(Reading time: 25 - 50 minutes)

 

விழியா… என்னடா… என்னாச்சு… வந்ததிலிருந்து இப்படியே இருக்குற?...

ஒன்னுமில்லம்மா… என்றவன் அம்மா… நீ இப்படி உட்காரேன் என்று தன் அருகே கைகாட்ட

அவனருகில் வந்து அமர்ந்தார் துர்கா… மைவிழியனின் அம்மா…

தாயின் தோள் சாய்ந்து கொண்டவனைத் தட்டிக்கொடுத்தவர்,

விழியா… என்னப்பா?... என்று கேட்க…

ஒரு பொண்ணுக்கு ஒரு ஆண் மேல இருக்குற உரிமை கோபமா மாறுமா அம்மா?...

இப்போ இந்த கேள்வி எதுக்குடா?...

பதில் சொல்லும்மா… ப்ளீஸ்… என்று அவன் கெஞ்ச…

மகனின் மனநிலையை உணர்ந்தாற்போல், சரி சொல்லுறேன்… ஆனா, இப்போ இல்லை… கொஞ்ச நேரம் கழிச்சு சரியா?.. என்று கேட்க… அவனும் சரி என்று தலைஅசைத்துவிட்டு அமைதியாக தாயின் தோளில் நிம்மதியாக கண் மூடி யோசித்தான் அன்றைய நிகழ்வை…

அலுவலகத்திற்கு மைவிழியன் வந்ததிலிருந்து அவனுக்கு ரசிகை பட்டாளம் கூடிக்கொண்டே போனது…

அவனின் பேச்சு… குறும்பு… செய்கை… என அனைத்தும் அங்கிருந்தோரின் பார்வையை வருடாமல் இல்லை…

அதில் சில பெண்கள் நட்பு ரீதியில் அவனிடம் நெருக்கம் காட்ட முற்பட, அதனை இனம் கண்டு கொண்ட மஞ்சுவிற்கு மைவிழியனின் மேல் கோபம் வந்தது…

இவனாவது, கொஞ்சம் அடக்கி வாசித்திருக்க வேண்டும்… மஞ்சு வந்து நின்றாலும், தனது வேலையை செவ்வனே செய்வது போல், அந்த பெண்கள் வேலை நிமித்தமாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான் அவன் பொறுமையாக…

மஞ்சுவிற்கோ பொறுமை காற்றில் பறக்க, சார்… என்றாள் அழுத்தத்துடன் கூடிய சத்தத்துடன்…

சரி சார்… நாங்க அப்புறம் வரோம்… என்றபடி அந்த பெண்கள் சென்றுவிட, இவனும் அவர்கள் செல்லும்வரை பார்த்திருந்து கைகாட்டிவிட்டு, மஞ்சுவிடம் திரும்ப, அவள் காளி அவதாரம் எடுத்திருந்தாள்…

என்னாச்சு மைனா….

என்ன ஆகணும் இன்னும்… அதுதான் பார்த்தேனே… எல்லாம்…

ஹேய்… என்னாச்சுடி… புரியும்படி சொல்லு…

ஆஹா… உங்களுக்கு ஒன்னுமே புரியாது… பச்ச குழந்தை நீங்க… என்று அவள் கோபத்துடன் சொல்ல…

அவனுக்கு அவள் கோபம் புதிதாக தெரிந்தது… நிஜமாகவே அவன் அவளின் கோபத்திற்கான காரணம் அறிந்திருக்கவில்லை…

என்னாச்சு டியர்?... என்று அவளருகில் வர..

அங்கேயே நில்லுங்க… பக்கத்துல வந்தீங்க… அவ்வளவுதான்… செய்யுறது எல்லாம் செஞ்சுட்டு என்ன டியர் வேண்டி இருக்கு?...

ஹேய்… என்னடி நான் செஞ்சேன்?... சொன்னாதான எனக்கு தெரியும்….

நீங்க தான் எதுவும் செய்யலையே… ஒருத்தி கல்லு மாதிரி அரைமணி நேரமா இங்கே நின்னுட்டிருக்கேன்… அதைக்கொஞ்சம் கூட கவனிக்காம உங்க வேலையை மட்டும் தானே பண்ணிட்டிருந்தீங்க… அதுவும் என்ன சிரிப்பு என்ன சிரிப்பு…. அப்படியே அத்தனை பேரும் உங்களையே தான வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டிருந்தாங்க…

ஓ… அதுவா… தெரியலைன்னு வந்து டவுட் கேட்டாங்க… அதான் சொல்லிக்கொடுத்துட்டிருந்தேன்… நீ வந்ததை நிஜமா நான் கவனிக்கலைடி… சாரி…

உங்க சாரியை நீங்களே வச்சுக்கோங்க… எனக்கொன்னும் தேவை இல்லை…

என் மஞ்சக்காட்டு மைனாக்கு என்ன ஆச்சு?... இன்னைக்கு?... ஏன் இவ்வளவு கோபம்?..

யாருக்கும் எதுவும் ஆகலை… உங்களுக்கு தான் புதுசு புதுசா ஃப்ரெணட்ஸ் அதுவும் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சிருக்காங்க… அதுதான் மனசு குளிர்ந்து போய் இருக்கேன்…. சந்தோஷத்துல… போதுமா?...

மைனா… லூசு… இதுக்கா இவ்வளவு கோபம்… நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சேன்… சே… லூசு… அவங்க ஜஸ்ட் கூட வேலை பார்க்குறவங்க… அந்த எண்ணத்துல தான் நான் அவங்களுக்கு சொல்லிக்கொடுத்தேன்…

லூசா?... ஆமா… சார்… நான் லூசுதான்… பைத்தியம் தான்… எனக்கு இதுவும் வேணும்… இன்னமும் வேணும்…

சின்ன விஷயத்தை நீ தான் பெரிசாக்குற மைனா இப்போ?...

என்னது?... இது சின்ன விஷயமா?... ஏன் சொல்லமாட்டீங்க நீங்க?... என் இடத்துல இருந்து நீங்க யோசிச்சா தெரியும்… இது சின்ன விஷயமா இல்லையான்னு…  என்றவள், விடுங்க… என் இடத்துல நீங்க இருந்து யோசிச்சு பார்க்க வேண்டாம்…

நானும் நாளைக்கு இப்படி நாலு பசங்களுக்கு டவுட் சால்வ் பண்ணுறேன்… அப்போ உங்களுக்கு கோபம் வருதா இல்லையான்னு நானும் பார்க்குறேன்… என்று சொல்லவும்

ஷட் அப் மைனா… லூசாட்டம் பேசாதே… நீ அப்படி சொல்லிக்கொடுத்தா… நான் தப்பாவே நினைக்க மாட்டேன்… உன்னை மாதிரி… முதலில் நீ அதை தெரிஞ்சிக்கோ… என்ற அவனின் வார்த்தைகளில் உண்மையில் கோபம் தெறிக்க…

அவள் விழிகளில் நீர் சூழ்ந்தது…

அவள் கண்களில் கண்ணீரைக்கண்டதும், அவன் அவளிடம் பேச முயல, அவள் தடுத்தாள் அவனை…

என்னை நீங்கப் புரிஞ்சிகிட்டது இவ்வளவுதான்ல… நான் உங்களை தப்பா நினைக்கலை… நான் வந்தது கூட தெரியாம அவங்களுக்கு நீங்க சொல்லிகொடுத்தது எல்லாம் சந்தோஷம் தான்.. வேலையில் ஈடுபாட்டோடு இருக்குறீங்கன்னு… ஆனா, யாருக்கு சொல்லிக்கொடுக்குறோம் என்றும் நாம பார்க்கணும்… அவளுங்க எல்லாம் உங்களோட பேச்சு வார்த்தை வச்சிக்கணும்னே வந்து பேசிட்டிருந்தாளுங்க… அது தெரியுமா உங்களுக்கு?.. நான் வந்து நின்னதும் அதுல ஒருத்தி என்ன பார்த்துக்கிட்டே உங்ககிட்ட சிரிச்சு சிரிச்சு கேள்வி கேட்டுகிட்டு இருந்தா?.. அதுதான் புரியுமா உங்களுக்கு?...

நீங்க எனக்கு மட்டுமே சொந்தமானவர் என்ற எண்ணம் என் மனசில வேரோடி இருக்கு… அது உங்களுக்கும் தெரியும் தானே… எனக்கு சொந்தமான பொருளை இன்னொருத்தர் சாதாரணமா பார்த்தா எனக்கு எதுவும் இல்லை… ஆனா, என்னை நோகடிச்சிட்டு உங்களை அபகரிக்குற மாதிரி பார்த்து பேசி பழகினா, சராசரி பொண்ணா எனக்கு கோபம் வர தான் செய்யும்… அந்த கோபம் உங்க மேல சந்தேகப்பட்டு இல்ல… எனக்கு சொந்தமானவர்கிட்ட இவளுங்களுக்கு என்ன பேச்சு, அதும் என்ன வெறுப்பேத்திவிட்டுட்டுன்ற ஆதங்கம் தான் கோபமா மாறிடுச்சு… அதுவும் அவங்க மேல தான்… உங்க மேல இல்ல…

அந்த கோபத்தை நான் உங்ககிட்ட வார்த்தையால வெளிப்படுத்தினேன்… அது தான் நான் பண்ணின தப்பு… ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை நீங்க சொல்லியிருந்தா அப்பவே நான் அமைதியாகிருப்பேன்… ஆனா நீங்க சொல்லலை… என் மனசுல அவளுங்க மேல இருந்த கோபமும், நீங்க அந்த வார்த்தையை சொல்லலன்ற வருத்தமும் சேர்ந்து உங்ககிட்ட அதிகமா பேசவச்சுட்டு…

உங்க கிட்ட இவ்வளவு தூரம் கோபமோ, ஆதங்கமோ நான் படுறேன்னா, அதுக்கு ஒரே ஒரு காரணம் தான்… அது உங்க மேல எனக்கு இருக்குற உரிமை… அதை வேற யாருக்கும் நான் கொடுக்க தயார் இல்லை… நீங்க என் காதலன்… எனக்கு மட்டுமே சொந்தமான என் புருஷன்… எனக்கு உங்ககிட்ட இருக்குற உரிமையும் காதலும் உங்களுக்குப் புரியலை… நான் உங்களை சந்தேகப்பட்டேன்னு நினைச்சிட்டீங்கல்ல… பரவாயில்லைங்க…

சத்தியமா நான் உங்ககிட்ட சந்தேகப்பட்டு பேசவே இல்ல… அவங்களைப் பத்தி சொல்லதான் வந்தேன்… அவங்க பண்ணினது எனக்கு கோபத்தை வரவைச்சிட்டு… அதை நான் உங்களிடம் காட்டினது தான் நான் செய்த தப்பு… கோபத்துல வார்த்தையை விட்டுட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க… நான் வரேன்… என்றவள் அவன் பதிலை எதிர்பாராது விறுவிறுவென்று சென்றுவிட,

டேய்… மைவிழியா… என்னடா நினைச்சிட்டிருக்குற நீ?... நேத்து மஞ்சரி பிறந்தநாள் கொண்டாடின போல?... இப்போ என்னடான்னா அந்த பொண்ணு போறதையே இப்படி பார்த்துட்டிருக்குற?... என்னடா நீ எதோ வேற ரூட்ல போற மாதிரி இருக்கு… டேய்… அந்த பொண்ணு கலகலன்னு பேசுவா… பட் ரொம்ப நல்ல பொண்ணுடா… உன் திருவிளையாடல் எல்லாம் அந்த பொண்ணுகிட்ட காட்டாத… பாவம்டா… அவ… என்று வ்ருதுணன் சொல்வதை காதிலேயே வாங்காமல் சென்றுவிட்டான் மைவிழியன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.