(Reading time: 25 - 50 minutes)

ன்னங்க… இப்படி யோசிச்சிட்டே இருந்தா என்ன அர்த்தம்?... சட்டு புட்டுன்னு முடிவெடுங்க… இன்னும் எத்தனை நாள் பொண்ணை நம்ம வீட்டுல வச்சிருக்க முடியும்?... காலாகாலத்துல அவளுக்கு ஒரு நல்லது நடத்தி பார்க்க வேண்டாமா?...

என்ன விஜயா, நான் என்னமோ மாட்டேன்னு சொல்லுற மாதிரி பேசுற?... நம்ம பொண்ணு மஞ்சரி மேல எனக்கு மட்டும் பாசம் இல்லையா என்ன?... என்று சற்றே குரல் உயர்த்தினார் நீலகண்டன்…

நீலகண்டன்-விஜயா தம்பதியின் ஒரே மகள் தான் மஞ்சரி…

நம்ம பக்கத்துவீட்டுப் பெண் வயது தானே நம்ம பொண்ணுக்கும் ஆகுது… அந்த பொண்ணை வந்து பெண் பார்த்துட்டு போயிட்டாங்க… நம்ம பொண்ணுக்கும் நாம பெத்தவங்களா, பொறுப்பா நடக்க வேண்டியதைப் பத்தி யோசிக்கணும்ல?...

விஜயா…. மெதுவா பேசு… அன்னைக்கு நடந்தது நமக்கும் தெரியும் தான?... அது தெரிஞ்சும் நீ இப்படி பேசுறது எனக்கென்னமோ சரியாப் படலை...

என்ன சரியாப் படலை?... நான் என்ன அதே பையனையா நம்ம பொண்ணுக்கு பேசி முடிக்க சொன்னேன்?... அந்த பையன் மாதிரி நல்ல பையனா பார்த்து… என்று சொல்லிக்கொண்டே போனவர்,

ஏங்க… நம்ம மூர்த்தி அண்ணன் பையன் ரொம்ப நல்ல பையன்… நாம மூர்த்தி அண்ணன் கிட்ட பேசி பார்த்தா என்ன?... இந்த இடம் முடிஞ்சா நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கும்ங்க…

மூர்த்தி வீட்டிலயா?...

ஆமாங்க… மூர்த்தி அண்ணன் வீட்டில்தான்.. நாம தரகர் கிட்ட பேசிப் பார்ப்போம்… நீங்க என்ன சொல்லுறீங்க?...

சரி… விஜயா… நீ முடிவெடுத்துட்ட… இனி என்ன இருக்கு நான் சொல்லுறதுக்கு… ஹ்ம்ம்… தரகர்கிட்ட சொல்லிப்பார்க்கிறேன்…

இருங்க… நான் போய் தரகர் போன் நம்பர் எடுத்துட்டு வரேன்… என்றபடி விஜயா உள் அறைக்குள் செல்ல, நீலகண்டனோ யோசனையில் ஆழ்ந்தார்…

யுவிம்மா… என்ற கூக்குரலிட்டவன் எதிரே நின்ற தன் தாயின் ஜாடையில் இருந்த பெண்மணியை அணைத்துக்கொண்டான்…

பின், என்ன யுவிம்மா… தனியாவா வந்தீங்க?... அப்பவே சொல்லியிருந்தா சேர்ந்தே வந்திருக்கலாம் தான?...

பரவாயில்லடா… அதான் இப்போ சேர்ந்தே போகலாமே வீட்டுக்கு… பின்ன என்ன?...

அதுவும் சரிதான் யுவிம்மா… என்றவனிடத்தில், துணா, நீ போய் ஒரு மாலை வாங்கிட்டு வா… முருகனுக்கு சாத்தணும்… நான் மறந்துட்டேன்… என்று அவனை அனுப்பி வைத்தார் அம்பிகா…

என்ன அக்கா… துணாவை எதுக்கு மாலை வாங்க அனுப்பின?...

ஒன்னுமில்ல தேவி… எல்லாம் வள்ளி விஷயம்தான்…

வள்ளியா?... உங்கூட ஒரு பொண்ணு பேசிட்டிருந்தாலே இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி… அந்த பொண்ணுதான் வள்ளியா?...

ஆமா… தேவி… நீ அவளைப் பார்த்தியா?...

ஆமாக்கா… பார்த்தேன்… இன்னைக்கு தான் பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சது… நம்ம வீட்டுக்கு ஏற்ற மருமகள் தான்…

ஹ்ம்ம்… என்னத்த… அவதான் சம்மதிக்க மாட்டிக்குறாளே தேவி…

அட நீ ஏன்க்கா வருத்தப்படுற?... அவதான் என் பையனுக்கு பொண்டாட்டி… அந்த முருகனுக்கு தெரியும் எப்போ என்ன பண்ணனும்னு… நீ வா… பேசாம… என்று தன் உடன் பிறந்த தமக்கையை அழைத்துக்கொண்டு சென்றார் தேவி…

அதே நேரம் அலுவலகத்தில்,

வண்ண வண்ணப் பூத்தூவல்களின் நடுவில் நின்று கொண்டிருந்தாள் மஞ்சரி… உதட்டில் உறைந்து நின்ற புன்னகையுடன்…

சுற்றியிருந்தோர்களின் கைத்தட்டல் ஒலியும், வாழ்த்தொலிகளும், அவளை திக்குமுக்காட வைக்க, அனைத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டு, எதுவுமே தெரியாதவாறு நின்றுகொண்டிருந்த மைவிழியனின் மேல் தான் அவளின் மொத்த பார்வையும் இருந்தது…

ஹ்ம்ம்… ஹ்ம்ம்… மேடம்… நாங்களும் இங்கே தான் இருக்குறோம்… எங்களையும் கொஞ்சம் பார்த்தா நல்லா இருக்கும்… என்று பாலா மஞ்சரியிடம் சற்று குனிந்து சொல்ல,

மஞ்சரியோ அவள் பேச்சை காதில் வாங்கியும் வாங்காமல் மௌனமாக இருந்தாள்…

பின் அனைவரும், அவரவர் வேலையைப் பார்க்க சென்றுவிட, வள்ளி, பாலா, மஞ்சு, மைவிழியன் ஆகிய நான்கு பேர் மட்டும் அங்கே இருந்தனர்…

அப்பறம், மைவிழியன் சார், டுடே லஞ்ச்… எங்க?...

எங்க வேணும்னு சொல்லுங்க பாலா… ஜமாய்ச்சிடலாம்…

அதான் ஆபீசையே ஒரு கலக்கு கலக்கிட்டீங்களே… இன்னைக்கு… இன்னும் பண்ணினா உலகம் தாங்காது சார்…

ஹாஹாஹா… அப்படியா சொல்லுறீங்க… சரி நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்…

ஹ்ம்ம்… சரி சார்… நாங்க போய் வேலையைப் பார்க்குறோம்… என்ற பாலா, மஞ்சுவின் கைப்பிடித்து இழுக்க, அவள் அசையாது நின்றாள்…

என்னடி… பிறந்தநாள் தான் கொண்டாடியாச்சுல்ல… இன்னும் என்ன யோசனை?... வேலைப் பார்க்குற ஐடியா இருக்கா இல்லையா?...

இல்ல பாலா… அது வந்து….

என்னது இல்லையா?... என்னடி சொல்லுற?...

பாலா… அது வந்து…. என்று மஞ்சு இழுக்கும்போதே, குறுக்கே புகுந்த மைவிழியன்,

மஞ்சுக்கு ஒரு கிப்ஃப்ட் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன் பாலா… அதான் அவங்களை வெளியே அழைச்சிட்டு போகலாம்னு இருக்கேன்… ஹ்ம்ம்ம் உங்களுக்கொன்னும் பிரச்சினை இல்லையே… என கேட்க…

ஹ்ம்ம்… பர்த்டே பேபி… அவ விருப்பம் தான் என் விருப்பமும்… பட் என்ன கிஃப்ட்ன்னு எங்கிட்ட சீக்கிரம் வந்து காட்டணும்… ஒகேன்னா, என் ஃப்ரெண்ட் உங்ககூட வருவா?... இல்லன்னா நான் ஃப்ரெண்டை போகவிடமாட்டேன்ப்பா… என்றாள் பாலாவும்…

கண்டிப்பா உங்ககிட்ட தான் முதலில் மஞ்சு காட்டுவா… அதுக்கு நான் கேரண்டி…

ப்ரீத்திக்கு நான் கேரண்டி விளம்பரம் தான் பார்த்திருக்கேன்… இப்போதான் மஞ்சுக்கு நான் கேரண்டின்னு ரியல் லைஃப்ல பார்க்குறேன்… எனவும்

மைவிழியன் சட்டென்று சிரித்துவிட, மஞ்சு பாலாவை அடித்தாள்…

ஸ்… ஆ… பிசாசே… வலிக்குதுடி…. என்ற பாலா,

சரி சார்… போயிட்டு சீக்கிரம் வாங்க… பாய் மஞ்சு… வரும்போது கிஃப்டோட வரணும்… சரியா?... என்றபடி சென்றுவிட…

வள்ளியிடமும் மஞ்சு விடைபெறும்போது, வ்ருதுணன் சார்கிட்ட லீவ் சொல்லிட்டியா மஞ்சு என்று வள்ளி கேட்க…

நான் சொல்லிட்டேன் வள்ளி… டோண்ட் வொர்ரி… என்றபடி மைவிழியன் சொல்ல…

அப்போ சரி… என்றபடி தன் அக்மார்க் புன்னகையை தந்துவிட்டு சென்றுவிட்டாள் வள்ளி…

அவள் சென்றதும், மஞ்சுவை நோக்கி மைவிழியன் கைநீட்ட, தயங்காமல் அதில் தனது கரத்தை வைத்தாள் மஞ்சரி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.