ந்தார்.

ரிது கனடா போவாளா?? இல்லன்னா அம்மா பேச்சை கேட்பாளா? ஆதி யார் கிட்ட பேசினான்.  இன்னும் ஒரு வாரத்துல இவங்க மீட் பண்ணுவாங்களா? இந்த மதன் யாரு??  மதன்க்கும் மதுவுக்கும் சம்பந்தம் இருக்கா ?? பார்க்கலாம்.

காற்று வீசும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:848}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.