(Reading time: 14 - 28 minutes)

கிராமத்தின் மண்வாசனையும், பச்சைப் பசேல் என்ற நிறமும், பாலவள்ளியின் கண்களைப் பறித்தது… இமை அகற்றாமல் அனைத்தையும் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர் இருவரும்…

இன்றும் அதே போல் வள்ளி வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்த கஸ்தூரி, சற்றே கடந்தகாலத்திற்கு சென்று விட்டு மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தார்…

என்னடி… இப்படி பார்க்குற?... எங்களை இன்னிக்கு தான் புதுசா பார்க்குறியா நீ?...

என்னமோ தெரியலை… எனக்கு அப்படித்தான் பார்க்கத்தோணுது… என்றாள் அவள்…

தோணும்டி… தோணும்… ஒழுங்கா… ஆஃபீஸுக்கு கிளம்புற வழியைப் பாரு… உன் தங்கச்சி அப்பவே கிளம்பி போயிட்டா…

அதுதான் தெரியுமே… அவ போனதைப் பார்த்துட்டு தானே நானே உள்ளே வந்தேன்… என்றவள் இன்னொரு பஜ்ஜியையும் எடுத்து சாப்பிட ஆரம்பிக்க…

அடிப்பாவி… உன்னை மட்டும் அவ இப்போ பார்த்திருக்கணும்… அவ்வளவுதான்… சாமியாடியிருப்பா…

ஹ்ம்ம்… அவதான் ஆடமாட்டிக்குறாளே… அப்புறம் எங்க நான் பார்க்க?... என்று சலித்துக்கொண்டாள் வள்ளி…

ஹேய்… குட்டி வாலு… போதும்… போதும்… காலையிலேயே ஓவர் ஆயில் உடம்புக்கு ஆகாது…  என்று இந்திரன் அதட்ட...

சின்னப்பா… இதெல்லாம் போங்கு… நீங்களே பஜ்ஜி எடுத்துட்டு வந்து கையில கொடுத்துட்டு இப்போ சாப்பிடாதன்னு சொன்னா என்ன அர்த்தம்?... என்று அவள் கோபமாக கேட்டாள்…

குட்டிமா… ஆசைக்கு ரெண்டு மூணு சாப்பிடணும்டா… இப்படி ஒரேடியா ஆறு ஏழு சாப்பிடக்கூடாதுன்னு தான் சொல்லுறேன்…  அதுவும் காலையிலேயே… என்று அவர் நிறுத்தி நிதானமாக சொல்ல…

பாருங்க சின்னம்மா… நான் எழு பஜ்ஜி சாப்பிட்டேன்னு சின்னப்பா சொல்லி காட்டுறார்… என்று அவள் சிணுங்க…

ஏங்க… சும்மா இருங்க… பொண்ணு சாப்பிடுறதை கண்ணு போடாதீங்க… என கஸ்தூரி இந்திரனிடம் சொல்ல…

நீ பொண்ணை வளர்க்குற லட்சணம் ரொம்ப நல்லா இருக்கு… அவளுக்குத்தான் அதிகம் ஆயில் உணவு சேர்த்தா ஆகாதுன்னு உனக்கு தெரியும்தானே… தெரிஞ்சும் நீயே இப்படி பண்ணினா எப்படி கஸ்தூரி???

அது உண்மைதாங்க… இருந்தாலும்… அவ ஆசைப்படுறா… காலையில தானே சாப்பிடுறா… அவளுக்கு ஒன்னும் செய்யாது… என்று கணவரிடம் சொன்னவர்,

போதும்டி வள்ளி… நான் இன்னொரு நாள் செஞ்சு தரேன்… அப்போ சாப்பிடு… இப்போ போதும்… போய் கை கழுவிட்டு வந்து கிளம்பு… என்று மகளிடம் சொன்னார்…

என்ன சின்னம்மா… ஹ்ம்ம்… என்று சிணுங்கிக்கொண்டே சென்றவள் கையை கழுவி விட்டு திரும்பி வரும்போது,

போகலாமாடா… என்று இந்திரன் கேட்டார்…

சின்னப்பா… நான் ஸ்கூட்டியில் தான் வந்தேன்… நான் போயிடுவேன்… நீங்க கிளம்புங்க…

அதெல்லாம் எனக்கும் தெரியும்… நீ வா… என்றவர், போயிட்டு வரோம் கஸ்தூரி… என மனைவியிடம் சொல்லிவிட்டு,

மகளின் கைப்பிடித்து இழுத்துச் சென்று காரில் அமரவைத்துவிட்டு, மணி தம்பி நீங்க வள்ளியோட ஸ்கூட்டி எடுத்துட்டு எங்க பின்னாடியே வாங்க… என்று கூறிவிட்டு காரை கிளப்பினார்…

பாலா வீட்டை விட்டு கிளம்பிய மறு வினாடியே, அவளின் ஸ்கூட்டி சென்ற இடம் சிவநாதனின் வீடு….

ஏங்க… இங்க பாருங்க… யாரு வந்துருக்காங்கன்னு… என்று கணவரிடம் சொல்லிய உமா, வாடி தங்கம்… என்ன லேட் இன்னைக்கு… என்று பாலாவிடம் கேட்க…

போங்க… பெரியம்மா... உங்களுக்கு ஒன்னுமே தெரியாதாக்கும்… எல்லாம் உங்க ஒரகத்தியால தான்… லேட் ஆக்குறாங்க… தெரியுமா?... என்றாள் அவள்…

ஏய்… பாவம்டி… அவ… காலையிலேயே எந்திச்சு எல்லா வேலையும் பார்க்கணும்ல… அதான் கொஞ்சம் லேட் ஆயிருக்கும்…

ஹ்ம்ம்… விட்டுக்கொடுக்க மாட்டீங்களே… கொஞ்சமும்… என்ன இருந்தாலும் ஒரகத்தியா இருந்தாலும் உங்க பாசமிகு தங்கச்சி தானே அவங்க… ஹ்ம்ம்… அவங்களுக்கும் சரி, உங்களுக்கும் சரி எப்பவும் நான் இரண்டா பட்சம் தானே… என்றவளின் குரலே அவள் மனதை சொல்ல…

என்னைப் பார்த்து சொல்லு… எனக்கு நீ இரண்டாம்பட்சமா?... என்று உமையாள் கேட்க…

அவரை நேராக பார்த்தவள் அவரின் கண்களில் எதைக் கண்டாளோ, சாரி பெரியம்மா… என்றபடி அவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்…

அடடா… காலையிலேயே… என் பொண்ணை அழ வைக்காதடி… என்ற சிவநாதன், குட்டிமா.. நீ இங்க வா… உனக்கு ஒரு சர்ப்ரைஸ் எனவும்,

என்னவா இருக்கும் என்று உமா யோசிக்க,

பெரியப்பா… என்ன அது… சொல்லுங்க பெரியப்பா… என்ற அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவளது கண்களை பொத்தி அழைத்துச் சென்றார் சிவநாதன்…

கண் திறந்தவளின் பார்வையில் பட்டது அந்த அழகான ரோஜா செடித் தோட்டம்…

சுற்றிலும் வெள்ளி நிற ரோஜாக்கள் நிறைந்திருக்க, அதன் நடுவில் மஞ்சள் நிற ரோஜா கண்ணைப் பறிக்க, அதற்கும் நடுவில் சிகப்பு நிற ரோஜா அவளைப் பார்த்து வா என்று அழைத்தது….

வாவ்………….. பெரியப்பா… சூப்பரா இருக்கு… சான்சே இல்லை… சே… நான் தான் தோட்டம் பக்கம் வராமலே போயிட்டேன் கொஞ்ச நாள்… சே… இது இப்படி பூத்து குலுங்குறதை, அது மொட்டா இருக்குறப்போ இருந்து பார்க்காம போயிட்டேனே… சே… என்று அவள் வருத்தம் கொள்ள…

அட குட்டிமா… இதுக்காடா வருத்தம்?... பின்னாடி இடம் சும்மாதான இருக்கு… நாளைக்கே அங்க உனக்காக தோட்டம் அமைச்சிடுறேன்… சரிதானா?... என்று மகளிடம் கேட்டவர், நாளைக்கு என்ன நாளைக்கு, இன்னைக்கே செஞ்சா என்ன உமா?... என்று மனைவியிடம் அபிப்ராயம் கேட்க,

அதுக்கென்னங்க தாராளமா இன்னைக்கே செஞ்சிடலாம்… என்றார் அவரின் துணைவியும் மகளின் ஆசையை கருத்தில் கொண்டு…

இருவரையும் கண்களில் தேக்கி வைத்த வற்றாத பாசத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தவளின் முன் உமையாள் கையில் தட்டுடன் வந்து நின்றார்…

இந்தா சாப்பிடு என்றவர், மகளுக்கு காலை உணவை ஊட்ட, அதை மனமாற வாங்கியவள், ஹ்ம்ம்… அதெப்படி பெரியம்மா… இவ்வளவு சூப்பரா சமைக்குறீங்க… உங்க கைப்பக்குவமே பக்குவம் தான்… என்று உச்சுக்கொட்டி உண்டு முடித்தாள் பாலா…

குட்டிமா… சாப்பிட்டாச்சாடா… என்று அலுவலகத்திற்கு தயாராகி கிளம்பி வந்த சிவநாதன் கேட்க…

ஆமா… பெரியப்பா… சாப்பிட்டு முடிச்சிட்டேன்… என்று அவள் சொல்லி முடிக்கும் முன், இந்தா தங்கம், உனக்கு பிடிக்கும்னு கேரட் அல்வா செஞ்சேன்… சாப்பிடு என்று அவளுக்கு ஊட்டி விட்டார் உமையாள்…

உமா… போதும்… போதும்… இனிப்பு ரொம்ப கொடுக்காதே… அவளுக்கு ஆகாது… என்று மனைவியிடம் சொன்னவர், போகலாமாடா என்று கேட்க… போகலாம் பெரியப்பா என்றாள் அவள்…

சரி உமா… நாங்க போயிட்டு வரோம்… என்றவர் மகளை அழைத்துக்கொண்டு காரில் கிளம்ப,  சிவநாதனின் டிரைவர் சோமு அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்தார் பாலாவின் ஸ்கூட்டியில்…

இரண்டு காரும் ஒரே நேரத்தில் அந்த அலுவலகத்தின் வாசலை அடைந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.