(Reading time: 12 - 23 minutes)

11. வாராயோ வெண்ணிலவே - சகி

"ன்னடா சொல்ற?"-அதிர்ச்சியாக கேட்டாள் வெண்ணிலா.

"என்ன பண்றது?"

"அப்பாக்கிட்ட உண்மையை சொல்லிடு!"

Vaarayo vennilave

"மாமா கஷ்டப்படுவாரே!"

"லூசு!அந்த பொண்ணுக்கிட்ட லவ்வும் சொல்ல மாட்ட....அப்பாக்கிட்டயும் உண்மையை சொல்ல மாட்ட....வேற என்ன பண்ண?"

"தெரியலை....!"-என்ன நடக்கிறது?என்ன ஆயிற்று இவர்களுக்கு??

விஷ்வாவிற்கு பெண் பார்க்க போகின்றனர்.

அது தான் விஷயம்!!!!

"உனக்கு இன்னிக்கு ஒரு நாள் டைம் தரேன்!

வைஷ்ணவி வேணும்னா ஒண்ணு அவக்கிட்ட விஷயத்தை சொல்லு!இல்லை...அப்பாக்கிட்ட சொல்லு!இல்லை...வீட்டில பார்க்கிற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ!"

"மனசுல ஒருத்தியை வச்சிட்டு இன்னொருத்திக் கூட வாழ சொல்றீயா?"

"மனசுல இருக்கிறவள் பற்றி உண்மையை சொல்ல சொல்றேன்!"-விஷ்வா பெருமூச்சு விட்டான்!

"என்னால முடியாது!அவங்க என்னை வளர்த்தவங்க அவங்க விருப்பத்திற்கு மீறி ஒரு அடியும் என்னால வைக்க முடியாது!

ஒரு பெண்ணோட மனசுல இருக்குதுன்னு தெரியாம அவளை சங்கடப்படுத்தவும் முடியலை.என்ன பண்றது???

காதலிக்கிறவங்க வாழ்க்கை கண்ணீரில தான் முடியுமா?"-வாயடைத்து போனாள் நிலா.

விளையாட்டுத்தனமாய் இருந்தவனுக்குள் எப்படி இந்த முதிர்ச்சி???

"கவலைப்படாதே...! நம்மை மீறி ஒரு சக்தி இருக்கு அது மேல நம்பிக்கை வை!"-விஷ்வாவின் முக பாவனையே சுத்தமாய் நம்பிக்கை இல்லை என்றது.

காதலில் வெற்றியா??தோல்வியா??என்பதை உணராமல் ஒருவன் காதலிக்கிறான்!!!

சிலருக்கு அது வெற்றி பெறுகிறது.வேறு சிலருக்கோ மடிந்து போகிறது!!!

அப்படி இருந்தும் ஏன் மனிதனானவன் காதலில் விழுகிறான்???

காரணம் நம்பிக்கையா??இல்லை.....அதன் உண்மையான காரணம் அவன் காதலிக்கிறான் அவ்வளவே...!! புரியவில்லையா???

ஒரு சர்வாதிகாரியை எடுத்துக் கொள்வோம்!!!

போர்,கொலை இவற்றை சார்ந்தே அவர் வாழ்வு.ஆனால் சற்று சிந்தியுங்கள் அவன் அந்நிலை அடைய காரணம் அவன் திறன் மேல் வைத்த நம்பிக்கையா?அல்லது தன் வாழ்க்கை மேல் வைத்த காதலா???

திறன் எல்லோருக்கும் தான் உள்ளது.நம்பிக்கையும்  உள்ளது.ஆனால் வாழ்க்கை மீது கொள்ளும் காதல் தானே சாதாரண பிரஜையையும் மாவீரனாக மாற்றுகிறது???

அவள் தான், என் நிலா  தான்!!

எதிர்ப்பார்க்காத சந்திப்பு!!!

ஆனால்,ஏன் அந்த முகத்தில் அப்படி ஒரு கலக்கம்??

அவளை அப்படி உரிமையோடு அழைத்தவன் யார்??

குழம்பினான் ரஞ்சித்!!!

ஒருவேளை அவள் உண்மையில் என்னை மறந்துவிட்டாளா???

வேறொரு திருமணம் நடந்திருக்குமா???

குழப்பத்தில் மூழ்கினான்.

"சித்தப்பா!"-அவன் சிந்தனையை கலைத்தான் ராஜா!!!

"சித்தப்பா!உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?"

"என்ன?"

"எனக்கு ஒரு ஃப்ரண்ட் கிடைச்சிருக்காங்க!"

"அதுக்குள்ளயா?"

"ம்...."

"எங்கே இருக்காங்க?"

"வா!காட்றேன்!-மாடிக்கு அழைத்து சென்றான்.

"அவ தான்!"-என்று நிலாவை காட்டினான்.

அடுத்த அதிர்ச்சி இவள் என் எதிர் வீட்டிலா இருக்கிறாள்!!!

அவளோடு இருப்பவனை காணும் போதே கோபம் ஏறியது.

"அழகா இருக்காளா?"

"ம்...."-அவன் கவனம் முழுதும் அவள் மீது இல்லை!!!

"அவப் பேர் வெண்ணிலா!அதோ அவ கூட இருக்கான்ல அவன் பேர் விஷ்வா!"

"ம்....."

"நிலாவோட தம்பி!"

"என்ன?"

"வெண்ணிலா தம்பி!"-அப்போது தான் நினைவு வந்தது அவளோடு வாழ்ந்த நாட்களில் அவள் அனைத்தையும் கூறி இருக்கிறாள்!!!

பெருமூச்சு விட்டான்.

அவள் ஏன் அவனை மிரட்டி கொண்டிருக்கிறாள்.

என்ன பிரச்சனை???

அவன் முகம் வாடியிருந்தது!!!

அவள் பேசுவது காதில் விழவில்லை.

"ஏன் அந்த பையனை திட்டிட்டு இருக்கா?"

"தெரியலை...நிலாவே திட்டுறான்னா,அவன் பெரிசா ஏதோ தப்பு பண்ணி இருப்பான்!"-ரஞ்சித் அவனை திகைப்பாக பார்த்தான்!!எப்படி இவ்வளவு சுலபமாய் அவளை புரிந்துக் கொண்டான்???கேள்வியாக பார்த்தான்!!!!

புரிந்து கொள்வதற்கு என்ன பல நாள் தவம் புரிய வேண்டுமா என்ன???

புரிந்து கொள்வதற்கு மற்றொரு பெயர் உண்டு!!!

பாசம்!!!

சற்று சிந்தியுங்கள்..

நாம் புரிந்து கொள்ளாத ஒருவர் மீது பாசம் வைப்போமா??அல்லது பாசம் வைக்காத ஒருவரை புரிந்து கொள்ள இயலுமா??

இதுவே உறவுகளுக்கு ஏற்ப மாறுப்படுகிறது!!

தாய் பிள்ளை மீது வைப்பதை அன்பு என்கிறோம்!!

தந்தையின் அன்பை பண்பு எனவும்,

ஆசானின் அன்பை கண்டிப்பு எனவும்,நண்பனின் அன்பை உரிமை எனவும்,கணவன் மனைவி அன்பை காதல் எனவும்,இறைவனின் அன்பை காலம் எனவும் ,மற்றும் முற்றிய அவன் அன்பை மோக்ஷம் எனவும் பாகுப்படுத்துகிறோம்!!!!

சரியா????

ஏதோ சிந்தனையில் காரை செலுத்திக் கொண்டுருந்தாள் வெண்ணிலா.

"விஷ்வா என்னிடத்தில் இதுவரை எதையும் கேட்டதில்லை.ஏன் ஆசைப்பட்டதும் இல்லை.முதன்முதலாக அவன் விரும்பிய ஒன்று வைஷ்ணவி!!!கிடைக்காமல் போய்விட்டால்???"-பலவாறு குழம்பியப்படி வந்தவள் எதிரில் நின்றிருந்த காரின் மீது கவனிக்காமல் மோதிவிட்டாள்.

மோதியது தான் தாமதம் உடனே ஒரு பத்து பேர் அவளை சூழ்ந்தனர்.

பார்க்க ரவுடிகள் போன்ற தோற்றம்!!!

அதிர்ச்சியாக பார்த்தாள்.

இடிக்கப்பட்ட காரில் இருந்து ஒருவன் இறங்கி வந்தான்.

நவீன கால ஆண் போல் கம்பீர தோற்றம்!!!

அவன் முகம் இறுகி இருந்தது.சற்று கூர்ந்து பார்த்தால் அது பிரபு சங்கர்!!!பிரபாகரனின் தங்கை மகன்.நிலாவிற்கு அவனை அடையாளம் தெரியவில்லை.

"ஏ...வெளியே வாடி!"-ஒருவனின் குரல் சீறியது.

நிலா இறங்கினாள்.

அவளை பார்த்தவன் ஸ்தம்பித்து போனான்.

"ஸாரி சார்!இட்ஸ் மை மிஸ்டேக்!கவனிக்கலை ரியலி ஸாரி!!!!"-அவள் பேச்சு அவனுக்கு கேட்கவில்லை.அவள் இதழ் அசைவு மட்டும் தெளிவாகியது.

"என்னடி  ஸாரி...!"-என்ற ஒருவனை பளார் என்று அறைந்தான் சங்கர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.