(Reading time: 25 - 50 minutes)

04. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

துதிப்போர்க்கு வல்வினை போம்துன்பம் போம்

 நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டையுங் கை கூடும்

Piriyatha varam vendum

     நிமலரருள் கந்தர் சஷ்டி கவசந்தனை

 அமரர் இடர் தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி…”

என்ற பாடல் காற்றில் கலந்து அந்த ஆலயமெங்கும் பரவி எதிரொலித்தது…

ஆலயத்திற்கே உண்டான அமைதியில், அந்த பாடல் இனிமையாக கலந்திருக்க…. அதை ரசித்த வண்ணம், கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுத்தபடி வலம் வந்து கொண்டிருந்தாள் வள்ளி….

என்ன வள்ளி… இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட போல…. என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தவள் மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தாள்…

வாங்க அத்தை…

என் மருமக வாயால அத்தை சொல்லும்போது நல்லாத்தான் இருக்கு…. என்றார் அங்கே வந்து கொண்டிருந்த அம்பிகா…

ஹ்ம்ம்… இப்போ உடம்புக்கு பரவாயில்லையா அத்தை?...

நீ தான் பார்க்குறீயே… சொல்லு… எப்படி இருக்கேன் உன் அத்தை?...

அப்படி சொன்னதும், அவரை ஏற இறங்க பார்த்தாள் வள்ளி….

வ்ருதுணன் சாருக்கு அம்மான்னு சொன்னா நம்பவே முடியாது அத்தை… சின்ன பொண்ணு மாதிரி அழகா இருக்கீங்க…

அவள் அப்படி சொன்னதும், வேகமாக தனது செல்போனை எடுத்து போன் செய்தார் அம்பிகா…

யாருக்கு அத்தை போன் பண்ணுறீங்க?...

எல்லாம் நீ இப்போ சொன்னியே ஒரு சார்…. அவருக்குத்தான்… என்றதும்,

சட்டென்று அவரின் கையில் இருந்த போனை பிடுங்கினாள் வள்ளி…

ஏய்… என்னடி… எதுக்கு பிடுங்கின?... குடுடி… எங்கிட்ட…

முடியாது அத்தை… அவருக்கு சும்மாவே நான் சார் சொன்னா பிடிக்காது… இதுல நீங்க வேற ஏத்தி விட்டா… அவ்வளவுதான்…

தெரியுதுல்ல… பின்ன ஏண்டி இந்த அடம் பிடிக்குற?... அவன் உனக்கு என்ன உறவு முறை வரும்… நீ என்ன சொல்லி கூப்பிடுற?... உனக்கெல்லாம் அவன் திட்டு தான் சரி… நான் என்னதான் கொஞ்சி சொன்னாலும் கெஞ்சினாலும் நீ சரிப்பட்டு வரமாட்ட… இரு அவனையே கூப்பிடுறேன்… அப்பதான் நீயல்லாம் வழிக்கு வருவ… என்றபடி அம்பிகா வாசலை நோக்கி நடக்க…

அடடா… அத்தை… என்ன இது சின்னப்பிள்ளையாட்டம் பண்ணுறீங்க?... கோவிலுக்கு வந்தவங்க யாராச்சும் பார்த்தா… என்ன நினைப்பாங்க?...

என்ன நினைப்பாங்க… மாமியாரும், மருமகளும் பேசிக்கிறாங்கன்னு நினைப்பாங்க… அப்படித்தான அம்மா… என்ற வ்ருதுணனின் குரலில் தூக்கி வாரிப்போட்டவளாக நிமிர்ந்தாள் வள்ளி…

நானே உன்னை வர சொல்லணும்னு நினைச்சேண்டா… நல்லவேளை நீயே வந்துட்ட… என்று அம்பிகா சொன்னதும்,

என்னம்மா நீங்க… அதான் கையில போன் இருக்குல்ல… உடனே பேசணும் வாடான்னு போன் பண்ணினா வந்துடப் போறேன்… என்றவன், தன் தாயின் பார்வை வள்ளியின் கையிலிருக்கும் அவரது போனில் பதிவதை கண்டதும், விஷயம் அவனுக்கும் ஓரளவு புரிந்துவிட்டது…

என்னம்மா… உங்க மருமகளுக்கு போன் வேணும்னா எங்கிட்ட கேட்கவேண்டியது தான… அதைவிட்டுட்டு உங்க போனை எடுத்து வச்சிருக்கா?... நீங்களும் கண்டுக்காம இருக்கீங்க?...

அதுசரி… அவ என் கையில இருந்து பிடுங்கி வச்சிருக்காடா… நான் கேட்டாலும் தர மாட்டிக்கிறாளே…. அதான் இப்போ நீ வந்துட்டல்ல… நீயே கேட்டு என் போனை வாங்கி தா…

தாய் சொன்னதும் அவன் பார்வை வள்ளியிடம் பதிய, அவள் அமைதியாக உதடு கடித்த வண்ணம் நின்றிருந்தாள்…

இல்ல… வந்து… அத்தை… உங்களுக்கு….போன்.. என்று இழுத்தவளைப் பார்த்து வ்ருதுணன் சிரிக்க,

அம்பிகாவோ, சரிதான்… அவளைத் திட்டுவன்னு பார்த்தா, நீ என்னடான்னா, சிரிக்குற?... என்னடா துணா… இப்படி பண்ணிட்டியே… என்று போலியாக வருத்தப்பட…

எனக்கு அவ மேல கோபம் வராதுன்னு என்னைவிட உங்களுக்கே நல்லா தெரியும்… அப்படியே வந்தாலும் ஒரு நிமிஷத்துக்கு மேல தாக்குப்பிடிக்காதுன்னும் தெரியும்தானம்மா… அப்புறம் என்ன?... என்ற வ்ருதுணனின் பதிலில் அவரும் திருப்தி அடைய…

சரி துணா… நீயாச்சு… அவளாச்சு… நான் எதும் சொல்லலைப்பா…. என்று கைகளை அவர் விரிக்க…

இப்போதான் நீங்க… மை… ஸ்வீட் மாம்… என்று தாயைக்கொஞ்சிக்கொண்டிருந்தவனின் செல்போன் சத்தம் கொடுக்க…

அதுக்கே பொறுக்கலைடா… நீ சொல்லுறது… பாரேன்… அதுக்கு கூட தெரிஞ்சிருக்கு நீ பொய் சொல்லுறது… என்ன வள்ளி நான் சொல்லுறது கரெக்ட் தான?... என்று கேட்ட அம்பிகாவிற்கு அப்போதும் தனது சிரிப்பைப் பதிலாக வள்ளி தர, வ்ருதுணனுக்கும் அவளது சிரிப்பு ஒட்டிக்கொண்டது…

உங்களை வந்து பேசிக்கிறேன்மா… என தாயைப் பார்த்து சொல்லியவன், அவளிடம் வந்துடுறேண்டா… என்றபடி சைகையில் விடைபெற அவளும் கண் மூடி இமைத்து விடைகொடுக்க…

ஹ்ம்ம்… நான் எதும் பார்க்கலைப்பா… என்ற அம்பிகா,

அத்தை…. என்ற வள்ளியின் அழுத்தமான அழைப்பில் அமைதியானார்…

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரே பேச்சை ஆரம்பித்தார்…

என்ன முடிவு பண்ணியிருக்க வள்ளி?...

எதைப் பற்றி என்று அவள் கேட்கவில்லை… ஏனெனில் அவளுக்குத் தெரியும்… அவர் எதைப் பற்றி கேட்கிறார் என்பது… இன்று நேற்றா அவர் இந்த கேள்வியை அவளிடத்தில் கேட்கிறார்?... கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே இந்த கேள்வியை அவரும் அவளிடத்தில் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்... ஆனால் அவள் சிரித்தே சமாளித்துவிடுவாள்… இன்றும் அவள் சிரிப்பை பதிலாக தரும் முன்னரே,

இன்னைக்கும் சிரிச்சே சமாளிக்கணும்னு முடிவு பண்ணாத வள்ளி… உன் வாழ்க்கை இப்படியே இருக்க நீ வேணா ஆசைப்படலாம்… ஆனா, அது உன்னைத் தவிர வேற யாருக்கும் சந்தோஷம் கொடுக்காது கொஞ்சம் கூட… அதை புரிஞ்சிக்காம இருக்க நீயும் விவரம் தெரியாத சின்னப்பொண்ணு இல்ல… பெற்றவங்களுக்கும் சில கடமைகள், பொறுப்புகள் இருக்கு… அதை நீ உணர்ந்தா கூட எனக்கு நிம்மதியா இருக்கும்… ஆனா, அதை நான் கண்டுக்கவே மாட்டேன்னு சொல்லுற மாதிரி இருக்கு உன் அமைதி… இன்னும் எத்தனை நாளுக்கு நீ இப்படி இருக்கப்போற?... இந்து, இந்துன்னு… என சொல்லிக்கொண்டிருந்தவர், வள்ளியின் பார்வை தன் பின்னே பதியவும் திரும்பி பார்த்தார்…

ஷ்…. இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாம வந்துடுறான்… என்று மனதினுள் மகனுக்கு அர்ச்சனை செய்தவர், உனக்கெல்லாம் சீக்கிரம் கல்யாணம் ஆகிடும்டா துணா… என்று நொந்துகொண்டார்…

அம்பிகாவின் முகபாவனைகளை வைத்தே அவரின் எண்ணத்தை அறிந்த வள்ளி… எல்லாம் உங்க ஆசீர்வாதத்தில் சீக்கிரம் நல்லபடியா நடக்கும் அத்தை… என்று சொல்ல…

ஆமாடி… வா… இதை சொல்லத்தான் ஆள் இல்லன்னு உன்னைத் தேடினேன்… என்று அவளை முறைத்தவரின் அருகே வந்து வ்ருதுணன் அமர்ந்து கொள்ள,

என்னம்மா?... எதோ தேடினேன்னு பேச்சு அடிபட்டுச்சு?... யாரைத் தேடினீங்கம்மா?...

அது உன்னைத்தான்ப்பா… போன் பேச போனவனை ஆளைக் காணோம்னு வள்ளிட்ட சொல்லிட்டிருந்தேன்… வேற ஒன்னும் இல்லை என்றவர், பற்களைக் கடிக்க… அவனும் ஓ… சரிம்மா… என்றபடி அமைதியாகிவிட்டான்…

பார்த்துக்கொண்டிருந்த வள்ளிக்கு சிரிப்பு தன்னை மீறி வர, அடக்கிக்கொண்டு சரி அத்தை… நேரமாச்சு… நான் கிளம்புறேன்… என்று சொல்ல…

அம்பிகாவோ கோபத்தில் அவளை முறைத்தார்… அவள் அதைக் கண்டு கொள்ளாமல் அடுத்தவாரம் வரேன் அத்தை… என்று அவரிடம் சொல்லியவள், வரேன் என்றபடி அவனிடம் விடைபெற முயல, நான் வீட்டில் விடவாடா?... என்ற அவனின் கேள்விக்கு சிரிப்பை பதிலாக கொடுத்துவிட்டு வள்ளி சென்றுவிட, அவள் போன திசையையேப் பார்த்துக்கொண்டிருந்த வ்ருதுணனின் தோள் மேல் ஒரு கரம் விழ, யாரென்று பார்த்தவனின் இதழ்கள் யுவிம்மா… என்ற கூக்குரலிட்டது சந்தோஷத்தில்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.