(Reading time: 6 - 12 minutes)

19. ஷைரந்தரி - சகி

வாழ்க்கையானது எந்த இடத்தில் தொடங்குகிறது?? எந்த 

இடத்தில் முடிகின்றது??

இதை சிந்தித்து பார்த்தால் உலக மக்களின் முடிவுகளில் நாற்றுக்கு தொண்ணூற்று ஏழு சதவீதனர் பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிகின்றது என்பர்.

shairanthari

ஆனால் அது உண்மையானதா??

மீதம் உள்ள மூவரின் விடை இப்படி உள்ளது.

அதாவது,

வாழ்க்கை கர்மத்தில் தொடங்கி ஆத்மாவில் முடிகிறது.

ஒருவனின் பாவ புண்ணியம் தான் ஆத்மாவை பிறக்க வைக்கிறது என்றால் அவன் பாவங்களும் புண்ணியங்களும் எந்த பிறப்பில் நிகழ்ந்திருக்கும்??

பிரபஞ்சத்தில் பல ஆயிர கிரகங்களில் உயிர் வாழ வழி இருக்கிறது என்பது ஆன்மீக அறிவியல் உண்மை.

ஆனால் அதில் புண்ணிய கிரகமாக திகழ்வது பூமி ஒன்றே!!!

காரணம், 

இறைவன் புகழ் பாடிய ஒரே பெண் பூமி மாதா.

அகண்ட பிரபஞ்சத்தின் வேத சாஸ்திரம் இங்கு தான் எழுதப்பட்டது.

இந்த பூமி தான் பரம் பொருளால் முதன்மையாக ஸ்ருஷ்டிக்கப்பட்டது.

தான் யார் என்ற உண்மையை பாஞ்சாலபுரமே அதிரும் வண்ணம் உரைத்தாள் ஷைரந்தரி.

அன்றுவரை பூட்டி இருந்த ராஜகாளி அம்மன் கோவில் திறந்தாகிவிட்டது.

அம்மனுக்கு விஷேச ஆராதனைகள் நடந்தன.

இருள் குடு கொண்ட கோவிலில் சூரிய தேவர் அருள் வழங்கினார்.

எல்லாம் அந்த பரமேஷ்வரனால் நிகழ்ந்தது.

குளக்கரையில் தனிமையில் அமர்ந்திருந்தான் யுதீஷ்ட்ரன்.

கல்பனா பற்றிய எண்ணம் மனதை வாட்டியது.

கடைசி வரை அவளுக்கு நீதி கிடைக்கவில்லையே!!!

பெருமூச்சு விட்டான்.

"யுதீஷ்!"-மகேந்திர குமாரியின் ஆறுதல் குரல் ஒலித்தது.

"என்னாச்சு?"

"கல்பனா ஞாபகம் வந்துடுச்சு ஷைரு!"-கனத்த மௌனம் நிலவியது.

"கல்பனா உண்மையில் பத்தினி நெருப்பாவாள்!"-ஷைரந்தரியின் பதிலில் திகைத்தான்.

"உண்மையில் அவ கடவுளா வணங்க வேண்டியவள்."

"ஆனா இந்த ஊர் அவ தவறானவள் தான்னு சொல்லுது!"-பஞ்சாக்ஷரி தீர்க்கமாக சிரித்தாள்.

"பாரதத்துல ஐந்து ஆண்மகனை கணவனாக ஏற்றாள்னு திரௌபதியை கூட தான் தவறாக பேசினாங்க!"

".................."

"கல்பனா பிறப்புக்கு உண்மையில ஒரு காரணம் உண்டு!"

"என்ன?"

"நாளைக்கு ராத்திரி அது தெரிய வரும்!  கல்பனாக்கு உண்டான நீதி இந்த பாஞ்சாலபுர மண்ணுல புது சகாப்தத்தை எழுத போகுது!"

"புரியலை!"

"சீக்கிரமே புரியும்!"-சிறிது நேரம் அமைதி காத்தான்."ஷைரு!"

"ம்...?"

"உனக்கு நான் தகுதி ஆனவனா?"-குழப்பமாக அவனை பார்த்தாள்.

"இல்லை ...நீ பிறப்பால இந்த குடும்ப பெண்ணா இருந்தாலும் நீ சிவனோட வாரிசில்லையா?"

"................"

"ஒருவேளை நீ எனக்கு கிடைக்கலைன்னா!"-அவள் கண்கள் கண்ணீர் சிந்தின.

வான மேகங்கள் மழையை தூவ தொடங்கின.

"நான் இந்த ஜென்மம் எடுக்க காரணமே நீங்க தானே!"

""..............."

"இத்தனை வலி வேதனையை நான் தாங்க காரணமே நீங்க தான்!"

".................."

"நடந்த எல்லாத்தையும் மறந்துட்டீங்க?சொல்லி பயனில்லை."-அவள் நகர,யுதீஷ் அவள் கரத்தை பற்றினான்.

"எத்தனை ஜென்மம் எடுத்தாலும் சாகித்யாவை என்னால் மறக்க முடியுமா?"-ஷைரந்தரி அதிர்ச்சியாய் பார்த்தாள்.

யுதீஷ் சிரித்தப்படி,

"பல்லவ ராஜகுமாரிக்கு பார்த்திபனின் பணிவான வணக்கங்கள்!'

அவள் முகத்தில் ஆனந்தத்தின் ரேகை!!

"அப்படின்னா! உங்களுகளுக்கு?"

"தெரியும்!"

"நிஜமாவா? என்னால நம்பமுடியலை!"

"மகேஷ்வரன் உண்மையிலே ரொம்ப பாவம்! அவருக்கு போய் இப்படி ஒரு அறிவாளி பெண்ணா?"-ஆனந்த கண்ணீரை கங்கைக்கு ஒப்பிடுவர்.கங்கை நதியானது மகேந்திர குமாரியின் இமைகளின் வழி மண்ணை நனைத்தது.

யுதீஷ்ட்ரன் அவள் கண்ணீரை துடைத்தான்.

"நீ என் அணைப்புக்குள் வருவியா?"

-ஷைரந்தரி தன் மன்னவனின் ஆணையை நிறைவேற்றி அவன் அணைப்புக்குள் சென்றாள்.

மனம் இலகுவானது.எத்தனை சமன்பாடுகள் எதிரே தயாராய் இருந்தாலும்,மனம் அந்த அரவணைப்புக்குள் தன்னை தொலைத்தது.

நீண்ட நேரம் அவ்வாறு நின்றிருந்தனர்.

ஷைரந்தரி தன்னிலை உணர்ந்து அவனிடமிருந்து விலகினாள்.தலை குனிந்தப்படி நின்றாள்.

"இனி உன்னை எந்த காரணத்துக்காகவும் உன்னை பிரிய மாட்டேன்."

"ஷைரந்தரியை அடைய முதல் தடையே யுதீஷ் தான்!அவனை அவக்கிட்ட இருந்து பிரிக்கணும்!"-வினய்யின் வார்த்தைகள்  ஆத்திரத்தோடு உரைத்தான்.

"அதுக்கு வழி?"

"அவனை கொல்லுவது தான்!"

"எப்படி?"

"சொல்றேன்!"-பல சம்பாஷணைகள் அங்கே பரிமாறப்பட்டன.

பழி குணம் கொண்ட மனிதனது மனம் எப்படியும் அடுத்தவரை வீழ்த்திவிடும்!

ஆனால் அந்த மனதின் வஞ்சத்தின் அழிவானது மற்ற மனிதர்களின் சாதாரண அழிவை விட மிக கொடியது என்பது நம்மில் எத்தனை பேருக்கு புரியும்??

வாழ்க்கையே கேள்விக்குறி தான் போலும்!!!!!

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் பார்வதி.

மனம் ஏதோ இலகியது போல உணர்வு. 

காதலில் விழுந்த மனம் அல்லவா!!

திடீரென அவளை பின்னால் இருந்து அணைத்தான் சிவா.

பயந்தே போனாள்.

அவன் அப்படி செய்வான் என்று எதிர்ப்பார்க்காதவள் குழம்பத்தோடு அவனை பார்த்தாள்.

"என்ன?"

"என்ன நீங்க இப்படி பண்றீங்க?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.