(Reading time: 21 - 42 minutes)

க்கேஜ் எடுத்துக்கொண்டு சென்னை விமானநிலையத்தில் இருந்து கால் டாக்சி கவுண்ட்டர் வரும்போதே நேரம் ஒரு மணியை தாண்டியிருந்தது. இதற்கு மேல் ரயில் பயணம் சரிவராது என்பதை உணர்ந்து டாக்சி புக் செய்தாள். வண்டி என்றால் இருபது நிமிட பயணம் தான் வீட்டிற்கு! ரயில் ஏறினால் பரங்கிமலை வர பத்து நிமிடம். பின் அங்கிருந்து ஆட்டோவில் ஒரு பதினைந்து நிமிடம்!

'தனியாவா போற? ரிசீவ் பண்ண யாரும் வரவில்லையா?' - பிரபு

நான் என்ன குழந்தையா? - குழலீ

நானும் தனியா தான் போறேன். டாக்சி ஷேர் செய்துக்கலாமா? ஒரே இடத்திற்கு ஏன் தனித்தனியா போகனும்? உன்னை இறக்கிவிட்டுட்டு என் வீட்டுக்கு போறேன். - பிரபு

தேவையில்லை! நன்றி! ஐ டோன்ட் வாண்ட் யுவர் கம்பணி அண்ட் டோன்ட் வாண்ட் டு மீட் யூ அக்கேயன்! குட் பைய்! - என்றுவிட்டு பறபறவேன்று டாக்சியில் ஏறி சென்றுவிட்டாள்.

குழலீயின் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட ஏழுநூறு மீட்டரில் பிரபுவின் வீடு. ஆறு தெருக்கள் இடையில்! அவ்வளவுதான்!

'ப்பா. எவ்வளவு திமிர்! இவ்வளவு சீன் உடம்பிற்கு ஆகாது டா! போ எனக்கேன்ன வந்தது?!' என்று அவனும் தன் வீடு நோக்கி பயணப்பட்டான்.

இவ்வற்றையேல்லாம் யோசித்துக்கொண்டு 'இந்த பிகே ஏன் இப்படி டார்ச்சர் செய்யறான்? இனி அவனை எப்படியாவது அவாய்ட் செய்யனும்! இனி பார்க்கவேகூடாது! என்று முடிவு செய்து உறங்கியும் போனாள்.

அந்திப்பொழுதில் எழுந்து அருகிலுள்ள கோவிலுக்கு செல்ல புறப்பட்டாள் குழலீ.

அம்மா நான் அங்கிள் வீட்டுக்கு போய்டு அப்படியே கோவிலுக்கு போய்டு வரேன். - குழலீ

அங்கிளுக்கு ஃபோன் போட்டுட்டு போ!

சரி மா என்று அங்கிளுக்கு கால் செய்தாள்.

ஹலோ அங்கிள். நான் குழலீ பேசறேன். பிஸியா இருக்கீங்களா? இல்லைனா நான் இப்போ உங்களை பார்க்க வரேன்.

...

ஓ... சரி அங்கிள். ஒரு டேன் மினிட்ஸ் கஷிச்சு வரேன். நேரில் பார்க்கலாம் அங்கிள்.

இந்த சந்திப்பு அவள் வாழ்க்கையை மாற்றி அமைக்கப்போவது தெரியாமல் அவருக்கு வாங்கியவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

சென்னை வந்த நாள், அதற்கு மறுநாள் என்று தூங்கிக்கொண்டிருந்தான் பிரபு. மாலை நேரம் சோம்பலுடன் எழுந்தவன் வரவேற்பறையில் அவன் அம்மா, அப்பா இவர்களுடன் தங்கை கீதா அவளது கணவர் ராஜ்குமார் என்று அனைவரும் அமர்ந்து ஏதோ தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.

வாடா சிவா.. இப்படி உட்காரு. உனக்கு டீ எடுத்துட்டு வரேன். அசதியேல்லாம் போயாச்சா?' என்றபடி அவன் அம்மா மாலதி எழுந்தார்.

ப்ச்ச் என்ன மா.. எத்தனை முறை சொல்லறேன் அப்படி கூப்பிடாதீங்கனு. ப்ளீஸ் மா'

நீங்க இருங்க மா நான் போய் எடுத்துவரேன். என்னடா சிவநாதா ஓகேவா!' என்று கேட்டவாறே ஓடிச்சென்றுவிட்டாள்.

அடிங்க.. அடங்கவே மாட்டியாடி நீ? நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க ராஜ். - பிரபு

சிரித்தவாறே..உங்களுக்கு 'சிவா' தான் நல்லாயிருக்கு மச்சான் என்றான்.

நீங்களுமா??! சரி இப்போ என்னைப்பற்றி தான் ஏதோ பேசிக்கிட்டு இருந்தீங்க?

ஆமா டா. என்ன இப்போ? உனக்கு கல்யாணம் செய்து வைக்கலாம்னு முடிவு செய்திருக்கோம்.

அப்பா?!

அதான் நான் சொன்னதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டல? இப்போ நாங்க ஒரு பொண்ணு பார்த்திருக்கிறோம். நல்ல குடும்பம் நல்ல பெண். வருகிற வெள்ளிக்கிழமை பெண் பார்க்க போறோம். அதை பற்றிதான் பேசிக்கிட்டு இருந்தோம். வெள்ளி எங்கேயும் வெளியே போகாதே. சரியா?'

சரி. ஆனா நீங்க பார்க்கறீங்க அதனால எல்லாம் ஒத்துக்க முடியாது. நான் பார்த்து தான் முடிவு செய்வேன்! முதல்ல அந்த பெண் போட்டோ குடுங்க. பார்த்துட்டு சொல்லறேன்.

கிஷிச்ச.. நீ போட்டோ பார்த்து பதில் சொன்ன லட்சணம்தான் தெரியுமே! இப்போ அந்த பெண் வீட்டுல திரும்ப போய் பேசக்கூட முடியல்ல. அதனால நேரில் தான் பெண்ணை நீ பார்க்கலாம்! சரினா வா. இல்லைனா கல்யாணத்தில தாலிக்கட்டும் போது பார்த்துக்கோ!'

அப்பா...! - பிரபு

டேய் சிவா! நீ செய்த வேலைக்கு உனக்கு கல்யாணம் செய்து வைக்கறதே பெரிய விஷயம் இதுல வேற ஏதாவது சொதப்பாதே... இந்தா டீயை குடி. இன்னும் இரண்டு நாள் தானே கொஞ்சம் பொருமையா இரு! - கீதா

சரி பரவாயில்லை. நாளை மறுநாள் அந்த பெண்கிட்ட பேசறேன். எப்படி இந்த திருமணத்திற்கு ஒத்துக்குறானு பார்க்கிறேன்.

மாலதி உன் பையன்கிட்ட சொல்லி வை. அப்படியும் ஏதாவது தவறா போச்சுனா நடக்கிறது வேற தான். நான் வெளியில் கொஞ்சம் போய்டு வரேன்' என்றவாறு எழுந்து சென்றார்.

வீட்டு மாப்பிள்ளையின் முன் அப்பா இப்படி பேசியது வேறு பிரபுவிற்கு கோபம் வந்து அது அத்துனணயும் பார்க்க போகும் அந்த பெண் மேல் திரும்பியது.

என்ன மச்சான் ? என்ன ஆச்சு?- ராஜ்.

ஒன்னுமில்லை. நான் கொஞ்சம். வெளிய போட்டு வரேன்.

சிவா... என்ற அழைப்பொலி காற்றோடு கரைந்தே போனது!

காலிங்க் பேல் அழுத்திவிட்டு, 'அங்கிள் டைகர் இங்க இல்லைல' என்று கேட்டவாறே படுயேறி சென்றாள் குழலீ.

ஹலோ அங்கிள்... எப்படி இருக்கீங்க என்று எதிரில் நின்றிருந்தவரை பார்த்துக் கேட்டாள்.

புன்னகைத்தவாறே, வாம்மா நீலாம்பரி! வா வா! என்றார் நாகராஜன்.

என்ன அங்கிள் நான் அவ்வளவு அடாவடியா? இப்படிக்கூப்பிடுறீங்க? ரொம்ப நாள் கஷிச்சு உங்களை பார்க்க வந்தேன் இப்படி டீஸ் செய்யறீங்களே!

என்னமா பூங்குழலீ! நான் சொன்னது போலவே நீ வெளிநாட்டுக்கு போய்டு வந்துட்ட. நான் கணிச்சு சொன்னதை இப்பவாவது நம்பறியா?

என்ன அங்கிள் விட்டா உங்களால் தான் போனேன் கூட சொல்லிடுவீங்க போல' என்றபடியே உள்ளே சென்றாள். அங்கு மேலும் இரு ஆண்கள் அமர்ந்திருந்தனர்.

வா குழலீ. இப்படி உட்காரு என்றார் நாகராஜன்.

எங்க அங்கிள் ஆன்டீயை காணோம். அப்போதுதான் எதிரில் இருந்தவர்களை நேராக பார்த்தாள். உடனே முகமே பளிச்சட்டது. மகிழ்ச்சி மின்னல்!

ஹலோ மேடீ அங்கிள்! எப்படி இருக்கீங்க? நீங்க எங்க இங்கே? நீங்களும் இவர் விசிறியா? எவ்வளவு வருஷம் ஆச்சு உங்களை பார்த்து?!' என்று உற்சாகத்துடன் கேள்விகளை அடுக்கிக்கொண்டேயிருந்தாள்.

அவள் கூறிய மேடீ என்கிற மாதவன் அருகில் இருந்தவரை பார்த்து, ‘ம்ம்... மேடீ அங்கிள் இவரை எங்கேயோ பார்த்த நினைவு இருக்கு??? ஆனா எங்கே??' என்றவாறு யோசித்தாள்.

என்னம்மா நீலாம்பரி? நீ அப்படியே தான் இருக்க! வாயாடி! நான் நல்லாயிருக்கேன். ஒரு ஐஞ்சு ஆறு வருசம் இருக்குமில்ல? நீ எங்க இங்க?

அவர் யாருனு தெரியலையா! என்கூட பஸ்ல வருவாரே மா. அவர்தான் கடைசியா உன்னை பஸ் ல பார்த்தப்போ... நீயும் உன் ப்ரண்டும் ஹாஸ்பிட்டல் அழச்சின்டு போனேளே!' என்றார் நினைவுபடுத்தும் விதமாய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.