(Reading time: 10 - 20 minutes)

நிலா அவனருகே மண்டியிட்டாள்.

"உன் பேர் என்ன?"

"ராஜா!"

"ஆமா...!நீ இவ்வளவு குட்டியா இருக்க இது உனக்கு வெயிட்டா இல்லை?"

"இல்லையே!" 

"சரி...உன் வீடு எங்கே? இந்த நேரத்துல தனியா வந்திருக்க?!"

"இல்லைக்கா!நான் எதிர் வீட்ல தான் இருக்கேன்!"-

அப்படியென்றால் இவன் ரஞ்சித்திற்கு உறவா??

"என் பேர் நிலா!நீ என்னை நிலான்னு கூப்பிடலாம்!!"

"சரி நிலா!"

"சரி டைம் ஆகுது! நீ வீட்டுக்கு போ!"-பந்தை அவனிடம் தந்தாள்.

ராஜா அவளை விசித்ரமாக பார்த்தான்.

"என்ன?"

"நீ என்னை திட்டலையா?"

"ஏன் திட்டணும்?"

"நான் உன் வீட்டில  பால் அடிச்சிட்டேன்ல?"

"ஆமா..நீ என் வீட்டுல பால் அடிச்ச தானே!"-அவனை முறைத்தாள்.

பின் சிரித்தாள்.

"கோபப்பட்டாச்சு போதுமா?"

"எப்போ?"

"அதான் இப்போ முறைத்தேனே!"-அவன் சிரித்தே விட்டான்.

"ஏன் சிரிக்கிற?!"-முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்...

"உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!"

"ஃப்ரண்ட்ஸ்?"

"பொதுவா நான் பொண்ணுங்களை என் ஃப்ரண்ட்டா வைச்சிருக்கிறது இல்லை.இருந்தாலும் உன்னை என் ஃப்ரண்ட்டா ஏத்துக்கிறேன்!" -வெண்ணிலா அவனை அணைத்துக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"இது மாதிரி தான் என் சித்தப்பாவும் பண்ணுவாரு!"

"சித்தப்பாவா?"

"ஆமா...எனக்கு என் அப்பாவை விட சித்தப்பாவை தான் ரொம்ப பிடிக்கும்!"

"உன் சித்தப்பா பேர்  என்ன?"

"அது...எனக்கு டைம் ஆயிடுச்சு சித்தப்பா தேடுவாரு நாளைக்கு பார்க்கலாம்!"-அவன் ஓடிவிட்டான்.

"மாமா!"-ஏதோ யோசனையில் இருந்தவனை கார்த்திகாவின் குரல் உலுக்கியது.

"கார்த்திக் மாமா உங்களை ஹாஸ்பிட்டலுக்கு அக்காவை கூட்டிட்டு போக  சொன்னார்."

"அண்ணிக்கு என்ன?"

"அக்காவுக்கு இரண்டு நாளா உடம்பு முடியலை!"

"நீ போயிட்டு வா!"

"இல்லை நாங்க மட்டும் தனியா எப்படி?"

"சரி போ வரேன்!"

"சரிங்க மாமா!"

"எந்த ஆஸ்பிட்டல்?"

"வி.எம்.ஹாஸ்பிட்டல்!"

"சரி!"

வி.எம்.ஆஸ்பிட்டல்.......

மிகுந்த பரபரப்போடு இருந்தாள் நிலா.

இங்கு ஒரு கத்தியின் இரு முனைகள் சந்திக்க இருக்கின்றன.(நான் நிலாவையும் ரஞ்சித்தையும் குறிக்கவில்லை)

உறவின் மாராட்டத்திற்கும்,உரிமை போராட்டத்திற்கும் இடையே விரைவில் போர் மூள இருக்கிறது.

"மிஸஸ்.யுகேந்திரன்!

உங்க அபாயிண்ட் நம்பர் 267!"

"எவ்வளவு நேரம் ஆகும்?"-யுகேந்திரன்.

"263 போயிருக்காங்க மேடம் எல்லாரையும் பொறுமையா செக் பண்ணுவாங்க எப்படியும் 2 மணி நேரம் ஆகும்!"

"தேங்க்ஸ் சிஸ்டர்!"

"வெல்கம்!"-அதை கேட்டு கொண்டிருந்த ரஞ்சித்.

"அண்ணி கேட்டீங்களா?நமக்கு நாளைக்கு தான் கிடைக்கும் போல?"

"சும்மா இரு ரஞ்சித்!"

"மிஸஸ்.கார்த்திக் உங்க அபாயிண்மண்ட் நம்பர் 268!"

"ஓ.கே.சிஸ்டர்!"-

அப்போது,

"விஜி அக்கா! நிலா இங்கேயா இருக்கா?"-என்று ஒரு இளைஞனின்  குரல் கேட்டது.(ஏ...அது நம்ம விஷ்வா)

"விஷ்வா!எப்போடா ஊருக்கு வந்த?"

"3 மணி நேரம் ஆச்சு! எங்கே உங்க டீன்?கூப்பிடுங்க அவளை!"

"ஏன்?"

"கழுதை போன் பண்ணா எடுக்க மாட்றா!'

"நிலா வேலையா இருக்கா,டிஸ்டர்ப் பண்ண முடியாது!"

"அக்கா!முக்கியமான விஷயம்!"

"இரு கேட்கிறேன்!"-நடந்தவற்றை எல்லாம் யுகேனும் ரஞ்சித்தும்  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

விஜி போனில் ஏதோ பேசிவிட்டு,

"விஷ்வா!உன்னை வெயிட் பண்ண சொல்லிருக்கா!"

"இன்னிக்கு அபாயிண்ட்மண்ட் நம்பர் 268 வரைக்கும் தான் டாக்டர் வெண்ணிலா மகேந்திரன் பார்பாங்க!

மற்றவங்க டாக்டர் அனுராதா ரவிக்கிட்ட செக் பண்ணிக்கலாம்!"

சிறிது நேரத்தில்

காயத்ரியை அழைத்தனர்.

"அண்ணி கார்த்திகா கூட்டிட்டு போங்க! நான் இங்கேயே இருக்கேன்!"

"சரி!"-சிறிது நேரம் கழித்து வெளி வந்தவளின் முகத்தில் நாணம் கலந்த ஆனந்தம்!

"என்னாச்சு அண்ணி?"

"..........."

"கார்த்திகா என்னாச்சு?"

"அக்கா ப்ரக்னட்டா இருக்காங்க!"-

ரஞ்சித்தின் கண்கள் ஆனந்தத்தில் சந்தோஷித்தன.

"கங்ராட்ஸ் அண்ணி!"

"தேங்க்ஸ்!"

"அண்ணா கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவான்!

முதல்ல வீட்டுக்கு போகலாம்!"-ஆனந்தத்தில் அவ்விடம் நீங்கியவனின் கண்கள் ஏதேர்ச்சையாக அவளை கண்டன.

அப்படியே ஸ்தம்பித்து நின்றன

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.