(Reading time: 21 - 42 minutes)

னந்த் மட்டும் வேண்டாம் மா. அவனுக்கு இந்த நேரத்திற்கு கல்யாணம் முடிஞ்சிருக்கும். மற்றபடி போட்டோ எதுவும் நான் பார்க்க தேவையில்லை. அவங்க வீட்டில காட்டுங்க. பிடிச்சிருந்தா மேலே பேசுங்க. ஏற்கனவே நான் பிடிச்சிருக்குனு சொல்லி பட்ட அவமானம் போதாதா? எனக்கு பிடிச்சு என்ன பண்ண? நீங்களா பார்த்து எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் மா. முதல்ல நீங்க சொன்ன பையன் வீட்டில்ல பிடிச்சிருக்கானு கேட்டுக்கொங்க!' என்றுவிட்டு மீண்டும் படுக்க சென்றாள்.

வெளியே அருளும் லஷ்மியும் விழித்துக்கொண்டிருந்தனர்.

என்ன டா இவ இப்படி சொல்லிட்டு போறா? என்ன பண்ணலாம்?

அம்மா நான் ஒன்னு சொல்லவா? அக்காவுக்கு அந்த பையனை ரொம்ப பிடிச்சிருக்குனு நினைக்கிறேன். என்ன பண்ணலாம் மா?

'அவளுக்கு பிடிச்சு இருக்கு அதனால திரும்ப போய் நாமளா கேட்க முடியுமா? அவங்க தான் ஜாதகம் பொருந்தவில்லைனு சொல்லிட்டாங்களே! வேற பையன் பார்க்கலாம் விடு அருள். நான் பார்த்து சொன்னா அவ கேட்பா! நான் பேசறேன் அவகிட்ட. நீ போய் நான் சொன்ன காய்கறிகள் வாங்கிட்டு வா'

சரி மா என்று கடைக்கு புறப்பட்டான் அருள்மொழி.

உள்ளே சென்று படுத்த குழலீக்கோ மனம் முன்தினத்தின் விமான பயணத்தின்போது நடந்த சம்பவங்கள் மீண்டும் கண்திரையின் முன்.

பிலடேல்பியா டூ சென்னை! 19 மணி நேர விமான பயணம்!

லாஞ்சில் பிரபுவின் நிலைமையை பரிதாபமாக பேசவிட்டு போர்டிங் கால் வந்தவுடன் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள். அவளை தொடர்ந்து பிரபுவும்!

இவளுக்கு அலுவலகத்தின் வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட இருக்கை! அதனால் எக்சிக்யூடிவ் கிளாஸ் டிக்கட். இதற்கு மேல் அவன் தொல்லை இருக்காது எப்படியும் அவன் எகனாமிக் கிளாஸ் தான் என்று நினைத்தவளுக்கு முதல் ஏமாற்றம். அவனும் அதே வகுப்பில்! இவள் டூ சீட்டரில் அவன் அருகிலிருந்த த்ரீ சீட்டரின் ஓரத்தில்!

என்ன கொடுமை சார் இது என்று தலையில் அடித்துக்கொள்ளாத குறைத்தான்! மந்தகாச புன்னகையுடன் அவன் அமருகையில் அவளுக்கு பற்றிக்கொண்டு கோபம் வந்தது! சிரிச்சே ஆளை மயக்கிடுவானே!

மீண்டும் ப்ரியாவை பற்றிய பேச்சு எடுப்பான். 'உனக்கு உன் ப்ரியா வேணும் னா என்னயேன்டா இப்படி இம்சைபடுத்துற?' என்று அவனை அர்ச்சித்துக்கொண்டேயிருந்தாள். கடவுளே கிருஷ்ணா! என்னை காப்பாற்று என்று வேண்டிய நோடியில்,

'எக்ஸ்கியூஸ் மீ!' என்ற குரலில் கண்மூடி இருந்தவள் யார் என பார்ப்பதற்கு கண்களை திறந்து இமைக்கவும் மறந்து அந்த நபரையே பார்த்திருந்தாள்.

'எக்ஸ்கியூஸ் மீ!' என்று திரும்பவும் அழைத்தபின் தான் சுற்றம் அறிந்து பரபரப்புடன் தன் கைகளை தானே கிள்ளி பார்த்துக்கொண்டாள்!

தன் ஐபோனை ஆன் செய்து ஸ்க்ரினில் இருந்த போட்டோவையும் அந்த நபரையும் மாற்றி மாற்றி பார்த்தாள். இப்பவும் குழலீயால் நம்ப முடியவில்லை. 19 மணி நேரம் பயணம் தன் கனவு நாயகன், ஹிரோ கிரிக்கெட்டர் கிருஷ்ணாவுடன் அதுவும் பக்கத்து இருக்கையில்!

அவ்வளவு ஆனந்தம்! மகிழ்ச்சி! எல்லாவற்றிலும் ஸ்க்ரீன் சேவராய் இருப்பவன் அவன்தான்! அதிலும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் இவன் புகைப்படத்தை தான் காட்டுவாள்! அந்த அளவிற்கு பைத்தியம் இவன்மேல்! (இப்படி கூறும் போது தான் பிரபுவின் காதிலும் இந்த விஷயம் விழுந்தது!)

அருகில் இருப்பவன் கிருஷ்ணாதான் என்று உறுதி செய்துக்கொண்டாள். தான் அவனின் மிகப்பெரிய விசிரி என்பதையும் தெரிவித்துவிட்டு அவனுடன் பேசிக்கொண்டே வந்தாள். முதலில் எரிச்சலாக உணர்ந்த கிருஷ்ணா அவளது அறிவு, பேச்சுத்திறன் எல்லாவற்றிலும் ஈர்க்கப்பட்டு அவள் பேசுவதை கேட்டு வந்தான்.

ஹலோ! நீங்க கிருஷ்ணா தானே! நான் பிரபு. நைஸ் டு மீட் யூ!' என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.

ஏதோ யோசித்து 'ம்ம் நீங்க தானே அந்த.. உங்க ப்ரண்ட் மனைவியை அவரை விட்டு பிரித்து...?' என்று கேட்டேவிட்டான். கிருஷ்ணாவையும் குழலீயையும் ஒருசேர அவமானபடுத்தும் எண்ணம்!

'ஸ்டாப் இட் பிரபு! ஹேவ் யுர் லிமிட்ஸ். என்ன வேண்ணும்னாலும் பேசுவீங்களா? இவர் தான் பிரித்து கூட்டி வந்தார்னு தெரியுமா? சரி அப்படியே இருந்தாலும் உங்களுக்கு என்ன பிரச்சனை. சரி அவர் செய்ததார்னு குற்றமா கேள்வி கேட்கறீங்களே இப்போ அதையே தான் நீங்க செய்ய போறீங்க! சோ யு டோண்ட் ஹேவ் த ரைட்ஸ் டு கோஸ்டீன் ஹிம்! அப்போ நாளைக்கு இதே கேள்வியை நான் உங்களை பார்த்து கேட்கவா?' - குழலீ

சரி நான் கேட்பதற்கு பதில் சொல்லு! அப்போ ப்ரியாவுக்கு என்மேல் காதல் இல்லையா?

ஆமாம்.

சரி. உன்னுடைய லவ்ர் இப்படி ஒரு கன்டிஷன் போட்டா நீ என்ன பதில் சொல்லுவ?

'எனக்கு லவ்ர் இல்லை! லவ்வும் இல்லை! அப்படியே இருந்தாலும் அவர் என்கிட்ட கேட்கமாட்டார். அவருக்காக எதையும் செய்வேனு புரிஞ்சிப்பார். என் அன்பு புரிய வைக்கும்! அப்படியே கேட்டாலும் என் பதில் சரினு தான் இருக்குமே தவிர வேற எதுவும் இருக்காது! பட் நான் சேலக்ட் பண்ற ஆளு இந்த மாதிரி மடத்தனமான கேள்வி கேட்கமாட்டார்!'

அதற்கு மேல் ஒரு வார்த்தை வரவில்லை பிரபுவிடமிருந்து! அவனுக்கு வேண்டிய பதில் வந்துவிட்டதே!

சாரி கிருஷ்ணா! அவர் பேசினதை பொருட்படுத்தாதீங்க. விட்டுவிடுங்க!

அப்போது பேச ஆரம்பித்தான் கிருஷ்ணா.

நான் காரணமல்ல பூங்குழலீ. என்னை பற்றி தவறான செய்தி அது. ஆனால் யாருமே நம்ப மறுக்குறாங்க!

எதற்கு நம்மனோம்? உங்க மேல நம்பிக்கை இருப்பவர்கள் இதை ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டாங்க. நீங்க செய்திருக்க வாய்ப்பில்லை கிருஷ்ணா! இதில் கவனம் இருந்தால் எப்படி இவ்வளவு கிளாசிக்கா விளையாட முடியுமா? அப்படியே செய்தாலும் உங்களை எப்படி அணியில் வைத்திருப்பாங்க? டிசிப்பிளினரி ஆக்‌ஷன் எடுத்திருக்க மாட்டாங்க? சரி அப்படியே இருந்தாலும் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை இதுல? உங்க பர்சனல் லைஃப். உங்க ப்ரண்ட் கூட பிரச்சனை! சோ டோண்ட் வோரி. உங்களை புரிஞ்சிக்கிறவங்க மட்டும் இருக்கட்டும் னு விட்டுங்க பாஸ்!'

மலைத்து போயிருந்தான் கிருஷ்ணா! என்ன பெண்டா இவ?

எனக்கு இப்படி அட்வைஸ் பண்ணறா? அவனுக்கு அப்படியே மாத்தி சொல்லுறா? கடைசியா என்ன தான் சொல்ல வர்றா?!

நீங்க எப்பவுமே இப்படியா இல்ல அப்பப்போ இப்படியா? - கிருஷ்ணா

ஹிஹி என்று அசடுவழிந்தவாறே 'நான் கொஞ்சம் இப்படி கொஞ்சம் அப்படி! என்றாள் குழலீ.

Frankfurt வரை பேச்சு தொடர்ந்தது. அங்கே அந்த இரண்டு மணி நேர காத்திருப்பில் பிரபுவும் கிருஷ்ணாவும் ஒரு பத்து நிமிடம் தனியாக பேசிக்கொண்டிருந்தனர். அதற்குபின் இருவரும் நல்ல நட்பு பாராட்டுவது போல் தோன்றியது குழலீக்கு!

என்ன கிருஷ்ணா நீங்களும் பிரபுவும் நல்ல ப்ரண்ட்ஸ் ஆகியாச்சு போல?' என்றாள் இருவரின் முகத்தையும் ஆராயும் பார்வையுடன்.

மீண்டும் விமானப்பயணம்! பேச்சு தொடர்ந்தாலும் பொதுப்படையாகவே சென்றது. செல்ஃபீ எடுத்துக்கொண்டனர். தனக்கு அதை அனுப்பிவைக்குமாரு கேட்டு தனது பர்சனல் நம்பரை கொடுத்தான் கிருஷ்ணா! தரையிரங்கியவுடன் இரண்டு வார்த்தை பேசிவிட்டு புறப்படும்முன் இருவருக்கும் அழைப்பு! தன்னை எப்போதும் இவர்களது நட்பு வட்டத்தில் வைக்குமாறு!

'நான் இவனுக்கு...இந்த பிகே பிரபுவுக்கு ப்ரண்டா?' என்று குழலீ மனதில் கறுவிக்கொண்டாள்.

'இதற்குமேல் இங்கு இருந்தால் கூட்டம் கூடிவிடும். பிரபலாமாய் இருந்தால் இதுதான் பிரச்சனை. சீ யு ஸூன் பீப்பிள்' என்றவாறு புறப்பட்டான் கிருஷ்ணா!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.