சிரித்துக்கொண்டிருந்த வள்ளியின் பார்வையில் வ்ருதுணன் வருவது தெரிய, அவள் மஞ்சுவிடம் ஹேய்… எம்.டி சார் வராங்க… என்று சொல்ல,
மஞ்சு அவசரம் அவசரமாக வேலை செய்வது போல் நடிக்க ஆரம்பிக்க, வள்ளி அவளை முறைத்தாள்…
எதுக்குடி முறைக்கிற?...
உனக்கு எத்தனை தடவை சொல்லுறது மஞ்சு… அவர் நம்ம எம்.டி… அவர் வரும்போது நம்ம பேசிட்டு இருந்தோம்… அது உண்மைதான்… அதுக்காக அவர் பக்கத்துல வந்துட்டார்ன்னு வேலை செய்யுற மாதிரி நடிக்காதன்னு சொல்லியிருக்கேன் தான?...
நீ நிஜமாவே வேலை செய்யலன்னா கூட அவர் திட்டப்போறது கிடையாது… அப்புறம் எதுக்கு மஞ்சு இந்த போலித்தனம்?...
நீயும் பலமுறை எனக்கு இதை சொல்லிக் காட்டிட்ட… என்ன பண்ண சொல்லுற வள்ளி எனக்கு அப்படியே பழகிட்டு என சொல்லி முடிக்கும்போது,
அதுதானே, நீயாவது திருந்துறதாவது… நீ திருந்திட்டாதான் உலகம் அழிஞ்சிடுமே… என்ற பாலாவின் வார்த்தை இப்போது மஞ்சுவை முறைக்க வைத்தது பாலாவைப் பார்த்து…
ஆமாடி… இப்போ உன்னைத்தான் தேடிட்டு இருக்காங்களாம்…
என்னையா?... என்னை எதுக்கு தேடுறாங்க மஞ்சு?...
எல்லாம் கிளாஸ் எடுக்கத்தான்…
என்ன கிளாஸ்?... எனக்குப் புரியலையே…
உலகத்துல என்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்களாம்… அவங்களை எல்லாம் திருத்த உன்னைத்தான் வலைப்போட்டு தேடுறாங்களாம்… அதுக்குத்தான் கிளாஸ் எடுக்க போன்னு சொல்லுறேன்… என்னப் போறீயா?...
அதுதான் தினமும் கிளாஸ் எடுக்குற ஒருத்திக்கே புரியலையே நான் எடுக்குற பாடம்… இதுல மத்தவங்க மட்டும் புரிஞ்சிப்பாங்களா என்ன?..
ஹ்ம்ம்.. புரியுதா இப்போ… அட்வைஸ் பண்ணுறது ஈசி… அதை அப்ளை பண்ணுறது கஷ்டம்ன்னு… அப்புறம் ஏண்டி நான் திருந்திட்டாலும்ன்னு அலுத்துக்கிற?... முதலில் நீ அதை நிறுத்துடி… அப்புறம் நான் நிறுத்துறேன் எல்லாத்தையும்…
அம்மா தாயே... ஆளை விடு… எனக்கு வேலை நிறைய இருக்கு… நீ என்ன வேணா பண்ணித்தொலை…
ஹாஹாஹா… அது… அப்படி வா வழிக்கு…. என்ற மஞ்சு வள்ளியைப் பார்க்க, அதே நேரம் வ்ருதுணன் வள்ளியை சற்று தொலைவிலிருந்து அழைப்பது புரிந்தது… வள்ளியும் அவனை நோக்கி சென்றாள்…
ஆரம்பிச்சிட்டார்ப்பா இந்த ஹீரோ… அவளைப் பார்க்கலைன்னா சாருக்கு உள்ளே வேலையே ஓடாதே… எப்பப்பாரு அவகிட்ட பேசிட்டு பார்த்துட்டே இருக்குறாரு…
அவளும் அவ முடிவை சொல்லிட்டா… ஆனாலும் விடமாட்டிக்கிறாரே… ஹ்ம்ம்… பாலா இவர் ஏண்டி இப்படி இருக்கிறார்?..
கேள்வி கேட்டவள் பாலாவின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க, அவளோ சற்றும் கண்டுகொள்ளாதவாறு தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்…
அடியே… ஒருத்தி இங்க உங்கிட்ட தான் கேட்டிட்டிருக்கேன்… நீ பாட்டுக்கு வேலைப் பார்த்தா என்ன அர்த்தம்?
ஹ்ம்ம்… எனக்கு வேலை இருக்குன்னு அர்த்தம்… என்றாள் பாலா அமைதியாக…
அடிப்பாவி… அப்பவே மட்டும் உனக்கு பேச வாய் வரலை… இப்போ மட்டும் கூலா பேசுற?... என்ன கொழுப்புடீ உனக்கெல்லாம்?...
…..
அடியே… வள்ளி விஷயமா பேசினா நீ பதில் சொல்லமாட்ட… அது சரி ஒகே… பட் நான் நம்ம ஹீரோ பத்தி தானே பேசுறேன்… அதுக்கும் ஏண்டி பதில் சொல்லமாட்டிக்குற?...
எனக்கு சம்மந்தம் இல்லாத விஷயங்களில் நான் தலையிடமாட்டேன்… அது உனக்கு இன்னும் புரியலைன்னா நான் எதும் செய்ய முடியாது…
உனக்கு இருக்குற திமிர் இருக்கே… அது யாருக்கும் இருக்காதுடி…
சரி… நல்லதுதான்…
எனக்கு நிஜமாவே கோவம் வருதுடி…
வரட்டும்… அதையும் பார்க்குறேன்…
உன்னை… என்ற மஞ்சு எழுந்து கொள்ள முயலுகையில் வள்ளி, வ்ருதுணன் மற்றும் ஒரு புதியவனுடன் அருகே வந்துவிட்டாள்..
அந்த புதியவனை பார்த்ததும் அவள் அப்படியே மீண்டும் இடத்தில் தொப்பென்று அமர்ந்துவிட, பாலா அவளை திரும்பி பார்த்தாள்…
என்ன இவ, பேயைக்கண்ட மாதிரி இப்படி உறைஞ்சு போய் இருக்கா?... யாரைப் பார்த்து இப்படி ரியாக்ஷன் எல்லாம்?... என்று சிந்தித்தவளுக்கு வ்ருதுணன் பதில் அளித்தான்…
பாலா, மஞ்சரி… இவர் தான் இனி உங்க பக்கத்துல இருந்து வேலை செய்யப்போற நியூ டீம் லீடர்… மைவிழியன்….
அப்புறம் இவர் என் கூட என்று மைவிழியனைப் பார்க்க அவன் பார்வை மொத்தமும் மஞ்சரியிடத்தில் தான் இருந்தது…
சற்றே குழம்பியவனாக இவன் என் கூடப்படிச்ச பிரெண்ட்… கொஞ்சம் புத்திசாலி… திறமைசாலியும் கூட… வேற ஒரு கம்பெனியில் இதுவரை வேலைப் பார்த்தான்… இப்போ இவன் மூளைக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுக்கலாம்னு இங்கே கூட்டிட்டு வந்தேன்… என்றவன், சரி நான் கிளம்புறேன்… அடுத்து என்ன செய்யணும்னு அவன் சொல்லுவான்… என்றபடி மைவிழியனின் தோளில் வ்ருதுணன் கைவைக்க, சட்டென்று மஞ்சரியிடத்திலிருந்து பார்வையை அகற்றியவன் பாலாவைப் பார்த்தும், மஞ்சரியைப் பார்த்தும் சினேகமாக புன்னகைத்துவிட்டு, ஒகேடா… நான் பார்த்துக்கறேன்… நீ போய் உன் வேலையைப் பாரு என்றான் மைவிழியன் வ்ருதுணனிடம்…
சரிடா என்றவனும்… என்னாயிற்று இவனுக்கு… இவன் பார்வை எங்கேயோ போகுதே… சரி… அப்பறமா அவனிடம் கேட்டுக்கொள்ளலாம்… என்று முடிவெடுத்துவிட்டு, வள்ளியிடம் நான் சொன்னதை மெயில் பண்ணிடு என்றபடி சென்றுவிட்டான்…
இதுதான் என் இடமா?... ஹ்ம்ம்… சூப்பரா இருக்கே… சுத்தமா… நல்லா க்ளீன் பண்ணிருக்காங்க… என அவன் உண்மையிலேயே புகழ,
அவன் வந்ததிலிருந்து அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த பாலா சிரித்துக்கொண்டே,
நீங்க தேங்க்ஸ் சொல்லணும்னா எங்க மஞ்சுக்கு தான் சொல்லணும்… என்ன சொல்லுறீங்களா?... என கேட்க…
ஸ்… சும்மா இருடி… என்ற மஞ்சு பாலாவைக் கிள்ள…
ஹேய்…. என்னடி… எதுக்கு இப்போ கிள்ளின நீ?... என்று தெரியாதவள் போல் அனைவரின் முன்னிலையிலும் பாலா அறியாதவள் போல் கேட்க
மஞ்சரியோ அவளை வெளிப்படையாகவே முறைத்தாள்…
சரி… இப்படியே சென்றால் நிலைமை மோசமாகிவிடும் என்றெண்ணிய வள்ளி, மைவிழியன் சார், எம்.டி சார் உங்ககிட்ட டீடெயில்ஸ் கொடுக்க சொன்னாங்க… நான் அதை மெயில் பண்ணிட்டேன்… நீங்க செக் பண்ணிட்டு வேறெதும் வேணுமான்னு சொல்லுறீங்களா?... என அவனிடம் கேட்க…
அவனும் நிலைமையைப் புரிந்து கொண்டு கண்டிப்பா மிஸ்.. ?.... என இழுக்க
வள்ளி என்றாள் மஞ்சரி சட்டென்று…
ஓ… சாரி… துணா சொன்னான் நான் தான் மறந்துட்டேன்… எனவும்,
பரவாயில்லை… சார்… அதனால என்ன… உங்க பக்கத்துல தான் மஞ்சு இருப்பா… எதும் ஹெல்ப் வேணும்னா அவளிடம் கேளுங்க… என்றபடி வள்ளி சென்றுவிட, பாலாவோ மஞ்சுவிடத்தில் நீ நடத்து மஞ்சுகுட்டி… என்று கண்ணடித்தபடி அவள் இடத்தில் சென்று அமர்ந்தாள்…
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிற்க, மஞ்சு உட்காருங்க எனவும் மைவிழியன் அமர்ந்தான் அவன் இடத்தில்…
வள்ளி சொன்ன மாதிரி ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க… எனக்கு தெரிஞ்சா பண்ணுறேன்… பட் வள்ளியும் பாலாவும் தான் எனக்கே எல்லாம் சொல்லித்தந்தாங்க… அதனால உங்களுடைய பெரிய பெரிய ஹெல்ப், டவுட்ஸ் எல்லாம் அவங்ககிட்ட கேட்டுக்கோங்க… ப்ளீஸ்… சரியா…??... என மஞ்சு கேட்க…
அவனோ ஒரு சிறு புன்னகையுடன், என்னோட மைடியர் மஞ்சக்காட்டு மைனா செய்யுற ஹெல்ப் மட்டுமே நான் கேட்பேன்… ஒகேயா?? என அவளுக்கு மட்டும் கேட்கும்படி அவன் சொல்ல அவள் முகம் செம்மையாயிற்று… அதை பார்த்துக்கொண்டே அவன் தன் டீம் லீடர் வேலையை ஆரம்பித்தான் இனிதே…
ஹாய்… பிரண்ட்ஸ்… போன வாரம், அந்த புதியவன் யாருன்னு யோசிச்சிருப்பீங்க…
இப்போ அவன் யாருன்னு தெரிஞ்சிடுச்சுல்ல… ஹ்ம்ம்… மைவிழியன்… பேர் நல்லா இருக்கா?...
ஹ்ம்ம்… இப்போ உங்க யோசனை எல்லாம் வ்ருதுணன் – வள்ளி பத்தி தானே இருக்கு…
ஹ்ம்ம்… யோசிச்சிட்டே இருங்க… நான் அடுத்த வாரம் உங்களை எல்லாம் மறுபடியும் மீட் பண்ணுறேன்… டாட்டா…
வரம் தொடரும்…
{kunena_discuss:866}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.