" இல்ல தர்ஷினி .. அண்ணா மித்ரா கூட இன்னைக்கு வீட்டுலையே இருக்கேன்னு சொன்னான் .. அம்மா அப்பா அத்தை மாமாவும் இன்னைக்கு வராங்க .. சோ நான் கடையை பார்த்துக்க போறேன் .. நீ ஆபீஸ்ல எனக்காக சொல்லிடு " என்றான் கதிரேசன் ..
" ரொம்ப நாளைக்கு பிறகு அவங்க எல்லாரும் வரும்போது நான் மட்டும் ஆபிசில் இருந்து என்ன பண்ண போறேன் கதிர் ?? நானும் லீவ் போட்டுக்குறேனே ப்ளீஸ் " என்று விழிகளை சுருக்கி அழகாய் கேட்டாள் காவியதர்ஷினி .. அவளது சின்ன சின்ன பாவனைகளையும் பார்வையால் உள்வாங்கியவனின் மனதில் மழைச்சாரல் ... அந்த உல்லாசம் அவன் முகத்தில் பிரதிபலித்தது ..
" எனக்கு ஒண்ணுமில்ல தர்ஷினி .. மறுநாள் ஆபீஸ் போகும்போது உனக்குத்தான் சங்கடம் அதிகம் .. நானாச்சும் ரிஷியை முறைச்சே சமாளிச்சிடுவேன் .. ஆனா நீதான் உன் தோழிகளை எல்லாம் சமாளிக்கணும் .. உனக்கு ஓகேநா எனக்கு ஓகே தான் " என்றான் ..
" ஏன் அப்படி என்ன சங்கடம் "
" அட மக்கு ..ஆல்ரெடி நீயும் நானும் ஒரே வீட்டில் இருந்து வேலைக்கு வரோம்னு நம்மளை பத்தி கிசுகிசுக்குறாங்க .,.. இதுல கதிர் வேலைக்கு வராதப்போ தர்ஷினியும் வரலன்னா கண்டிப்பா நம்மளை வெச்சு கதாகாலாட்சேபம் நடத்திருவாங்க ... அதைதான் சொன்னேன் .. " என்றான் ..
" அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் .. நீங்க ரெடி ஆகிட்டு வாங்க சாப்பிடலாம் " என்று சட்டென பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவளின் மனதிற்குள் வழக்கம் போல அதே காதல் புயல் ..
" சரி மக்கா இருக்கானே இந்த கதிர் .,.. கிசுகிசு பேசுறாங்களாம் .. அட மக்கே உண்மையை தான் டா பேசுறாங்க .. அப்படியா உனக்கு என் காதல் புரியலை ? ஒரே வீட்டில் ஒண்ணா இருக்கோம் ..இவ்ளோ பக்கத்தில் இருந்தும் என்மனம் உனக்கு விளங்கலையா ? இதுக்கெல்லாம் உன்னை பழி வாங்குறேனா இல்லையா பாரு !!" என்று அவனைத் திட்டிக் கொண்டே அன்றைய வேலைகளை தொடர்ந்தாள் அவள் .. ( கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா ? நீங்க கலக்குங்க சிஸ்டர் )
என்னத்தான் தன்னை இயல்பாய் காட்டிக் கொண்டாலும் மனம் பரபரத்தது முகில்மதிக்கு ... நீண்ட நாட்களுக்குப் பிறகு எழில் அங்கு வரவிருக்கிறான் .. இத்தனை நாட்கள் அவனை விட்டு தூரம் இருந்ததால் அவனிடம் பேசாமல் இருப்பது அவளுக்கு சிரமமாக இல்லை.. ஆனால் நாளை முதல் அவன் தன் வீட்டிலேயே தன் கண்ணின் முன்னே நடமாடும்போது எப்படி அவனைத் தவிர்க்கப் போகிறோம் என்று தெரியாமல் திணறினாள் அவள் .. சரியாய் அவளது செல்போன் அப்போது சிணுங்கியது.
" எழில் பேசறேன் "
" ம்ம்ம்ம் "
" சாப்டியா "
" இனிதான் .. நீங்க ? "
" ம்ம்ம் இனிதான் "
" நாளைக்கு நான் அங்க வருவேன் முகில்மதி " ... முகிலா என்று அவன் செல்லமாய் அழைக்கும் அழைப்பு இன்று முகிமதியாய் மாறி இருந்தது ..அதை அவள் அறிந்திருந்தாலும் அதற்கு காரணமும் தான்தான் என்றுணர்ந்து அமைதியாய் இருந்தாள் ...
" ஹலோ இருக்கியா ?"
" இருக்கேன் .. "
" நாளைக்கு அங்க வரோம் ..அதான் உனக்கு சொல்லனும்னு தோனுச்சு "
" ம்ம்ம் அண்ணி சொன்னாங்க "
" நான் ........ நான் வர்ரதுல உனக்குஎதும் சிரமம் ???"
" அப்படி ஒண்ணுமில்லை "
" தேங்க்ஸ் "
" எழில் "
" சொல்லுடா " என்றவனின் மனதிற்குள் அவள் ஏதும் சொல்லிவிட மாட்டாளா என்ற எதிர்பார்ப்பு.. மனதிற்குள் " ஐ லவ் யூ " என்றவளோ அவனிடம்
" பத்திரமா வாங்க " என்று சொன்னாள் .. எப்போதுமே அவள் மனநிலையை உணர்ந்து செயல்படுபவன் எழில் .. அதனால் அவள் எதை சொல்ல நினைத்திருப்பாள் என்பதையும் அவன் உணர்ந்துதான் இருந்தான் ..அதனாலே நம்பிக்கையும் புன்னகையும் ஒன்று சேர
" ம்ம் கண்டிப்பா பத்திரமா வருவேன் .. " என்று சொல்லி போனை வைத்தான் ..
அவன் போனை வைத்தப் பிறகும் அதையே பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதிலும் தன்னையும் மீறி சந்தோஷ அலைகள் துள்ளிக் குதித்தன..
"இருக்கிறாய் ........ இல்லாமலும் இருக்கிறாய் .... ஆதலால்
இருக்கிறேன் ......... இல்லாமலும் இருக்கிறேன் " அண்மையில் கேட்ட பாடலை முனுமுனுத்தபடி தனது வேலையை தொடர்ந்தாள் முகில்மதி ..
அனைவரும் கலகலப்பாய் பேசிகொண்டிருந்த நேரம், ( கலகலப்பாகவா அது தப்பாச்சே .... ) தேவசிவனை போனில் அழைத்திருந்தாள் வைஷ்ணவி .. ( இத ...இத ...இததான் நான் எதிர்பார்த்தேன் )
" ஹெலோ அப்பா "
" சொல்லு வைஷும்மா ..எப்படி இருக்க ?"
" நல்லா இருக்கேன்பா .. என்ன ஒரே சத்தமா இருக்கு ?? "
" அன்பு வந்திருக்கான் மா "
" ஓஹோ .. எல்லாரும் என்னை மறந்துட்டிங்க தானே அப்பா ? ஏன் என்னை பார்க்க வர்றதே இல்லை ?"
" அப்படி எல்லாம் இல்லடா .. நீ எப்படி இருக்க ?"
" அதபத்தி தான் பேச வந்தேன் அப்பா .. இன்னைக்கு நீங்களும் அம்மாவும் இங்க வர முடியுமா ?"
" என்னாச்சு டா ?"
" வாங்கப்பா சொல்றேன் "
" இல்லம்மா .. இன்னைக்கு மித்ராவை பார்க்க கிளம்பிட்டு இருந்தோம் "
" ஓஹோ .. அதான் அன்பு வந்திருக்கானா ?" என்றவள் சிறிது நேர மௌனத்திற்கு பின்
" அங்க போறதுக்கு முன்ன இங்க வந்துட்டு போலாமே அப்பா ... ஒரு அரைமணி நேரம் தான் பா " என்றாள் ..
இதற்கு மேலும் அவள் பேச்சை மறுக்க எண்ணமில்லாமல் " சரிம்மா " என்று சொல்லி போனை வைத்தார் தேவசிவன் .. வைஷ்ணவிஇடம் பேசியதை அவர்களிடம் சொன்னார் ..
" இவ்ளோதானே பா ? கார்ல தானே போறோம் ? வைஷ்ணவியை பார்த்துட்டே போகலாமே " என்றான் எழில் உற்சாகமாய் .. ஆனால் யாருக்கு தெரியும், அவளைப் பார்த்த பிறகு அவர்களின் பயணம் தாமதம் ஆகப்போவது ?????
அங்கு சிவகங்கையில் வீட்டையே தலைகீழாய் மாற்றிக் கொண்டிருந்தார் சித்ரா .. மனைவியின் பதற்றத்தை ரசித்தார் தேவசிவன் ..
" என்ன சித்ரா.. "
" இல்லங்க .. சின்னவளை பார்க்க போறோம்ல ..அதான் எல்லாம் எடுத்து வெச்சுட்டெனா ன்னு பார்க்குறேன் .."
" ம்ம் அவளுக்கு பிடிக்கும்னு கை முறுக்கு செஞ்சியே "
" ம்ம் அதெல்லாம் நேத்தே கட்டி வெச்சிட்டேன் .. "
" மதி தம்பி இப்போதான் கிளம்பிறதா போன் பண்ணி சொன்னிச்சு சித்ரா.. டைம் இருக்கு .. கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு அப்பறம் வேலைய பாரு "
" இல்லங்க .. சின்னவ முகத்தை பார்க்குற வரை எனக்கு எதுவும் கொள்ளாது " என்றார் சித்ரா ..
" ஹ்ம்ம் இருக்கும்போதெல்லாம் அவளை திட்டிகிட்டே இருப்ப .. தோசை கரண்டிய வெச்சுகிட்டு தொரத்திகிட்டே இருப்ப .. இப்போ என்னடான்னா சின்னவ சின்னவன்னு ஒரே புலம்பல் " என்று சொல்லி சிரித்தார் தேவசிவன் ..