(Reading time: 25 - 50 minutes)

ம்மா… என்றவன் மஞ்சரியை சந்தித்தது முதல் சற்று முன்பு நடந்த அனைத்தையும் தாயிடத்தில் சொல்லிவிட்டு, அவரின் முகம் பார்க்க…

அவ மேல உனக்கு கோபம் இருக்கா விழியா?..

இல்லம்மா…

அவளை உனக்குப் பிடிச்சிருக்கா?...

ரொம்ப பிடிச்சிருக்கும்மா…

அவ சொன்னது உனக்கு புரிஞ்சதா?...

ஹ்ம்ம்…. புரிஞ்சதும்மா… ஆனா, ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தான்னு சொன்னா… அது என்ன வார்த்தைன்னு தான்மா தெரியலை…

உனக்கு தெரியலைன்னு எனக்கும் தெரியும் விழியா…

அது என்ன வார்த்தைம்மா… சொல்லும்மா… ப்ளீஸ்மா… உனக்கு தெரியுமா?... சொல்லும்மா…

உனக்கு தான் புதுசு புதுசா ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்குன்னு அவ சொன்னப்போ நீ சொன்ன பதில் தான் அவ கோபத்தை மேலும் பெரிசாக்க காரணம்…

என்னம்மா… சொல்லுற?... எனக்கு புரியலை…

விழியா… அவ அப்படி சொன்னப்போ, நீ பேசாம இருந்திருந்தா கூட பரவாயில்லை… ஆனா, நீ இதுக்கா இவ்வளவு கோபம், நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சேன்னு சொன்ன பார்த்தியா… அதுதான் முழு காரணம்…  அவளைப் பார்த்து சிரிச்சிகிட்டே உங்கிட்ட சிரிச்சு சிரிச்சு மத்த பொண்ணுங்க பேசிட்டு போன பின்னாடி அவ அத உங்கிட்ட சொல்லும்போது, இதுக்கா இவ்வளவு கோபமான்னு கேட்டா எந்த பொண்ணுக்கு தான் கோபம் வராது?... அது மட்டும் இல்லாம, அவ கேர்ள் ஃப்ரெண்ட் பத்தி சொன்னதும், நீ அதை கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்ல… அதுவும் அவளோட கோபம் பெரிசாக காரணம்…

அம்மா… நீ… சொல்ல வர்றது…

ஹ்ம்ம்… அதேதான்… விழியா…

ஆயிரம் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாலும், நீ மட்டும் தான் என் பொண்டாட்டின்னு நான் சொல்லியிருந்தா…

அவ அமைதியாகி இருப்பா… சிம்பிள்….

உனக்கு ஆயிரம் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாலும் அவளுக்கு அது பெரிசில்லை… ஆனா, உன்னோட உரிமையான பொண்டாட்டியா, தோழியா, அவ இருக்கணும்னு ஆசைப்படுறா… அது தப்பில்லையே விழியா… எல்லா பொண்ணுங்களும் விரும்புறதுதான் இது… என்ன ஒன்னு அதை சில பசங்க லேட்டா புரிஞ்சிக்குறாங்க… சில பசங்க சீக்கிரம் புரிஞ்சிக்குறாங்க… நீ இப்போ புரிஞ்சிகிட்டன்னு நானும் நம்புறேன்…

ஹ்ம்ம்ம்… புரிஞ்சிகிட்டேன்மா… தேங்க்ஸ் மை டியர் ஸ்வீட் துர்கா… என்றவன் தாயின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, தன் அறைக்கு விசில் அடித்தபடி செல்ல…

நல்ல பிள்ளை… என்று அவன் செல்வதையேப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தன் வேலையைப் பார்க்க சென்றார் துர்கா…

தனது அறைக்கு சென்றதும் மஞ்சரியை போனில் அழைத்தவன், அவள் சொல்லுங்க என்று சொன்னதும், எதுவும் பேசாமல் அமைதி காத்தான்…

போன் பண்ணிட்டு பேசாம இருந்தா என்னங்க அர்த்தம்?...

….

என்னங்க… என்னாச்சு பேசுங்க…

என் மைனாக்கு என் மேல கோபமா?

யாரு சொன்னா?... கோபம்னு… அதெல்லாம் எதுவுமே இல்லை… ஏன் இப்படி கேட்குறீங்க?...

உன்னை அழ வைச்சிட்டேன்லடி… சாரிடி…

அடடா… சும்மா இருக்க மாட்டீங்க போலயே…

ஹேய்… நான் என்ன உன் பக்கத்துல இருந்து உங்கிட்ட வம்பா பண்ணுறேன்… சும்மா இருக்க மாட்டீங்க போலன்னு சொல்லுற?... நான் இங்கேயும் நீ அங்கேயும் தான இருக்குறோம்… பின்ன என்ன?...

……

ஹேய்… என்னாச்சு… இப்போ நீ அமைதி ஆகிட்டியா?... சரி சரி… இனி இப்படி எல்லாம் பேச மாட்டேன்… ஓகேயா…

அதெல்லாம் எதுமில்லை… இப்போ நீங்க என் பக்கத்துல இருந்தா நல்லா இருக்கும்னு தான் எனக்கும் தோணுது… என்று அவள் சற்றே கலங்கிய குரலில் சொல்லவும்,

என்னாச்சு மைனா?... எதும் பிரச்சினையா?...

வீட்டில எதோ பையன், தரகர், அது இதுன்னு பேசிக்கிறாங்க… அதான்…

நான் உங்கூட தாண்டி இருக்கேன்… நீ என் பொண்டாட்டி… அதை மட்டும் மனசில வச்சுக்க… மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்… நீ கவலைப்படாம இருடி… ப்ளீஸ்… இருப்ப தானே?... என்ற அவனின் கேள்விக்கு அவளின் அழுகை மட்டுமே பதிலாய்…

ஹேய்… மஞ்சக் காட்டு மைனா… அழாதடி… என் செல்லம்ல… என்று அவன் கொஞ்ச, அவள் சிரிப்பு சத்தம் இப்போது கேட்டது அவனுக்கு…

ஹாய்… பிரண்ட்ஸ்… First of all… பெரிய சாரி… சொல்லிக்குறேன்… லாஸ்ட் வீக் எபிசோட் தராததுக்கு… இனி ரெகுலரா எபிசோட்ஸ் தந்துடுறேன்… சாரி….

ஹ்ம்ம்… சரி… இப்போ கதைக்குப் போகலாம்…

வள்ளி ஏன் கல்யாணத்திற்கு சம்மதிக்கலை?...

இந்துன்னு ஏதோ அம்பிகா சொல்லவந்தது என்ன?...

தேவி சொல்லுற மாதிரி வள்ளி தான் அவங்க பையன் பொண்டாட்டியா?...

மஞ்சு-மைவிழியன் காதல் பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படுமா?...

மஞ்சுவிற்கு வீட்டில் பார்க்கப்போகும் பையன் யார்?...

மைவிழியன் அடுத்து என்ன செய்யப்போகிறான்?...

இப்படி நிறைய கேள்விகள் உங்களுக்கு வந்திருக்குமே… ஹ்ம்ம்… யோசிச்சிட்டே இருங்க…. நான் அடுத்த வாரம் சில பதிலோட உங்களை மறுபடியும் மீட் பண்ணுறேன்… டாட்டா… 

வரம் தொடரும்…

Episode # 03

Episode # 05

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.