(Reading time: 21 - 42 minutes)

ரு இரு.. இந்த தண்ணீரை குடிச்சிட்டு அப்புறமா பேசு. இவர்கள் இருவரும் என்னோட ஷேட்டில் விளையாடும் ப்ரண்ட்ஸ். என்ன மாதவன் சார் நம்ம குழலீ மேடமை உங்களுக்கு நல்லாவே தெரியும் போலிருக்கு? உங்களை வேற தெரிந்சிரிக்கு!' என்று இருவரையும் பார்த்து கூறினார் நாகராஜன்.

மேடம் காலேஜ் படிக்கும் போது பஸ்ல வருவாப்புல! பக்கத்தில் அமர்ந்திருந்தவரை பார்த்து, ' என்ன ராஜா சார் நியாபகம் இல்லையா? அந்த வாயாடி கும்பல் சார். வம்படிச்சிக்கிட்டே வருவாங்களே! நீங்க கூட ரவுடி கும்பல்னு சொல்லுவீங்களே!' என்று எடுத்துகொடுத்தார்.

'ம்ம்.. நினைவு வந்துடுத்து மேடீ அங்கிள். தேங்கஸ்!

நீங்க எப்படி இருக்கீங்க அங்கிள். உடம்பு பரவாயில்லையா. மன்னிக்கனும் அன்று உங்களுக்கு விழிப்பு வரவரைக்கும் காத்திருக்க முடியல்ல. அதனால் தான் கிளம்பிட்டோம். தவறா எடுத்துக்காதீங்க! உடம்பை கவனமா பார்த்துக்கோங்க! எந்த காரணத்தினாலாவது உங்களை நாங்க அதாவது நானும் என் ப்ரண்ட்சும் ஹர்ட் செய்திருந்தா மன்னிச்சிருங்க! இதை நான் இத்துணை வருடம் பின்னே கேட்கிறேன் தப்பா நினைக்காதீங்க! ' என்றாள் குழலீ.

இப்போது அந்த 'ராஜா' பேசினார்.

'இருங்க மாதவன் சார் நீங்க இருவரும் என்ன பேசறீங்கனு புரியவேயில்ல!'

எனக்கும் தான் என்றார் நாகராஜன்.

இருங்க நான் செல்லறேன் என்றார் மாதவன். நடந்ததை கூறினார்.

'பிஜி ப்ராக்டிகல் எக்ஸாம் முடிந்து விடுமுறையில் இருந்த குழலீ கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்து மீண்டும் அந்த 8.40 அரசு பேருந்தில் எறினாள்.

யுஜி படிக்கும் போது அவள் தன் பத்துபேர் கொண்ட நண்பர்கள் குழுவுடன் தினமும் பயணம் செய்த அதே பேருந்து தான். பிஜி கல்லூரி பேருந்தில் பயணம்! மேலும் அந்த நண்பர்கள் கூட்டம் திசைக்கு ஒருவராக பிரிந்து சென்றுவிட்டனர்!

அன்றைய அவசியம் மறுபடியும் அந்த பேருந்து பயணம்! கல்லூரியில் யுஜி ப்ராக்டிகல், லேப் அசிஸ்டண்ட் பற்றாக்குறை, இப்படி எல்லா இக்கட்டான சூழ்நிலையிலும் முதல் ஆளாய் உதவுவதும் உதவிக்கு அழைக்கப்படுவதும் குழலீதான்!

பேருந்தில் ஏறியவள் தன் யுஜி நண்பன் ராமசந்திரன் அந்த பின் இருக்கையில் அமர்ந்திருப்பதை கவனித்துவிட்டு அவன் பின்னிருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். நண்பன் அருகில் அமர்ந்த மாதவனுடனும் பேசியபடியே வந்தாள். மாதவன் அருகில் நின்றுக்கொண்டு வந்தார் அவர் நண்பர் 'ராஜா'. பேருந்து புறப்பட்டு பதினைந்து நிமிடத்தில் மாதவன் அருகிலிருந்த அவர் நண்பன் மயக்கம் அடைந்து கீழே சரிந்தார். எப்பொழுதும் அமர்ந்து வருபவர் நின்றுக்கொண்டு வந்ததால் என்று நினைத்து முதலுதவி செய்தால் அவருக்கு விழிப்பு வரவேயில்லை.

பதறியடித்து குழலீ பேருந்தை நிறுத்தக்கோரி, அவள் நண்பன் ராமசந்திரன் மற்றும் மாதவனுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள். லோ ப்ரஷர் மற்றும் மைல்ட் ஸ்ட்ரோக் என்றனர் மருத்துவர்கள். அவர் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு காத்துக்கொண்டிருந்தனர் மூவரும்!

விழிப்பு வரவில்லை ஆனால் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டார் என்று தெரிந்தபின் தான் குழலீயும் ராமசந்திரனும் மனமில்லாமல் புறப்பட்டனர். அதற்கு பின் ஏற்பட்ட வாழ்க்கையின் பரபரப்பில் இவரை சென்று நலம் விசாரிக்க முடியவில்லை என்றாலும் இவர் உடல் நலனுக்காக இறைவனிடம் வேண்டினர் இருவரும்!’

மாதவன் 'இது மட்டுமல்ல சார் தக்க சமயத்தில் முதலுதவி செய்ததால் தான் நீங்க ஆபத்து கட்டத்திலிருந்து தப்ப முடிந்தது என்று டாக்டர் கூறினாறே... அதற்கு காரணம் இந்த பெண் தான் சார்.'

நெகிழ்ந்துபோனார் அந்த 'ராஜா' சார்.

'ரொம்ப ரொம்ப நன்றி மா. நீ எவ்வளவு முக்கியமான உதவி செய்திருக்க! உன்னை போய் ரொம்ப தவறா நினைச்சுடேன்! அதற்காக என்னை மன்னிச்சிடு பூங்குழலீ! காலத்தினால் செய்த உதவி..' என்று அவர் கூறும் போதே

இடையிட்டு குழலீ, 'அங்கிள் ப்ளீஸ்! என்னை இப்படியேல்லாம் சொல்லி சங்கடப்படுத்தாதீங்க! நீங்க அன்பை கொடுத்தீங்க அதற்கு பதில் அன்பை திருப்பிக்கொடுத்தோம். என்ன உங்க அன்பு வெளிப்பட்ட விதம் வேறுப்பட்டு இருந்தது அவ்வளவுதான். மன்னிப்பேல்லாம் கேட்டுக்கிட்டு? என்ன அங்கிள் உங்க அன்பும் ஆசியும் இருந்தா போதும் அங்கிள். நாங்க யாரும் தவறான பிள்ளைகள் இல்லை கொஞ்சமே கொஞ்சமா வாய் மட்டும் அதிகம்! அவ்வளவுதான்! மற்றபடி உங்க அன்பு மட்டும் போதும் அங்கிள்!'

பதில் ஏதும் இல்லை அவரிடம். பின்னர் சரிமா குழலீ என்றார்.

சாரி அங்கிள் நீங்கல்லாம் இங்க இப்பீங்கனு தெரியாது. இவருக்கு மட்டும்னு எடுத்துட்டு வந்தேன்...

பரவாயில்லை குழலீ! என்றனர் இருவரும்.

எடுத்து வந்தவற்றை நாகராஜனிடம் கொடுத்தாள். 

அங்கிள் உங்ககிட்ட ரெண்டு முக்கியமான விஷயம் பேசனும்... ஒன்னு வீட்டு தோட்ட வேலைக்கு ஆள் வேணும் அங்கிள். முன்னமே ஒரு ஆள் அனுப்பிச்சீங்க..

சரி குழலீ. அனுப்பி வைக்கிறேன். நாளைக்கு பார்த்து அனுப்பவா? அப்புறம்??

அப்புறம்.. அங்கிள்... ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்... அது வந்து... என்று மற்ற இருவரிடமும் பார்வையை செலுத்திவிட்டு மறுபடியும் அவரை பார்த்தாள். எதுவாயினும் பரவாயில்லை சொல்லு என்றார் நாகராஜன்.

சரி. நீங்க சொன்னீங்கல ஒரு பையன்...

ஆமாம் பிரபு. அவனுக்கு என்ன?

அவனுக்கென்ன? சரி நேரடியாகவே சொல்லறேன். அவருக்கு லவ்ர் இருப்பாங்க போல.. அவங்களுக்கு கல்யாணம் அதுவும் என் ப்ரண்ட அர்ஜுன்கூட! அவங்க திருமணத்தை எப்படியாவது நிறுத்தனும் இருக்கார் உங்க பிரபு. அவங்க அப்பாகிட்ட சொல்லி இந்த முயற்சியை நிறுத்த சொல்லுங்க அங்கிள்! இது இருவருக்குமான விஷயம் கிடையாது அங்கிள். மூன்று குடும்பங்களுக்கானது. எல்லாருக்குமே கெட்ட பெயர். என்னால் முடிந்த முயற்சியை செய்துட்டேனு இருக்க முடியல்ல. அதான் உங்க மூலமாய் முயற்சியை... இன்னும் 20 இல்ல 30 நாள் தான் இங்க இருப்பேன். மறுபடியும் யுஸ் தான். அதனால...'

அவன் நல்ல பையன் மா. இப்படியேல்லாம் செய்ய மாட்டானே!

நல்ல பையனு எனக்கும் தெரியும் அங்கிள். ஆனா இதற்கு உதவி செய்ய சொல்லி என்கிட்டல கேட்டாரு! நான் முடியாதுனு சொல்லிதான் இங்க வந்திருக்கேன்.

நீயும் நல்ல பெண்தான் குழலீ! - நாகராஜன்

அங்கிள்! நீங்க எதுக்கு வரீங்கனு புரியுது. வேண்டாம் அங்கிள்! நல்ல அழகான பெண்ணாய் பார்த்து திருமண செய்து வைக்க சொல்லுங்க!

அது சரி! அவன் நல்ல பையன் தான் சொன்ன! உன்கிட்ட உதவி வேற கேட்டானா? உன்னை எப்படி தெரியும்? - நாகராஜன் ஒரு விதமான சந்தேக குரலில்!

அவர்... பிரபு.... என்னோட ஸ்கூலில் எனக்கு இம்மிடியட் சீனியர். பின்னே தெரியாதா அங்கிள்! அதுவும் இவரை பத்தி ஓரளவுக்கு தெரியும்.

ஒரே ஸ்கூல்! சீனியர்! அப்ப கூட எப்படி?

அப்படித்தான்! எங்க ஸ்கூலில் வந்து வந்தியத்தேவன் குந்தவையை பத்தி கேட்டு பாருங்க அவங்க சொல்லுவாங்க!' சரி அங்கிள்ஸ். நான் புறப்படுறேன். நீங்க எதாவது முயற்சி செய்ய முடியுமானு பாருங்க ப்ளீஸ்! அப்புறம் இது அம்மாவுக்கு தெரிய வேண்டாம் அங்கிள். பை' என்றுவிட்டு புறப்பட்டாள்.

அவள் சென்ற பிறகு, 'என்ன கனகராஜ் சார். நான் பெண்ணை பற்றி சொன்னது சரி தானே! சரி நீங்க வந்த விஷயத்துக்கு வருவோம். நாளை மறுநாள் பெண் பார்க்கறீங்கல? ஞாயிறு போய் கை நனைச்சிட்டு வாங்க. மாத கடைசில நல்ல நாள் இருக்கு அப்ப நிச்சயம் பண்ணிடுங்க!' என்றார் நாகராஜன்.

'வெள்ளிக்கிழமையே நிச்சயம் செய்துட்டு, மாத கடைசி மூஹுர்த்தம்ல திருமணத்தை வைத்துக்கலாம் ல சார்?' என்றார் ராஜா என்கிற கனகராஜ்!

'பெண் பார்த்து மற்ற விஷயங்களை பேச வேண்டாமா சார். பெண் ஸ்கூல் டீச்சர்னு சொன்னீங்களே?! பிரபுவுக்கும் பிடிக்கனும் இல்லையா? எல்லாம் கலந்து பேச வேண்டாமா சார்?'

இல்ல சார். பெண்ணை தான் இப்போ பார்த்துட்டோமே! பையனும் ஏற்கனவே பெண்ணை பார்த்துட்டான். முன்னமே ஒரு முறை கேட்டு அவன் வேண்டாம்னு சொல்லிட்டான்! அதுவும் உங்ககிட்ட வந்த அந்த பெண் இங்க இருக்கும் போதே பெண் அழகாயில்லைனு... சரி விடுங்க! வந்தது வந்தாச்சு... இனி இந்த பொண்ணு குழலீ யுஸ் திரும்பி போனா திருமதி பிரபுவா தான் போகனும்! அதற்கான வழியை பார்ப்போம் வாங்க!

தொடரும்...

Episode # 04

Episode # 06

{kunena_discuss:833}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.