அவன் தோளிலேயே மயங்கி இருந்தாள் அவள். அவன் இதயம் தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தது. ஒரு ஆழமான சுவாசத்திற்கு பிறகு கண்களை சுழற்றிய போதுதான் அவனுக்கு சூழ்நிலை தெளிவாக புரிந்தது.
தோளில் கிடப்பவளின் நிலை என்ன? தெரியவில்லை.
நிலவின் வெளிச்சம் மட்டுமே அவனுக்கு துணையாய் நின்றது. கைப்பேசியில் துவங்கி, முதலுதவி பெட்டி வரை அத்தனையும் நீருக்குள்ளே கிடக்கிறது.
ஜன்னலின் கண்ணாடியை உடைத்து வெளியே வந்ததாலோ என்னவோ அவன் முழங்கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது.
அதைப்பற்றி யோசிக்க தோன்றவில்லை அவனுக்கு இருட்டை துழாவிக்கொண்டு சென்ற அவனது பார்வையில் பட்டது அந்த மரத்தின் கீழே இருந்த மேடை.
அதனருகே சென்று அவளை அந்த மேடையின் மீது கிடத்தினான். மருத்துவனாக முதலில் அவள் சுவாசத்தை பரிசோதித்தவனிடம் நிம்மதி பெருமூச்சு அது சீராக இருந்தது.
நிலவின் ஒளியில், அவளை ஆரய்ந்தவனுக்கு அவள் முகத்திலும், கைகளிலும் சில சிராய்ப்புகள் தென்பட்டன. அதிலிருந்து கொஞ்சமாக ரத்தம் கசிந்துக்கொண்டிருந்து. பெரிதாக எதுவும் காயம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
அதிர்ச்சியில் மயங்கி இருப்பாள் என தோன்றியது. சில நிமிட முதலுதவிக்கு பின், மெல்ல கண்திறந்து பார்வையை சுழற்றினாள் அவள்.
ஒண்ணுமில்லையேடா உனக்கு? நல்லா இருக்கே இல்ல? பேசுடா என்றான் படபடக்கும் குரலில்.
ஒண்ணும்.... என்று பேச துவங்கியவளின் கண்கள் அதிர்ச்சியில் நிலைகுத்தி நிற்க வெண் பல் சிரிப்புடன் அவனுக்கு பின்னால் நின்றது அந்த புகை வடிவம்.
விக்கித்து போனாள் மாதங்கி. சுவாசம் தடுமாற நாக்கு ஒட்டிக்கொண்டு விட்டதை போன்றதொரு நிலையில் அங்....கே .... அது... பே....ய்...
என்னதுடா? என்று திரும்பியவனின் கண்களில் எதுவும் தென்படவில்லை.
'சரி வா நாம இங்கே இருந்து கிளம்பலாம்..... என்றபடி அவன் அவளை எழுப்ப முயல அவள் காதுகளில் மட்டும் கேட்டது அந்த குரல் மாதும்மா.... நீ அவன் கூட போகாதே மாதும்மா.....
அந்த குரல் வந்த திசையில் சென்றன அவள் விழிகள்.
மாது...ம்மா... நான் சொல்றதை கேளு மாது...ம்மா.... அவனை கொன்னுடு... அவன் உன்னையும் என்னையும் பிரிச்சிடுவான் மாது ம்மா...
மெல்ல எழுந்து அமர்ந்தாள் அவள்.
அங்கே ஒரு கல்லு இருக்கு பாரு அதை எடுத்து அவன் தலையிலே போட்டுடு மாது... ம்மா. அவன் நல்லவன் இல்லை.
அவள் பார்வை அந்த பாறையை நோக்கிப்போனது.
மாது...ம்மா... அவனை கொன்னுடு மாதும்மா. அந்த குரல் மாதங்கியை உலுக்கியது.
ம்??? அவள் உடல் இறுகிப்போக பார்வை அந்த புகை வடிவத்தின் மீதே நிலைத்திருக்க.....
அவளே எதிர்பாராத நொடியில் அவளை தனது கைகளில் அள்ளிக்கொண்டு எழுந்தான் முகுந்தன். 'என்னாச்சுடா. உனக்கு.??? அப்படியே உட்கார்ந்திருக்க வா கிளம்பலாம்' அங்கே இதற்கு மேல் தாமதிப்பது சரியில்லை என்பதை உணர்ந்தவனாக...
கண் இமைத்து சுயநினைவுக்கு வந்தாள் அவள். 'இல்லை... அது... எனக்கு.... பயமா.... அவள் விழிகள் மறுபடியும் அந்த புகை வடிவத்தை நோக்கிப்போனது....
மாதும்மா.... அது மறுபடியும் அழைத்தது...
'எதுவுமில்லை... என்னை மீறி எதுவும் உன்கிட்டே வராது வா... ' அவளை தூக்கிக்கொண்டு நடந்தான் அவன். அவனது தோளை இறுக்கமாக பற்றிக்கொண்டது அவளது கை. கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவள். இதயம் தறிக்கெட்டு துடித்தது
அதே நேரத்தில் தனது உயிரை கூட பொருட்படுத்தாமல் அவளை சுமந்து நடந்த அவனது அன்பில் நெகிழ்ந்துதான் போனாள் அவள்.
அவளை தரையில் விடும் தைரியம் கூட இல்லை அவனுக்கு. அவள் என்னவள்..... அவளுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது....
அவளது பாதுகாப்பு மட்டுமே அவனது குறிக்கோளாக நடந்தான் அவன். அவனது மன உறுதியும், காதலும் அவனை செலுத்திக்கொண்டிருந்தன.
.கொஞ்சம் இருடா... வீட்டுக்கு போயிடலாம்டா.... உன்னை பத்திரமா கூட்டிட்டு போயிடுவேண்டா... தைரியமா... இருடா...
அவனது அன்பு நிறைந்த வார்த்தைகள் அவள் செவிகளை நிறைத்திருக்க............
மாதும்மா.... மாதும்மா... அந்த புகை வடிவத்தின் குரல் அவள் செவிகளை எட்டவில்லை.
முகுந்தனது கவனத்தை தனது பக்கம் திருப்பாமல், அவனது மன உறுதியை தளர்த்தாமல் தன்னால் ஜெயிக்க முடியாது புரிந்தது அதற்கு.
அவன் முன்னால் சென்று நிற்க முயன்றது அது. இயலவில்லை. அவன் பார்வை அதன் மீது பதியவில்லை. அவன் மனதை தன் வசப்படுத்த இயலவில்லை அதனால். அவனது முழுக்கவனமும் அவள் மீதிருந்தது.
உன்னை நான் பார்துக்கறேண்டா... பத்திரமா பார்த்துக்கறேண்டா.... திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே நடந்தான் அவன்.
உடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் சுண்டி இழுக்கும் வலியை கூட பொருட்படுத்தாமல் நடந்தான் அவன். தனது சக்தியினால் அவனது கால்களை கட்ட முயன்று அவனது மனோபலத்திடம் தோற்றுக்கொண்டிருந்தது அந்த அமானுஷ்ய சக்தி. மரங்களை கடந்து சாலையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தான் அவன்
பொங்கி எழுந்த ஆத்திரத்துடன் அதன் பார்வை அந்த மரத்தை நோக்கி போக, அவர்கள் அதன் அருகே வந்த நொடியில் வேரோடு முறிந்து அப்படியே அவர்களை நோக்கி சாய துவங்கியது..
மரம் முறியும் சத்தத்தில் அவனது உடலின் ஒவ்வொரு அணுவும் விழித்துக்கொள்ள, சில அடிகள் பின்னால் நகர்ந்து, பக்கவாட்டில் விலகி கொஞ்சம் நிலை தடுமாறி மாதங்கியுடன் கீழே சரிந்தான் முகுந்தன்.
மரம் அவர்களை நோக்கி சாய பயத்தில் வீறிட்டாள் மாதங்கி 'அம்.....மா '
'அம்...மா' அவள் குரல் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்தது.
கண் இமைக்கும் நேரத்தில் உருண்டு மரத்தை விட்டு விலகி விட்டிருந்தான் முகுந்தன். அந்த நிலையிலும் அவள் மீதிருந்த பிடியை விலக்காமல் அவளை தன் மீதே பாதுக்காப்பாக சரித்துக்கொண்டான் அவன்.
அப்படி இருந்தும் அவளது கால் ஒன்று மரத்தின் கிளைகளுக்கு அடியில் மாட்டிக்கொண்டது.
சில நொடிகளில் சட்டென சுதாரித்தவன் மாதங்கி... என்றான் இருடா..... கொஞ்சம் இரு... என்றபடி ஒருக்களித்து எழுந்து அமர்ந்தான்.
மரக்கிளைகளை உடைத்து, விலக்கி அவள் காலை அவன் வெளியே எடுப்பதற்குள், வலியில் துடித்து விட்டிருந்தாள் மாதங்கி.
அம்..மா.... அம்மா..... வலிக்குது....
சில நிமிடங்களில் அவளை கிளைகளின் அடியில் இருந்து விடுவித்து, எழுந்து தனது கைகளில் அவளை ஏந்திக்கொண்டு சாலையை அடைந்திருந்தான் அவன்.
சில நிமிடங்கள் ஸ்தம்பித்துப்போய் நின்றிருந்தது அந்த அமானுஷ்ய சக்தி. அவர்களை தொடரக்கூட இல்லை அது. மனித மனதிற்கு இத்தனை சக்தியா? எத்தனை முயன்றும் அவனது விடா முயற்சியை, மன வலிமையை என்னால் ஜெயிக்க முடியவில்லையே???.
அங்கே தாத்தா இன்னமும் கண் விழிக்கவில்லை. முகுந்தனின் அண்ணன் மருத்துவமனையில் அமர்ந்திருந்தான்.
'முகுந்தன் வருகிறேன் என்றானே?' யோசனையுடனே, அவனது கைப்பேசிக்கு முயல, அது தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. யோசித்தபடியே அமர்ந்திருந்தான் அவன்.
முகுந்தன் சாலையை அடைந்து அவளை கீழே இறக்கினான். காலிலிருந்து துவங்கி, உயிர் வரை சுண்டி இழுத்த வலியை பொறுத்துக்கொண்டு அவன் தோளை பற்றிக்கொண்டு நின்றிருந்தாள் அவள்.
அவனது ஒரு கரம் அவளை அணைத்தபடியே இருந்தது. தன்னவனின் மீதிருந்த பார்வையை விலக்கவில்லை. அவள். 'அன்பின் ஆண் வடிவமா. இவன்?' அவன் தோளில் தலைசாய்த்துக்கொண்டாள் 'உங்களுக்கு எங்கேயாவது அடி பட்டிருக்கா?' கேட்டாள் மாதங்கி.
தெரியலைடா பார்த்துக்கலாம். முதலிலே ஏதாவது ஹாஸ்பிடல் போயிடுவோம்.
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
keep it up thanks