(Reading time: 21 - 42 minutes)

05. என் உயிர்சக்தி! - நீலா

ங்கெங்கோ திரிந்து

சிறகை விரித்து பறந்தாலும்

அந்திப்பொழுதில் 

En Uyirsakthi

என் கூட்டில் தாய் மடியில்

தந்தை அணைப்பில்

கண் மூடும் நோடி

உணர்ந்தேன் - வாழ்க்கையின் 

இன்பம் அனைத்தும்

இதுதான் என்று!

                         - கவிதை குந்தவை

கன்டம் விட்டு கன்டம் தாண்டி சென்றாலும் கடைசியில் தன் வீட்டில் வந்து உறங்கும் இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள் பூங்குழலீ! ஏசியை முழுவதுமாக குறைத்து 16 டிகிரியில் வைத்து இழுத்து இரண்டு போர்வையும் போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தாள்! ஆழ்ந்த உறக்கம்! Jet Lag வேறு! ஒரு நாள் முழுவதுமாக தூங்கியும் உடல் அலுப்பு தீரவில்லை. அப்படியும் அந்த கனவு மறுபடியும் வந்தது!

'ஐய்யா… கிருஷ்ணாவை தத்தேடுக்கலாம்னு வந்திருக்கேன். சிங்கிள் பேரேன்ட்டாய் வளர்க்கப்போறேன்! இன்னும் இரண்டு நாளில் ஃபார்மாலிடிஸ் முடியனும்! என் கணவருக்காக நான் காத்திருக்க முடியாது!

என்னம்மா…? திடீரென இப்படி சொல்லற? இப்போ தான கல்யாணம் முடிச்ச? புருஷனோட வரலாமே? ஆனா வந்தாலும் ப்ரயோசனமில்ல மா? இருபது நாளில் வரலைனா...

கிருஷ்ணா!

இன்னொருத்தர் வந்து தத்தேடுத்திருக்கார். இப்போ தான் ஃபார்மாலிடிஸ் முடிச்சார். அவரு மனைவி இப்போ வந்திடுவாங்கனு சொல்லியிருக்கிறார். வந்தவுடனே கிளம்பிடுவாங்க. போய் கிருஷ்ணாவை பார்த்துட்டு போ மா... இதோ அவங்களே வராங்களே!

பார்த்த திசையில் வாயடைத்து நின்றாள் குழலீ! நன்றி ஐய்யா! மிக்க நன்றி! என்று கூறி எதிரில் கிருஷ்ணாவுடன் வந்தவனை ஒரு துள்ளலுடன் சென்று அணைத்துக்கொண்டாள்.

நிமிர்ந்து அவன் முகம் பார்க்கும் போது...' டேய் அம்மூ... அம்மூ... குழலீ எழுந்திரு மா! பூங்குழலீ! என்ற குரல் கேட்டது.

'அம்மூ... குழலீ... பூங்குழலீ!

சக்தி மா... சக்தி கண்ணா! டேய் சக்தி!'

அதுவரை ஆங்ங் என்று முனகியவள் சரியாக அவள் அவன் அணைப்பில் முகம் பார்க்கும் நேரத்தில் லஷ்மி வந்து சக்தி என்று கூப்பிட்டார். அத்துடன் கனவும் கலைந்தது! தூக்கமும் தொலைந்தது. 

அப்பா ஒரு 5 மினிட்ஸ் ப்ளீஸ்...

டேய் சக்தி...

டாடி ப்ளீஸ் கொஞ்சம்...

அதுவரை சக்தி என்ற குரல் இப்போது அம்மூ என்றது. திடுக்கிட்டு அப்பா என்றலரியபடி எழுந்தாள் குழலீ!

அக்கா வ அப்படி கூப்பிடாதே மா... எழுந்துக்கோங்க கா ஒரு டீ குடிச்சிட்டு அப்புறமா தூங்கலாம். - அருள்

மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தாள். கனவுலகில் இருந்தவள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினாள். அம்மா தான் தன்னை 'சக்தி' என்றழைத்தார் என்பதை உணர்ந்து சலித்துக்கொண்டாள்.

நான் தான்டீ உன்னை எழுப்பினேன்! சக்தி னு கூப்பிட்டா சலிச்சுக்கிற? இதுல 'அப்பா ஒரு 5 மினிட்ஸ் ப்ளீஸ்'? எப்பவுமே உங்க அப்பா நினைப்பு தானா? ஏன் நாங்க எல்லாம் அப்படி கூப்பிடக்கூடாதா?

அம்மா விடு மா! அக்கா நீங்க எழுந்து வாங்க!

ஏதோ கெட்ட கனவு மா! அதனால தான் இப்படி முழிச்சிக்கிட்டிருந்தேன்! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேனே ப்ளீஸ் மா!

முதல்ல இதை குடிச்சிட்டு அப்புறமா என்ன வேண்ணா பண்ணு!

ப்ச்ச் என பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு தம்பியை பார்த்தாள். அவனோ 'அக்கா ப்ளீஸ்' என்றான். 

அவள் வந்திறங்கிய மறுநாள் காலை மணி ஒன்பதரை சென்னையில்!

எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு வந்து அம்மா போட்டுக்கொடுத்த தேநீரை சுவைத்துமுடித்தாள். பின் எல்லோருக்கும் வாங்கிவந்த பொருட்களை எடுத்து வைத்தாள்.

அம்மாவின் இட்லி சாம்பாரை ஒரு கைபார்த்துவிட்டு திரும்பவும் வந்து படுத்துவிட்டாள். ஃபேஸ்புக்கில் profile picture ஐ மாற்றியபோது பதறியடித்து வந்து குழலீயை எழுப்பினான் அருள்!

அக்கா ஏதோ Photoshop வேலை பார்த்திருக்கீங்கனு தெரியுது! மோபைல்ல ஸ்கரீன் சேவராய் இருந்த படம்தானே இது! சும்மா கதை விடாதீங்க!

ஏய் அருள்! இது செல்ஃபீ! நிஜம்தான்! 19 மணி நேரம் ஒன்னா டிராவல்! பக்கத்து சீட்! நான் பிஸ்னஸ் கிளாஸ்சில வந்தேனு தெரியும்ல?

அக்கா நிஜமாவா? 

டேய் என்கிட்ட போன் நம்பர் கூட இருக்கே!

அம்மா பாருமா அக்காவை! அந்த கிரிக்கெட்டர் கிருஷ்ணாவோட செல்ஃபீ எடுத்திருக்காங்க! profile picture ஐ வேற மாத்திருக்காங்க!' என்று புகார் செய்யும் தோணியில் கூறினான்.

'ஏன்டீ இப்படி பண்ணற அவனேல்லாம் ஒரு ஆளுனு அவன் போட்டோவை எல்லாம்...' என்று பேசிக்கொண்டே சென்றார் அவர்கள் அம்மா லஷ்மி.

டேய் போட்டுக்கொடுத்திட்டியா? என்று அருளை அடிக்கத்துரத்த குழலீக்கு ஒழுங்குக்காட்டியவாறு ஓடினான்.

நான்கு வயது வித்யாசம் இருவருக்கும்! ஆனால் நான்கு வயது குழந்தைகள் போல ஓடிபடித்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருந்தனர். அப்படியே தோட்டத்தின் பக்கம் சென்ற குழலீ அருளை கூப்பிட்டு திட்ட தொடங்கினாள்.

ஏன்டா அருள் இதையேல்லாம் சுத்தப்படுத்துத்தக்கூடாதா? ஏன் டா பொறுப்பே இல்லாம இருக்க? இதகூட நான் தான் வந்து பார்க்கனுமா? ம்ம்?

இல்ல அக்கா.. அது வந்து..

என்ன வந்து... போய்... இழுத்துகிட்டு இருக்கிற?

வந்த உடனே வேலை வைக்கறீங்களே! நியாமா? என்ன மா இது?

இருவருமே எதுவும் பேசவில்லை!

சரி விடு. போன முறை வந்து தோட்ட வேலை செய்தாங்களே அவங்க நம்பர் இருக்கா?

இல்ல டா அம்மூ! - அம்மா

சரி நான் பார்த்துக்குறேன். நாகராஜன் அங்கிள் தானே ஆள் அனுப்பினாங்க? அவருக்கே கால் போடறேன்... ம்ம்... இல்ல அது மரியாதையா இருக்காதுல? அவருக்கு கிப்ட்ஸ் கொடுத்துட்டு பார்த்து பேசிட்டு வர்றேன். இன்னைக்கு சாய்ங்காலம் இல்ல நாளை காலம்பற போய் பார்க்கிறேன்.

டேய் அம்மூ.. இப்படி உட்காரு வா..

என்ன மா?

இல்ல இரண்டு வரன் வந்திருக்கு. போட்டோ பாரு உனக்கு பிடிச்சிருந்தா மேலே பேசலாம்.

அக்கா இன்னொரு விஷயம்... என்று தொடங்கி பெரியம்மா கொண்டு வந்த வரனும் அதன் பின்னனி பற்றியும் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.