(Reading time: 12 - 23 minutes)

"மிஸஸ்.பிரசாத்!"-யுகேந்திரனின் தாயை அழைத்தார் ஒருவர்.

யாரென்று பார்த்தால் மகேஷ்வரி!

திவ்யாவை வெண்ணிலாவிடம் அனுப்பியவர்.

"நீங்க?"

"ஏ...நான் மகேஷ்வரிடி!"

"மகேஷ்!"

"எப்படி இருக்கடி?"

"நல்லா இருக்கேன்!நீ எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன்!ஆமா,எங்கே உன் ஹஸ்பண்ட்?"

"அவர் வேலை விஷயமா கனடா போயிருக்கார்!"

"கிரேட்...உன் மகன் மருமகள் எல்லாம் எப்படி?"

"நல்லா இருக்காங்க!மருமகளை உன்கிட்ட தான் செக் அப் அனுப்பினேன்."

"அப்படியா?பேர் என்ன?"

"திவ்யா யுகேந்திரன்!"-

அவர் கண்கள்  விரிந்தன.

"ரியலி...அவ உன் மருமகளா?"

"ம்..."

"நல்லது..உன் மகள் எங்கே?"-அவர் முகம் வாடியது.

"பெத்த மகளை தான் எமனுக்கு கொடுத்துட்டேன்.தத்தெடுத்தவள் வீட்டில இருக்காள்!"-அவர் முகம் கேள்விக்கணைகளை தொடுத்தது.

"உன் பொண்ணு செத்துட்டாளா?"-அந்த தாயின் கண்கள் கண்ணீர் வடித்தன.

"எப்படி?"

"பிறக்கும் போதே!அவர் என் கண்ணுல காட்டினதே உடலை மட்டும் தான்!"

"என்ன உளர்ற?உனக்கு டெலிவரி பார்த்ததே என் ஹாஸ்பிட்டல்ல தானே!

அப்போ நான் வெளியூர்ல இருந்தாலே உன்னை கவனிக்க முடியலை.உன் கணவர்கிட்ட கேட்டதுக்கு நீயும் உன் குழந்தையும் நல்லா இருக்கிறதா சொன்னார்!"-ஆடிப்போனார்.

"என்ன உளர்ற?"

"என் மருத்துவ தொழில் மேல சத்தியமா இது உண்மை!"-அப்படியென்றால் இதுவரை தன் மகள் உயிரோடு இருக்கிறாள் என நான் நம்பியது உண்மை!!

என் மகள் உயிரோடு இருக்கிறாள்!!

அவள் சாகவில்லை.

25 வருட சமன்பாட்டின் தீர்வுக்கு ஒரு சூத்திரத்தை அளித்தார் இறைவன்.

ஏன் அவர் என்னிடம் இதனை மறைக்க வேண்டும்???

எங்கே இருக்கிறாள் என் புதல்வி???

பலவாறு ஏங்கியது தாய் மனம்.

ஒரு பெண்ணிற்கு பிரச வேதனை மறு ஜென்மமாக கருதப்படுகிறது.

பெண்ணானப்பட்டவள் தன் செங்குருதியை சிசுவாக மாற்றுகிறாள்..

உலகிற்கு புதிய வாரிசை தருகிறாள். 

அவள் அந்த நொடி சிந்தும் கண்ணீருக்கு தான் எவ்வளவு சக்தி!!!!

தாயின் ஸ்தானத்தை நாம் ஏன் முதலில் வைக்கிறோம்???

தாயானப்பட்டவள் இறைவனின் சாந்த சொரூபி ஆவாள்.

அவளுக்கு தான் வடித்த சிசுவின் பால் பகை பாராட்ட தெரியாது.

அதன் காரணமாக நாம் எவ்வளவு தான் ஈன்றவளை துவேஷித்தாலும் அவள் அதனால் கலங்குவதில்லை.

மாதா மனிதனுக்கு மாபெரும் மகத்துவமாவாள்.

கதையின் கூற்றுப்படி புதிய கதாபாத்திரம் பிறப்பெடுக்க உள்ளதா???இருக்கலாம்...

மனம் முழுக்க பயம் வியாபித்திருந்தது நிலாவிற்கு!!!

ரஞ்சித் தன் மனதில் என்ன தான் நினைத்திருக்கிறான்???

அவளை வேண்டாம் என்று ஒதுக்கியவன் அவன் தான்!!!

இப்போது அவனே வருகிறான்???

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே  காற்றில் எங்கோ,

'என் காதல் நிலா என்று வாசல் வரும்?அந்த நாள் வந்தால் தான் என்னுள் சுவாசம் வரும்'என்ற பாடல் கேட்டது.பெருமூச்சு விட்டாள்.

கைப்பேசி ஒலித்தது.

"ஹலோ!"

"..........."

"ஹலோ!"

"............."

"ஹலோ யாருங்க வேணும்?"

"பிரபாகரன் பேசுறேன்மா!"-விழிகள் விரிந்தன.

"கேட்குதா நிலா?"

"ம்...சொல்லுங்க!"

"உன்னை பார்க்கணும் போல இருக்கு!"

"எதுக்கு?"

"நான் உன் அப்பாடா!"

"அப்பாவா?மன்னிச்சிக்கோங்க...என் அப்பா என் கூட தான் இருக்கார்!"

"எவனோ ஒருத்தனை உன் அப்பான்னு சொல்ற?உன்னை பெத்தவனை சொல்ல மாட்டியா?"

"உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை.

சித்தி தானே உனக்கு எல்லாம்!போ!உன் பொண்ணு செத்துட்டா!

என்னை விட்டுவிடேன்!"-இணைப்பை துண்டித்தாள்.

கண்களில் கண்ணீர் திரண்டது.இது மட்டும் தான் நிரந்தரம் என்ற எண்ணம் மனதை வியாபித்தது.

யாரோ தொண்டையை செறுமும் சப்தம் கேட்டு திரும்பினாள்.

கதவருகே மகேந்திரன் நின்றிருந்தார்.

"அப்பா!என்னப்பா இந்த நேரத்துல?தூங்கலையா?"-மகேந்திரன் அமைதியாக அவளருகே வந்தார்.அவள் தலையை கோதினார்.

"என் நிலாக்கு என்ன பிரச்சனை?எதுக்கு அவரை அப்படி பேசுன?"

"முடியலைப்பா!சிலருக்கு நினைத்தால் நான் தேவைப்படுறேன்.இல்லைன்னா தூக்கி எறிஞ்சிடுறாங்க!ரொம்ப வேதனைப்படுத்துறாங்க!

என்ன தப்பு பண்ணேன்னே தெரியாம தண்டனையை ஏத்துக்கிறேன்!"

"நிலா!என்ன ஆச்சு என் ராஜகுமாரிக்கு??எனக்கே தீர்வு சொல்ற என் இளவரசி,மற்றவங்களுக்காக கலங்கி இருக்காளா?நம்பவே முடியலை...

இதோ பார் கண்ணா!

பிரச்சனைகள் வந்துட்டே தான் இருக்கும்!அதுல இருந்து தப்பிக்க பார்ப்பதை விட,அதை சமாளிக்க பார்ப்பது தான் சரி!

சந்தோஷமோ,கஷ்டமோ!!இந்த நொடி இதுவும் நிரந்தரமில்லைன்னு நம்பினா,!!பிரச்சனை உன்னை பார்த்து பயப்படும்.

வாழ்க்கையில எந்த இடத்துலையும் மனசை தளர விடாதே!!!"

"..............."

"உனக்கு சூரிய தேவர்னா ரொம்ப பிடிக்கும்ல??"

"ம்..."

"அப்போ அவரையே உன் வழிக்காட்டியா நினைச்சிக்கோ!தினமும் அவரோடைய பிரகாசம் உன் வாழ்க்கைக்கு துணையா இருக்கும்!"

"புரியலைப்பா!"

"புரியும்!நீ தூங்கு நேரமாகுது பார்!"-வெண்ணிலா அவர் மடி மீது படுத்தாள்.

"ஓரக்கண்ணால பார்க்காம தூங்கு!"-வெண்ணிலா கண்களை இறுக மூடினாள் அப்படியே தூங்கி போனாள்.

அவளை சீராகப் படுக்க வைத்து,போர்வையை போர்த்திவிட்டு,நெற்றியில் முத்தமிட்டார்.

விளக்கை அணைத்துவிட்டு நகர்ந்தார்.

ஒரு பெருமூச்சு அவரிடத்தில் இருந்து வெளியானது.

மறுநாள் சூரியனானவன் பிரகாசமான விடியலை அவள் மீது தெளித்தான்.

அப்படியே ஸ்தம்பித்து நின்றன

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.