(Reading time: 14 - 28 minutes)

ன்னடா தம்பி… போகலாமா… என்று சிவநாதன் இந்திரனிடம் கேட்க… போகலாம் அண்ணா… என்றார்…

பின்னர் அண்ணன்-தம்பி இருவரும் மகள்களிடமும் வருகிறேன் என்ற பாணியில் தலை அசைக்க… அவர்களும் பதிலுக்கு தலை அசைத்து விடை கொடுத்தனர்…

மணி காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கே செல்ல, சிவநாதனின் காரை சோமு ஓட்ட, அதில் இந்திரன் தன் அண்ணனுடன் பயணித்தார்…

கார் சென்றதையேப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், கார் கண்ணிலிருந்து மறைந்ததும், ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தனர்…

பாலா வள்ளியைப் பார்த்ததுமே, முறைத்துக்கொண்டு உள்ளே சென்று விட, வள்ளியும் மௌனமாக அவளைப் பின் தொடர்ந்தாள்…

இதை மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள் இவர்களின் வயதிலுள்ள பெண் ஒருத்தி…

தனது இடத்திற்கு வந்தவள், தன் முன் நிழலாடுவதைப் பார்த்ததும், இந்தா பிடி… என்றபடி அவளின் கையில் இரண்டு டிபன் பாக்ஸினை திணித்தாள்…

அவள் அதை வாங்கி விட்டு, தேங்க்ஸ் பால…. என்று இழுக்க…

போதும்டி… அப்படியே ஓடி போயிடு… அதை விட்டுட்டு எதாவது சொன்ன, ஃப்ரெண்ட்னு கூட பார்க்க மாட்டேன்… கழுத்தை நெரிச்சு கொன்னுடுவேன்… என்று பொரிய…

கூல்… கூல்… செல்லம்… ஏன் காலையிலேயே இவ்வளவு டென்ஷன்… ரிலாக்ஸ்டாமா… என்றவள்

இப்போ என்ன நான் உன்ன பா….லா……ன்னு சொல்லக்கூடாது அவ்வளவு தானே என்று சொல்லிமுடிக்கும் முன்,

அவளை தடிமனான ஃபைலைக்கொண்டு அடித்தாள் பாலா…

பிசாசே.. வலிக்குதுடி… ஆமா… நல்லா சாப்பிட்டியோ, எனக்கு தராம… பெரியப்பா வீட்டில என்று கேட்க…

பதில் சொல்லாமல் அவளை முறைத்தாள் பாலா…

உண்மையை சொன்னா கோபம் மட்டும் வந்திடுமே உனக்கு… ஹ்ம்ம்… சரி பரவாயில்லை… கோபம் பட்டா பட்டுக்க… ஆமா, நீ மட்டும் தனியாவே சாப்பிட்டியாடி… எனக்கு கொஞ்சமாச்சும் எடுத்துட்டு வரணும்னு உனக்கு தோணிருக்கா?... சே… நீயெல்லாம் ஒரு ப்ரெண்ட் எனக்கு?... எல்லாம் என் நேரம்…. என்றவள்…

இப்படி இளைச்சு துரும்பா இருக்காளே இந்த பொண்ணு… கொஞ்சம் அவளுக்கும் கொடுப்போம் அப்படிங்கிற எண்ணம் கொஞ்சமாச்சும் உனக்கு இருக்காடீ?... மொத்தத்தையும் நீயே தின்னுட்டு வந்திருக்கிற?... மனுஷியாடி நீ?... என்று சரமாரியாக பாலாவை கேள்விகேட்க…

கேள்வி கேட்டவளுக்கு தன் சிரிப்பை பதிலாய் தந்து போடி… லூசு… போ… போய்… வேலையைப் பாரு… என்றவள், சின்ன ஸ்நாக்ஸ் பாக்ஸில் அவளுக்கென கொண்டு வந்திருந்த அல்வாவை கொடுக்க,

முகமெங்கும் சந்தோஷத்துடன் வாங்கியவள், அவளின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு தேங்க்ஸ்டி… பால…. என்று சொல்ல,

போடி… குரங்கே… திரும்பிப் பார்க்காம ஓடிடு… என்று அவளை விரட்டியடித்தாள் பாலா…

அவளிடமிருந்து தப்பித்து ஓடியவள், எதிரே வந்த ஒருவனின் மேல் இடித்துக்கொள்ள, அவன் அவளை விநோதமாக பார்த்தான்…

பின் அல்வாவை ஒரு கையில் எடுத்து சாப்பிட்டுக்கொண்டு, இன்னொரு கையில் டிபன்பாக்ஸையும் வைத்துக்கொண்டு என்ன என்று தோரணையாக கேட்டால் அவன் விநோதமாக பார்க்காமல் வேறு எப்படி பார்ப்பான்???...

அவள் அவனைப் பொருட்படுத்தாது, அகன்று செல்ல, அப்போது அவனின் செல்போனிலிருந்து பாடல் ஒலித்தது…

மஞ்சக்காட்டு மைனாஎன்னைக்கொஞ்சி கொஞ்சி போனா….” என்று…

ஹாய்… பிரெண்ட்ஸ்… மறுபடியும்… உங்க எல்லாரையும் பிரியாத வரம் வேண்டும் தொடர் மூலமா மீட் பண்ணுறதுல ரொம்ப சந்தோஷம்…

போன எபிசோடுல இந்த இந்திரபாலாக்கு அப்படி என்னதான் பிரச்சினை… ஏன் அவ அவளை இந்துன்னு சொல்ல விடலைன்னு எல்லாரும் ரொம்ப யோசிச்சிருப்பீங்க… ஹ்ம்ம்… சீக்கிரமே அதை தெரிஞ்சிக்கலாம்… ஸ்பை வச்சாவது…

இந்த எபிசோடுல… புதுசா ஒரு என்ட்ரி… வள்ளின்னு…

இரண்டு குடும்பமும் இவ்வளவு ஒற்றுமையா தான் இருக்குறாங்க… ஹ்ம்ம்… இரண்டு பேரும் அக்கா-தங்கைகள் தான்… அப்பறம் ஏன் பாலா வள்ளிக்கிட்ட பேசலை???... இதுக்கும் ஒரு ஸ்பை வைச்சுடலாம்…

இவங்க இரண்டு பேருல யாரோ ஒருத்தி தான் ஹீரோயின்னு நினைச்சிட்டிருக்குறப்போ புதுசா ஒரு பொண்ணு… அட அது தாங்க… நம்ம மஞ்ச காட்டு மைனா… ஹ்ம்ம்… இப்போ… இதுல யாரு ஹீரோயின்னு நீங்களே கண்டுபிடிங்க பார்ப்போம்…

ஹ்ம்ம்… நீங்க யோசிச்சிட்டே இருங்க…

நான் அடுத்த வாரம் உங்களை மறுபடியும் மீட் பண்ணுறேன்… டாட்டா…

வரம் தொடரும்…

Episode # 01

Episode # 03

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.