(Reading time: 9 - 18 minutes)

ரவு தன் வீட்டிற்கு வந்த ஆதி எதுவும் பேசாமல், தன் அறைக்கு சென்று தன்னை சுத்தபடுத்திக் கொண்டு ஹாலில் அமர்ந்தான். அவனை பார்த்த மது அவன் அருகில் வந்து

"என்னடா அதியமான்!! ரொம்ப யோசனையா இருக்க போல இருக்கு போல"

"ஹே மது வா வா. அதெல்லாம் ஒன்னும் இல்லடா."

அதற்குள் மீனாஷி "டேய் ஆதி,மது ரெண்டு பெரும் சாப்பிட வாங்க" என்று உள்ளிருந்து குரல் கொடுத்தார்.

அவர்கள் அமர்ந்ததும் " என்னடா. உங்க அப்பாவை வேற தனியா கூப்படனுமா" என்று கேட்கவும்

"என்ன மீனு !! நீ சொல்லி நான் எப்போ கேட்க மாட்டேன்னு சொன்னேன். நான் அப்போவே இங்க வந்துட்டேன் . நீ தான் என்னை கவனிக்கவே இல்லை என்று ஆதியின் அருகில் அமர்ந்தார்

"நீயும் உட்காரு மீனு. நம்மாலே போட்டு சாப்படலாம்."

"ஆஹா என்ன அக்கறை பாரு. அப்பா ஆனாலும் நீங்க இவ்ளோ பாசமா இருக்க கூடாது. புல்லரிச்சி போச்சு போங்க" என்று ஆதி கிண்டலாக கூறவும் "போடா படவா !! ஒழுங்கா சாப்பிடுங்க" என்று மீனாஷி கூறினார்.

 அதன் பின் சிரிப்பும் கலாட்டாவுமாக உணவினை முடித்து கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்தனர். 

"மாம்ஸ் கூடிய சீக்கரமே உங்க மருமக நம்ம வீட்டுக்கு வந்துருவா!" என்று கூறி கண் சிமிட்டினான் ஆதி.

"டேய் நிஜமாவா சொல்லுற!! எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குதுடா. அவ கிட்ட இப்போவே பேசணும் போல இருக்கு டா. போன் போட்டு தரியா!!" என்று கேட்கவும்

 "ஹையோ அப்பா !! உங்க பொண்டாட்டிய கொஞ்ச நாள் ஆர்வத்தை அடக்கி வைக்க சொல்லுங்க!!"

"மாம்ஸ் !! இன்னிக்கு காலைல தான். அவங்க அப்பா கிட்ட பேசினேன் . அவரும் அவங்க வீட்ல கேட்டு சொல்றேன்னு சொல்லி இருக்காங்க. அது வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க!! ப்ளீஸ்" என்று கூறியதும்

"சரிடா. இப்போ சொன்னதே நல்லா சந்தோசமா இருக்குது. உனக்கு முடிஞ்சதும் மதுவுக்கு தான் அடுத்தது" என்று கூற 

"ஐயோ அம்மா. ஆள விடுங்க சாமி. முதல்ல அதியமான் அனுபவிக்கட்டும். அப்புறம் நான் கல்யாணம் பண்றதா வேண்டாமான்னு முடிவு பண்றேன்." என்று அலறினாள்.

சொக்கநாதனோ "ஆமாடா ஆதி!! ரிது வந்தா உங்க அம்மா சமையல்ல இருந்து விடுதலை தான்!! அதுக்காகவே சீக்கரம் கல்யாணம் பண்ணிக்கோ"  என்று தன் பங்கிற்கு கூறவும் ஆதியும் மதுவும் சிரித்தனர்.

மீனஷியோ "ஓஹோ ஐயாவுக்கு வயசான காலத்துல சுவையான சாப்பாடு கேட்குதோ. அவ வர வரைக்கும் என்னோட சமையல் தான். ஞாபகம் இருக்குதா உங்களுக்கு" என்று முறைத்துக் கொண்டே கேட்டார். 

"சரி சரி விடு மீனு அதுக்கு எல்லாம் குடுத்து வைக்கணும்" என்று போலியாக வருத்தப் பட்டு கொண்டே சொல்லவும் அவரின் கேலியை புரிந்து கொண்டு சிரித்தார். வெகு நாட்களுக்கு பிறகு அனைவரும் மகிழ்ச்சியாக உறங்க சென்றனர்.

மது தன் அறைக்கு வந்ததும் அவளின் மொபைல் ஒலி எழுப்பியது. தனக்கு வந்த மெசேஜ் திறந்து பார்த்தவள் அதில் இருந்த செய்தியை பார்த்தாள்.

"மது உன்னோட எக்ஸ்பிரசன்  சூப்பர்டா. தூரத்துல இருந்து பார்க்கும் போதும் நல்லா தான் தெரிஞ்ச.  நீ எங்க இருந்தாலும் கண்டு பிடிச்சிடுவேன் பெண்ணே. பொய் நிம்மதியா தூங்கு. அதுலயாவது கொஞ்சம் சிரிடா.                                                                                                           

நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்கின்றேன்

நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா!!!!

உயிருக்குள் இன்னோர் உயிரை

சுமகின்றேன் காதல் இதுவா!!!!

இதயதில் வலையின் எடையை உணர்கின்றேன்

காதல் இதுவா!!!!!!!

கண்மூடி திறக்கும் போது

கடவுள் எதிரே வந்தது போல

அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே!!!!!!!”

- மிஸ் யூ டா மது. குட்நைட் செல்லம்!!

அதை பார்த்து திகைத்தவள் அடப்பாவி இவன் நம்மை கவனிக்கலைன்னு நினச்சா எப்படியோ பார்த்து இருக்கான். அது தெரியாம அவ்ளோ நேரம் நம்ம அங்கேயே நின்னுட்டு இருந்து இருக்கோம். மானம் போச்சு மது !!" என்று தன்னை திட்டிய படியே உறங்க சென்றாள். அவனின் வார்த்தைகள் தன் மனதிற்கு இதம் அளிப்பதை உணர்ந்தாள்.

"மரகதம் !! இங்க வா !! உன்கிட்ட கொஞ்சம் பேசணும் !! ஆமா ரித்து வந்துட்டாளா??"

"ஹ்ம்ம் வந்துட்டாங்க !! அவ கொஞ்சம் டல்லா இருக்கற மாதிரி இருக்குது. ஆனா அவளை இப்படியே விட முடியாது" என்று கூறவும்

"ஹ்ம்ம் விடு எல்லாம் சரி ஆய்டும். நம்ம ஜோசியர் ஒரு வரன் வந்து குடுத்துட்டு போனாரு காலைல.அது விஷயமா பேச தன உன்னை கூப்பிட்டேன். பையன் பேரு ஆதி. ரொம்ப நல்ல பையன் . ஒரு தங்கை இருக்கு. இந்த பையனுக்கு முடிச்சிட்டு தான்அந்த பொண்ணுக்கு பண்ணுவாங்க போல. சொந்தமா கம்பெனி வெச்சு நடத்தறான். நல்லா விசாரிச்சிட்டேன்." என்று குறைவும் மரகதத்தின் முகம் மலர்ந்தது.

"அப்போ இந்த வரமே நல்லா நாளா பார்த்து அவங்களை நம்ம வீட்டுக்கு வர சொல்லுங்க. என்னங்க ரித்து இதுக்கு சம்மதிப்பாளா. நான் வேற காலைல அவ கிட்ட அழுத்தமா பேசிட்டேன்" என்று வருத்தப்பட்டு கூறவும்

"ச்சு என்ன மரகதம் !! இப்போ எதுக்கு இவ்ளோ வருத்தப்படற !! உனக்கு அவளை பத்தி தெரியாதா.என்னை விட நீ தான் அவ மேல ரொம்ப பாசமா இருக்கற. ஆனா நீ அதை வெளிகட்டமா பயப்படற. கொஞ்சம் கண்டிப்பா இருக்கற. அவ்ளோதான்." என்று சமாதனப்படுத்தவும் அவரின் மனம் நெகிழ்ந்தது.

இவர்களின் பேச்சை கேட்டு கொண்டு இருந்த ரிது "அம்மா !! " என்று கூறி கொண்டே அணைத்துக் கொண்டாள்.

"நீங்க எப்பவும் எனக்கு நல்லது தான் பண்ணுவிங்கன்னு தெரியும்.  நீங்க கவலை படாதிங்க. நீங்க சொன்னதுக்கு நான் சம்மதிக்கறேன். ஆனா கல்யாணம் ஆகற வரைக்கும் நான் என்னோட ஆசை படி அப்பாவோட கம்பனிக்கு போறேன்" என்று கூறவும் அவளை ஆசையுடன்

அணைத்துக் கொண்டார்.

" சரி சரி .. அம்மாவும் பொண்ணும் ரொம்ப உருகாதீங்க. பொய் தூங்குங்க!! " என்று பூமி நாதன் சொல்லவும் அனைவரும் உறங்க சென்றனர்.

தன் அறைக்கு வந்த ரிதுவின் முகமோ வேதனையை பிரதிபலித்தது.  தந்தை கூறிய பேரை கேட்டதும் அவளின் முகம் வெறுப்பை காட்டியது. தான் எடுத்த முடிவு சரி  என்று தனக்குள் கூறிக் கொண்டாள். 

அவளின் மனமோ " ரிது நீ பண்றது உனக்கே சரியாய் தோணுதா. நீ யாரை வேணா ஏமாத்தலாம். ஆனா எனக்கு மட்டும் நீ என்ன நினைகறன்னு தெரியும்." என்று அவளை ஏளனமாக பார்த்தது . 

காற்று வீசும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:848}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.