(Reading time: 14 - 28 minutes)

02. பிரியாத வரம் வேண்டும் - மீரா ராம்

சின்னம்மா….. என்ற கூவலுடன், தன் கழுத்தைக் கட்டிக்கொண்டவளை வாஞ்சையுடன் பார்த்தபடி நின்றிருந்தார் கஸ்தூரி…

அவளின் வருகையை பார்த்துக்கொண்டே இருந்தவரை எப்போது கட்டி அணைத்துக்கொண்டாள் என்றே தெரியாதபடி இருந்தார் அவர்….

என்ன சின்னம்மா… ஒன்னும் பேசமாட்டிக்குறீங்க… நான் தான் உங்க பொண்ணு… பேயோ… பிசாசோ இல்லை… என்றபடி சிரித்தவளிடம்…

Piriyatha varam vendum

வாயாடி… வா உள்ளே… என்று கைப்பிடித்து இழுத்துச் சென்றார் கஸ்தூரி…

சின்னம்மா… நேத்து என்ன நடந்துச்சு தெரியுமா?... என்றபடி நேற்றைய நிகழ்வுகளை கஸ்தூரியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள்…

ஹ்ம்ம்… அப்பறம்… என்றபடி கதைக் கேட்டுக்கொண்டிருந்தவரும், இந்தா இதை குடிச்சிட்டே தெம்பா பேசு… என அவள் கையில் காபியை திணிக்க…

அதை பருகியவள், சூப்பர் சின்னம்மா…. காபி… செம டேஸ்ட்… ஹ்ம்ம்… என்று உறிஞ்சி குடிக்க…

அடடே குட்டிமா… வந்தாச்சா?... என்றபடி வந்த இந்திரனிடம்,

ஆமா சின்னப்பா… வந்துட்டேன்…. என்றாள் அவள்…

என்னடா… வெறும் காபி குடிக்கிற… பஜ்ஜி… இருந்துச்சே… நீ எடுத்து சாப்பிலையா?... என்று கேட்டுக்கொண்டே கிச்சனுக்குள் சென்றவர், பஜ்ஜியையும், கூடவே அவள் குடிக்க தண்ணீரையும் எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்தார்…

அவள் அதை சாப்பிட ஆரம்பித்த போது புரையேறிவிட, அடடா… என்னடா நீ… பார்த்து சாப்பிடு என்று இந்திரன் அவள் தலையில் தட்ட, ஹேய்… வாயாடி… மெதுவா சாப்பிடுடி… என்றபடி கஸ்தூரி அவள் வாயில் தண்ணீரையும் புகட்ட… அவள் இமை அகற்றாமல் இருவரையும் பார்த்தபடி இருந்தாள்…

அவளின் பார்வையில் சற்றே பின்னோக்கி பயணித்தார் கஸ்தூரி…

அக்ஷிதவள்ளி… இந்திரனின் அண்ணன் மகள்… திருச்செந்தூர் சென்று வந்த பின் பிறந்ததாலும், முருகனின் மேல் கொண்ட பக்தியின் காரணமாகவும், வள்ளி என்ற பெயரை தான் முதலில் தேர்வு செய்தனர் இந்திரன்-கஸ்தூரி தம்பதியினர்…

பின்னர்… வள்ளி என்றால் ரொம்ப சின்னதா இருக்கே… என்ன செய்ய அண்ணா… என்று இந்திரன் கேட்க…

அவரின் அண்ணன் சிவநாதனோ நீயே ஒரு தீர்வையும் சொல்லிவிடேண்டா என்று சொல்ல…

அப்போ, கூடவே இந்த காலத்திற்கு தகுந்தாற்போலவும் பெயர் வைத்துவிடலாமே… என்று ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் சிவநாதனின் மனைவி உமையாள்…

நம்ம குட்டிம்மா… பிறந்த நேரமோ என்னவோ, நம்ம தொழில் முன்னேறியிருக்கு… நாமும் நாலு காசு பணம் பார்க்குறோம்… அதனால அவளுக்கு அட்சயான்னு பேரு வைக்கலாமா என்று  இந்திரன் கேட்க…

நல்ல பேரு தாங்க… ஆனா, அட்சயான்னு வேணாம்… ஹ்ம்ம்… என்று சிறிது நேரம் யோசித்த கஸ்தூரி…

அக்ஷிதா… அக்ஷிதவள்ளி… நல்லா இருக்குல்ல… என்று குதிக்க…

மற்ற மூவருக்கும் அந்த பெயர் பிடித்து போனது…

தனிமையில் இந்திரன் மனைவியிடம், கடைசியில் உனக்குப் பிடித்த உன் முருகப்பெருமானோட துணைவி பேரையே வச்சிட்ட… நீ ஆசைப்பட்ட படி… என்று சிரித்தபோது,

அங்கே மட்டும் என்னவாம்… வள்ளி பேரு தான் வச்சாகணும்னு ஒருத்தர் குதிக்கலை என்று கஸ்தூரி கேட்க... இந்திரனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது…

அது சரி… அண்ணன் பொண்ணுக்கு பேரு வச்சாச்சு… நமக்கு பொண்ணோ பையனோ பிறந்தா என்ன பேரு வைக்க??? என்று இந்திரன் கேட்க..

பொண்ணு பிறந்தாலும் சரிதான்… பையன் பிறந்தாலும் சரிதான்… பாலா பேரு தான் வைக்கணும்… என் குமரனின் பெயர்… என்று உள்ளம் குளிர்ந்து போனவராய் சொன்னார் கஸ்தூரி…

அதுசரிதான்… முடிவே பண்ணிட்டியா… அப்போ எனக்கும் ஓகே… என்றபடி மனைவியின் கைப்பிடித்துக்கொண்டார் இந்திரன்….

அக்ஷிதா பிறந்த மறு வருடமே, இந்திரன்-கஸ்தூரி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது…

தம்பியின் மழலையை கையில் ஏந்திய சிவநாதன்… அச்சு அசல் என் தம்பி போலவே இருக்கா… என் மக என்ன அழகு… என்ன அழகு… என்று ஆர்ப்பரித்தவர், கஸ்தூரியிடம், என் இந்திரனுக்கு அழகான பாலன் பிறந்தது போல் இருக்கு… என்று சொல்லி சொல்லி மகிழ்ந்தார் சிவநாதன்…

உன் தங்கச்சிம்மா… என்றபடி அக்ஷிதாவிடம் உமையாள் அந்த சிசுவை காட்ட… அவள், அந்த பச்சிளங்குழந்தையின் உள்ளங்கையைப் பிடித்துக்கொண்டு… குட்டிபாப்பா… அக்கா சொல்லு… அக்கா சொல்லு… என்று கெஞ்ச… அந்த மழலையோ கை காலை ஆட்டிக்கொண்டு உமையாளின் கையில் பூக்குவியல் போல் இருந்தாள்…

என்ன பெயர் வைக்க என்று யோசித்த போது, சிவநாதன் அன்று அவளை கையில் ஏந்திய போது சொன்ன வார்த்தைகளை கோர்த்து பார்த்தார் கஸ்தூரி…

பின் கணவரிடம் தனது முடிவை சொன்னபோது, சரிதான்… பேர் சொல்லி கூப்பிட முடிவு பண்ணிட்ட… என்று சிரித்தார்…

அதெல்லாம் ஒன்னுமில்லை… நீங்க வாங்க… என்று அவரையும் இழுத்துக்கொண்டு, சிவநாதன்-உமையாளிடம் இந்திரபாலா பேரு நல்லா இருக்கா… என்று கேட்க…

சிவநாதனோ தான் அன்று சொன்ன வார்த்தைகளை கோர்த்து பெயராய் சூட்ட விருப்பம் கொண்ட கஸ்தூரியை பெருமையுடன் பார்த்தார்…

இவனுக்கு இந்திரன்னு பேரு வச்சதென்னவோ உண்மைதான் கஸ்தூரி… ஆனா, நம்ம வீட்டில் இவனை யாரும் அப்படி கூப்பிட்டதே கிடையாது… தம்பி… சின்னவனே… இப்படியே கூப்பிட்டு பழகிட்டோம்…

இப்போ அந்த குறை உன்னால தான் கஸ்தூரி தீரப் போகுது… என் இந்திரனோட பொண்ணு… ஹ்ம்ம்… இந்திரபாலா… என்று சொல்லிப்பார்த்தவர்,

பின் உமையாளிடம் திரும்பி, உமா, பேரு பிடிச்சிருக்கா… என்று கேட்க… அவரோ ரொம்ப அழகா இருக்குங்க… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க… நம்ம கஸ்தூரி தேர்வு செய்த பெயர் நல்லா இல்லாமல் போகுமா என்றார் அவரும் ஓரகத்தியின் மேல் கைப்போட்டு சிரித்தபடியே…

அதன் பின்னர்… வள்ளியும் பாலாவும் உடன் பிறந்த அக்காள்-தங்கைகள் போலவே வளரவும் செய்தனர்… ஓரே வீட்டில்…

ஒரு நேரம் கூட இருவரும் தனித்தனியே பிரிந்து இருந்ததில்லை…

பக்கத்து வீட்டு சுட்டிப்பெண் ஒருத்தி,  என்ன பாலவள்ளி…. ஆளையேக்காணோம்… இரண்டு நாளா… வெளியவே வரலை விளையாட… என்னாச்சு என்று கேட்க…

வள்ளிக்கு உடம்பு சரியில்லை… அதான் நானும் விளையாட வரலை… என்றாள் எட்டு வயதைத் தொட்டுக்கொண்டிருந்த பாலா…

அதானே நானும் பார்த்தேன்… அவளை விட்டு நீயும், உன்னை விட்டு அவளும் தனியா விளையாட கூட வர மாட்டீங்களே… ஹ்ம்ம்… சும்மாவா நாங்க உங்களுக்கு பாலவள்ளின்னு பேர் வைச்சோம்… என்று அந்த சுட்டிப்பெண் சிரித்துக்கொண்டிருந்த போது,

ஆரம்பிச்சிட்டியாடி… நீ… எப்பப் பாரு அவங்களை கிண்டல் செய்யுறதே உனக்கு வேலையாப் போச்சு…. போ… சீக்கிரம்… போய் ஸ்கூலுக்கு கிளம்புற வழியைப் பாரு என்று அந்த சுட்டிப்பெண்ணின் அம்மா வந்து அவளை அதட்ட…

ஒகே… பாலவள்ளி… ஈவ்னிங் பார்க்கலாம்…. டாட்டா… என்றபடி பறந்துவிட்டாள் அவள்…

அவ இப்படித்தான்… நீ கண்டுக்காத பாலா… என்று சொல்லிய பெண்மணியிடம்,

பரவாயில்லை ஆன்ட்டி… இதுல என்ன இருக்கு… நாங்க எல்லாரும் ஃப்ரெண்ட்ஸ்… ஒருத்தருக்கொருத்தர் கிண்டல் கேலி செய்யுறது சகஜம் தானே… அதுமில்லாம… வள்ளி பேரையும் என் பேரையும் ஒன்னா சேர்த்துட்டாங்க நான் சொல்லாமலே… அதனால எனக்கு எப்பவுமே உங்க சுட்டிப்பொண்ணை ரொம்ப பிடிக்கும்… என்றவள், ஸ்கூலுக்கு நேரமாச்சு… நான் கிளம்புறேன் ஆன்ட்டி… என்று சென்று விட்டாள்…

அவள் செல்வதையேப் பார்த்துக்கொண்டிருந்த அந்த பக்கத்துவீட்டு பெண்மணி நல்ல பொண்ணு… என புன்னகை மாறாமலே தன் வீட்டினுள் நுழைந்தார்…

அப்படியே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் தான்… ஆனால் காலமும் நேரமும் நகரத்தானே வேண்டும்…

நாட்களும் விரைந்தோடியது… பாலா பத்து வயதை எட்டிய போது அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் தங்களது கிராமத்திற்கு சென்றிருந்தனர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.