இதுதான் என்று இல்லாமல் எல்லாவற்றிற்கும் குறை சொல்லி கொண்டே இருப்பார்கள். மீரா இந்த வீடு வந்த புதிதில் அயர்ந்துதான் போனால். அது என்ன இப்டி ஒரு வெறுப்பு நம் மேல் என்று அவள் அப்டி நினைத்த மறு நொடி மீரா மல்லிப்பூ வெச்சுண்டு போ அவர்( நாராயணன்) வாங்கி வந்தது இருக்கு பாரு. அடர்தியாதான் இருக்கு அழகா இருக்கும் வெச்சுக்கோ .கைல சில்லறை இருக்கா, பஸ்ல அடிச்சு புடிச்சு ஏறாம பொறுமையா போ என்று சொல்லிவிட்டு இவள் பதிலுக்கு கூட காத்திராமல் கண்ணை மூடி சுலோகம் சொல்ல ஆரம்பிப்பார்., மீரா தன்னை தானே திட்டி கொள்வாள் ஐயோ எவ்ளோ பாசமா இருக்காங்க இவங்கள போய் தப்பா நினைச்சோமே, மாலை வரும்போது அவருக்கு பிடித்த கனகாம்பரம் வாங்கி வரணும்னு reminder செட் செஞ்சுப்பா மாலை வாங்கீண்டும் வருவா. ஆனா ஒரு வார்த்தை கூட பேசாமல் அதை fridgil வெய், உனக்கும் அவனுக்கும் தோசை ரெடி, சாப்டுட்டு பாத்திரம் ப்ப்லேட்ஸ் எல்லாம்அப்டியே வெய் நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டு சீரியல் பார்க்க ஆரம்பிப்பார். மீராவுக்கு என்ன செய்யணும் என்பது சிறிது நேரத்திற்கு புரியாது. அதன் பின் UK வந்தால் உலகமே மறக்கும் மீராவிற்கு. அவன் வேலை முடிந்து வந்த பொது கூட சிறிதும் வாடாத முகமும் பளிசென்ற புன்னகையும் பார்த்து சொக்கித்தான் போவாள்.
Intro போதும் இல்லையா. சரி வாங்க ஏன் yday நைட் மீரா கோவமா படுத்த்ஹான்ன்னு தெரிஞ்சுக்கலாம்.அப்டியே கதையில் மூழ்கலாம்.
7th ஆகஸ்ட் 2006
மீரா UK விற்கு அவர்கள் கல்யாணம் ஆனதிலிருந்து வரும் 8ஆம் தேதிகளில் ஏதேனும் சிறு அன்பளிப்பு கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள்.7ஆம் தேதி இரவு சரியாக 12மனி அடித்ததும் இந்த அன்பளிப்பை கொடுத்து uk வின் அந்த கண்களும் சேர்ந்து சிரிக்கும் சிரிப்பை பார்க்க மீரா எதையும் செய்ய தயாராக இருந்தாள். வழக்கம் போல் அலுவலகம் முடித்து வந்து meera ரெப்ரெஷ் செய்து அடுக்களையில் இருந்த மாமியாரிடம் அம்மா என்ன டிபன் மா, நான் என்ன ஹெல்ப் பண்ணனும் சொல்லுங்க.ஹெல்ப் என்ன ஹெல்ப் தோசை ரெடி பண்ண ஹெல்ப் எதுக்கு. நாளைக்கு பீன்ஸ் காரட் பொரியல் அதுக்கு காய் நறுக்கி வெய்,ரொம்ப பெரிசு பெரிசா நறுக்காத அப்புறம் வேகாது. அவர் இன்னும் எதுவும் சொல்லும் முன்பு சமையல் அறையில் இருந்து நகர்ந்தால் மீரா.
நெறைய கோவம் வந்தது. சே என்ன இருந்தாலும் அம்மா அம்மாதான். ஆபீசெலேர்ந்து வந்த உடனே மதியம் சாப்ட்டியா சரியாய் இருந்துதா, அம்மா மூச்சு விட மறந்து விட்டலோன்னு தோணும், அப்பொழுது பதில் சொல்ல பொறுமை இல்லை,இப்போ பேசவே ஆள் இல்லை.,மீரா சோர்வாக உணர்ந்தால்.ஏன் என் புருஷனக்கும் எனக்கு நான் தோசை ரெடி செஞ்ச என்ன,இவங்கலேதான் எல்லாம் பண்ணனுமா. யோசிக்கும்போதே சுந்தரி அம்மாள் குரல் கேட்டது மீரா 6 தோசை எடுத்து வெச்சுருக்கேன், போதும்னு நினைக்கறேன்.பார்த்துகலாம் வேணும்னா என்ன?? என்ன பதில் சொல்லவேண்டும் இதற்கு இல்லம்மா போதாது இன்னும் 2 அல்லது 3 தோசை தேவைபடலாம் நான் பார்த்துக்கறேன் என்றா?? சொன்னால் சுந்தரி அம்மாள் ரெடியாக பதில் சொல்வார். என்ன நீ பார்த்துக்க போற , வேணும்னா ரெண்டு பேரும் சாப்ட்டு சொல்லுங்க நான் வார்த்து தரேன். நீ இப்போவே ரெடி செஞ்சு காய விட வேண்டாம்.
இவங்க இப்போவே ரெடி செஞ்சது காயாதாம் நாங்க பண்ண காஞ்சுடுமாம். எப்பா சாமி என்ன கொடுமை இது, ( இது எல்லாம் மீரா mindla நினைச்சுதுதான்).சின்னதாக சிரித்து விட்டு சரி மா என்றாள்.
மீரா காய் நறுக்கி முடித்து fridge இல் வெஇய்த்து விட்டு மாடியில் சிறிது காலாற நடப்போம் என்று சென்றாள்.மனது கண்ணனை சந்தித்த தருணங்களை அசை போட ஸ்டார்ட் செய்தது.
கண்ணன் மீரா சந்தித்தது ஒரு அழகான மாலை வேலையில் அப்டின்னு நீங்க நினைச்ச சாரி அப்டி எல்லாம் இல்லை.
1st august 2004
மீரா அலுவல் விஷயமாக நிறைய travel கம்பனிகளிடம் பேச வேண்டி வரும். அப்டி ஒரு நாள் ஒரு travel நிறுவனரிடம் பேசுவதற்காக டயல் செய்தவள் 69 என்பதிற்கு பதிலாக 96 என்ற என்னை அழைத்து சரளமாக பேச ஆரம்பித்தாள். என்ன சார் நீங்க reporting டைம் என்ன?? நீங்க ஏன் இந்த டிரைவர் அனுப்பினீங்க ??இப்போ அவர் கால் குட எடுக்கல.வேற ஏதும் நம்பர் இருக்கா ??அவர contact பண்ண. சீக்ரம் கொடுங்க சார் மேனேஜர் வெயிட் பண்றார். அந்த முனையில் UK பெரிதும் குழம்பி இருந்தான். அப்பொழுதுதான் அவன் தன்னுடைய car ரிப்பேர் என்று தனியார் கால் டாக்ஸி app இல் கார் புக் செய்து இருந்தான்.
டிரைவர்தான் முகவரி தெரியாமல் அழைப்பார் என்று போன் பிக் செய்தால் எவ்ளோ ஒருத்தி யார் என்ன வென்று தெரியமால் குற்றம் சாட்டி கத்துகிறாள். ஹலோ மேடம் என்ன நம்பர் வேணும் உங்களுக்கு, யாரு போன் pick செஞ்சது எதுவுமே தெரியாம பேசிட்டே போறீங்களே. நீங்க தப்பான நம்பர் கூப்டுருகீங்க, அதுனால உங்கள கொஞ்சம் நிதானாபடுத்திகிட்டு பேசுங்க, இப்போ கொஞ்சம் வாட்டர் குடிங்க. stay calm.ok take கேர் என்று அவள் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தான்.
மீராவிற்கு சிறிது நேரம் எதுவுமே புரியவில்லை.இப்டி ஒரு மிருதுவான ஆனால் ஆண்மையான குரலை இது வரை அவள் கேட்டது இல்லை.,அதே போல் தவறாக அழைத்து பேசியும் அவன் சிறிதும் பதட்டபடாமல் அவளை அமைதி படுத்தியது மிக மிக புதிய அனுபவம்.
அவன் சொன்னது போல் சிறிது தண்ணி குடித்து தன்னை நிதான படுத்தி கொண்டாள்.பின்னர் தன் வழக்கமான பணிகளை செய்ய தொடங்கினாள்.அவ்வபோது அந்த குரல் காதிலும் மனதிலும் வந்து போனது. அவனை அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஆவலை சிரமப்பட்டு அடக்கி கொண்டாள். குறுஞ்செய்தி அனுப்புவோமா என்று தோன்றியது மீராவிற்கு, அனுப்பித்தான் பார்ப்போமே என்று " தேங்க்ஸ் & சாரி as well". என்று அனுப்பினாள்.
பதில் வருமா வராத என்று அவளுக்கு தெரியவில்லை, அனால் தேங்க்ஸ் சொன்னவுடன் மனம் கொஞ்சம் அடங்கி போனது.
அதன் பின்னர் வேலையில் மூழ்கியவளுக்கு ஆபீஸ் பையன் டீ கொண்டு வந்து கொடுக்கும் வரை உலகமே மறந்தது. டீ குடித்து சிறது காலாற நடப்போமே என்று தன்னுடைய காபின் ஜன்னலோரம் நடக்க ஆரம்பித்தாள்.நகரத்தின் சுறுசுறுப்பான வீதீகள் அதன் மேல் இன்றே தங்கள் வாழ்கை முடியபோவது போல் இருக்கமான முகத்தோடு நடக்கும் மக்கள் என கண்கள் அலைபாறிற்று. அபோது அங்கே ஒரு சின்ன குழந்தையோடு ஒரு வாலிபன் ரோடு கிராஸ் செய்வதை பார்த்தாள். குழந்தை மல்லிப்பூ போல் நிறம் துருதுரு வென்று அவன் தோளோடு சாய்ந்து ஏதோ வாய் ஓயாமல் பேசி கொண்டு வந்தது போலும் ஏன் என்றாள் அந்த வாலிபனின் முகத்தில் சிறு சிறு புன்னகை கீற்றை தவிர வேற ஏதும் பெரிதாக உணர்வுகள் புலப்படவில்லை.ஏனோ அந்த குரல் ஞாபகம் வந்தது மீராவிற்கு, கிரீச் என்ற பெரிய சத்தம் அந்த நொடி அதை தொடர்ந்து கண்ணா கண்ணா என்று அந்த குழந்தையின் அலறல். அதிர்ந்தாள் மீரா.கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடமே ரத்த சிதறலாக இருந்தது.,அலறி அடித்து மீரா அங்கே செல்வதுற்குள் கும்பல் கூடி விட மீரா குழந்தையை தேடினால். மெல்லிய விசும்பல் ஒலி கேட்டது.,கும்பலை விளக்கி குழந்தையிடம் போனவள் உடனே தன கைபேசியில் அவசர் என்னை அழைத்தாள்.,அட்ரஸ் கொடுத்து ambulance வரும் வரை அவனை தன் மடியில் கிடத்தி கொண்டாள். அவன் சிறிது உணர்வோடு இருந்தான்.கும்பல் கொஞ்சமாக கலைந்தது.என்னும் சில பேர் இந்த பொண்ணு உறவு போல..ஹ்ம்ம் இப்போ எல்லாம் குழந்தைய இவளுக எங்க பார்க்றாங்க எல்லாம் கட்டினவன் வேலைய போச்சு ...ஹ்ம்ம் என்னமோ காலமடி அம்மா என்று ஒரு பெரியவர் அலுத்து கொள்ள மீதி நின்ற கூட்டத்தினர் சிலர் ஆமாம் என்று தலை அசைத்தும் இன்னும் சிலர் வேற என்ன சொல்லாம் என்றும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
இதற்குள் மீராவை நோக்கி அவன் " குழந்தை ரஞ்சனி வீடு அட்ரஸ் என் pursil ஸ்ரீராம் என்ற பேரோடு இருக்கும், என் ப்ளூட் குரூப் B+ve , என்னோட கார்டு என்று சொல்ல வந்தவன் அப்டியே மயங்கி சரிந்தான்.மீராவை பாதித்த அதே குரல்…!!
தொடரும்
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.