(Reading time: 9 - 18 minutes)

06. காற்றே என் வாசல் வந்தாய்!!! - கீர்த்தனா.ஆர்

ல்லூரியில் இருந்து கிளம்பிய மூன்று பேரும் ஓர் ரெஸ்டாரன்ட் முன் வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர். அங்கிருந்த ஓரமான டேபிளில் அமர்ந்ததும் தேவையானதை ஆர்டர் செய்த ரஞ்சன் தான் முதலில் ஆரம்பித்தான்.

"ஹ்ம்ம் சொல்லு ரிதா!. என்ன ஆச்சு. ரொம்ப டல்லா இருக்கற மாதிரி இருக்குது. ஏதாவது பிரச்சனையா."

" கவி இவளுக்கு என்ன ஆச்சு. எப்போவும் இப்படி இருக்க மாட்டாளே!! அதுவும் இல்லாம அம்மிணி கனடா வேற போக போறாங்க! ஒரு

வேளை நம்மள பிரியரா வருத்தமோ!!  " என்று கிண்டல் குரலில் கேட்கவும்

Katre en vasal vanthai

"ஹ்ம்ம் லூசு! அவ அதுக்கு எல்லாம் வருத்தப்பட மாட்டா. நானும் உன் கூடதான வந்தேன். அப்புறம் எனக்கு மட்டும் எப்படி தெரியும்." 

அவர்கள் இருவரையும் அமைதியாக ஒரு பார்வை பார்த்தவள் "ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அமைதியா நான் சொல்ல போறதை கேட்கறிங்களா. அதுக்கு தான இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன். நான் பேசி முடிக்கற வரைக்கும் நடுவுல பேசாதிங்க. நீங்க சொல்ல வந்ததை கடைசியா சொல்லுங்க கேட்கறேன்."

உங்க ரெண்டு பேருக்கும் என்னை பத்தி நல்லாவே தெரியும். நான் ஒரு முடிவு எடுத்தா அதை அவ்ளோ சீக்கரம் மாத்திக்க மாட்டேன்.இதையும் நல்ல யோசிச்சு தான் முடிவு பண்ணி இருக்கேன். நான் கனடா போகல" என்று கூறியதும்,,,

"என்னது !!" என்று இருவரும் ஒரே குரலில் கூற

"அது தான் நடுவுல பேசாதிங்க. கடைசியா சொல்லுங்கன்னு சொன்னேன்ல. அதுக்குள்ள என்ன அவசரம் " இருவரையும் முறைத்தவள்

"உங்களுக்கே தெரியும் நான் எவ்ளோ ஆர்வமா இருந்தேன்னு . பட் நம்ம நினைக்கறது எல்லாமே எல்லா தடவையும் நடக்காது . அதே மாதிரி தான் எனக்கும்.எங்க அம்மாவை பத்தி நான் சொல்லி நீங்க ரெண்டு பேரும் தெரிஞ்சிகனும்ன்னு அவசியம் இல்லை.அவங்க ஒரு முடிவு எடுத்த அத மாத்திக்கறது கஷ்டம். இப்போ எனக்கு கல்யாணம் பண்ணலைன்ன ரொம்ப லேட்டா தான் நடக்கும்ன்னு பயப்படுறாங்க. 

அவங்க எப்போவுமே எனக்கு நல்லது தான் நினைப்பாங்க. ஆனா இந்த விஷயத்துல அப்பா, அம்மா ரெண்டு பேரும் ரொம்ப உறுதியா இருகாங்க!!சோ இருக்கற கொஞ்ச நாலாவது அப்பாவோட கம்பெனி கு போக போறேன். .அப்பறம் கரஸ்ல படிக்கலாம்ன்னு இருக்கேன். எனக்கும் இதுல கொஞ்சம் வருத்தம் தான். என்னோட ஆசை கனவுகளை விட எனக்கு எங்க அப்பா அம்மா சந்தோசம் தான் ரொம்ப முக்கியம்.அதுக்கு அப்புறம் தான் எதுவா இருந்தாலும் !!"

"ரிது!! நீ அன்னைக்கு எவ்ளோ சந்தோசமா இருந்தன்னு எங்களுக்கு தான் தெரியும். நாங்க வேணா ஆன்டி கிட்ட பேசி பாக்கட்டுமா !! ரொம்ப வருத்தமா இருக்குடா !!" கவி

ரிதா நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே?" ரஞ்சன்.

 "ஹ்ம்ம் இல்லை . நீ என்ன கேட்கனும்மோ அதை கேளு. இது என்ன புதுசா தயங்கற"

 "நீ உன்னோட அம்மா, அப்பாக்காக கனடா போகல சரி. ஆனா கல்யாணம். அதுக்கு உனக்கு இப்போ சம்மதமா"

சில நிமிடங்களில் மாறிய அவளின் முக மாற்றத்தை கண்டவன்

மனதுக்குள் சிரித்து கொண்டான். நீ இன்னும் மாறவே இல்லை பேபி" என்று முணுமுணுத்தான்.

"ஹ்ம்ம் அதுக்கு என்ன இப்போ. என்னிக்கு இருந்தாலும் பண்ணிக்க போறது. அவங்க ஆசைக்காக இப்போ பண்ணிக்கறேன் "

"ஹ்ம்ம் அப்போ நீ கல்யாணத்துக்கு ரெடி அப்படித்தன " என்று அவளை  பார்த்து கேட்கவும்

சில நொடிகள் தயங்கியவள் "ஹ்ம்ம் ஆமா "என்று தலை அசைத்தாள்.

ரஞ்சனோ கவி நீ தான் இதுக்கு சாட்சி. இப்போவே கல்யாணத்துக்கு மேடம் ரெடி ஆமா. இந்த நல்ல விஷயத்தை ஆன்ட்டி  கிட்ட சொல்லலாம் வா"

"எனக்கும் ஓகே தான் . அவங்க வீட்டுக்கு போய் 2 நாள் ஆச்சு. அங்க போன ஸ்பெஷல் ல நமக்கு ஏதாவது சப்பட செஞ்சு தருவாங்க." கவி 

அவர்கள் இருவரையும் முறைத்த ரிது " அது அவங்களா கேட்கும் போது நான் சொல்லிக்கறேன். ஏன் இந்த கொஞ்ச நாள் நான் நிம்மதியா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா"

"ஹ்ம்ம் சரி சரி !! பொழச்சி போ" என்று இருவரும் கூறியதும் மெல்ல சிரித்தாள்.

"அப்பறம் நான் இதை இன்னும் வீட்ல சொல்லலை. இன்னிக்கு காலைல தான் அம்மா என்கிட்டே இதை பத்தி சொன்னாங்க. இந்த மாதிரி பிரச்சனையை வந்தா என்ன பண்றதுன்னு நான் முன்னாடியே யோசிச்சு வெச்சிருந்தேன். நான் நெனச்ச நேரம் தான் இப்டி நடக்குது போல. மதன் அண்ணாக்கு கூட நான் விவரமா சொல்லலை. உங்க கிட்ட பேசிட்டு அவங்க கிட்ட சொல்லிக்கலாம்ன்னு விட்டுட்டேன்."

"ஹ்ம்ம் சரி. ரொம்ப பெரிய யோசனை தான்." ரஞ்சன்

" சரி இதை பத்தி இனிமேல் பேச வேண்டாம். ரிது பேபி நான் கெளம்பறேன். உனக்கு எப்போ என்ன உதவி வேண்ணும்னாலும் சொல்லு . அடியேன் காத்திருக்கேன்" என்று கூறவும்

"ஹ்ம்ம் கண்டிப்பா ரஞ்சு. சரி நீ பார்த்து போடா. நாங்களும் கெளம்பறோம்"

ரஞ்சன் தன் வண்டியை எடுத்து கொண்டு நேரே சென்ற இடம் ஆதியின் ஆபீஸ் தான். தன் வண்டியை வேகமாக நிறுத்தியவன் , அதே வேகத்துடன் உள்ளே சென்று

"உங்க எம். டி யை கொஞ்சம் அவசரமா பார்க்கணும். சார் இருக்காரா??" என்று அங்கிருந்த பெண்ணிடம் கேட்டான்.

 

அவன் வருகையை தன் அறையில் உள்ள கமெராவில் பார்த்த ஆதி வெளியில் வந்து " ஹாய் ரஞ்சன். வாங்க வாங்க. இன்னிக்கு உங்களை இங்க எதிர்பார்த்தேன். அதே மாதிரி கரெக்டா வந்துடிங்க . ஹ்ம்ம் நீங்க இன்னும் அப்படியே தான் இருக்கீங்க. சொல்லுங்க ஆபீஸ் விஷயமா இல்லை பர்சனல் விஷயமாவா??" என்று கேட்கவும்

அவனை அமைதியாக ஒரு பார்வை பார்த்தவன் " உங்க வாழ்க்கைய பத்தி பேசணும். பேசலாமா??"  

அவனின் பதிலை கேட்டதும் சிரித்தவன் "ஹ்ம்ம் சூப்பர். பேசலாமே. ப்ளீஸ் உட்காருங்க!!" என்று அவனின் எதிர் இருக்கையை சுட்டி காட்டினான்.

அவர்கள் இருவரும் பேசிய ஒரு மணி நேரமும் அவர்களின் முகங்கள் பல்வேறு உணர்சிகளை காட்டியது.

"ஹ்ம்ம் சரி அப்போ நான் கெளம்பறேன். கூடிய சீக்கரம் மறுபடியும் சந்திக்கலாம். பர்சனல் விஷயமா தான். அது தான் தினமும் ஆபீஸ் விஷயத்துக்காக உங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை  என்ன பண்றது!! "

"அட ரொம்ப கோவப்படாதிங்க பாஸ். பழக்க தோஷம் போக மாட்டிங்குது போல" என்று ஆதி சிரித்து கொண்டே கேட்கவும்

அவனை ஒரு முறை முறைத்து விட்டு சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.