(Reading time: 12 - 23 minutes)

நிலா பயந்து போனாள்.

"அதான் ஸாரி கேட்டால்ல!"-அவனை முறைத்தான்.

"நீ தானே இடித்த!!!பரவாயில்லை போ!"-அவன் பேசியது புதிராகவே இருந்தது.

"தேங்க்ஸ்!"-அவள் கிளம்பினாள்.செல்லும் முன் ஒருமுறை அவனை திரும்பி பார்த்துவிட்டு சென்றாள்.

"ச்சீப்!!காரை சர்வீஸ் அனுப்பட்டுங்களா?"

"வேணாம்!!!கார் அப்படியே இருக்கட்டும்!இனி மறந்துக்கூட எவனும் இதை தொட கூடாது! நான் மட்டும் தான் தொடணும்!"

"சரிங்க ச்சீப்!"-வீட்டுற்கு வந்தவன் வெண்ணிலாவின் நினைப்பிலே இருந்தான்.

"ஏ,..!"

"ச்சீப்!"

"அந்த பொண்ணை டி போட்டு பேசுன அந்த ரெண்டு பேரை வர சொல்லு!"

"சரிங்க ச்சீப்!"-இருவரும் வந்தனர்.

"இவங்க தானா?"

"ஆமா!"-தன் துப்பாக்கியை அவர்கள் முன் நீட்டினான்.

அனைவரும் அதிர்ந்தனர்.

குறி வைத்து இருவரையும் தோள்பட்டையில் சுட்டான்.அவர்கள் விழுந்தனர்.

"ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணு!இனி அவளை பற்றி எவனாவது பேசுனா தோட்டா நெற்றியில பாயும்!!"

"சரிங்க ச்சீப்!"

"மனோ!"

ச்சீப்!"

"அவ ஹாஸ்பிட்டல்லையே சேர்!"

"சரிங்க ச்சீப்!" 

"............."

"ச்சீப்!"

"ம் ...."

"அண்ணிக்கு எதாவது சர்ப்ரைஸ் தர போறீங்களா ???"-அவன் சிரித்தப்படி,

"சர்ப்ரைஸையே தர போறேன்!அவளுக்கு தொந்தரவு பண்ணாம அவளை ஃபாலோ பண்ணுங்க!எவனாவது வந்தா உடனே தூக்கு!"-என்று திரைச்சீலையை மூடினான்.

தனது அறையில் திரைச்சீலையை திறந்தான் ரஞ்சித்.

அவன் கைப்பேசி ஒலித்தது.எடுத்து பார்த்தான். 

'பெட்டர் ஆப்!'-அவன் கண்கள் அவனை நம்ப மறுத்தன.

நிலா அவனை அழைக்கிறாள்!!!

முகத்தில் ஆனந்தம் பிரகாசித்தது.

கைப்பேசியை காதில் வைத்தான்.

"ரஞ்சு!நிலா பேசுறேன்!"-சாதாரணமாய் அந்த குரல் ஒலித்தது.

"ரஞ்சு!!இன்னிக்கு ஹாஸ்பிட்டல் வர மாட்டேன்.மிஸஸ்.ராகவன் ரிப்போர்ட்டை மெயில் பண்ணிடு!"-அவன் புருவம் சுருங்கியது.

என்ன உளர்கிறாள் இவள்???

"என்னடி பேச மாட்ற?"-விவரம் புரிந்தது  யாரையோ அழைக்க போய் அவனுக்கு வந்துவிட்டது.

அப்படி என்றால்,அவள் இன்னும் அவனது  எண்ணை அழிக்கவில்லை.

"ரஞ்சினி!கேட்குதா?" -வாயை திறந்து 

"ரஞ்சித்!"என்றான்.

அதைக் கேட்டவளின் கண்கள் விரிந்தன.

பதில் இல்லை.

"ஐ லவ் யூ!"-என்று கூறி இணைப்பை துண்டித்தான்.

மனதில் இனம் புரியாத  உணர்வு வியாபித்திருந்தது.

இல்லை..என்னால் அவளை விட இயலாது!!!

அவள் என்னுடையவள்!!!

எப்போதும் எனக்கு மட்டுமே உரியவள்!

மனம் தீர்க்கமான முடிவை எடுத்தது.

எப்படி அவனுக்கு நான்....

கைப்பேசியை எடுத்துப்  பார்த்தாள்.நம் எண்ணம் சரிதான்!!!

அவனது எண்ணும் ரஞ்சு என்று பதிவாகி இருந்தது.அவள் தோழி எண்ணும் ரஞ்சு என்று பதிவாகி இருந்தது.அதனால் வந்த குழப்பம்!!!!

அவன் ஐ லவ் யூ என்றான் அல்லவா???

இதன் பொருள்???

யாரோ என்று நினைத்தானா???

மீண்டும் குழப்பம்!

எப்படியோ அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் பாலம் வந்தது.அதுபோதும்!!!

மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்றாலும் மனதை மாற்ற சென்றாள் நிலா.

பரபரப்பாக இருந்தது.

"குட்மார்னிங் நிலா!"

"குட்மார்னிங் !என்னாச்சு??ஏதோ வித்தியாசமா இருக்கு!"

"கையில குண்டடி பட்டு ரெண்டு பேர் இப்போ தான் அட்மிட் ஆனாங்க!"

"எனிதிங் சீரியஸ்?"

"இல்லை..டிரிட்மண்ட் தந்தாச்சு!ஐஸோலேஷன் வார்ட்ல இருக்காங்க!"

"சரிக்கா நான் பார்த்துட்டு  வரேன்!"

"ம்..."-நிலா அவர் கூறிய அறைக்கு சென்றாள்.

அவனே தான்!!!

குண்டு தாக்கியவர்களை பார்த்தாள்.

இவர்கள் தன்னை முறை தவறி பேசியவர்கள் அல்லவா??

அவளை பார்த்த அவன் விழிகள் அவளை விலக மறுத்தன.

"என்ன இது?ஹாஸ்பிட்டல்லா வேற எதாவதா?"

"ஏன்?என்னாச்சு?"

"இதோ பாருங்க சார்!"

"பிரபு சங்கர்!"

"பாருங்க சங்கர்!இங்கே யாராவதே இரண்டு பேர் தான் இருக்கணும்!இப்படி எல்லாரும் இருக்க கூடாது!"அவன் திரும்பி அனைவரையும் பார்த்தான்.அனைவரும் கலைந்து போயினர்.

"தேங்க்ஸ்!"-என்று இருவருக்கும் பல்ஸ் பார்த்தாள்.

"எப்படி அடி பட்டது?"பதில் இல்லை.

"நான் தான் சுட்டேன்!"-நிலா அதிர்ச்சியாக பார்த்தாள்.

"எனக்கு சொந்தமான பொருளை அவமானப்படுத்தினாங்க அதான்!"-அவளுக்கு விளங்கவில்லை.

"சார்!உயிரை என்ன சாதாரணமா நினைச்சிட்டீங்களா?

இவங்களை பெத்தவங்க மனசு எப்படி துடித்திருக்கும்?"

"அவங்களுக்கு யாரும் இல்லை"

"அதான்!இப்போ கேட்க ஆள் இல்லாம இப்படி எல்லாம் இப்படி இருக்காங்க!

இருந்திருந்தா இந்த நிலை வந்திருக்குமா?"-அவளின் இரக்கமான பேச்சு அவர்களுக்கே கண்ணீரை வரவழைத்தது.

"மனித உயிருக்கு மதிப்பு கொடுங்க சார்! ஒருமுறை போனா திரும்பி வராது!"-என்று அவள் திரும்பி பார்க்காமல் நடந்தாள்.

'அண்ணா'என்றான் ஒருவன்

"என்னடா?"

"அண்ணிக்கிட்ட மன்னிப்பு கேட்கணும்ணா!"-சங்கர் பெருமூச்சை விட்டான்.

"மறுபடியும் வருவா அப்போ கேளுங்க!"

"சரிண்ணா!"

-வெண்ணிலா மனம் பல குழப்பங்களில் சிக்கியது.

விஷ்வா,ரஞ்சித்,சங்கர்...

ஆனால் புதியதாய் தொல்லை ஒன்று இம்சிக்க போகிறது என்பதை அவள் அறிவாளா என்ன????

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.