(Reading time: 21 - 42 minutes)

ஹேய்… மஞ்சு… உன் பக்கத்துல இருக்குற சிஸ்டமை கொஞ்சம் துடைச்சு வைடி…

…….

எவ்வளவு தூசியா இருக்கு பாரு…

……

அடியே… எங்க இருக்குற… ஏய்… என்று பாலா அவளை உலுக்கவும்,

ஆ… என்ன பாலா… என்ன?... என மஞ்சரி இலகுவாக கேட்கவும், பாலாவுக்கு கோபம் வந்துவிட…

ஏண்டி… ஒருத்தி இங்க கத்திட்டிருக்கேன்… கொஞ்சம் கூட அதை காதுல வாங்காம நீ என்னடான்னா பகல் கனவு கண்டிட்டிருக்குற?... என் நேரம்டி.. எல்லாம்..

ஹேய்… என்ன சொன்ன… என் நேரமா?... என் நேரமா?... என திரும்ப திரும்ப மஞ்சரி அதையே சொல்லவும், பாலாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை…

குரங்கே… என்னடி ஆச்சு உனக்கு?... காலையில நல்லா தான இருந்த… அதுக்குள்ள உனக்கு என்ன ஆச்சு?... என்று பாலா கேட்டுக்கொண்டே இருக்க..

மஞ்சரியோ சிறிது நேரத்திற்கு முன், அவன் என் நேரம் என்று சொன்ன வார்த்தை நினைவுக்கு வர, கூடவே நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவள் கண் முன்னே வர, தானாக சிரித்துக்கொண்டாள் மஞ்சரி..

உனக்கு லூசுதான் பிடிச்சிட்டு… என்னவோ பண்ணித்தொலை… என்று பாலா சொல்லிவிட்டு அவளிடத்தில் அமர, வள்ளி அங்கே வந்து மஞ்சுவிடம்

மஞ்சு… நீ அந்த ஃபைலை எனக்கு மெயில் பண்ணிட்டியா?...  என்று கேட்க…

ஆமா… இவ்வளவு நேரம் கத்தி என் எனர்ஜி போச்சு… இப்போ அடுத்தா?... என நினைத்த பாலா தன் வேலையில் மூழ்க…

மஞ்சு… என அவள் தோள் தொட்டு அழைத்தாள் வள்ளி….

ஆ… என்ன வள்ளி… என்ன?... என பாலாவிடம் கேட்ட அதே கேள்வியை வள்ளியிடத்திலும் மஞ்சரி கேட்க…

சரிதான்… என்று நினைத்த வள்ளி… நீ இருக்குற நியூ டீமுக்கு லீடர் வந்தாச்சாம்… எம்.டி.. சார் இப்போ தான் சொன்னார்…

என்னது…. லீடர் வந்தாச்சா?... அய்யய்யோ…

ஹ்ம்ம்.. ஆமா… இன்னும் 5 நிமிசத்துல எம்.டி நீயூ டீம் லீடரோட இங்க வருவாராம்… விஷயத்தை நான் உங்கிட்ட சொல்லிட்டேன்ப்பா… என் வேலை முடிஞ்சது… என கூலாக சொல்லிவிட்டு வள்ளி தன் இடத்தில் சென்று அமர்ந்தாள்…

மஞ்சுவிற்கு இடப்பக்கத்தில் பாலாவும், பாலாவிற்கு இடப்பக்கத்தில் வள்ளியும் அமர்ந்திருந்து தான் வேலை செய்வார்கள்… இப்போது மஞ்சுவின் வலப்பக்கத்தில் உள்ள இடம் கொஞ்ச நாட்களாகவே காலியாக இருக்க… அந்த இடத்திற்கு தான் இப்போது நியூ டீம்லீடர் வருவதாக வள்ளி வந்து சொல்லவும், அவசரம் அவசரமாக எழுந்து அந்த கம்ப்யூட்டரை துடைத்து சுத்தம் செய்தாள் மஞ்சரி..

இந்த தூசி எல்லாம் துடைக்க வச்சிட்டானே… இந்த டீம்லீடர்… வரட்டும்… ஒரு வழி பண்ணிடுறேன்…  என்ன நினைச்சிட்டிருக்கான் இவன்?... இவன் வந்து க்ளீன் பண்ணமாட்டானா?... நான் தான் கிடைச்சேனா இவனுக்கு?... வரட்டும்… வச்சிக்கிறேன்… கச்சேரி…

சே… சாப்பிட்ட கேரட் அல்வா கூட செரிச்சிட்டு… இப்படி நான் வேலை செஞ்சு… என புலம்பிக்கொண்டிருந்தவளுக்கு, தான் இன்று பாலா கொடுத்த காலை உணவை கூட சாப்பிடாதது நினைவுக்கு வந்த்து…

அய்யோ… போச்சு… போச்சு… என்று தலையில் கைவைத்து மஞ்சரி அமரவும்,

ஹேய்… என்னாச்சுடி… சொல்லித்தொலை… காலையிலிருந்தே நீ பண்ணுற அட்டகாசம் தாங்க முடியலை எனக்கு…  என பாலா சொல்ல…

என்னதான் ஆச்சு மஞ்சு… ஏன் இப்போ கத்தின?... என்ன போச்சு ?... என்று அமைதியாக வள்ளியும் கேட்க…

அவள் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு, பின் மௌனமாக,

நான் காலையில இன்னைக்கு சாப்பிடலைடி… என்று சொல்லி முடித்தது தான் தாமதம் என்பது போல்

பாலா, வேகமாக, என்……ன………..து!!!!!!!!???????????... என்று ஆச்சரியத்தில் மூழ்கியவள் சிரிக்க ஆரம்பிக்க,

வள்ளிக்கும் மஞ்சுவின் பதில் கேட்டு சிரிப்பு வர, தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு,

ஏன்… மஞ்சு… சாப்பிடலை?... என்று கேட்டாள் அவளிடம்….

ஹேய்… சிரிக்காதடி… உன்னைக்கொன்னுடுவேன்… என பாலாவிடம் மிரட்டிவிட்டு, இல்ல வள்ளி, நிஜமா மறந்துட்டேன்… என சொல்லி முடிக்க, இப்போது பாலா வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்…

வள்ளியும் தன்னை மறந்து சிரித்துவிட்டாள்…

ஹேய்…. இப்போ எதுக்குடி ரெண்டு பேரும் சிரிக்குறீங்க… அடி வாங்குவீங்கடி… சொல்லிட்டேன்… கடுப்பேத்தாதீங்கடி… ஏதோ ஒருநாள் மறந்துட்டேன்… அதுக்காக இப்படியா சிரிப்பீங்க?... என்று முதலில் கோபமாகவும் பின் பாவமாகவும் கேட்க…

யாரு நீ… மறந்தியா?... இந்த உலகத்துல மறதிக்கு கூட மறதி வரலாம்… ஆனா உனக்கு சாப்பிடவும் தூங்கவும் மட்டும் ஒருநாளும் மறந்ததில்லை… மூணு வேளையும் ஃபுல் கட்டு கட்டுற நீ, திடீர்னு இன்னைக்கு சாப்பிடலைன்னு சொன்னதும், ஒரு நிமிஷம் எனக்கு உலகமே நின்னுட்டுடி…. அதைவிட, மறந்துட்டேன்னு சொன்ன பார்த்தியா, அய்யோ… முருகா… என்னால அதை தான் ஜீரணிக்கவே முடியலை… என்று சொன்ன பாலா, மஞ்சரி முறைப்பதைக் கண்டதும்…

என்னடி பார்வை வேண்டியிருக்கு?... உலகமே அழிஞ்சாலும் உனக்கு சோறு தான் முக்கியம்… அப்படிப்பட்ட நீ மறந்துட்டேன்னு ஒரு வார்த்தை அதுவும் அசால்ட்டா சொல்லுற?.... பின்னே சிரிக்காம என்ன பண்ண சொல்லுற?...

ஹேய்… விடுடி… ப்ளீஸ் என்ற மஞ்சரிக்கு, தான் காலையில் சாப்பிடாமல் போனதற்கான காரணம் வரவும், அவள் முகத்தில் பல்பு எரிந்தது…

பாவம் அவள் என்ன வேண்டும் என்றா சாப்பாட்டை மறந்தாள்… அந்த மைவிழியனின் பார்வையில் சிக்கியவள் அந்த மயக்கத்தில் சாப்பாட்டையே மறந்து தான் போனாள்… அதற்காக அவளை இப்படி கேள்வி மேல் கேட்டால் பாவம் அவள் தான் என்ன பதில் சொல்லுவாள்???

அவளின் முகத்தில் தெரிந்த பிரகாசம் பாலாவின் சிரிப்பை நிப்பாட்ட… வள்ளியின் முகத்தில் யோசனை வந்தது… வள்ளி மெதுவாக அவள் தோள் மேல் கை வைக்க, அவள் முகம் சிவந்தாள்…

ஹேய்… வெட்கப்படுறீயா?... நீயா???... மஞ்சு… நான் காண்பது கனவா?... இல்ல நனவா?... இருடி எதுக்கும் கிள்ளி பார்த்துக்குறேன் என்ற பாலா மஞ்சுவை பலமாக கிள்ள அவள் ஸ்…. ஆ…. என கத்திக்கொண்டே சிரித்தாள்…

என்ன ஆச்சு மஞ்சு?... என வள்ளி கேட்க… மஞ்சு அமைதியாக இருந்தாள்…

அப்போ நீ சொல்லமாட்ட… சரி… என்னமோ பண்ணு… என்றபடி பாலா தன் வேலையைப் பார்க்க போகும் போது, அவள் இருவரின் கைகளையும் பிடித்துக்கொண்டாள்…

என்ன இன்று… இவள் செய்வது எல்லாம் புதிதாக இருக்கிறதே… என்றெண்ணமிட்டபடி வள்ளி அமைதியாக மஞ்சுவையேப் பார்க்க, பாலாவோ, ஹ்ம்ம்… சொல்லு…. என ஊக்கப்படுத்தினாள்…

காலையில் நடந்ததை அப்படியே இருவரிடமும் கூறியவள் அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தாள்…

அடிப்பாவி… காதல் எல்லாம் பொய்… பார்த்தா காதல் வந்திடுமா?... இடிச்சா காதல் வந்திடுமா?... அப்படி இப்படின்னு எல்லாம் அளந்துவிட்டுட்டு இன்னைக்கு இப்படி மொத்தமா காணாம போய் வந்திருக்கியேடி… ஹ்ம்ம்… எல்லாம் காதல் படுத்தும் பாடு போலும்… என்றாள் பாலா தோழியை அணைத்தபடி…

வள்ளியோ, என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள்… மஞ்சு வள்ளியைப் பார்க்க, அவளோ, இவ்வளவு நாள் வராத வெட்கம் கூட எங்க மஞ்சு முகத்தில் வந்துடுச்சே… அதை வரவச்சவங்களை நான் பார்த்தே ஆகணும்ப்பா… என்று சொல்ல… அவளோ அவனைப் பற்றி எதுவும் தெரியாதே என்றாள்…

அடியே… அவரைப் பற்றி எதுவும் விசாரிக்கலையா நீ?... சரியாப்போச்சு போ… என பாலா தலையில் கைவைத்து அமர, இப்போது மஞ்சு அவளை சமாதானம் செய்தாள்…

அவளையே இமைக்காமல் பார்த்திருந்த பாலாவிடம் மஞ்சு என்ன என்று கேட்க, இல்ல நீ இப்படி எல்லாம் சமாதானம் பேசி நான் பார்த்ததே இல்லடி… சின்ன வயசில இருந்தே நான் உன்னைப் பார்க்குறேன்… ஹ்ம்ம்… என்ன கிண்டல் பண்ண அந்த சுட்டிப்பொண்ணா நீ?... இவ்வளவு பொறுப்பா எப்போடீ பேச கத்துக்கிட்ட?... எனவும் மஞ்சு அவளை அடிக்க, வள்ளி பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.