(Reading time: 10 - 20 minutes)

10. வாராயோ வெண்ணிலவே - சகி

லகின் மிக பெரிய வினா  யாதென சிந்திக்கும் பட்சத்தில் நம் கண்முன்  விரியும் கேள்விகளுள் ஒன்று காதல் என்றால் யாது என்பதாகும்.

காதல் என்றால் என்ன?

அது இதுவரையில் புரியாத ஒன்றாக இருக்கிறது.

Vaarayo vennilave

உங்களில் பலம் வாய்ந்தவர் யார்? அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் நான் அவரை தோற்கடிக்கிறேன் என்று சவால் விடுகிறது.

ஆழ்ந்த நினைவுகளோடு போராடியப்படி தோட்டத்தில் அமர்ந்திருந்தான் ரஞ்சித்.

இருதயத்தில் சுகம் கலந்த வலி.

கண்களை மூடிக் கொண்டிருந்தான்.

"ரஞ்சித்!"

"ம்..."

"காப்பி குடிக்கிறீயாடா?"

"வேணாம்ணா!"

"மறுபடியும் நிலாவா?"-அமைதிக் காத்தான்.

"உனக்கும் நிலாக்கும் என்ன தான் பிரச்சனை?"

".................."

"பதில் பேசாம இருக்கிறதால  யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை."-அமைதியாக இருந்தான்.(அட...!சீக்கிரம் ரகசியத்தை சொல்லுப்பா எத்தனை எபிஸோட் தான் தலையை பிச்சிகிறது)

கார்த்திக் கடுப்பாகி அவ்விடம் விட்டு நீங்க ஆயத்தமான போது ரஞ்சித் வாயைத் திறந்தான்.

மூன்று வருடங்களுக்கு முன்பு.....

ரஞ்சித்திற்காக  காலை உணவை தயாரித்து கொண்டிருந்தாள் வெண்ணிலா.

கடிகாரத்தில் மணி எட்டு என்றது.

அப்போது யாரோ அவளை பின்னால் இருந்து கட்டியணைக்க பதறியப்படி திரும்பினாள்.

"ரஞ்சு! என்ன நீ? பயந்துட்டேன்!"

"என்ன பயம்?உன் ரஞ்சு தான் இருக்கேன்ல?"

"முதல்ல விடு!"

"மாட்டேன் போடி!"

"ரஞ்சு!"-ரஞ்சித் அவளை விடுவித்தான்.

"முதல்ல கிச்சனை விட்டு வெளியே போ! குளிக்காம  கிச்சன் உள்ளே வரதா?"

"அதுக்கு சன்டே சீக்கிரமா குளிக்கிறதா?"

"ரஞ்சு!"

"சரி ஒண்ணு கொடு போயிடுறேன்!"

"என்னது?"-ரஞ்சித் அவன் இதழ்களை குவித்து காண்பித்தான்.

"உன்னை கொன்னுடுவேன்!"

"அப்போ நான் தரேன்!"

"வேணாம் விடு!"-அவளை நெருங்கியவன் அவள் இதழ்களை தனதாக்கினான்.

நெடு நேரம் கழித்து அவளை விட்டான்.

பேச்சிழந்து போனாள் நிலா.ரஞ்சித்தின் கரங்கள்  அவள் கரத்தோடு பிணைந்தன.

கண்களை முடிக் கொண்டாள்.பின்,ஏதோ உணர்ந்தவள்,அவனிடமிருந்து விலகினாள்.

அந்நேரம் ரஞ்சித்தின் கைப்பேசி ஒலித்தது.

"முதல்ல  இதை விற்று தொலைக்கணும்!மனுஷனை நிம்மதியா இருக்க விடுதா இது?"-புலம்பியப்படி சென்று கைப்பேசியை எடுத்தான்.

"ஹலோ!"

"ஹலோ!நிவாஸ் பேசுறேன் ரஞ்சித்!"

"சொல்லுங்க சார்!!"

"உன்னை உடனே பார்க்கணும்!என் வீட்டுக்கு வர முடியுமா?"

"வரேன் சார்! அரை மணி நேரத்துல வந்துடுறேன்!"

"சரி !!"-இணைப்பை துண்டித்தான்.

"அம்மு! நிவாஸ் சார் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்!"

"குளிச்சிட்டு போ ரஞ்சு!"

"கிண்டல் பண்றாளோ?"-ரஞ்சித் தயாராகி கிளம்பும் போது நிலா அவனிடத்தில்,

"சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடு!"என்றாள்.

"இன்னிக்கு எதாவது ஸ்பெஷலா செல்லம்?"-கண்ணடித்தான்.

"இல்லை......சும்மா தான் சொன்னேன்."

"சும்மா தானா? சரி வரேன்!"-அவள் கன்னத்தில் முத்தமிட்டு நகர்ந்தான்.

அன்றிரவு நெடு நேரம் அவனுக்காக  காத்திருந்தாள் வெண்ணிலா.

ஒருவழியாய் இரவு பத்து மணிக்கு வந்தான்.

அவன் முகத்தில் ஏதோ மாறுதல் தெரிந்தது.

வாடி போய் இருந்தது.

அவனை பார்த்தவள்,

"வாழ்க்கையில நான் சொல்றதை கேட்க கூடாதுன்னு முடிவுல இருக்கியா? டைம் என்ன ஆகுது?"-அவன் அமைதியாய் இருந்தான்.

"முகம் கழுவிட்டு வா!சாப்பிடலாம்!"

"எனக்கு பசிக்கலை நீ சாப்பிடு!"-பதிலுக்காக காத்திராமல் நகர்ந்தான்.

அவனின் நடவடிக்கைகள் புரியாமல் விழித்தாள்.

தனது அறைக்கு 

சென்றவன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.

என்ன ஆயிற்று இவனுக்கு??

ஏன் இவ்வாறு செய்கிறான்?

நிவாஸ் வீட்டிற்கு சென்றிருந்த போது....

"என்ன சார்?அவசரமாக வர சொன்னீங்க?"

"ரஞ்சித்!"

"என்ன  சார்?"

"நீ கொஞ்ச நாள் முன்னாடி தலை வலின்னு சொன்னல! நான் உன்னை ஸ்கேன் எடுத்து பார்க்க சொன்னேன்ல...."

"ஆமா!"

"அந்த ரிப்போர்ட்ல உனக்கு பிரையின் டியூமர்ன்னு வந்திருக்கு!!"-கேட்டவன் ஆடி போனான்.

"சார்?"

"ஸாரி ரஞ்சித்!கஷ்டமான விஷயம் தான்.ஆனால்,அதான் உண்மை!"-ரிப்போர்ட்டை நீட்டினார்.

அவன் கரங்கள் நடுங்கின.

கண் எதிரே நிலாவின் முகம் பளிச்சிட்டது.

சுய நினைவிற்கு வந்தான்.

மனதில் அவளின் எண்ணங்கள் விளையாடின.

அநியாயமாய் ஒரு பெண்ணின் வாழ்வை பாழாக்கி விட்டேனே!

என் மரணத்திற்கு பின் அவள் நிலை??

என்ன செய்வேன்??

காதலோடு போராடிய மனம் வெறுப்பை ஆயுதமாய் எடுத்தது.

"ரஞ்சு?"-பயத்தோடு கூடிய  நிலாவின் குரல் ஒலித்தது.

"என்ன?"-கோபமாக கத்தினான்,இல்லை....நடித்தான்.அவன் நடிப்பு நன்றாக வேலை செய்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.